10TH- STD - இயல் - 5

1.     ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு' என்றவர் -மணவை முஸ்தபா

2.     உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்' என்றவர் - மு.கு.ஜகந்நாத ராஜா

3.     மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர், தனது தொல்காப்பிய நூலின் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார்- மரபியல்

4.     "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று கூறும் செப்பேடு - சின்னமனூர்

5.     சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு - சின்னமனூர்

6.     வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்ட நூல்கம்பராமாயணம்,பெருங்கதை,வில்லிபாரதம்

7.     வடமொழியில் வழங்கி வந்த இராமாயணம், மகாபாரதம் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளது

8.     தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு எதை ஒரு கருவியாகக் கொண்டது - மொழிபெயர்ப்பு

9.     ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமான யார் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார் - ஷேக்ஸ்பியர்

10.   18ம் நூற்றாண்டு வரை எந்த மொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன- வடமொழி

11.   ஆங்கிலேயர் வருகைக்குப்பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற எந்த மொழி நூல்களும் அறிமுகமாயின- ஐரோப்பிய மொழி

12.   இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு - கீதாஞ்சலி

13.   ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்த நாட்டின் எதனை மதிப்பிடுவார்கள்- பண்பாடு, அறிவு

14.   எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன- பிரஞ்சு, ஜெர்மன்,ஆப்பிரிக்கா,இலத்தீன், அமெரிக்கா

15.   1942 ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் - ராகுல் சாங்கிருத்யாயன்

16.   1949 ஆம் ஆண்டு 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் - கணமுத்தையா

17.   'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை முத்து மீனாட்சி மொழி பெயர்த்த ஆண்டு- 2016

18.   'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை யூமா வாசுகி மொழி பெயர்த்த ஆண்டு- 2018

19.   'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை டாக்டர்.ஸ்ரீதர் மொழி பெயர்த்த ஆண்டு - 2016

20.   தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தின் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும் சொல் - Railsleeper

21.   Camel என்பதற்கு பொருள் - ஒட்டகம், வடம்

22.   Underground drainage என்பதற்கு எவ்வாறு மொழி பெயர்த்தனர்- புதைச்சாக்கடை

23.   Tele என்பது எதனைக் குறிக்கிறது - தொலை

24.   ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகிறது - 5000

25.   கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்பை - பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்?

26.   "காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ்நிலை வேண்டும்" என்று கூறியவர் - குலோத்துங்கன்

27.   "சென்றிடுவீர் எட்டுத்திற்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர் - பாரதியார்

28.   "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் - பாரதியார்

29.   பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்பதைக் கூறியவர் - தனிநாயக அடிகள்

30.   எந்த தேசிய நூற்கூடத்தில் (Bibliotheque National) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும், கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன - பிரான்சு

31.   இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளும் எந்த தேசிய நூற்கூடத்தில் உள்ளது - பிரான்சு

32.   பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் எந்த நூற்கூடத்தில் இருக்கின்றனர் - பிரான்சு

33.   பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்புகள் -சரளிப்புத்தகம்,மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்

34.   நீதிவெண்பா என்ற நூலின் ஆசிரியர் - கா..செய்குதம்பிப்பாவலர்

35.   தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் - திருக்குறள்

36.   "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் - கா..செய்குதம்பிப் பாவலர்

37.   உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது - கல்வி

38.   சதம் என்பதன் பொருள் - நூறு

39.   ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் - சதாவதானம்

40.   'சதாவதானம்' என்ற கலையில் சிறந்து விளங்கியவர் - செய்குதம்பிப்பாவலர்

41.   செய்குதம்பிப்பாவலரின் காலம்  - 1874 to 1950

42.   செய்குதம்பிப்பாவலர் பிறந்த 'இடலாக்குடி' என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது- கன்னியாகுமரி

43.   எத்தனை வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார் - 15

44.   சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்  - செய்குதம்பிப்பாவலர்

45.   செய்குதம்பிபாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்ற பாராட்டை பெற்றார்-  மார்ச் 10, 1907

46.   செய்குதம்பிப்பாவலர் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - இடலாக்குடி

47.   திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் - பரஞ்சோதி முனிவர்

48.   பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் - குசேல பாண்டியன்

49.   கபிலரின் நண்பர் - இடைக்காடனார்

50.   குசேல பாண்டியன் எந்த புலவரை அவமதித்தான் - இடைக்காடனார்

51.   மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார் - இறைவனிடம்

52.   இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி எங்கு சென்று தங்கினார்- வடதிரு ஆலவாயில்

53.   அழகிய வேப்பமலர் மாலையை அணியும் மன்னன் - பாண்டியன்

54.   'பாண்டியன் என்னை இகழவில்லை சொல்லின் வடிவாக உன் இடதுப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்' என்று சினத்துடன் கூறியவர்-  இடைக்காடனார்

55.   இறைவன் இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய யாருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார் - கபிலர்

56.   இலக்கணக்குறிப்பு தருக "கேள்வியினான்'' - வினையாலணையும் பெயர்

57.   இலக்கணக்குறிப்பு தருக "காடனுக்கும் கபிலனுக்கும்" -  எண்ணும்மை

58.   மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

59.   "மாசற விசித்த வார்புறு வளர்பின்' என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் - மோசிசீரனார்

60.   திருவிளையாடல் கதைகள் சிலப்பதிகாரம் நூலை முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டதாகும்

61.   திருவிளையாடற்புராணத்தின் காண்டங்கள் - மதுரைக்காண்டம்,கூடற்காண்டம்,திருவாலவாய்க் காண்டம்

62.   திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளது - 64

63.   பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார் - திருமறைக்காடு

64.   பரஞ்சோதி முனிவர் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர் - 17ஆம் நூற்றாண்டு

65.   வேதாரண்ய புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்

66.   திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பாவை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்

67.   மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்

68.   "நுண்ணிய கேள்வி யோறும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருவிளையாடற்புராணம்

69.   புதிய நம்பிக்கை என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் - கமலாலயன்

70.   கமலாலயன் அவர்களின் இயற்பெயர் - வே. குணசேகரன்

71.   வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர்கமலாலயன்

72.   "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்- ஐங்குறுநூறு

73.   கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளதுதூத்துக்குடி

74.   வினா எத்தனை வகைப்படும் - ஆறு

75.   மாணவரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா - அறிவினா

76.   "ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டல்" எவ்வகை வினா- அறியாவினா

77.   இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் எவ்வகை வினா- ஐயவினா

78.   'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல் எவ்வகை வினா -கொளல்வினா

79.   என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல் எவ்வகை வினா - கொடைவினா

80.   "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் எவ்வகை வினா - ஏவல்வினா

81.   "அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்" என்று கூறும் நூல் - நன்னூல்

82.   சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்றது உரைத்தல் உறுவது கூறல்" என்று கூறும் நூல் - நன்னூல்

83.   விடை எத்தனை வகைப்படும் - எட்டு

84.   கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக்கூறல் எவ்வகை விடை - சுட்டு விடை

85.   'கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக் கூறல் எவ்வகை விடை - மறை விடை

86.   'கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல் எவ்வகை விடை- நேர் விடை

87.   இது செய்வாயா? என்று வினவியபோது 'நீயே செய்' என்று ஏவிக்கூறுவது எவ்வகை விடை - ஏவல் விடை

88.   'என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது - வினா எதிர்வினாதல் விடை

89.   'நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது எவ்வகை விடை - உற்றது உரைத்தல் விடை

90.   'நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை - உறுவது கூறல் விடை

91.   'உனக்குக் கதை எழுதத் தெரியுமா? என்ற வினாவிற்குக் 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது எவ்வகை விடை - இனமொழி விடை

92.   வெளிப்படை விடைகள் - சுட்டு விடை,மறை விடை,நேர் விடை

93.   குறிப்பு விடைகள் - ஏவல் விடை, வினா எதிர்வினாதல் விடை, உற்றது உரைத்தல், விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

94.   செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப்பொருள்கோள் என்று பெயர்

95.   பொருள்கோள் எத்தனை வகைப்படும் - 8

96.   'சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - சீவகசிந்தாமணி

97.   பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது - ஆற்றுநீர் பொருள்கோள்

·         ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது - நிரல்நிரை பொருள்கோள்

98.   நிரல்நிரைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும் - 2

99.   செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப் படியே நிறுத்திப்பொருள் கொள்ளுதல்- முறைநிரல்நிறைப் பொருள்கோள்

100.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள் - முறை நிரல்நிறைப் பொருள்கோள்

101.  செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர்எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் - எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

102.  'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்' என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோ- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

103.  ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது - கொண்டு கூட்டுப் பொருள்கோள்

104.  "ஆலத்துமேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு" (கொண்டு கூட்டுப் பொருள்கோள்) என்ற பாடல் வரி யாருடைய உரையில் காணப்படுகிறது - மயிலைநாதர் உரை

105.  யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - நன்னூல்

106.  'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி- சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

107.  அருந்துணை என்பதைப் பிரித்து எழுதுக - அருமை + துணை

108.  'இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது - அறியாவினா வினா,'அதோ அங்கே நிற்கும்' என்று மற்றொருவர் கூறுவது சுட்டு விடை

109.  'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை' என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது - கல்வி

110.  இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் - மன்னன்

111.  இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் - இறைவன்

112.  ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது - Inter preting

113.  'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று பாடியவர் - பாரதியார்

114.  ''அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிபார்த்தேன், பேத்தி, நெட்டுரப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே" என்ற கவிதை யாருடையது - பாரதிதாசன்

115.  Lute music என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - யாழிசை

116.  தமிழில்,"சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று" என்ற நூலை எழுதியவர் - வல்லிக்கண்ணன்

117.  தமிழில், "குட்டி இளவரசன்" என்ற நூலை எழுதியவர் - வெ.ஸ்ரீராம்

118.  தமிழில், "ஆசிரியரின் டைரி" என்ற நூலை எழுதியவர் - எம்.பி.அகிலா

119.  "சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்" என்ற பாடலில் பயின்று வரும் பொருள்கோள் - ஆற்றுநீர்ப் பொருள்கோள்

120.  பொருத்துக.

           1.     கேள்வியினான் - நூல் வல்லான்

           2.     கேண்மையினான் - நட்பினன்

           3.     தார் - மாலை

           4.     முடி - தலை

121.  பொருத்துக.

           1.     முனிவு - சினம்

           2.     அகத்து உவகை - மனமகிழ்ச்சி

           3.     தமர் - உறவினர்

           4.     நீபவனம் - கடம்பவனம்

122.  பொருத்துக.

           1.     மீனவன் - பாண்டிய மன்னன்

           2.     நுவன்ற - சொல்லிய

           3.     என்னா - அசைச்சொல்

           4.     கவரி - சாமரை

123.  பொருத்துக. (பாரதியின் மொழிபெயர்ப்பு)

           1.     காட்சி, பொருட்காட்சி - Exhibition

           2.     இருப்புப் பாதை - East Indian Railway

           3.     புரட்சி - Revolution

           4.     வேலை நிறுத்தம் - Strike

124.  பொருத்துக

           1.     Emblem - சின்னம்

           2.     Thesis - ஆய்வேடு

           3.     Intellectual - அறிவாளர்

           4.     Symbolism - குறியீட்டியல்

125.  பொருத்துக

           1.     Transcribe - படியெடுத்தல்

           2.     Transfer - மாறுதல்

           3.     Transform - உருமாற்றுதல்

           4.     Transact - செயல்படுத்துதல்

126.  தமிழ்நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுவதை கொண்டு பொருத்துக

           1.     ஆங்கிலம் - முதல்

           2.     மலையாளம் - இரண்டு

           3.     தெலுங்கு - மூன்று

           4.     இந்தி - நான்கு

           5.     கன்னடம் - ஐந்து

           6.     வடமொழி - ஆறாம்

           7.     ரஷ்யமொழி - ஏழாம்

           8.     வங்கமொழி - எட்டாம்

           9.     மராத்தி - ஒன்பது

 

https://www.a2ztnpsc.in/