மகம் நட்சத்திர பலன்கள்

அடுத்தவர்களுக்கு பாதிப்பு என்றால் பொங்கி எழும் போராட்ட குணம் படைத்தவர்கள் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆளுவார்கள் என்பது பழமொழி. ஜெகத்தை ஆளுகிறார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் தனக்கான உறவுகள் அல்லது நண்பர்கள் நிறைந்த உலகத்தை ஆளுவார்கள் என்பது நிச்சயம்.

இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் இடம் பெற்றுள்ள, கேதுவின் நட்சத்திரம் ஆகும். இதனால், சூரியனை போல கம்பீரமாக பிரகாசிக்கும் தன்மையும், கேதுவை போல ஆழ்ந்த ஞானமும் இவர்களிடம் காணப்படும். சிலருக்கு குறைந்த பட்சம் கை மருத்துவமாவது தெரிந்திருக்கும்.

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எடுத்த வேலையை, மன திருப்தியுடன், உறுதியாக செய்து முடிப்பார்கள். அதேபோல், ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருப்பார்கள்.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். அவர்களுடைய அன்புக்கு பாத்திரமாவார்கள். கற்றறிந்த பெரியோர்களின் பாராட்டு இவர்களுக்கு கிடைக்கும்.

பல்வேறு விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உள்ள இவர்கள், வாழ்க்கையை நன்கு அனுபவிப்பார்கள். ஆனாலும், சிலர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, அதனால் பாதிக்கப்படுவதும் உண்டு.

வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள். பல்வேறு விஷயங்களில் ஆந்த ஞானம் உண்டு. கற்றறிந்த பெரியோர்களின் மரியாதையும், கௌரவமும் இவனுக்கு உண்டு. பலவித கலைகளில் ஈடுபாடு உண்டு.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். மனது புண்படும்படி நடந்து கொண்டால், அதற்கு பரிகாரம் தேடுவார்கள். யாராவது மற்றவர்களுக்கு, தொல்லை கொடுத்தல், அதை கண்டு பொங்கி எழுவார்கள். அதனால் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொள்வார்கள்.

சமூகத்திற்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்ல சேவைகளையும் செய்வார்கள். இதனால், மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், கடவுள் பக்தி, மத கோட்பாடுகளை மதித்து தான தர்மங்களை செய்வார்கள். ஆனால், மூக்குக்கு மேல் கோபம் வரும். அரச போகத்தை அனுபவிப்பார்கள். வீட்டு நிர்வாகம், அலுவலக நிர்வாகம் என அனைத்திலும் தனித்தன்மையுடன் விளங்குவார்கள்.

மற்றவர்களுக்கு துன்பம் வரும்போதும், நெருக்கடி வரும்போதும் தாமாகவே முன்வந்து உதவிகளை செய்வார்கள்.

இவர்களிடம் நயந்து கேட்டால், நாட்டையே கொடுப்பார்கள், மிரட்டி கேட்டால் ஓடு கூட கொடுக்க மாட்டார்கள். இதுதான், மக நட்சத்திரத்தின் ரகசியம்.

மகம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம் மருத்துவ குணத்தையும், மன நோய் பாதிப்பையும் சொல்லும்.

மக நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன், பரிகார தெய்வம் விநாயகர். மதுரை அருகே அழகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ராம தேவர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். வழிபாட்டுக்கு உகந்த மலர் மல்லிகை.

மக நட்சத்திரம் வீடு, பல்லக்கு போன்ற வடிவம் கொண்டுள்ளதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது ராட்சத கணம் கொண்ட நட்சத்திரம் ஆகும். இதன் விருட்சம் ஆல மரம். எனவே கோவில் அல்லது மற்ற இடங்களில் உள்ள ஆல மரத்திற்கு நீர் ஊற்றலாம்.

மக நட்சத்திரத்தின் மிருகம் ஆண் எலி. பறவை கழுகு எனவே இவற்றுக்கு எந்த சூழ்நிலையிலும் தொந்தரவோ, இடையூறோ கொடுக்க கூடாது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் உடனுறை மாணிக்கவல்லி, மரகதவல்லி ஆலயமே, மக நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று, மக நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது சிறப்பு.

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எள் தானம் செய்வதன் மூலம் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.