10TH- STD - இயல் - 9

1.     சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் - ஜெயகாந்தன்

2.     இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர் மற்றும் மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை - ஜெயகாந்தன்

3.     ஜெயகாந்தன் காலக்கட்டம் - 04.1934 , 08.04.2015

4.     ஜெயகாந்தன பெற்ற விருதுகள் : பொருத்துக.

           1.     குடியரசுத் தலைவர் விருது - உன்னைப்போல் ஒருவன் திரைப்படம்

           2.     சாகித்திய அகாடமி விருது - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)

           3.     சோவியத் நாட்டு விருது - இமயத்துக்கு அப்பால்

5.     ஞானபீட விருது, தாமரைத்திரு விருது பெற்றவர் - ஜெயகாந்தன்

6.     சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர்ஜெயகாந்தன்

7.     "என் எழுத்துக்கு ஒரு லட்சியம் உண்டு நான் எழுதுவது முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்" என்று கூறியவர் - ஜெயகாந்தன்

8.     தர்மார்த்தங்களை உபதேசிக்கு வியாசர் எழுதியது - பாரதம்

9.     "துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது, அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இது கூட காரணமாக இருந்திருக்கலாம்' என்று ஜெயகாந்தனை பற்றி கூறியவர் - அசோகமித்திரன்

10.   "நேர்கொண்ட ஆனால் வித்தியசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளம்" என்று கூறியவர் - கா.செல்லப்பன்

11.   வாழ்விக்க வந்த காந்தி என்ற பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றினை தமிழாக்கம் செய்தவர் - ஜெயகாந்தன்

12.   ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) என்ற நூலினை மொழிபெயர்ப்பு செய்தவர் - ஜெயகாந்தன்

13.   அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்' என்று ஜெயகாந்தன் எந்த புதினத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்- பாரீசுக்குப்போ

14.   "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்" என்ற பாடலில் ஜெயகாந்தன் யாரைப்பற்றி எழுதியுள்ளார் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

15.   எதற்காக எழுதுகிறேன் என்ற கட்டுரை யாருடையது - ஜெயகாந்தன்

16.   தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது - யுகசந்தி

17.   "சிறுகதை மன்னன்" என்று அழைக்கப்படுபவர் - ஜெயகாந்தன்

18.   "சினிமாவுக்கு போன சித்தாளு'' என்ற குறும்புதினத்தை எழுதியவர் - ஜெயகாந்தன்

19.   "பாரீசுக்குப் போ'' என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

20.   "சுந்தர காண்டம்" என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

21.   "உன்னைப் போல் ஒருவன்" என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

22.   "கங்கை எங்கே போகிறாள்" என்ற புதினத்தின் ஆசிரிய - ஜெயகாந்தன்

23.   "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

24.   "இன்னும் ஒரு பெண்ணின் கதை" என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

25.   "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" என்ற புதினத்தின் ஆசிரியர் - ஜெயகாந்தன்

26.   "புதிய வார்ப்புகள்" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்ஜெயகாந்தன்

27.   "பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் - நாகூர் ரூமி

28.   நாகூர் ரூமியின் இயற்பெயர் - முகம்மது ரஃபி

29.   நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் - தஞ்சை

30.   நாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார் - கணையாழி

31.   நாகூர் ரூமியின் படைப்புகள் எந்த இதழ்களில் வெளியாகியுள்ளது - மீட்சி, சுபமங்களா,புதிய பார்வை,குங்குமம்,கொல்லிப்பாவை, குமுதம்

32.   நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் - நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்

33.   நாகூர் ரூமி  படைத்துள்ள நாவல் - கப்பலுக்குப் போன மச்சான்

34.    திருமுழுக்கு யோவான்  அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்

35.   கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி - யோவான்

36.   வீரமாமுனிவர் அருளப்பனுக்கு தன் காப்பியத்தில் என்ன பெயரிட்டுள்ளார்- கருணையன்

37.   கருணையன் தன்தாயார்எலிசபெத் உடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்

38.   இலக்கணக்குறிப்பு தருக "காக்கென்று" -  காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

39.   இலக்கணக் குறிப்பு தருக "கணீர்" - கண்ணீர் என்பதன் இடைக்குறை

40.   இலக்கணக் குறிப்பு தருக "காய்மணி"," உய்முறை","செய்முறை" - வினைத்தொகை

41.   "மெய்முறை" இலக்கணக் குறிப்பு தருக - வேற்றுமைத்தொகை

42.   "கைமுறை"இலக்கணக் குறிப்பு தருக - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

43.   வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டு மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார் - சந்தாசாகிப்

44.   வீரமாமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் - இஸ்மத் சன்னியாசி

45.   இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் பொருள்- தூய துறவி

46.   தேம்பா + அணி என்பது என்று பொருள் தரும் - வாடாத மாலை

47.   தேன் + பா + அணி என்பது - தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

48.   தேம்பாவணியின் பாட்டுடைத்தலைவனாகிய கிறித்துவின் வளர்ப்பு தந்தை - சூசையப்பர்

49.   தேம்பாவணியில் எத்தனை காண்டம் மற்றும் படலம் உள்ளது - 3, 36

50.   தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 3615

51.   தேம்பாவணி எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது - 17

52.   வீரமாமுன்வர் இயற்பெயர் - கான்ஸ்டான்யு ஜோசப் பெஸ்கி

53.   வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்சதுரகராதி,தொன்னூல் விளக்கம்,பரமார்த்தக் குரு கதைகள்

54.   "நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் -தேம்பாவணி

55.   "உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே" என்ற வரியினை கூறியவர் - வீரமாமுனிவர்

56.   ஒருவன் இருக்கிறான் என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் - கு.அழகிரிசாமி

57.   மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர் - கு.அழகிரிசாமி

58.   கு.அழகிரிசாமி எந்த வரிசையில் மூத்தவர் ஆவார் - கரிசல் எழுத்தாளர்கள்

59.   கு.அழகிரிசாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை - கி.ரா

60.   ஒருவன் இருக்கிறான் என்ற கதை கலைமகள் இதழில் எந்த ஆண்டு வெளியானது - 1966

61.   'ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி' என்ற வரி இடம்பெற்ற - மதுரைக்காஞ்சி

62.   ஆலங்கானம் என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது - திருவாரூர்

63.   இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது - தற்குறிப்பேற்ற அணி

64.   "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி - தற்குறிப்பேற்ற அணி

65.   தீவகம் என்னும் சொல்லுக்கு பொருள் - விளக்கு

66.   செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது - தீவக அணி

67.   தீவக அணி எத்தனை வகைப்படும் - மூன்று

68.   'சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி - தீவக அணி

69.   நிரல் என்பதன் பொருள் - வரிசை

70.   நிறை என்பதன் பொருள் - நிறுத்துதல்

71.   சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது - நிரல்நிறை அணி

72.   'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளில் பயின்று வரும் அணி - நிரல்நிறை அணி

73.   எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது - தன்மை நவிற்சி அணி

74.   தன்மை நவிற்சி அணி எத்தனை வகைப்படும் - நான்கு

75.   "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - தண்டியலங்காரம்

76.   'இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்' இவ்வடிகளில் கற்காலம் என்பது - ஏழ்மை

77.   சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

78.   பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று கருணையன் எலிசபெத் க்காக வேண்டினார்

79.   வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி - உருவக அணி

80.   கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது - சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

81.   யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் - பாவண்ணன்

82.   கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் - திலகவதி

83.   அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் - .முருகேச பாண்டியன்

84.   "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்" என்ற சிலப்பதிகாரப் பாடலில் பயின்று வந்துள்ள அணி - தன்மை நவிற்சியணி

85.   ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள்

           1.     சில நேரங்களில் சில மனிதர்கள்

           2.     ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

           3.     ஊருக்கு நூறுபேர்

           4.     உன்னைப்போல் ஒருவன்

           5.     யாருக்காக அழுதான்

86.   ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினம்

           1.     பிரளயம்

           2.     கைவிலங்கு

           3.     ரிஷிமூலம்

           4.     பிரம்ம உபதேசம்

           5.     யாருக்காக அழுதான்

           6.     கருணையினால் அல்ல

           7.     சினிமாவுக்குப் போன சித்தாளு

87.   ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகளில் பொருந்தாது -

           1.     குருபீடம்

           2.     யுகசந்தி

           3.     ஒருபிடி சோறு

           4.     உண்மை சுடும்

           5.     இனிப்பும் கரிப்பும்

           6.     தேவன் வருவாரா

           7.     புதிய வார்ப்புகள்

 

88.   ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்

           1.     பாரீசுக்குப் போ!

           2.     சுந்தர காண்டம்

           3.     உன்னைப் போல் ஒருவன்

           4.     கங்கை எங்கே போகிறாள்

           5.     ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

           6.     இன்னும் ஒரு பெண்ணின் கதை

           7.     ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

89.   பொருத்துக.

           1.     சேக்கை - படுக்கை

           2.     யாக்கை - உடல்

           3.     பிணித்து - கட்டி

           4.     வாய்ந்த - பயனுள்ள

90.   பொருத்துக.

           1.     இளங்கூழ் - இளம்பயிர்

           2.     தயங்கி - அசைந்து

           3.     காய்ந்தேன் - வருந்தினேன்

           4.     கொம்பு - கிளை

91.   பொருத்துக.

           1.     புழை - துளை

           2.     கான் - காடு

           3.     தேம்ப - வாட

           4.     அசும்பு - நிலம்

92.   பொருத்துக.

           1.     உய்முறை - வாழும் வழி

           2.     ஓர்ந்து - நினைத்து

           3.     கடிந்து - விலக்கி

           4.     உவமணி - மணமலர்

           5.     படலை - மாலை

           6.     துணர் - மலர்கள்

93.   பொருத்துக.

           1.     சேந்தன - சிவந்தன

           2.     தெவ் - பகைமை

           3.     சிலை - வில்

           4.     மிசை - மேலே

           5.     புள் - பறவை

94.   பொருத்துக

           1.     Humanism - மனிதநேயம்

           2.     Cabinet- அமைச்சரவை

           3.     Cultural Boundaries - பண்பாட்டு எல்லை

           4.     Cultural values - பண்பாட்டு விழுமியங்கள்

 

https://www.a2ztnpsc.in/