10TH- STD - இயல் - 8
1. 17ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னன் மக்களுக்குக் கொடை அளிப்பது போன்ற சுவரோவியம் எங்குள்ளது - சிதம்பரம்
2. சங்க இலக்கியத்தைப் பற்றி 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்று கூறியவர் - ஆர்னால்டு
3. 'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் - ஏணிச்சேரி முடமோசியார்
4. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டு இருக்கிறது - அரசர்கள்
5. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் யாருடைய கடமையாகச் சொல்லப்பட்டது - அரசன்
6. அரசன் "அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியவர் - ஊன் பொதிப்பசுங்குடையார்
7. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினார் என்று 'நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை' என்று கூறும் நூல் - மதுரைக்காஞ்சி
8. 'செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் - மாங்குடி மருதனார்
9. 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு
10. எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றனர் -உறையூர்
11. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறும் நூல் -மதுரைக்காஞ்சி
12. "தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக் கூடாது'' என்றுக் கூறியவர் - ஆவூர் மூலங்கிழார்
13. 'எறியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்' என்ற புறநானூறு வரியை இயற்றியவர் - ஆவூர் மூலங்கிழார்
14. 'செல்வத்தின் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே' என்ற புறநானூறு வரியை பாடியவர் -மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
15. கடையெழுவள்ளல்களின் கொடைப் பெருமை எந்தெந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது -சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார்பாடல்
16. ஆற்றுப்படை இலக்கியங்கள் எந்த வகையான இலக்கியங்களாக உள்ளது - கொடை
17. சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றிக் கூறும் நூல் - பதிற்றுப்பத்து
18. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் - நக்கீரர்
19. "வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலினின் வறுமை" என்று கூறியவர்- பெரும்பதுமனார்
20. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் - ஒளவையார்
21. "இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல்'' யாருடைய இயல்பு என்று நச்செள்ளையார் கூறுகிறார் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
22. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்றுக் கூறியவர் - பரணர்
23. " தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாக"
கூறியவர் - பெருந்தலைச் சாத்தனார்
24. "எல்லாவற்றையும் கொடுப்பவன்" என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர்- கபிலர்
25. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது"
என்று கூறும் நூல் - கலித்தொகை
26. "தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம்' எந்த நூலில் புலப்படுத்தப்பட்டுள்ளது - புறநானூறு
27. உதவி செய்தலை"உதவியாண்மை" என்றுக் கூறியவர் - பூதன் தேவனார்
28. 'பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்"
என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது - கலித்தொகை
29. "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்" என்று கூறியவர் - நல்வேட்டனார்
30. 'சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தேர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம்.. என்பதுவே"
என்ற நற்றினைப் பாடலை இயற்றியவர் - நல்வேட்டனார்
31. "உறவினர்கெட, வாழ்பவனின் பொலிவு அழியும்" என்று கூறியவர் - பெருங்கடுங்கோ
32. 'நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது - தாவோயியம்
33. "ஓர் அதிசயத் திறவுகோல்"
என்பது - நாக்கு
34. இன்பத்தின் கதவைத் திறப்பதுவும், துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் எது - நாக்கு
35. 'பிழையா நன்மொழி' என்று வாய்மையை கூறும் நூல் - நற்றிணை
36. 'பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று கூறும் நூல் - நற்றிணை
37. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் எத்தனையாவது தரம் - மூன்றாம் தரம்
38. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் எத்தனையாவது தரம் - இரண்டாம் தரம்
39. இயல்பாக அறியும் அறம் எத்தனையாவது தரம் - முதல் தரம்
40. கி.பி.6ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர் பூண்டு எங்கு சென்றார் - சீனா
41. பௌத்த சமயத்தத்துவத்தின் ஒரு பிரிவில் இருந்து உருவானதே - ஜென் தத்துவம்
42. போதிதர்மருக்கு இன்றளவும் கோவில்கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு - சீனா
43. போதிதர்மர் சீனாவில் எச்சமய தத்தவத்தை போதித்தார் - பௌத்தம்
44. சங்க இலக்கிய அறங்கள் இயல்பான - முதல் தரமான அறங்களாகும்.
45. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்"
என்ற புறநானூற்றுப் பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் எவ்வள்ளலைப் போற்றியுள்ளார் - ஆய்
46. ''ஞானம்' என்ற கவிதையின் ஆசிரியர் - தி.சொ.வேணுகோபாலன்
47. ஞானம் என்ற கவிதை தி.சொ.வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது- கோடை வயல்
48. தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் - திருவையாறு
49. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்- தி.சொ.வேணுகோபாலன்
50. 'மீட்சி விண்ணப்பம்' என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் - தி.சொ.வேணுகோபாலன்
51. "சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்'' எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்- தி.சொ.வேணுகோபாலன்
52. "கவிஞன் யானோர் காலக்கணிதம்"
என்ற பாடலின் ஆசிரியர் - கண்ணதாசன்
53. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா
54. கண்ணதாசன் பிறந்த இடம் – சிறுகூடல்பட்டி - சிவகங்கை
55. கண்ணதாசன் பெற்றோர் – சாத்தப்பன் விசாலாட்சி
56. கண்ணதாசன் 'கலங்காதிரு மனமே' என்ற பாடலை எழுதி திரைப்படப் பாடலாசிரியரான ஆண்டு- 1949
57. திரைப்படப்பாடல்கள் வழியாக எளிய முறையில் 'மெய்யியலை' கொண்டு சேர்த்தவர் - கண்ணதாசன்
58. கண்ணதாசன் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் - சேரமான் காதலி
59. தமிழக அரசின் அரசவை கவிஞர் அல்லது ஆஸ்தான கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டு இருந்தவர் - கண்ணதாசன்
60. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்ற வரியை கூறியவர் - கம்பன்
61. "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!" என்ற பாடலை பாடியவர் - கண்ணதாசன்
62. "நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா"
என்ற பாடலின் ஆசிரியர் - கண்ணதாசன்
63. நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் - செண்பகம்
64. ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் - பிரம்ம கமலம்
65. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் - குறிஞ்சி
66. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலரும் - மூங்கில்
67. பூரணர் மகன் பெயர் - சௌம்ய நாராயணன்
68. பூரணர் தன்மகன் சௌம்ய நாராயணனை யாரிடம் அடைக்கலம் அளித்தார் - இராமானுசர்
69. 'கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வன் பாரிதண் பறம்பு நாடே"
என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு
70. பிரான்மலை (பறம்பு மலை) எந்த மாவட்டத்தில் உள்ளது - சிவகங்கை
71. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது - ஆறு
72. "பா"
எத்தனை வகைப்படும் - நான்கு
73. "ஓசை"
எத்தனை வகைப்படும் - நான்கு
74. வெண்பாவிற்குரிய ஓசை
- செப்பல்
75. திருக்குறள் மற்றும் நாலடியாரில் இடம்பெற்றுள்ள பா வகை - வெண்பா
76. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை - அகவல்
77. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருக்கும் பா வகை -அகவற்பா
78. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை - துள்ளல்
79. கலிப்பாவிற்குரிய ஓசை - துள்ளல்
80. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை - தூங்கல்
81. வெண்பா எத்தனை வகைப்படும் - ஐந்து
82. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும் - நான்கு
83. இயற்சிர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும் பா வகை - வெண்பா
84. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை - ஆசிரியப்பா
85. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை - வெண்பா
86. ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும் பா வகை -ஆசிரியப்பா
87. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைவது எவ்வகை பா - ஆசிரியப்பா
88. ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிவது எவ்வகை பா - வெண்பா
89. யாப்பதிகாரம் என்ற நூலின் ஆசிரியர் - புலவர் குழந்தை
90. மேன்மை தரும் அறம் என்பது - கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
91. 'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது - இடையறாது அறப்பணி செய்தலை
92. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் - அதியன் : பெருஞ்சாத்தன்
93. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் - இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
94. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் - அகவற்பா
95. "கவிஞன் யானோர் காலக் கணிதம்' எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் - கண்ணதாசன்
96. "மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி" என்ற கவிதையின் ஆசிரியர் - நாணற்காடன்
97. "விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்" என்ற கவிதையின் ஆசிரியர் - புதுவைத்தமிழ் நெஞ்சன்
98. "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனித்த தனியே" என்ற பாடலின் ஆசிரியர் - வள்ளலார்
99. "அறமும் அரசியலும்" என்ற நூலின் ஆசிரியர் - மு. வரதராசனார்
100. "அபி கதைகள்" என்ற நூலின் ஆசிரியர் - அபி
101. "எண்ணங்கள்"
என்ற நூலின் ஆசிரியர் - எம்.எஸ்.உதயமூர்த்தி
102. "ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே" என்ற பாடலை இயற்றியவர் – அபி
103. பொருத்துக.
1. செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை
2. அகவலோசை - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை - தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை
4. தூங்கலோசை - தாழ்ந்தே வரும் ஓசை
104. பொருத்துக. (ஓரசைச்சீர்)
1. நேர் - நாள்
2. நிரை- மலர்
3. நேர்பு - காசு
4. நிரைபு - பிறப்பு
105. பொருத்துக. (ஈரசைச்சீர்)
1. நேர் நேர் - தேமா
2. நிரை நேர் - புளிமா
3. நிரை நிரை - கருவிளம்
4. நேர் நிரை - கூவிளம்
106. பொருத்துக.(மூவசைச்சீர்)
1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
2. நிரை நேர் நேர் - புளிமாங்காய்
3. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
4. நேர் நிரை நேர் - கூவிளங்காய்
107. பொருத்துக.
1. நேர் நேர் நிரை - தேமாங்கனி
2. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
3. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
4. நேர் நிரை நிரை - கூவிளங்கனி
108. பொருத்துக. கலைச்சொல்
1. Belief - நம்பிக்கை
2. Renaissance - மறுமலர்ச்சி
3. Philosopher - மெய்யியலாளர்
4. Revivalism - மீட்டுருவாக்கம்
0 Comments
THANK FOR VISIT