10TH- STD - மாநில அரசு -

1.    இந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் - 28 , 9.

2.    மாநில அரசு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட பகுதி, சரத்து - பகுதி – 6 – 152 - 237.

3.    அரசியலமைப்பின் எந்த விதியின் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- 370.

4.    மாநில அரசாங்கம் எத்தனை நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: 3 . 

          1.    நிர்வாகம்,

          2.    சட்டம் ,

          3.    நீதித்துறை.

5.    மாநில நிர்வாகத்தின் தலைவர்- ஆளூநர்.

6.    மாநில நிர்வாகம் யாருடைய பெயரில் நடைபெறுகிறது- ஆளுநர்.

7.    மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறும் சட்டப்பிரிவு-154.

8.    எந்த சட்ட பிரிவின் படி நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் - 154 (1).

9.    மாநில ஆளுநரை  நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்.

10.   மாநில ஆளுநரின் பதவிக்காலம்-5 ஆண்டுகள்.

11.   மாநில ஆளுநரின் பதவிக்காலம் யார் நீட்டிப்பு செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்.

12.   ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொதுவாக சொந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்க முடியாது.

13.   ஆளுநரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் உடையவர்- குடியரகத் தலைவர்.

14.   ஆளுநர் தனது பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்- குடியரசுத் தலைவரிடம்.

15.   ஒரு மாநிலத்தின் ஆளுநரை யாரால் பதவிநீக்கம் செய்ய முடியாதுமாநில சட்டமன்றம், உயர் நீதிமன்றம்.

16.   ஆளுநரை நியமிக்க   பின்பற்றப்படும் மரபுகள் எத்தனை: 2.

          1.    எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கபடுகிறோ அந்த மாநிலத்தை சேர்ந்தவராக ஆளுநர் இருக்கக்கூடாது.

          2.    மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவருடைய பெயரை முன்மொழிய வேண்டும்.

17.   ஒரு ஆளுநர் ஒன்று () அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் சட்ட பிரிவு - 158 (3A). ஊதியம் மற்றும் படிகள் பிரித்து வழங்கபடும்.

18.   மத்திய, மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு- சர்க்காரியா குழு- 1983.

19.   இந்திய அரசியலமைப்பு   ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறும் சட்டப்பிரிவு-157, 158.

20.   ஆளுநர் தகுதிகள்:

          1.    இந்திய குடிமகன் இருத்தல் வேண்டும்.

          2.    வயது – 35.

          3.    லாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபட கூடாது.

21.   மாநில அரசின் தலைவர்- ஆளுநர்.

22.   மாநில அரசாங்கத்தின் தலைவர்-முதலமைச்சர் .

23.   முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட சில  செயல்களை ஆளுநர் செயல்படுத்துகிறார் என கூறும் சட்டப்பிரிவு-163.

24.   மாநிலத்தின் அரசியல் அமைப்பின் தலைவர்- ஆளுநர்.

25.   மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்ஆளுநர்.

26.   மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் - குடியரசுத் தலைவர்.

27.   மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் - ஆளுநர்.

28.   மாநிலத்தின் அரசு வழக்கறிஞர் நியமனம் மற்றும் ஊதியம் நிர்ணயம் செய்பவர்ஆளுநர்.

29.   மாநில பல்கலைக்கழகம் வேந்தராக செயல்படுபவர்ஆளுநர்.

30.   மாநில பல்கலைக்கழகம் துணை வேந்தர்களை நியமனம் செய்பவர்ஆளுநர்.

31.   மாநில சட்டமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும், கலைக்கவும், அதிகாரம் பெற்றவர்- ஆளுநர்.

32.   மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்தொடரில் முதல் உரையை நிகழ்த்துபவர்- ஆளூநர்.

33.   நிலுவையில் உள்ள மசோதா குறித்து சட்டமன்றத்திற்கு செய்தி அனுப்புவர்ஆளுநர்.

34.   சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்றத்தை தலைமையேற்று நடத்த எந்த உறுப்பினரையும் நியமிக்கும் அதிகாரம்  பெற்றவர் - ஆளுநர்.

35.   ஆங்கிலோ- இந்திய வகுப்பினர் எத்தனை பேரை  ஆளுநர் நியமிக்கலாம் - 1.

36.   கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை ஆகியவற்றில் இருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்- 1/6.

37.   மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா யாருடைய ஒப்புதல் பெற்ற பின் சட்டமாகும்ஆளுநர்.

38.   மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின்  அதிகாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆளுநர் கருதும் போது அதனை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.

39.   மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்ட பிரிவு213.

40.   ஆளுநரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள்  மாநில சட்டமன்றத்தால் அங்கிகாரம் பெற வேண்டும்- 6 மாதத்திற்குள்.

41.   ஆளுநர் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்:

          1.    மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை.

          2.    அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின்  அறிக்கை.

          3.    அரசின் தணிக்கைக்குழு அறிக்கை.

42.   மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார்செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாருக்கு வழங்கப்பட்டுள்ளதுஆளுநர்.

43.   மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர்  மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கின்றார்- ஆளுநர்.

44.   யாருடைய முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்- ஆளுநர்.

45.   மாநிலத்தின் எதிர்பாராச் செலவினங்களுக்காக அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் படைத்தவர்- ஆளுநர்.

46.   பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின்  நிதிநிலையை ஆய்வு செய்ய எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம்  ஒன்றை ஆளுநர் அமைக்கிறார்- 5 ஆண்டு.

47.   மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்பவர்ஆளுநர்.

48.   கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம்  செய்பவர்ஆளுநர்.

49.   உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம்  மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்பவர்-ஆளுநர்.

50.   யாருடைய ஆலோசனையின் பேரில் இந்திய குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கிறார்- ஆளூநர்.

51.   மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு  பரிந்துரை செய்பவர் - ஆளுநர்.

52.   மாநில நிர்வாகம் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் தொடர்பானச் செய்திகளை யாரிடமிருந்து ஆளுநர் பெறுகிறார்-முதலமைச்சர்.

53.   மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் உள்ளவர்- ஆளுநரிடம்.

54.   ஆளுநருக்கான  சிறப்புரிமைகளை வழங்குகின்ற சட்டப்பிரிவு: 361 (1).

          1.    ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது  குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு  எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.

          2.    ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது  குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்ற மும் உத்தரவு  பிறப்பிக்க முடியாது.

          3.    மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல்  வழக்குகளைத் தொடர முடியாது.

55.   முதலமைச்சரை நியமனம்  செய்பவர்ஆளுநர்.

56.   சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர்முதலமைச்சர்.

57.   மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது- ஆளுநர்.

58.   அமைச்சரவை பெரும்பான்மை இலந்தால் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளவர்-ஆளுநர்.

59.   மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்யப்படும் சட்ட பிரிவு356.

60.   அமைச்சரவையின் தலைவர்  - முதலமைச்சர்.

61.   யாருடைய பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்-முதலமைச்சர்.

62.   மாநிலத்தின் உண்மையான தலைவர் - முதலமைச்சர்.

63.   மாநிலத்தின் பெயரளவு தலைவர்ஆளுநர்.

64.   மாநில அரசின் தலைவர்ஆளுநர்.

65.   மாநில அரசாங்கத்தின் தலைவர்- முதலமைச்சர்.

66.   சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும்  ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு   ஆலோசனை வழங்குகிறார்- முதலமைச்சர்.

67.   எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்- முதலமைச்சர்.

68.   சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக  பதவியேற்றால் எத்தனை மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்- 6.

69.   மாநில சட்டமன்றத்திற்குக்  கூட்டாகப் பொறுப்பானது- அமைச்சரவை.

70.   ஆளுநருக்கு  ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழி செய்யும் சட்டப்பிரிவு- 163.

71.   முதலமைச்சரை தலைவராகக்  கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும்  பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும்  வேண்டும் என கூறும் சட்டப்பிரிவு163 (1).

72.   ஆளுநரால் முதலமைச்சர்  நியமிக்கப்படுவதைக் கூறும் - சட்டப்பிரிவு - 164 (1).

73.   முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த  உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15  விழுக்காட்டை தாண்டக்கூடாது என கூறும் சட்டப்பிரிவு - 164 (1A).

74.   மாநில சட்டமன்றம் வகை:

          1.    ஓரவை சட்டமன்றம்.

          2.    ஈரவை சட்டமன்றம்.

75.   ஈரவை சட்டமன்றங்களைக்  கொண்டுள்ள மாநிலம் :

          1.    பீகார்

          2.    கர்நாடகா

          3.    மகாராஷ்டிரா

          4.    உத்திரப்பிரதேசம்

          5.    ஆந்திரப்பிரதேசம்

          6.    தெலுங்கானா

          7.    ஜம்மு - காஷ்மீர்

76.   மாநில மக்களின் பிரதிநிதிகளைக்  கொண்ட அவைகீழவை.

77.   ஆசிரியர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள்  ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட அவை - மேலவை.

78.   தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை- 234.

79.   தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை36.  அதாவது 234-ல் 15 விழுக்காடு.

80.   சட்டமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை-மக்கள் தொகையைப் பொறுத்தது.

81.   சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை:

          1.    அதிகபட்சம் - 500.

          2.    குறைந்த பட்சம்60.

82.   சட்டமன்றத்தின் பதவிக்காலம்- 5 ஆண்டுகள்.

83.   சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்- 1/3 பங்கு.

84.   மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனைக்கு குறையாமல் இருக்க வேண்டும்- 40.

85.   நாடாளுமன்ற சட்டத்தின் மூலம்  காஷ்மீர் சட்ட மேலவையில்  உறுப்பினர்களின்  எண்ணிக்கை - 36.

86.   தமிழக சட்டமன்றம் எத்தனை உறுப்பினர்களைக்  கொண்டது- 235.

87.   வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில்  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்234.

88.   ஆங்கிலோஇந்தியன் வகுப்பினரில்  ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள்1.

89.   சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பவர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள்.

90.   சபாநாயகர் தனது  பதவியை இராஜினாமா (பதவி துறப்பு) செய்தால்  - சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது.

91.   சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின்  மூலம் எத்தனை நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு  சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம்- 14 நாட்கள்.

92.   சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் - தமது பதவியை இழக்க மாட்டார்.

93.   சட்ட மேலவை - ஒரு நிரந்தர அவை.

94.   சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களின்  எண்ணிக்கை சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 3-ல்  1-பங்குக்கு மிகாமலும் குறைந்த பட்ச எண்ணிக்கை 40-க்கு குறையாமலும் இருக்க வேண்டுமென  கூறும் சட்டப்பிரிவு - 171 (1).

95.   சட்டமேலவை - விதான் பரிஷத்.

96.   29 மாநிலங்களில் எத்தனை மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது -7.

97.   சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் - 6 ஆண்டுகள்.

98.   தமிழ்நாட்டில் சட்ட மேலவை ஒழிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1986 நவம்பர் - 1.

99.   சட்ட மேலவை உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் எத்தனை உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர்-1/3-பங்கு.

100. சட்ட மேலவை உறுப்பினர்கள் நியமனம்:

          1.    பட்டதாரி உறுப்பினர்கள்-   1/12 பங்கு.

          2.    ஆசிரியர்கள் -  1/12 பங்கு.

          3.    கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை,கூட்டுறவு இயக்கம் - 1/6 பங்கு.

          4.    உள்ளாட்சி அமைப்புகள் - 1/3 பங்கு.

          5.    சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால்- 1/3  பங்கு.

101. சட்ட மேலவை உருவாக்கம் () நீக்கம் பற்றி சட்டப்பிரிவு- 169 .

102. மொத்த  உறுப்பினர்களில்  (2/3) உறுப்பினர்கள்  தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ () நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக்  கொண்டால் - நாடாளுமன்றம்  மேலவையை உருவாக்கும் () நீக்கும்.

103. பண மசோதா எந்த அவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்- கீழவை.

104. சட்டமன்றக் எந்த அவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது- கீழவை.

105. நிதி சார்ந்த  நடவடிக்கையில் வாக்களிக்க முடியாது-மேலவை.

106. கல்கத்தா, பம்பாய் ,சென்னையில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-1862.

107. ஏழாவது திருத்தச்சட்டம், இரண்டு () இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் ()  யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான  உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு  அங்கீகாரம் வழங்கிய ஆண்டு-1956.

108. விக்டோரியா மகாராணி  வழங்கிய காப்புரிமை கடிதத்தின்  மூலம் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர்  நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -1862- ஜுன் 26 .

109. உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய  நீதித்துறை வளாகம்- சென்னை உயர் நீதிமன்றம்.

110. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது-குடியரசுத் தலைவர்.

111. மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்  பிரதேசங்களுக்கும் சேர்த்து எத்தனை உயர் நீதிமன்றங்கள்  செயல்படுகின்றன - 25.

112. ஒவ்வொரு  உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதி  மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிற சட்டப்பிரிவு216.

113. தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன்  மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும்  அதிகாரங்களையும் பெற்றுள்ள நீதிமன்றங்கள்- சென்னை, பம்பாய் , கல்கத்தா.

114. நாட்டின் எந்த தீர்ப்பாயங்களின்  கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை- இராணுவம்.

115. பேராணை அதிகாரங்கள்:

          1.    உயர் நீதிமன்றம்226.

          2.    உச்ச நீதிமன்றம்32.

116. நீதி பேரானை: 5.

          1.    ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus).

          2.    கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus).

          3.    தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition).

          4.    தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo Warranto).

          5.    ஆவணக் கேட்பு பேராணை (Certiorari).

117. தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் காவலில்  வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன்  கொண்டுவரச் செய்வது - ஆட்கொணர்வு நீதிப் பேராணை.

118. கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் இடும் ஆணை- கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை.

119. கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையைத்  தாண்டி செயல்படாமல் இது தடுக்கிறது- தடையுறுத்தும் நீதிப்பேராணை.

120. பொதுப்பதவிக்கு தவறாக வரும் ஒருவரை இது தடுக்கிறது- தகுதி வினவும் நீதிப்பேராணை.

121. கீழ் நீதிமன்றங்களிடமிருந்து வழக்கு  சம்பந்தமான ஆவணங்கள், ஆதாரங்கள், கோப்புகள்  ஆகியவற்றை உயர் நீதிமன்றங்கள் கேட்டுபெறும்  ஆணை-ஆவணக் கேட்பு பேராணை.

122. மத்தியமாநில அரசுகள்  இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா () முரண்பட்டதா என்பதை ஆராய உயர்  நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஒர் அதிகாரம் - நீதிப்புனராய்வு.

123. உயர்  நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி வெளிப்படையாக கூறும் சட்டப்பிரிவுகள்-226 , 227.

124. உயர்  நீதிமன்ற நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறைத்து  மற்றும் தடை செய்த ஆண்டு - 1976 சட்டத் திருத்தம் - 42 .

125. உயர் நீதிமன்றத்திற்கு நீதிப்புனராய்வு  அதிகாரத்தை மீண்டும் வழங்கிய ஆண்டு -1977 சட்டத் திருத்தம் - 43 .

 

https://www.a2ztnpsc.in/