10TH- STD - இயல் - 6
1. கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - கரகம், கும்பாட்டம்
2. கரகச் செம்பில் எதனை நிரப்புகின்றனர் - மணல், பச்சரிசி
3. கரகாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு இசைக்கப்படுகின்றனர்- நையாண்டி மேள இசை,நாதசுரம், தவில்,பம்பை
4. 'நீரற வறியாக் கரகத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
5. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் குறிப்பிடப்படுகிறது- குடக்கூத்து
6. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது - குடக்கூத்து
7. தமிழகத்தில் கரகாட்டம் நடைபெறும் மாவட்டங்கள் - மதுரை,திருச்சி,கோயமுத்தூர்
8. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே - மயிலாட்டம்
9. காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் -மயிலாட்டம்
10. கரகாட்டத்தின் துணையாட்டம் - மயிலாட்டம்
11. கா என்பதற்கு பொருள் - பாரந்தாங்கும் கோல்
12. காவடி அமைப்புக்கேற்ப எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது - மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி
13. ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் குழு ஆட்டம் - ஒயிலாட்டம்
14. ஒயிலாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன- தோலால் கட்டப்பட்ட குடம்,தவில், சிங்கி, டோலக், தப்பு
15. வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் - தேவராட்டம்
16. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் - தேவராட்டம்
17. உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் தேவதுந்துபி தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி
18. எந்த ஆட்டம் வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது - தேவராட்டம்
19. தேவராட்டத்தில் பெரும்பான்மையாக எத்தனை கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது மரபாக உள்ளது - 8 - 13
20. சேவையாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு ஆடுகின்றனர் -சேவைப்பலகை,சேமக்கலம்,ஜால்ரா
21. இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்தப்படுவது எந்த ஆட்டம்-சேவையாட்டம்
22. போலச்செய்தல்'என்ற பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் ஒன்று - பொய்க்கால் குதிரையாட்டம்
23. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் - பொய்க்கால் குதிரையாட்டம்
24. பொய்க்கால் குதிரையாட்டம் என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது - புரவி நாட்டியம் , புரவி ஆட்டம்
25. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது- மராட்டியர்
26. பொய்க்கால் குதிரையாட்டம் இராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது- கச்சிக்கொடி
27. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது- குதிரைக்களி
28. 'தப்பு' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலை- தப்பாட்டம்
29. தப்பு ஆட்டத்தின் வேறுபெயர் - தப்பாட்டம்,தப்பட்டை,தப்பு
30. வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவியின் பெயர் - தப்பு
31. தப்பாட்டம் எந்த நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது - கோவில் திருவிழா,திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்
32. 'தக தகதக்க தந்தத்த தந்தக்க என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக' என்ற பாடல் வரியை பாடியவர் - அருணகிரிநாதர்
33. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் இடம்பெறுகிறது - பறை
34. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது - புலியாட்டம்
35. பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம் எது - புலியாட்டம்
36. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுவது - தெருக்கூத்து
37. ஒரு கதையை இசை,வசனம், ஆடல், பாடல், மெய்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்குவது- தெருக்கூத்து
38. திரௌபதி அம்மன் வழிப்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பது - தெருக்கூத்து
39. தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்' என்றவர் - கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி
40. தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் - கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி
41. நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் - நா.முத்துச்சாமி
42. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது- நா.முத்துச்சாமி
43. நா.முத்துசாமி பெற்ற விருதுகள் - இந்திய அரசின் தாமரைத்திரு விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
44. அருச்சுனன் தபசு என்பது எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக உள்ளது - மழை
45. தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் - தோற்பாவை கூத்து
என்னும் பெயர் பெற்றது
46. பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியவற்றோடு ஒளியும் முதன்மை பெறுவது - தோற்பாவை கூத்து
47. எந்த நூலில் மரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது - திருக்குறள்
48. எந்த நூலில் தோற்பாவை கூத்து பற்றிய செய்திகளை காணமுடிகிறது- திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும்
49. தோற்பாவைக்கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது
- கையுறைப் பாவைக்கூத்து,பொம்மலாட்டம்
50. மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எம்மன்னரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது- இராசராச சோழன்
51. "இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி" என்ற கவிதையை இயற்றியவர் - உமா மகேஸ்வரி
52. உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தார் - மதுரை
53. உமா மகேஸ்வரியின் கவிதைத் தொகுதிகள் - நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவை
54. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் - குமரகுருபரர்
55. "செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யாரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்"
என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
56. இலக்கணக்குறிப்பு தருக “குண்டலமும் குழைகாதும்'' - எண்ணும்மை
57. இலக்கணக்குறிப்பு தருக “ஆடுக”- வியங்கோள் வினைமுற்று
58. குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும் பருவம் - செங்கீரை
59. சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும் - 96
60. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப்பாடுவது - பிள்ளைத்தமிழ்
61. பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது - பிள்ளைத்தமிழ்
62. பிள்ளைத்தமிழ், 10 பருவம் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் வீதம் என- 100 பாடல்களால் இது பாடப்பெறும்.
63. பிள்ளைத்தமிழ் இரு வகை - ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்
64. குமரகுருபரரின் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 17ம் நூற்றாண்டு
65. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் - குமரகுருபரர்
66. கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் - குமரகுருபரர்
67. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் - குமரகுருபரர்
68. மதுரைக்கலம்பகத்தை இயற்றியவர் - குமரகுருபரர்
69. சகலகலாவல்லிமாலையை இயற்றியவர் - குமரகுருபரர்
70. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் - குமரகுருபரர்
71. திருவாரூர் மும்மணிக்கோவையை இயற்றியவர் - குமரகுருபரர்
72. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - சிற்றில்,சிறுபறை,சிறுதேர்
73. பெண்பாற் பிள்ளைத்தமிழ் – அம்மானை,கழங்கு,ஊசல்
74. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை - 7
75. பிள்ளைத்தமிழில் இடம்பெறும் பருவங்களில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால்,வருகை அம்புலி, சப்பாணி, முத்தம்
76. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் எத்தனை - 3
77. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது- சிதம்பரம்
78. 'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் – பாரதியார்
79. "தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கைதோறும் புத மணற் றடங்கடோறும்" என்ற பாடலின் ஆசிரியர் - கம்பர்
80. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு – சரயு
81. "தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க, கொண்டல்கள் முழவினேங்க குவளைகள் விழித்து நோக்க" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - கம்பராமாயணம்
82. ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் - இராமன்
83. 'ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா' என்ற பாடலை பாடியவர் - பாரதியார்
84. "ஏழைமை வேடன் இறந்திலன்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் - கம்பராமாயணம்
85. கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
86. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது - 6
87. கம்பராமாயணப் பாடல்கள் - சந்த நயம் மிக்கவை
88. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
89. சரசுவதி அந்தாதியை , சடகோபர் அந்தாதியை , திருக்கை வழக்கத்தை , ஏரெழுபது, சிலை எழுபது இயற்றியவர் - கம்பர்
90. "வண்மையில்லை யோர்வறுமை யின்மையால் திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - கம்பராமாயணம்
91. "வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் – கம்பராமாயணம்
92. பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் - சா.கந்தசாமி
93. பாய்ச்சல் என்னும் சிறுகதை எச்சிறுகதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது - சாயாவனம்
94. சா.கந்தசாமி எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் - நாகப்பட்டினம்
95. சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்று தந்த புதினம் - சாயாவனம்
96. சா.கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்- விசாரணைக் கமிஷன்
97. சா.கந்தசாமி எந்த குறும்படத்திற்கு அனைத்துலக விருதை பெற்றார் - சுடுமண் சிலைகள்
98. சா.கந்தசாமி எத்தனைக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், எத்தனைக்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார் - 150,11
99. "தொலைந்து போனவர்கள்" என்ற புதினத்தை எழுதியவர் - கந்தசாமி
100. "சூர்யவம்சம்"
என்ற புதினத்தின் ஆசிரியர் - கல்கி
101. "சாந்தகுமாரி"
என்ற புதினத்தின் ஆசிரியர் - கந்தசாமி
102. 'ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்' என்ற பாடல் வரி சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் இடம்பெற்றுள்ளது - ஊர் காண் காதை
103. தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் – இராமநாதபுரம்
104. தமிழர் வாழ்வியலை - அகம், புறம் என வகுத்தார்கள்
105. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது - அகத்திணை
106. அன்பின் ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை
107. நிலமும் பொழுதும் - முதற்பொருள்
108. ஒரு நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவற்றையெல்லாம் குறிப்பது -கருப்பொருள்
109. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் - முருகன்
110. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் - திருமால்
111. மருதம் நிலத்திற்குரிய தெய்வம் -
இந்திரன்
112. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் - வருணன்
113. பாலை நிலத்திற்குரிய தெய்வம் - கொற்றவை
114. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் - குறிஞ்சி, மருதம், நெய்தல், நிலங்கள்
115. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் - ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
116. மலர்கள் தரையில் நழுவும், எப்போது - தளரப் பிணைத்தால்
117. “கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்" இத்தொடருக்கான வினா - கரகாட்டத்தின் வேறு பெயர்கள்
118. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் - அங்கு வறுமை இல்லாததால்
119. சிறு நண்டு மணல் மீது எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் - மகாகவி
120. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் - சுரதா
121. "திருக்குறள் நீதி இலக்கியம்"
என்ற நூலின் ஆசிரியர் - க.த.திருநாவுக்கரசு
122. "நாட்டார் கலைகள்" என்ற நூலின் ஆசிரியர் - அ.கா.பெருமாள்
123. "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - சொற்பொருள் பின்வருநிலை அணி
124. ''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி
125. "இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - சொற்பொருள் பின்வருநிலை அணி
126. "மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி
127. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி
128. "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்"
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி
129. பொருத்துக.
1. பண்டி - வயிறு
2. அசும்பிய - ஒளிவீசுகிற
3. முச்சி - தலையுச்சிக் கொண்டை
130. அணிகலன்கள் (பொருத்துக)
1. சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவது
2. அரைநாண் - இடையில் அணிவது
3. சுட்டி - நெற்றியில் அணிவது
4. குண்டலம், குழை - காதில் அணிவது
5. சூழி - தலையில் அணிவது
131. பொருத்துக
1. பாலகாண்டம் - ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
2. அயோத்தியா காண்டம் - கங்கைப்படலம், கங்கை காண் படலம்
3. யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப்படலம்
132. கம்பரின் சிறப்பு பெயர்
1. கல்வியில் பெரியவர் கம்பர்
2. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
3. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
133. காலைச்சொல் : பொருத்துக.
1. Aesthetics - அழகியல், முருகியல்
2. Terminology - கலைச்சொல்
3. Artifacts - கலைப்படைப்புகள்
4. Myth - தொன்மம்
0 Comments
THANK FOR VISIT