மிருகசீரிட நட்சத்திர பலன்கள்
ஆதரித்தாலும்,
எதிர்த்தாலும் அதில் நூறு சதவிகிதம், உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பவர்கள் மிருகசீரிட நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்.
பொருத்தம் பார்க்காமல்
திருமணம் செய்யலாம் என்று வர்ணிக்கப்படும் மகா நட்சத்திரங்களில் முதன்மையானது மிருகசீரிட
நட்சத்திரமாகும்.
எல்லா சுப காரியங்களுக்கும்
ஏற்ற தோஷம் இல்லாத நட்சத்திரம் என்பதால், இதில்
பெண்கள் பிறந்தாலும், ருதுவானாலும் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின்
முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், கடைசி இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்
பெற்றுள்ளன.
ரிஷப மிருகசீரிடம்
உறுதியான விடாப்பிடியான தன்மையுடன் இருக்கும். மிதுன ராசியில் உள்ள மிருக சீரிடம் சற்று
மன சஞ்சலம் நிறைந்ததாக இருக்கும்.
மிருகசீரிட நட்சத்திரத்தில்
பிறந்தவர்களிடம் வித்யாசமான போக்கு நிறைந்திருக்கும். குறிப்பாக ஆதரித்தாலும் நூறு
சதவிகிதம் ஆதரிப்பார்கள். எதிர்த்தாலும் நூறு சதவிகிதம் எதிர்ப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில்
பிறந்த பலர், நேர் வழியில் செல்வதையே விரும்புவார்கள். ஆனால், மற்றவர்களும் அப்படி
இருக்க மாட்டார்கள் என்பதால், அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம்.
சிலர், பழகிவிட்டால்
அவர்களை கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்து, அதனால் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு.
எனவே, மற்றவர் மீது நம்பிக்கை வைக்கலாம். ஆனால், அது கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைவரையும் பாரபட்சம்
பார்க்காமல், சமமாக பாவிக்கும் குணம் மிருகசீரிட நட்சத்திர காரர்களிடம் மிகுந்து இருக்கும்.
மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டுபவர்களை இவர்களுக்கு பிடிக்காது. இவர்களது இந்த குணத்தால்,
எதிரிகளை சந்திக்க நேரும்.
அறிவும், ஆற்றலும்,
சாதுர்யமும் நிறைந்த இவர்கள், பழகிவிட்டால் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து, ஏமார்ந்து
விடுவார்கள். அதனால், நம்புவதற்கு முன், எதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
கூட்டு தொழில்
செய்யும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் ஏமாற்றத்தை சந்திக்க நேரும்.
மற்றவர்கள் ஒரு
பாடத்தை படிக்க தொடங்குவதற்கு முன், அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல, எதையும்
எளிதாக கிரகிக்கும் ஆற்றல் மிருகசீரிட நட்சத்திரத்தின் தனித்தன்மை ஆகும்.
மிருகசீரிட நட்சத்திரத்தில்
பிறந்த பெண்ணுக்கும் இதே குணம் நிறைந்திருக்கும். நுண் கலைகளிலும், பொது சேவையில் ஈடுபாடு
இருக்கும். இவள் மற்றவர்களுக்கு சாபம் கொடுத்தால் அது பலிக்கும்.
அதனால், மிருகசீரிட
நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. இவள் கோபத்திற்கு
ஆளாகாமல் இருப்பது நல்லது.
மிருகசீரிட நட்சத்திரத்தில்
நின்ற கிரகம், குழந்தை இல்லாதவர்கள், தாமதமாக குழந்தை பெற்றவர்கள், காணாமல் போனவர்கள்,
வழக்கு மற்றும் விபத்தை சந்தித்தவர்கள் மற்றும் தைராய்டு பிரச்சினை போன்றவற்றை குறிக்கும்.
மிருகசீரிடம் தேவ
கணம் கொண்ட நட்சத்திரம் ஆகும். நட்சத்திர அதிதேவதை சந்திரன் மற்றும் ஈஸ்வரன். பரிகார
தெய்வம் முருகன்.
ஸ்ரீரங்கத்தில்
உள்ள சீர்காழி சட்டநாதர் ஜீவ சமாதி, மருதமலை மற்றும் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள பாம்பாட்டி
சித்தர் ஜீவ சமாதிகளையும், நட்சத்திரத்திற்கு உகந்த ஜாதிமல்லி மலர் கொண்டு வழிபாடு
செய்யலாம்.
மிருகசீரிட நட்சத்திரம்
மான் தலை, பூனை பாதம், தேங்காய் கண் போன்ற தோற்றத்தில் உள்ளதால், வணிகம் செய்பவர்கள்
இவற்றை லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிருகசீரிட நட்சத்திற்கு
உரிய விருட்சம் கருங்காலி மரமாகும். எனவே கருங்காலி கன்றை நட்டு தண்ணீர் ஊற்றலாம் அல்லது,
கோயில் மற்றும் பிற இடங்களில் உள்ள கருங்காலி மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் நல்லது.
இந்த நட்சத்திரத்திற்கான
மிருகம் சாரை பாம்பு. பறவை கோழி. எனவே இவற்றுக்கு தீங்கோ இடையூறோ செய்யாமல் இருப்பது
நல்லது.
திருவாரூர் அருகே
எண்கண் என்ற இடத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் திருத்தலமே மிருகசீரிட நட்சத்திரத்திற்கு
உரிய திருக்கோவிலாகும். மிருகசீரிட நட்சத்திரத்தன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பை
தரும்.
மிருக சீரிட நட்சத்திரகாரர்கள்,
தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள கோதானம் என்னும் பசு தானம் செய்வது நல்லது.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT