10TH- STD -இயல்-1

1.     "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே!" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் - கனிச்சாறு

2.     சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும். என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர் - .சச்சிதானந்தன்

3.     மகபுகுவஞ்சி' என்ற நூலின் ஆசிரியர்  - பெருஞ்சித்திரனார்

4.     பெருஞ்சித்தினார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு

5.     "உலகியல் நூறு" என்ற நூலின் ஆசிரியர் - பெருஞ்சித்திரனார்

6.     பெருஞ்சித்தினாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்

7.     பாவியக்கொத்து,பள்ளிப்பறவை, நூறாசிரியம், எண்சுவை எண்பது, கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் - பெருஞ்சித்திரனார்

8.     பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது - திருக்குறள் மெய்ப்பொருளுரை

9.     "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே" என்ற பாடலில் தென்னன் என்பது எம்மன்னனைக் குறிக்கிறது- பாண்டியன்

10.   "நாடும் மொழியும் நமதிரு கண்கள்'' என்றவர் - பாரதியார்

11.   திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் - கால்டுவெல்

12.   நெல், கேழ்வரகு போன்றதாவரத்திரன் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொல்தாள்

13.   தமிழாசிரியர், நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர் சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் - இரா. இளங்குமரனார்

14.   திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் 'திருவள்ளுவர் தவச்சாலை' நிறுவியவர் -இளங்குமரனார்

15.   பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் - இளங்குமரனார்

16.   தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் - இளங்குமரனார்

17.   திரு.வி. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் - இளங்குமரனார்

18.   திருக்குறள் தமிழ் மரபுரை என்ற நூலை எழுதியவர் - இளங்குமரனார்

19.   இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் - காக்கைபாடினிய உரை,புறத்திரட்டு உரை,தேவநேயம்

20.   இலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் - Leaf

21.   இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள்  - தாள், இலை,தோகை, ஓலை

22.   கோதுமையின் வகைகள் - சம்பா கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை

23.   சம்பா நெல் வகைகள் எத்தனை உள்ளது - 60

24.   ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு - மலேசியா

25.   மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் -  தேவநேயப் பாவாணர்

26.   தமிழ் சொல்வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது - தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரை

27.   செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் - தேவநேயப் பாவாணர்

28.   உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்  - தேவநேயப் பாவாணர்

29.   கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி - தமிழ்

30.   போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் - லிசுபன்

31.   கார்டிலா என்னும் நூல் முதன்முதலில் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு - 1554

32.   ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப்பெயர் - Carthila de lingoa tamul e portugues

33.   கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது - கறுப்பு, சிவப்பு

34.   இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி - தமிழ்

35.   சொல்லுதல் என்பதற்கு உரிய சொல்  - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்

36.   அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை - கவை

37.   பூ விரியத் தொடங்கும் குறிக்கும் நிலைபோது

38.   முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - தமிழழகனார்

39.   சந்தக்கவிமணி பாடிய இரட்டுற மொழிதல் பாடலில் தமிழ் எதனுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது- ஆழி

40.   துய்ப்பது என்ற சொல்லின் பொருள் - கற்பது

41.   மேவலால் என்பதன் பொருள் - பொருந்துதல்

42.   மூன்று வகையான சங்குகள் - வெண்சங்கு ,சஞ்சலம் , பாஞ்சசன்யம்

43.   ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது - சிலேடை அணி, இரட்டுற மொழிதல் அணி

44.   சந்தக்கவிமணி எனக் குறிப்பிடுபவர் - தமிழழகனார்

45.   தமிழழகனாரின் இயற்பெயர் - சண்முக சுந்தரம்

46.   தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் - 12

47.   இரட்டுறமொழிதல் பாடலில் முத்தமிழ் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது-முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

48.   இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது- மூன்று வகையான சங்குகள் தருதல்

49.   தமிழில் மெத்த அணிகலன் என குறிப்பிடப்படும் நூல்கள் - ஐம்பெரும் காப்பியம்

50.   இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது- மிகுதியான வணிகக் கப்பல்கள்

51.   இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது - நீரலையைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்

52.   காலையிலேயே மாலையும் வந்துவிட்டது என சிலேடையாக கூறியவர் - கி.வா.ஜகந்நாதன்

53.   "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்' என்றுக் கூறியவர்- சுப்புடு

54.   கி..பெ.விசுவநாதன் பல் மருத்துவ நண்பரை எவ்வாறு அறிமுகம் செய்தார் -  பல்துறை வித்தகர்

55.   உரைநடையின் அணிநலன்கள் என்ற நூலின் ஆசிரியர் - எழில் முதல்வன்

56.   குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் - கபிலர்

57.   குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் - நா. பார்த்த சாரதி

58.   "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் - தண்டி

59.   திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி வெளியிடப்பட்ட ஆண்டு -1983 செப்டம்பர்

60.   திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது - டி.சி.எம். டேட்டா புரொடக்டஸ்

61.   சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத்துறை அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும், செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி - திருவள்ளுவர்

62.   "திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள் என்ற உவமைக் காணப்படும் நூல் - குறிஞ்சி மலர்

63.   'களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது உண்டு மகிழ்ந்தாய் : உன் புன்னகை தான் அதற்குச் சான்று ' என்று கூறியவர் - அண்ணா

64.   "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி - எடுத்துக்காட்டு உவமை அணி

65.   எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை - இணை ஒப்பு

66.   "ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை'' என்று கூறியவர் - .ராமசாமி

67.   மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் - .ராமசாமி

68.   "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லும் போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டவர் - தொல்காப்பியர்

69.   தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் - திரு.வி.

70.   "தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும்'' என்று எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை

71.   தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் - இரா.பி.சேதுபிள்ளை

72.   சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் - மு.வரதராசனார்

73.   நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் - மு.வரதராசனார்

74.   வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும் என்று எழுதியவர் - மு.வரதராசனார்

75.   முரண்பாடு மெய்ம்மை - Paradox

76.   "இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?" இது எதற்கான எடுத்துக்காட்டு - முரண்படு மெய்ம்மை

77.   சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு பெயர் - எதிரிணை இசைவு

78.   கலப்பில்லாத பொய்யை - சொல் முரண் (Oxymoron)

79.   "குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒரு பக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்" என்று கூறியவர் - .ஜீவானந்தம்

80.   பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர் - அண்ணா

81.   உச்சநிலை என்பது - Climax

82.   "இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மைஎன்று கூறியவர் - பாரதியார்

83.   புதிய உரைநடை என்ற நூலின் ஆசிரியர் - எழில் முதல்வன்

84.   எழில் முதல்வனின் வேறு பெயர் - மா.இராமலிங்கம்

85.   குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராக பணி செய்தவர் - எழில் முதல்வன்

86.   மா.இராமலிங்கம் எழுதியகள் நூல்-இனிக்கும் நினைவுகள்,எங்கெங்கு காணினும்,யாதுமாகி நின்றாய்

87.   புதிய உரைநடை" என்ற நூலுக்காக மா. இராமலிங்கம் பெற்ற விருது - சாகித்திய அகாடமி

88.   'வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்

89.   சிறுமலை என்ற ஊர் எம்மாவட்டத்தில் உள்ளது- திண்டுக்கல்

90.   எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை - இணை ஒப்பு என்கிறோம்

91.   புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - எடுத்துக்காட்டு உவமை அணி

92.   சார்பெழுத்து எத்தனை வகைப்படும் - பத்து

93.   அளபெடுத்தல் என்பது - நீண்டு ஒலித்தல்

94.   உயிரளபெடை எத்தனை வகைப்படும் - மூன்று

95.   உயிரளபெடையின் வகைகள் - செய்யுளிசை அளபெடை,இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை

96.   செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் - செய்யுளிசை அளபெடை

97.   இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது- செய்யுளிசை அளபெடை

98.   இசைநிறை அளபெடைக்கு எடுத்துக்காட்டு தருக - ஓஒதல் வேண்டும்,உறாஅர்க்கு உறுநோய், நல்ல படாஅ பறை

99.   செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது அளபெடை - இன்னிசை அளபெடை

100.  "கெடுப்பதூம்உம், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லம் மழை" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை - இன்னிசை அளபெடை

101.  செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது அளபெடை - சொல்லிசை அளபெடை

102.  "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார வரனசைஇ இன்னும் உளேன்" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை - சொல்லிசை அளபெடை

103.  நசை என்பதன் பொருள் - விருப்பம்

104.  ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துகள் அளபெடுக்கும் - 11

105.  ஒற்றளபெடையில் பயன்படும் எழுத்துகள் - ங், ஞ், ண், ந்,ம், ன், வ்,ய்,ல்,ள்,

106.  ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது - சொல்

107.  மொழியின் மூன்று வகைதனிமொழி,தொடர்மொழி,பொது மொழி

108.  "ஒரு மொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு எனபொது இருமையும் ஏற்பன" என்று கூறும் நூல் - நன்னூல்

109.  ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது - தனிமொழி

110.  தனிமொழிக்கு எடுத்துக்காட்டு தருக - கண், படி , கண்ணன்

111.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது - தொடர்மொழி

112.  தொடர்மொழிக்கு எடுத்துக்காட்டு தருக  - கண்ணன் வந்தான்

113.  ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது ­- பொது மொழி

114.  பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு தருக - வேங்கை

115.  ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் இடம் காலம் பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது - தொழிற்பெயர்

116.  வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் - விகுதி பெற்ற தொழிற்பெயர்

117.  நடத்தல் என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக் காண்கநட, தல்

118.  வாழ்க்கை என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக் காண்க - வாழ், கை

119.  ஆளல் என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக் காண்க - ஆள், அல்

120.  எதிர்மறைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக - நடவாமை

121.  விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் வருவது - முதனிலை தொழிற்பெயர்

122.  முதனிலைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு தருகதட்டு,உரை,அடி

123.  விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்- முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

124.  கெடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயரில்  - கெடு என மாறும்

125.  கெடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயரில் - கேடு என மாறும்

126.  சுடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயரில் - சுடு என வரும் 

127.  சுடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயரில் - சூடு என வரும்

128.  ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது - வினையாலணையும் பெயர்

129.  வினையாலணையும் பெயர் எந்தெந்த இடங்களில் வரும் - தன்மை,முன்னிலை,படர்க்கை

130.  வினையாலனையும் பெயர் எந்தெந்த காலங்களில் வரும் - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்

131.  வினையாலணையும் பெயருக்கு எடுத்துக்காட்டு தருக - பொறுத்தார் பூமியாள்வர்

132.  மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது - வணிகக்கப்பலும் ஐம்பெரும் காப்பியம்

133.  காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் " நிலத்துக்கு நல்ல உரங்கள். இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது - சருகும் சண்டும்

134.  எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் - எம் + தமிழ் + நா

135.  கேட்டவர் மகிழப்பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே - பாடல் : கேட்டவர்

136.  வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை - மணி வகை

137.  மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் - சுந்தர கவிராசர்

138.  "தேனிலே ஊறிய செந்தமிழின் தேறும் சிலப்பதி காரமதை" - என்ற பாடலின் ஆசிரியர் - கவிமணி தேசிய விநாயகனார்

139.  "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு வளங்குறத் திகழுந்தென் மொழியே'' என்ற பாடலின் ஆசிரியர் - கா.நமச்சிவாயர்

140.  நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் - சேதுமணி மணியன்

141.  தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் - மா.நன்னன்

142.  பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் - உதய சங்கர்

143.  செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை - செய்யுளிசை அளபெடை

144.  ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் - 11

145.  பொருத்துக.

           1.     தண்டு - கீரை, வாழை

           2.     கோல் - நெட்டி, மிளகாய்ச் செடி

           3.     தூறு - குத்துச்செடி, புதர்

           4.     தட்டு () தட்டை - கம்பு, சோளம்

146.  பொருத்துக.

           1.     கழி - கரும்பின் அடி

           2.     கழை - மூங்கிலின் அடி

           3.     அடி - புளி, வேம்பு

           4.     தாள் - நெல், கேழ்வரகு

147.  கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக.

           1.     அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை - கவை

           2.     கவையின் பிரிவு - கொம்பு/கொப்பு

           3.     கொம்பின் பிரிவு - கிளை

           4.     கிளையின் பிரிவு - சினை

           5.     சினையின் பிரிவு - போத்து

           6.     போத்தின் பிரிவு - குச்சு

           7.     குச்சியின் பிரிவு - இணுக்கு

148.  காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     சுள்ளி - காய்ந்த குச்சு (குச்சி)

           2.     விறகு - காய்ந்த சிறுகிளை

           3.     வெங்கழி - காய்ந்த கழி

           4.     கட்டை - காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

149.  தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     இலை - புளி, வேம்பு

           2.     தாள் - நெல், புல்

           3.     தோகை - சோளம், கரும்பு

           4.     ஓலை - தென்னை, பனை

           5.     சண்டு - காய்ந்த தாளும் தோகையும்

           6.     சருகு - காய்ந்த இலை

150.  கொழுந்து வகை பொருத்துக.

           1.     துளிர் () தளிர் - நெல், புல்

           2.     முறி () கொழுந்து - புளி, வேம்பு

           3.     குருத்து - சோளம், கரும்பு, தென்னை, பனை

           4.     கொழுந்தாடை - கரும்பின் நுனிப்பகுதி

151.  பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     அரும்பு ­- பூவின் தோற்ற நிலை

           2.     போது - பூ விரியத் தொடங்குதல்

           3.     மலர் () அலர் - பூ மலர்ந்த நிலை

           4.     வீ - செடியினின்று பூ கீழே விழுதல்

           5.     செம்மல் - பூ வாடின நிலை

152.  தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     பூவோடு கூடிய இளம்பிஞ்சு - பூம்பிஞ்சு

           2.     இளம் காய் - பிஞ்சு

           3.     மாம்பிஞ்சு - வடு

           4.     பலாப்பிஞ்சு - மூசு

           5.     எள்பிஞ்சு கவ்வை

 

153.  தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     தென்னை, பனை - குரும்பை

           2.     சிறு குரும்பை - முட்டுக்குரும்பை

           3.     முற்றாத தேங்காய் - இளநீர்

           4.     இளம் பாக்கு - நுழாய்

           5.     இளம் நெல் - கருக்கல்

           6.     வாழைப்பிஞ்சு - கச்சல்

154.  தாவரத்தின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     கொத்து - அவரை, துவரை

           2.     குலை - கொடி முந்திரி

           3.     தாறு  - வாழைக் குலை

           4.     கதிர் - கேழ்வரகு, சோளம்

           5.     அலகு () குரல் -  நெல், தினை

           6.     சீப்பு - வாழை

155.  கெட்டுப்போன காய்கனிகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     சூம்பல் - நுனியில் சுருங்கிய காய்

           2.     சிவியல் - சுருங்கிய பழம்

           3.     சொத்தை - புழு பூச்சி அரித்த காய் () கனி

           4.     வெம்பல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு

           5.     அளியல் - குளுகுளுத்த பழம்

156.  பொருந்துக.

           1.     அழுகல் - குளுகுளுத்து நாறிய பழம் () காய்

           2.     சொண்டு - பதராய்ப் போன மிளகாய்

           3.     கோட்டான் காய் () கூககக்காய் - கோட்டான் உட்கார்ந்ததால் கெட்ட காய்

           4.     தேரைக்காய் - தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்

           5.     அல்லிக்காய் - தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்

           6.     ஒல்லிக்காய் - தென்னையில் கெட்ட காய்

157.  பழங்களின் தோல்பகுதியைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக.

           1.     தொலி - மிக மெல்லியது

           2.     தோல் - திண்ணமானது

           3.     தோடு - வன்மையானது

           4.     ஓடு - மிக வன்மையானது

 

 

158.  பொருட்களின் தோல்பகுதியை குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     குடுக்கை - சுரை

           2.     மட்டை - தேங்காய்

           3.     உமி - நெல், கம்பு

           4.     கொம்பை - வரகு, கேழ்வரகு

159.  தானியங்களுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     கூலம் - நெல், புல், கம்பு

           2.     பயறு - அவரை, உளுந்து

           3.     கடலை - வேர்க்கடலை, கொண்டைக்கடலை

           4.     விதை  - கத்தரி, மிளகாய்

           5.     காழ் - புளி, காஞ்சிரை (நச்சு மரம்)

160.  தானியங்களுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     முத்து - வேம்பு, ஆமணக்கு

           2.     கொட்டை - மா, பனை

           3.     தேங்காய் - தென்னை

           4.     முதிரை  - அவரை, துவரை

161.  தாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     நாற்று - நெல், கத்தரி

           2.     கன்று - மா, புளி, வாழை

           3.     குருத்து - வாழை

           4.     பிள்ளை - தென்னை

162.  தாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     குட்டி - விளா

           2.     மடலி/வடலி - பனை

           3.     பைங்கூழ் - நெல், சோளம்

163.  பொருத்துக.

           1.     Vowel - உயிரெழுத்து

           2.     Consonant - மெய்யெழுத்து

           3.     Homograph - ஒப்பெழுத்து

           4.     Monolingual - ஒரு மொழி

           5.     Conversation - உரையாடல்

           6.     Discussion - கலந்துரையாடல்

 

https://www.a2ztnpsc.in/