10TH- STD – இயல் - 4

1.     தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் எந்த வருடம் தொடங்கியது-1980

2.     Digital Revolution என்பது - மின்னனுப் புரட்சி

3.     இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் - வேர்டு ஸ்மித்

4.     2016ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் இரண்டு கோடித்தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது

5.     எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது- சீனா

6.     மென்பொருள் என்பதுSoftware

7.     ஒரு மென்பொருள் அல்லது கணினிச்செயல்திட்ட வரைவை - செயற்கை நுண்ணறிவு

8.     உலவி என்பது - Browser

9.     இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்ற பாடல் வரியை பாடியவர் - பாரதியார்

10.   'இலா' என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிற இந்தியாவின் பெரிய வங்கி - பாரத ஸ்டேட் வங்கி

11.   ELA என்பதன் விரிவாக்கம் தருக - Electronic Live Assistant

12.   செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் தேவை கூடியுள்ளது - தரவு அறிவியலாளர்

13.   ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் - பெப்பர்

14.   நான்காவது தொழிற்புரட்சி என்பது - செயற்கை நுண்ணறிவு

15.   மின்னணுச் சந்தைப்படுத்தல் என்பது - Digital Marketing

16.   சீனநாட்டில் 'காண்டன்' நகருக்கு 500 கல் வடக்கே என்னும் உள்ள துறைமுக நகர் - சூவன்சௌ

17.   சீனாவில் உள்ள சிவன்கோவில் எந்த சீனப் பேரரசரின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது - குப்லாய்கானின்

18.   சீனாவில் உள்ள சிவன்கோவிலில் யார் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டது - சோழர்

19.   "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" என்ற பாடலின் ஆசிரியர் - குலசேகராழ்வார்.

20.   வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது - பாலக்காடு

21.   குலசேகராழ்வார் வித்துவக்கோடில் உள்ள எந்த தெய்வத்தை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்- உய்யவந்த பெருமாளை

22.   பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது- ஐந்தாம் திருமொழி

23.   பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளது - 105

24.   குலசேகராழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் - 8 ஆம் நூற்றாண்டு

25.   பெருமாள் திருமொழியை இயற்றியவர் - குலசேகராழ்வார்

26.   "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" என்ற பாடலின் ஆசிரியர் - கிரந்தையார்

27.   'நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி' என்று கூறும் நூல் - பரிபாடல்

28.   நம் பால்வீதிகள் போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு -  1924

29.   1300 ஆண்டுகளுக்கு முன் அண்டப்பகுதியை பற்றி எழுதியவர் - மாணிக்கவாசகர்

30.   "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் - மாணிக்கவாசகர்

31.   எட்டுத்தொகை நூல்களில் ஒன்று - பரிபாடல்

32.   பரிபாடல் - ஓங்கு பரிபாடல் எனும் புகழுடையது

33.   சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் - பரிபாடல்

34.   பரிப்பாடலில் எத்தனை பாடல் இருப்பதாகக் கூறியுள்ளனர்- 70

35.   தற்போது பரிபாடலில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளது - 24

36.   பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் சென்னையில் எங்குள்ளது - கோட்டூர் புரம்

37.   தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1988

38.   பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் எத்தனை காட்சிக் கூடங்கள் உள்ளது-10

39.   பெரியார் அறிவியல் தொழில்நுட்பகழகத்தில் உள்ள கோளரங்கத்தில் எத்தனை பாகை அரைவட்ட வானத்திரை உள்ளது மற்றும் எந்த ஆண்டு அது அமைக்கப்பட்டது - 360, 2009

40.   "தற்காலத்தின் ஐன்ஸ்டைன்" என்று புகழப்படுபவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

41.   பக்கவாத நோயால் ஸ்டீபன் ஹாக்கிங் பாதிக்கப்பட்ட ஆண்டு - 1963

42.   ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்த ஆண்டு - 1985

43.   ஸ்டீபன் ஹாக்கிங் எதன் மூலம் தன் கருத்தைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிபடுத்தினார்- கன்னத் தசையசைவு

44.   பேரண்டப்பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான யாருடைய ஆராய்ச்சிகள் முக்கியமானவை - ஸ்டீபன் ஹாக்கிங்

45.   ஸ்டீபன் ஹாக்கிங் எதன் அடிப்படையில் பேரண்டம் உருவான சான்றுகளை விளக்கினார் - கணிதவியல்

46.   "பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை" என்றவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

47.   "புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன" என்று கூறியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

48.   கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்- ஜான் வீலர்

49.   ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை ஆராய்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஹாக்கிங் கதிர்வீச்சு

50.   ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளையினை - படைப்பாற்றல் என்று நிரூபித்தார்

51.   ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை பற்றிய கூற்றுகள்

           1.     கருந்துளைகளில் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது

           2.     கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து 'கதிர்வீச்சுகள்' வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன

           3.     கருந்துளை உண்மையிலேயே 'கருப்பாக' இருப்பதில்லை.

52.   ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடி - ஐன்ஸ்டைன்

53.   நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த கணக்கியல் துறையின் "லூகாசியன் பேராசிரியர்" என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகித்தவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

54.   ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளின் கணிதக் கோட்பாடு - E = mc 2

55.   கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை ஸ்டீபன் ஹாக்கிங் எதனோடு ஒப்பிட்டுஉலகத்திற்கு  கூறினார் - விண்மீன் இயக்கம்

56.   ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் -

           1.     ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது

           2.     உல்ஃப் விருது

           3.     அடிப்படை இயற்பியல் பரிசு

57.   ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்- கலிலியோ

58.   ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த நாளில் இறந்தார் - ஐன்ஸ்டைன்

59.   "தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது" என்று கூறியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

60.   எந்த வருடம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 'தொடக்க விழா நாயகர்' என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார் - 2012

61.   ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது எத்தனையாவது பிறந்த நாளை 'போயிங் 727' விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார் -  60

62.   அறிவியல் உலகில் மட்டுமன்றி, சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

63.   ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - 40

64.   ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் வெளிவந்த ஆண்டு- 1988

65.   "கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - அகநானூறு

66.   'அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது" என்று கூறியவர்- ஐன்ஸ்டைன்

67.   'வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது" என்று கூறியவர் - ஸ்டீபன் ஹாக்கிங்

68.   ஆறறிவுடைய மக்களை உயர்திணை, என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை என்றும் வழங்குவர்

69.   திணையின் உட்பிரிவு - பால்

70.   பால் எத்தனை வகைப்படும் - 5

71.   உயர்திணையின் பால் எத்தனை பிரிவுகளைக் கொண்டது - மூன்று

72.   அஃறிணையின் பகுப்புகள் - ஒன்றன்பால், பலவின்பால்

73.   அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது - ஒன்றன்பால்

74.   அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது - பலவின்பால்

75.   இடம் எத்தனை வகைப்படும் - மூன்று

76.   தன்மைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக - நான், யான், நாம், யாம்

77.   தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக - வந்தேன், வந்தோம்

78.   முன்னிலைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு - நீ. நீர், நீவிர், நீங்கள்

79.   முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக - நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்

80.   படர்க்கைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக - அவன், அவள், அவர், அது, அவை

81.   படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக - வந்தான். சென்றாள், படித்தனர்

82.   இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் - வழாநிலை

83.   இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் - வழு

84.   இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது - வழுவமைதி

85.   'என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி - திணை வழுவமைதி

86.   'வாடா இராசா, வாடா கண்ணா' என்று மகனை தாய் அழைப்பது - பால் வழுவமைதி

87.   'இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என்பது  - இட வழுவமைதி

88.   'குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது - கால வழுவமைதி

89.   'கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்' என்பது - மரபு வழுவமைதி

90.   'உனதருளே பார்ப்பன் அடியேனே' யாரிடம் யார் கூறியது - இறைவனிடம் குலசேகராழ்வார்

91.   பரிபாடல் அடியில்விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது - வானத்தையும் பேரொலியையும்

92.   "முகந்தெரியா நபரிடையே இனம்புரியா உறவுமுறை" என்ற கவிதையை எழுதிய இலங்கைத் தமிழ் கவிஞர் - டெபோரா பர்னாந்து

93.   "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே" என்ற பாடலின் ஆசிரியர் - பாரதியார்

94.   "பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்" என்ற நூலின் ஆசிரியர் - நீலமணி

95.   "அன்றாட வாழ்வில் அறிவியல்" என்ற நூலின் ஆசிரியர் - தமிழ்ச்செல்வன்

96.   "காலம்" என்ற நூலின் ஆசிரியர் - ஸ்டீபன் ஹாக்கிங்

97.   குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே - பால் வழுவமைதி, திணை வழுவமைதி

98.   பொருத்துக.

           1.     சுடினும் - சுட்டாலும்

           2.     மாளாத - தீராத

           3.     மாயம் - விளையாட்டு

99.   பொருத்துக.

           1.     விசும்பு - வானம்

           2.     ஊழி - யுகம்

           3.     ஊழ் - முறை

           4.     தண்பெயல் - குளிர்ந்த மழை

           5.     ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

           6.     பீடு - சிறப்பு

           7.     ஈண்டி - செறிந்து திரண்டு

100.  பொருத்துக

           1.     ஊழ் ஊழ் - அடுக்குத்தொடர்

           2.     வளர்வானம் - வினைத்தொகை

           3.     செந்தீ - பண்புத்தொகை

           4.     வாரா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

101.  கலைச்சொல் : பொருத்துக.

           1.     Nanotechnology - மீநுண் தொழில்நுட்பம்

           2.     Biotechnology - உயிரித்தொழில்நுட்பம்

           3.     Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள்

           4.     Space Technology - விண்வெளித் தொழில்நுட்பம்

           5.     Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்

           6.     Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

 

https://www.a2ztnpsc.in/