10TH- STD – இயல் - 3

1.     விருந்தோம்பல் பற்றிய 17ம் நூற்றாண்டுச் சுவரோவியம் எங்குள்ளது - சிதம்பரம்

2.     'விருந்தே புதுமை' என்று கூறியவர் - தொல்காப்பியர்

3.     திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்த எந்த அதிகாரத்தை அமைத்திருக்கிறார்- இல்லறவியல்

4.     முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை 'மோப்பக் குழையும் அனிச்சம்' என்ற குறளில் எடுத்துரைத்தவர் - திருவள்ளுவர்

5.     'தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்

6.     கோவலனைப் பிரிந்துவாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர் - இளங்கோவடிகள்

7.     கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர்- கம்பர்

8.     கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார் - செயங்கொண்டார்

9.     "வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - கம்பராமாயணம்

10.   'விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - கலிங்கத்துப்பரணி

11.   தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை -

12.   'உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' என்ற புறநானூறு பாடலை பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

13.   நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் - நற்றிணை

14.   'அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - நற்றிணை

15.   'காலின் ஏழடிப் பின் சென்று' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - பொருநராற்றுப்படை

16.   தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்று கூறும் நூல் - புறநானூறு

17.   'குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு

18.   நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல் - புறநானூறு

19.   'நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு

20.   விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்தவர்- இளையான் குடி மாறநாயனார்

21.   நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று 'குழல் மீன் கறி ' பிறவும் கொடுத்ததாக கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

22.   'இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு' என்ற கவிதையை இயற்றியவர் - அம்சப்பிரியா

23.   இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் 'உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததாக கூறும் நூல் - குறுந்தொகை

24.   'பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - குறுந்தொகை

25.   மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்று கூறியவர்- ஒளவையார்

26.   'வரகரிசிச் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே " என்று பாடியவர் - ஒளவையார்

27.   யாருடைய ஆட்சிக்காலத்தில் மிகுதியான சாத்திரங்கள் தோன்றின - நாயக்கர் , மராட்டியர்

28.   எந்த தமிழ்ச் சங்கம் 'வாழையிலை விருந்து விழா 'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது- அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம்

29.   "இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்'' என்ற பாடல் வரியை இயற்றியவர் - பாரதிதாசன்

30.   விருந்தினரை வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேவர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்'' என்று கூறும் நூல் - பொருநராற்றுப்படை

31.   காசிக்காண்டம் என்ற நூலின் ஆசிரியர் - அதிவீரராம பாண்டியர்

32.   விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை - ஒன்பது

33.   முகமன் என்ற சொல்லின் பொருள் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல்

34.   இலக்கணக்குறிப்பு தருக "நன்மொழி'' - பண்புத்தொகை

35.   வியத்தல், நோக்கல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதற்கு இலக்கணக்குறிப்பு தருக- தொழிற்பெயர்

36.   ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் '' என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் - விவேக சிந்தாமணி

37.   காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் - காசிக் காண்டம்

38.   முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் - அதிவீரராம பாண்டியர்

39.   அதிவீரராம பாண்டியர் எழுதிய வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை நூல் சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது

40.   அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் - சீவலமாறன்

41.   கூர்ம புராணம் மற்றும் லிங்கபுராணம் என்ற நூல்களை எழுதியவர் - சீவலமாறன்

42.   நைடதம் மற்றும் திருக்கருவை அந்தாதி என்ற நூல்களை எழுதியவர் - அதிவீரராம பாண்டியர்

43.   வாயுசம்கிதை என்ற நூலை எழுதியவர் - அதிவீரராம பாண்டியர்

44.   பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்காசிக்காண்டம்

45.   மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர் - பெருங்கௌசிகனார்

46.   ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் - பாணர், கூத்தர் , விறலியர்

47.    அன்று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கிஎன்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் - மலைபடுகடாம்

48.   சிவந்த பூக்களை கொண்ட மரம் - அசோகமரம்

49.   அசைஇ, கெழீஇ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - சொல்லிசை அளபெடை

50.   பரூஉக், குருஉக்கண் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - செய்யுளிசை அளபெடை

51.   மலைபடுகடாம் எத்தனை அடிகளை உடையது - 583

52.   மலைபடுகடாமின் வேறு பெயர் - கூத்தராற்றுப்படை

53.   மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது

54.   மலைபடுகடாமின் பாட்டுடைத்தலைவன் - நன்னன்

55.   கருப்பு நிறக்கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் - கம்பு

56.   கோவில் பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் - கரிசல் இலக்கியம்

57.   காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியம் - கரிசல் இலக்கியம்

58.   கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர் - கு.அழகிரி சாமி

59.   கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் - கி.ராஜநாராயணன்

60.   கரிசல் இலக்கியப் பரம்பரை - பா.செயப்பிரகாசம்,வீரவேலுசாமி,வேலராமமூர்த்தி

61.   கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை - கோபல்லபுரத்து மக்கள்

62.   கி.ராஜநாராயணன் சொந்த ஊர் - இடைசெவல்

63.   இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாக கொண்ட நூல் - கோபல்லபுரத்து மக்கள்

64.   கோபல்லபுரத்து மக்கள்'' என்ற நூல் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு -1991

65.   கி.ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார் - 20

66.   யாருடைய கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப் போக்கில் அமைந்திருக்கும் - கி.ராஜநாராயணன்

67.   கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர் - கி.ராஜநாராயணன்

68.   கி.ராஜநாராயணன் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - கரிசல் இலக்கியம்

69.   எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படுபவர் - கி.ராஜநாராயணன்

70.   "கறங்கு இசை விழவின் உறந்தை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - அகநானூறு

71.   உறையூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - திருச்சி

72.   ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது - தொகாநிலைத்தொடர்

73.   "குயில் கூவியது" என்பது - தொகாநிலைத்தொடர்

74.   தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் - 9

75.   எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது - எழுவாய்த் தொடர்

76.   எழுவாய்த் தொடர்  -  இனியன் கவிஞர்,காவிரி பாய்ந்தது,பேருந்து வருமா

77.   விளியுடன் வினை தொடர்வது - விளித்தொடர்

78.   விளித்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - நண்பா எழுது

79.   வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது - வினைமுற்றுத் தொடர்

80.   பாடினாள் கண்ணகி" என்பது எவ்வகைத் தொடர் - வினைமுற்றுத் தொடர்

81.   முற்றுப்பெறாத வினை, பெயர் சொல்லை தொடர்வது - பெயரெச்சத்தொடர்

82.   பெயரெச்சத்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - கேட்ட பாடல்

83.   முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைத் தொடர்வது - வினையெச்சத்தொடர்

84.   வினையெச்சத்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - பாடிமகிழ்ந்தனர்

85.   வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர் - வேற்றுமைத்தொகாநிலைதொடர்

86.   "அன்பால் கட்டினார்" என்பது எவ்வகைத்தொடர் -  மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

87.   "அறிஞருக்குப் பொன்னாடைஎன்பது எவ்வகைத்தொடர் - நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

88.   இடைச்சொல்லோடு பெயரோ, வினையோ தொடர்வது - இடைச்சொல் தொடர்

89.   'மற்றொன்று ' பிரித்து எழுதுக - மற்று + ஒன்று

90.   உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது - உரிச்சொல் தொடர்

91.   உரிச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - சாலச்சிறந்தது

92.   ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது - அடுக்குத்தொடர்

93.    வருக வருக வருக" என்பது - அடுக்குத்தொடர்

94.   கூட்டுநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு தருக - கேட்க வேண்டிய பாடல்

95.   தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

96.   சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது - சிற்றூர்

97.   அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது - வேற்றுமை உருபு

98.   காசிக்காண்டம் என்பது - காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

99.   'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை - இன்மையிலும் விருந்து

100.  சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனக்கூறும் - திருக்குறள்

101.   மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து'' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - முக்கூடற்பள்ளு

102.  கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி'' என்ற பாடலை பாடியவர் - காளமேகப்புலவர்

103.  திருக்குறள் தெளிவுரை என்ற நூலின் ஆசிரியர் - ..சிதம்பரனார்

104.  சிறுவர் நாடோடிக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் - கி.ராஜநாராயணன்

105.  ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் - கு.சிவராமன்

106.  "வேலொடு நின்றான் இருவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு'' என்ற குறளில் பயின்று வரும் அணி - உவமையணி

107.  'பண்என்னாம் பாடற்கியைபின்றேல் கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்' என்ற குறளில் பயின்று வரும் அணி - எடுத்துக்காட்டு உவமையணி

108.  "நச்சப் படாதவன் செல்லம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று'' என்ற குறளில் பயின்று வரும் அணி -உவமையணி

109.  உயிரினும் மேலானது - ஒழுக்கம்

110.  உண்மைப் பொருளைக் காண்பது - அறிவு

111.  பெரியோரை போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் - பெரும்பேறு

112.  "உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!'' என்ற கவிதையை இயற்றியவர்அறிவுமதி

113.  பொருத்துக.

           1.     அசைஇ - இளைப்பாறி

           2.     கடும்பு - சுற்றம்

           3.     ஆரி - அருமை

           4.     வயிரியம் - கூத்தர்

           5.     இறடி - தினை

114.  பொருத்துக.

           1.     அல்கி  - தங்கி

           2.     நரலும்  - ஒலிக்கும்

           3.     படுகர் - பள்ளம்

           4.     வேவை - வெந்தது

           5.     பொம்மல் - சோறு

115.  வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     பாச்சல் - பாத்தி

           2.     பதனம் - கவனமாக

           3.     நீத்துப்பாகம் - மேல்கஞ்சி

           4.     கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக் குடித்தல்

           5.     மகுளி - சோற்றுக்கஞ்சி

116.  வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டு பொருத்துக

           1.     வரத்துக்காரன் - புதியவன்

           2.     சடைத்து புளித்து - சலிப்பு

           3.     அலுக்கம் - அழுத்தம்

           4.     தொலவட்டையில் - தொலைவில்

117.  கலைச்செல்லைக் கொண்டு பொருத்துக.

           1.     செவ்விலக்கியம் - Classical Literature

           2.     காப்பிய இலக்கியம்  - Epic Literature

           3.     பக்தி இலக்கியம் - Devotional Literature

           4.     பண்டைய இலக்கியம்  - Ancient Literature

           5.     வட்டார இலக்கியம்  - Regional Literature

           6.     நாட்டுப்புற இலக்கியம்  - Folk Literature

           7.     நவீன இலக்கியம் - Modern Literature

 

https://www.a2ztnpsc.in/