10TH- STD - இயல் - 7

1.     இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது - 1906

2.     காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு - 1906

3.     .உசிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு -1906

4.     .பொ.சிவஞானம் பிறந்த ஆண்டு - ஜீன் 26, 1906

5.     .பொ.சிவஞானம் எங்கு பிறந்தார் - சென்னை

6.     .பொ.சிவஞானம் தந்தை, தாய் பெயர் - பொன்னுசாமி, சிவகாமி

7.     .பொ.சிவஞானத்திற்கு பெற்றோர் இட்ட பெயர் - ஞானப்பிரகாசம்

8.     .பொ.சிவஞானத்துக்கு 'சிவஞானி' என்று பெயர் வைத்த முதியவர் -  சரபையர்

9.     .பொ.சிவஞானம் அன்னை எந்தெந்த அம்மானைப் பாடல்களை பாடுவார் - அல்லி அரசாணி மாலை,பவளக்கொடி மாலை

10.   .பொ.சிவஞானம் யாருடைய பாடல்களை விரும்பிப் படித்தார் - சித்தர்

11.   ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது. ஒன்று கல்வி, மற்றொன்று எது - கேள்வி

12.   .பொ.சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமையில் யாருக்கு பங்குண்டு -திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

13.   காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு - 1931

14.   .பொ.சிவஞானம் எந்த கட்சியால் நடத்தப்பட்ட ஊர்வலங்களிலும் கதர் விற்பனையிலும் தவறாமல் கலந்து கொள்வார்பேராயக்கட்சி

15.   .பொ.சிவஞானம் தமிழா, துள்ளி எழு என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு -30.09.1932

16.   .பொ.சிவஞானத்திற்கு எத்தனை மாத கடுங்காவல் தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது - 3, 300 ரூபாய்

17.   .பொ.சிவஞானம் பணம் கட்டத்தவறியதால் எத்தனை மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்- 6

18.   வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் - ஆகஸ்டு 8, 1942

19.   'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றிய ஆண்டு - ஆகஸ்டு 8, 1942

20.   .பொ.சிவஞானம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு - ஆகஸ்டு 13, 1942

21.   .பொ.சிவஞானம் வேலூர் சிறையிலிருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார் - அமராவதி

22.   அமராவதி சிறைச்சாலையில் சிவஞானத்திற்கு ஒதுக்கப்பட்ட அறையின் மேற்கூரை எதனால் வேயப்பட்டது - துத்தநாக தகடு

23.   .பொ.சிவஞானம் சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடி பிறகு குழுவாக வடக்கெல்லைக்குச் சென்ற ஆண்டு - ஆகஸ்டு 15, 1947

24.   .பொ.சிவஞானம் யாருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வடக்கெல்லைக்குச் சென்றனர் -மங்கலங்கிழார்

25.   வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்- மங்கலங்கிழார்

26.   வடக்கெல்லை போராட்டம் எந்தெந்த இடங்களில் தொடங்கியது - சித்தூர்,புத்தூர்,திருத்தணி

27.   தமிழாசான் மங்கலங்கிழார் மற்றும் தமிழரசுக் கழகம் இணைந்து எங்கெங்கு தமிழர் மாநாட்டை நடத்தியது - சென்னை, திருத்தணி

28.   வடக்கெல்லை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜமுந்திரி சிறையில் உயிர் துறந்தவர் - திருவாலங்காடு கோவிந்தராசன்

29.   வடக்கெல்லை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பழநி சிறையில் உயிர் துறந்தவர் -மாணிக்கம்

30.   யார் தலைமையில் மத்திய அரசு மொழிவாரி வாரியத்தை அமைத்தது - கே.எம்.பணிக்கர்

31.   மொழிவாரி வாரியம் ஆணையத்தின் அறிக்கையின்படி சித்தூர் மாவட்டம் எம்மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது - ஆந்திரா

32.   இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து என கூறியவர் - .பொ.சிவஞானம்

33.   தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தியவர் - .பொ.சிவஞானம்

34.   படாஸ்கர் ஆணையம் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த பகுதி - திருத்தணி

35.   ஆந்திர தலைவர்கள் ஆந்திராவிற்கு எதை தலைநகராக இருக்க வேண்டும் என்று கருதினர் - சென்னை

36.   'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் - .பொ.சிவஞானம்

37.   எந்த நாள் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு "ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளே அமையும்" உறுதியளித்தார் - 25.03.1953

38.   .பொ.சிவஞானம் தெற்கெல்லைப் போராட்டத்தில் நாகர்கோவில் நகரிலுள்ள வடிவீசுவரத்தில், வடிவை வாலிபர் சங்கத்தின் எந்த ஆண்டு விழாவில் பேசினார் - அக்டோபர் 25, 1946

39.   எல்லைக் கிளர்ச்சிகளை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்த கழகம் - தமிழரசுக்கழகம்

40.   தெற்கெல்லைப் போராட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிர்நீத்த தமிழரசுக் கழகத் தோழர்கள் - தேவசகாயம், செல்லையா

41.   குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் - .நேசமணி

42.   எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது - நவம்பர் 1, 1956

43.   மார்ஷல் .நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எங்கு அவருடைய சிலையோடு மணிமண்டபத்தை அமைத்துள்ளது - நாகர்கோவில்

44.   கேரள மாநிலம் உருவானபோது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய எந்த பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது- தேவிகுளம், தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம்,விளவங்கோடு, நாகாகோவில்

45.   பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான ஆண்டு - அக்டோபர் 10, 1955

46.   சென்னை மாநிலத்தில் உள்ள எந்த மாவட்டம் கேரளாவுடன் இணைந்தது - மலபார் மாவட்டம்

47.   புறநானூறு மற்றும் சிலப்பதிகாரமானது தமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லை எது குறிப்பிடுகிறது - வேங்கடமலை, குமரி முனை

48.   தமிழ் வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது - கி.பி. 2ம்நூற்றாண்டில்

49.   சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் - .பொ.சிவஞானம்

50.   சிவஞானம் காலக்கட்டம் என்ன - 1906 1995

51.   .பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவை உறுப்பினரான வருடம் - 1952 - 1954

52.   .பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி வகித்த ஆண்டு1972 - 1978

53.   தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் - .பொ.சிவஞானம்

54.   .பொ.சிவஞானம் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் - 1966

55.   .பொ.சிவஞானத்திற்கு எங்கு சிலை வைக்கப்பட்டுள்ளதுதிருத்தணி,தியாகராய நகர்

56.   ஏர் புதிதா என்ற கவிதையை எழுதியவர்  - கு..ராஜகோபாலன்

57.   உழுவோர் உலகத்தார்க்கு - அச்சாணி எனப் போற்றப்பட்டனர்

58.   சங்கத்தமிழரின் தலையான தொழில் மற்றும் பண்பாடாகவும் திகழ்ந்தது - உழவு

59.   "வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா" என்ற பாடலின் ஆசிரியர் - கு..ராஜகோபாலன்

60.   "பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை" என்ற பாடலின் ஆசிரியர் - கு..ராஜகோபாலன்

61.   பொன் ஏர் பூட்டுதல் நடைபெறும் மாதம் - சித்திரை

62.   'ஏர் புதிதா?' என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது - கு.பா.ரா. படைப்புகள்

63.   கு..ராஜகோபாலன் எந்த ஆண்டு பிறந்தார் - 1902

64.   கு..ராஜகோபாலன் எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார் - தமிழ்நாடு, பாரதமணி,பாரத தேவி,கிராம ஊழியன்

65.   கு..ராஜகோபாலன் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புக்களுள் எவை நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன - அகலிகை, ஆத்மசிந்தனை

66.   11ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இராசராசன் காலத்தமிழ் கல்வெட்டு எங்குள்ளது - தஞ்சாவூர்

67.   இந்திரன் முதலாகத் திசைபாலகர் எத்தனை பேர் உள்ளனர் - 8

68.   திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தியவர்கள் - சோழர்

69.   இரண்டாம் இராசராச சோழனின் பட்டங்கள் - கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி

70.   இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தி எத்தனை உள்ளன - 2

71.   இரண்டாம் இராசராச சோழனின் ஒரு மெய்க்கீர்த்தி எத்தனை வரிகளைக் கொண்டது - 91

72.   "வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்சிலப்பதிகாரம்

73.   "தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறுமுத்தும் மணியும் பொன்னும்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்

74.   இசைக்கருவி எத்தனை வகைப்படும் - ஏழு

75.   இலக்கணக்குறிப்பு தருக "வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை

76.   இலக்கணக்குறிப்பு தருகபயில்தொழில்" – வினைத்தொகை

77.   ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றிய 'சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம் படைத்தான்'' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் - திருத்தணிகையுலா

78.   காவிரிப்டம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூபூர் மற்றும் திருவரங்கள் வழியாகக் எந்த  இடத்தை அடைத்தனர்  - கொடும்பாளூர்

79.   தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரை அடையலாம் சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் - திருமால் குன்றம் வழியாக மதுரைக்கு செல்லாம்

80.   கோவலனையும், கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் - கலந்தியடிகள்

81.   மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக (நெடுவேள் குன்றம் சுருளிமலை) சென்று எந்த இடத்தை அடைந்தாள்- வேங்கைக்கானல்

82.   உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரம் நூலில் வரும் தமிழ்நடை ஆகும். இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு ஆகும்.

83.   வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது - மடை

84.   பேசும் மொழியின் ஓட்டம் என்பது - உரை

85.   சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரவிழா ஊரெடுத்த காதை (மருவூர் பாக்கம்) எந்தக் காண்டத்தில் அமைந்துள்ளது - புகார்க்காண்டம்

86.   ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று - சிலப்பதிகாரம்

87.   முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்

88.   மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் - சிலப்பதிகாரம்

89.   சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்- மதுரைக்காண்டம் , வஞ்சிக்காண்டம் , புகார்க்காண்டம்

90.   சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது - 30

91.   சிலப்பதிகாரம் எந்த காப்பியத்தோடு கதைத்தொடர்பு கொண்டு உள்ளது - மணிமேகலை

92.   இரட்டைக் காப்பியம் என்பது - சிலப்பதிகாரம், மணிமேகலை

93.   சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் - இளங்கோவடிகள்

94.   இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர் - சேரர்

95.   மணிமேகலை ஆசிரியர் - சீத்தலைச்சாத்தனார்

96.   'நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர் - இளங்கோவடிகள்

97.   அடிகள் நீரே அருளுக என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் - சீத்தலைச்சாத்தனார்

98.   பாவின வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்

99.   ''பெருங்குணத்து காதலாள்" என்று அழைக்கப்படுபவர் - கண்ணகி

100.  மருவூர்ப் பாக்கத்தில் கள் விற்பவர் - வலைச்சியர்

101.  மருவூர்ப் பாக்கத்தில் மீன் விற்பவர் மற்றும் உப்பு விற்பவர் - பரதவர், உமணர்

102.  "சுண்ணம்" என்பதன் பொருள் - நறுமணப்பொடி

103.  ''காருகர்" என்தன் பொருள்நெய்பவர்

104.  .நா. அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

105.  இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

106.  வீணைக் கலைஞரான சுப்புலட்சுமியின் முதல் குரு - தாய்

107.  சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை படித்துள்ளார் - 5

108.  சுப்புலட்சுமி இசைத்தட்டுகாக எந்த வயதில் பாடல்களை பாடிப் பதிவு செய்தார் - 10

109.  எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் 17 வயதில் எந்த மியூசிக் அகாடமியில் கச்சேரி நடத்தினார் - சென்னை

110.  எந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது - மீரா

111.  எந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது - காற்றினிலே வரும் கீதம்,பிருந்தாவனத்தில் கண்ணன்

112.  எம்.எஸ். சுப்புலட்சுமியை பாராட்டிய பெரியோர்கள் - ஜவகர்லால் நேரு,சரோஜினி நாயுடு

113.  எம்.எஸ். சுப்புலட்சுமி காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்த போது பாடிய பாடல் - இரகுபதி இராகவ இராஜாராம்

114.  சென்னை வானொலி நிலையம் காந்தியடிகள் பிறந்த நாளன்று 'ஹரிதும் ஹரோ' என்ற மீரா பஜன் பாடலை எந்த ஆண்டு ஒலிபரப்பியது - 1947

115.  எம்.எஸ். சுப்புலட்சுமி தாமரையணி விருது பெற்ற ஆண்டு - 1954

116.  எம்.எஸ். சுப்புலட்சுமி இங்கிலாந்தில் பாடிய ஆண்டு - 1963

117.  எம்.எஸ். சுப்புலட்சுமி ஐநா. அவையில் எந்த ஆண்டு பாடினார் - 1966

118.  எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு - 1966

119.  எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு நோபல் பரிசுக்கு இணையானமகசேசே விருது' கிடைத்த ஆண்டு-  1974

120.  மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலட்சுமி

121.  எம்.எஸ். சுப்புலட்சுமி எந்தெந்த மொழிகளில் பாடியுள்ளார் - தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி,மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்

122.  எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தியா மிக உயரிய விருதான இந்தியமாமணி விருது அளித்து சிறப்பித்தது

123.  ''குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா" என்ற பாடலை பாடியவர் - எம்.எஸ். சுப்புலட்சுமி

124.  பொது வெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் - பால சரஸ்வதி

125.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர் - பால சரஸ்வதி

126.  இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர் - பால சரஸ்வதி

127.  பால சரஸ்வதி தன் 7 வயதில் முதன்முதலில் மேடை ஏறி நடன அரங்கேற்றம் செய்த இடம் - காஞ்சிபுரம்

128.  பால சரஸ்வதி பதினைந்து வயதில் சென்னையில் சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

129.  கல்கத்தாவிலும், காசியில் நடந்த இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டு பண்ணாகிய 'ஜன கண மண' பாடலுக்கு நடனம் ஆடியவர் - பால சரஸ்வதி

130.  பால சரஸ்வதி எந்தெந்த நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்- ஐரோப்பா, அமெரிக்கா

131.  டோக்கியோவில் எந்த நிகழ்வின் போது இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டு சிறப்பாக பால சரஸ்வதி நடனம் ஆடினார் - கிழக்கு மேற்குச் சந்திப்பு

132.  தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர் - ராஜம் கிருஷ்ணன்

133.  ராஜம் கிருஷ்ணன் எந்த புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார்- வேருக்கு நீர்

134.  பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுத வேண்டும் என்ற படிமத்தை உடைத்துச் சமூகச் சிக்கல்களை கதைகளாக எழுதியவர் - ராஜம் கிருஷ்ணன்

135.  32. ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம் அனைவராலும் பாராட்டப்பெற்றது

136.  ராஜம் கிருஷ்ணன் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை புதினமாக எழுதியது - கரிப்பு மணிகள்

137.  நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து ராஜம் கிருஷ்ணன் என்னும் எழுதிய புதினம் - குறிஞ்சித்தேன்

138.  கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்- அலைவாயக் கரையில்

139.  அமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டுப்படுவதைச் சுட்டிக் காட்டும் வகையில் இராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம் - சேற்றில் மனிதர்கள்

140.  குழந்தைகளின் உடலையும் மனதையும் நொறுக்கும் அவல உலகைக் சுட்டிக் காட்டும் வகையில் இராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம் - கூட்டுக்குஞ்சுகள்

141.  பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து இராஜம் கிருஷ்ணன் எழுதிய எழுதிய நூல்- மண்ணகத்துப் பூந்துளிகள்

142.  சமூக அவலர்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாகக் கட்டவிழ்த்து உலகிற்குக் காட்டியவர்- ராஜம் கிருஷ்மான்

143.  மதுரையின் முதல் பட்டதாரி பெண் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

144.  கிருஷ்ணம்மான் ஜெகநாதன் கல்லூரிப்பருவத்தில் யார் சிந்தனையில் கவரப்பட்டார் - காந்தி

145.  கிருவஷ்ணம்மாள் ஜெகநாதன் காந்தியின் எந்த இயக்கத்தில் களப்பணி ஆற்றினார்- சர்வோதய இயக்கம்

146.  கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் எந்த இயக்கத்தில் பங்கு பெற்றார் -  ஒத்துழையாமை இயக்கம்,வெள்ளையனே வெளியேறு,சட்டமறுப்பு இயக்கம்

147.  கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நாட்டின் விடுதலைக்குப்பின் கணவருடன் இணைந்து எந்த இயக்கத்தில் பணிபுரிந்தார் - பூதான இயக்கம்

148.  'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' (Land for the Tiller's freedom - LAFTI) தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தவர் யா- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

149.  'உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்' என்ற கூற்றினை கூறியவர் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

150.  காந்தியடிகளுடன், வினோபாபாவேயுடன் பணியாற்றியவர் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

151.  சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருதினை பெற்றவர் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

152.  சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது மற்றும் இந்திய அரசின் தாமரைத்திரு விருது பெற்றவர் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

153.  பெண்கள் எல்லாம் குழுவாகச் சேர்ந்து, விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்- சின்னப்பிள்ளை

154.  எந்த மாவட்ட ஆட்சியர் கண்மாய் மீன்பிடிக்கும் குத்தகையை சின்னப்பிள்ளைக்கு கொடுத்தார்- மதுரை

155.  'களஞ்சியம்' என்ற மகளிர் குழுவை ஆரம்பித்தவர் - சின்னப்பிள்ளை

156.  சின்னப்பிள்ளை வாஜ்பாய் கைகளால் எவ்விருதினைப் பெற்றார்- பெண் ஆற்றல் விருது

157.  தமிழக அரசின் 'ஒளவை விருது' மற்றும் தூர்தர்ஷனின் 'பொதிகை விருதை' பெற்றவர் - சின்னப்பிள்ளை

158.  ஒரு பெண் நினைத்தால், முயன்றால், முன்னேறலாம். வெல்லலாம், நீங்களும் முயலுங்கள், முன்னேறுங்கள், வெல்லுங்கள் என்று கூறியவர் - சின்னப்பிள்ளை

159.  புறத்திணைகள் எத்தனை வகைப்படும் - 12

160.  அதிரை கவர்தல் பற்றிக் கூறும் திணை - வெட்சித்திணை

161.  அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவப்பு நிறமுடைய பூ- வெட்சிப் பூ

162.  வெட்சிப் பூவின் வேறுபெயர் - இட்லிப்பூ

163.  ஆதிரைகளை மீட்டல் பற்றிக் கூறும் திணை - கரந்தைத்திணை

164.  சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய ஒரு சிறிய செடி - கரந்தை

165.  கரந்தை பூ - கொட்டைக்கரந்தை

166.  மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்ற போருக்குச் செல்வது பற்றிக் கூறும் திணை -- வஞ்சித்திணை

167.  தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் பற்றிக் கூறும் திணை - காஞ்சித்திணை

168.  கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ ஒருவகைக் குறுமரம் ஆகும் - காஞ்சி பூ

169.  கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகை இட்ட பகையரனோடு போரிடுவது பற்றிக் கூறும் திணை - நொச்சித்திணை

170.  மருத நிலத்துக்குரிய - நொச்சி பூ கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்களைக் கொண்டது?

171.  மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் பற்றிக் கூறும் திணை - உழிஞைத்திணை

172.  உழிஞைபூ மலர்கள் எந்த நிறத்தில் காணப்படும் - மஞ்சள்

173.  மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் பற்றிக் கூறும் திணை - உழிஞைத்திணை

174.  முடக்கத்தான் (முடக்கொற்றான்) என அழைக்கப்படும் பூ - உழிஞை பூ

175.  பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போரிடுவது  பற்றிக் கூறும் திணை - தும்பை திணை

176.  போரில் வென்ற மன்னன் மகிழ்வது பற்றிக் கூறும் திணை - வாகை திணை

177.  வாகை என்பதன் பொருள் - வெற்றி

178.  மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ - வாகை பூ

179.  பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப் பாடுவது எந்த திணை - பாடாண்

180.  பாடாண் திணை பிரித்து எழுதுக - பாடு + ஆண் + திணை

181.  வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது எந்த திணை - பொதுவியல் திணை

182.  கைக்கிளை என்பது - ஒரு தலைக்காமம்

183.  பெருந்திணை என்பது - பொருந்தாக்காமம்

184.  'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே - திருப்பதியும் திருத்தணியும்

185.  'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் - நெறியோடு நின்று காவல் காப்பவர்

186.  இருநாட்டு அரசர்களும் தும்பைப்பூவை சூடிப் போரிடுவதன் காரணம் என்ன- வலிமையை நிலைநாட்டல்

187.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக .பொ.சிவஞானம் கருதியது - சிலப்பதிகாரம்

188.  "ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்" என்ற பாடலை பாடியவர் - கா.மு.ஷெரீப்

189.  மகள் சொல்கிறாள் "அம்மா என் காதுக்கொரு தோடுநீ " என்ற வரியை இயற்றியவர்- பாரதிதாசன்

190.  வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை (17ம் நூற்றாண்டு) சுவரோவியம் எங்குள்ளது - திருநெல்வேலி

191.  "என்கதை" என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

192.  "நாற்காலிக்காரர்" என்ற நூலின் ஆசிரியர் - நா.முத்துசாமி

193.  பொருத்துக.

           1.     Consulate - துணைத்தூதரகம்

           2.     Patent - காப்புரிமை

           3.     Document - ஆவணம்

           4.     Guild - வணிகக்குழு

           5.     Irrigation - பாசனம்

           6.     Territory - நிலப்பகுதி

194.  பொருத்துக.

           1.     தூசு - பட்டு

           2.     துகிர் - பவளம்

           3.     வெறுக்கை - செல்வம்

           4.     நொடை - விலை

           5.     பாசவர் - வெற்றிலை விற்போர்

195.  பொருத்துக.

           1.     ஓசுநர் - எண்ணெய் விற்போர்

           2.     மண்ணுள் வினைஞர் - ஓவியர்

           3.     மண்ணீட்டாளர் - சிற்பி

           4.     கிழி - துணி

 

https://www.a2ztnpsc.in/