11TH - STD - முகலாயப் பேரரசு -

1.    முகலாயப் பேரரசை நிறுவியவர் - பாபர்.

2.    முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.

3.    1526-முதல் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - இப்ராஹிம் லோடி.

4.    முகலாயப் பேரரசு  காலம்- 1526 -1857 .

5.    முகலாய வம்சத்தை சேர்ந்த முக்கிய அரசர்கள் : 6.

          1.    பாபர்

          2.    ஹூமாயூன்

          3.    அகபர்

          4.    ஜஹாங்கீர்

          5.    ஷாஜகான்

          6.    ஒளரங்கசீப்

6.    முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த ஆண்டு - 1707, அவுரங்கசீப் மறைவு.

7.    இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நாட்டினர் ஆக ஒருங்கிணைத்து ஒரு கூட்டு தேசிய அடையாள அரசியலை உருவாக்கியவர் - அக்பர்.

8.    ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவை ஆதரித்தவர்கள் - சபாவி.

9.    சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் - உதுமானிய துருக்கியகள்.

10.   1526 - பாபர் எந்த நகரை தலைநகரமாகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவினார் -  டெல்லி.

11.   பாபர் 11 வயது சிறுவனாக தனது தந்தையிடமிருந்து மரபுரை சொத்தாக பெற்ற நகரம் - சாமர்கண்ட் .

12.   இப்ராஹிம் லோடியின் மீது படையெடுக்க பாபருக்கு அழைப்பு விடுத்தவர்கள் :

          1.    தெளலத்கான் லோடி

          2.    ராணா சங்கா .

13.   பாபர், தெளலத்கான் லோடியின் படைகளை எங்கு வென்றார்லாகூர்.

14.   முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு -1526, ஏப்ரல் 21.

15.   பாபரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது  - பீரங்கிபடை.

16.   வெடிமருந்து முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்சீனர்கள்.

17.   வெடிமருந்து ஐரோப்பாவை அடைந்த ஆண்டு - 13 ம் நூற்றாண்டு.

18.   கான்வா போர் நடைபெற்ற ஆண்டு - 1527 . பாபர் - ராணா சங்கா.

19.   மேவாரின் அரசன் - சித்தூர் ராணா சங்கா

20.   இப்ராஹிம் லோடியின் சகோதரர் - முகமது லோடி.

21.   கான்வா போரில் பாபர் கைப்பற்றிய கோட்டைகள் - குவாலியர் , தோல்பூர்.

22.   சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு - 1528. பாபர்-  மேதினிராய்.

23.   காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு - 1529. பாபர்முகமது லோடி , சுல்தான் நஸ்ரத்ஷா.

24.   கங்கை நதியின் துணை நதி  - காக்ரா.

25.   பாபர் இறந்த ஆண்டு - 1530.

26.   பாபர் புலமை பெற்று இருந்த மொழி  - பாரசீக , அரேபிய மொழி.

27.   பாபரின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்  - துசுக்--பாபரி. பாபர் நாமா.

28.   முகலாய வம்சத்தில் உலகச் செவ்வியல் இலக்கியமாக கருதப்படுவது-துசுக்--பாபுரி.

29.   ஹிமாயூன் ஆட்சிக் காலம்1530 - 1540, 1555 - 1556.

30.   ஹிமாயூன் சகோதரர் கம்ரான் பொறுப்பு வகித்த பகுதிகள்- காபூல்,காந்தகார்.

31.   ஹிமாயூன் சுனார் கோட்டையை முற்றுகையிட்ட ஆண்டு  - 1532.

32.   ஹிமாயுன் டெல்லியில் அமைத்த புதிய நகரம்  - தீன்பனா

33.   ஹிமாயுன் பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து கைப்பற்றிய பகுதிகள்- குஜராத் , மாளவம்.

34.   செளசா போர் நடைபெற்ற ஆண்டு  - 1539. ஹூமாயூன்ஷெர்ஷா .

35.   கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு - 1540. ஹுமாயூன்ஷெர்ஷா.

36.   பரித் என்று அழைக்கப்பட்டவர்  - ஷெர்ஷா.

37.   ஷெர்ஷாவின் மற்றொரு பெயர்  - ஷெர்கான்.

38.   ஷெர்ஷா வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த ஆண்டு  - 1545.

39.   ஷெர்ஷாவிற்கு பிறகு பதவியேற்ற அவருடைய இரண்டாவது மகன்இஸ்லாம்ஷா.

40.   ஷெர்ஷா வங்காளத்தின் ஆளுநராக யாரை நியமித்திருந்தார் - கிசிர்கான்.

41.   விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் என நம்பியவர்ஷெர்ஷா.

42.   குஜராத் கடற்கரைத் துறைமுகங்களை ஆக்ராவோடும் ஜோத்பூரோடும் இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தவர்- ஷெர்ஷா.

43.   ஷெர்ஷா ஆட்சி காலத்தில் அனைத்து சாலைகளில் அமைக்கப்பட்ட சத்திரங்கள்- சராய்.

44.   யாருடைய ஆட்சிக்காலத்தில் தாங்கம் வெள்ளி செப்பு காசுகள் இடம்பெறும் உலோகங்களின் அளவு வரையறை செய்யப்பட்டது  - ஷெர்ஷா.

45.   ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்க அதிகாரமும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் முறை - ஜாகிர்தாரி முறை.

46.   பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு பொருள்- நிலத்தின் உடைமையளர்.

47.   அக்பர் மற்றும் தோடர்மால் நிதி நிர்வாக முறை யாருடைய நிதி நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டது- ஷெர்ஷா.

48.   ஷெர்ஷா டெல்லியில் போட்டி சுவர்களுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்க தொடங்கினார்  - புராண கிலா.

49.   ஷெர்ஷா தன்னுடைய கல்லறை மாடத்தை எங்கு கட்டினார் - சசாரம்.

50.   கன்னோசி போரில் தோற்று தப்பியோடிய ஹிமாயூன் எங்கு தஞ்சம் புகுந்தார் - பாரசீகம்.

51.   பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹீமாயூன் கைப்பற்றிய பகுதிகள்-, காபூல், காந்தகார்.

52.   டெல்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இருந்து தவறி உயிரிழந்த அரசர்  - ஹிமாயுன்.

53.   வாழ்க்கை முழுவதும் தவறிவிழுந்த ஹிமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்  என்று கூறியவர்  - ஸ்டேன்லி லேன்புல்.

54.   அக்பரின் ஆட்சிக் காலம்1356 -1605.

55.   அக்பரின் தந்தை -  ஹிமாயூன்.

56.   அக்பரின் இயற்பெயர்  - ஜலாலுதீன்.

57.   அக்பருக்கு எந்த வயதில் முடி சூட்டப்பட்டது - 14.

58.   அக்பரின் பாதுகாவலன்  - பைராம்கான்.

59.   இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு  - 1556. அக்பர்ஹெமு.

60.   அடில்ஷாவின் இந்து படைத்தளபதி  - ஹெமு.

61.   ஹெமு முதன்முதலில் கைப்பற்றிய பகுதி  - குவாலியர்.

62.   பைராம் கானின் மகன்  - அப்துர் ரஹீம்.

63.   அப்துர் ரஹீம் என்ன பட்டத்துடன் அக்பரின் அவையில் இருந்தார் - கான்--கானான்.

64.   எந்த ஆண்டு அக்பர் பாஜிபகதூர் இடமிருந்து மாளவம் கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார் - 1562.

65.   ராணி துர்கா தேவி அம்மையாரின் மகன் - வீரநாராயணன்.

66.   இந்தியாவின் மையப்பகுதியில் இருந்த கோண்டுவானா பகுதியை அக்பர் கைப்பற்றிய ஆண்டு - 1564.

67.   மேவார் அரசரான ராஜா உதய் சிங்கின் தளபதிகள்-  ஜெய்மால் , பட்டா.

68.   அக்பர் முசாபர்ஷாவிடம் இருந்து குஜராத் கைப்பற்றிய ஆண்டு - 1573.

69.   பிகார்,வங்காளம் பகுதிகளை ஆண்டு வந்த தாவுத் கான் என்பவரை அக்பர் தோற்கடித்து இவ்விரு பகுதிகளும் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டன ஆண்டு -1576.

70.   யாருடைய உதவியுடன் அக்பர் காபூலை சேர்ந்த மிர்சா ஹக்கீமை தோற்கடித்தார் - ராஜா மான் சிங் , பகவன் தாஸ்.

71.   அக்பர் காஷ்மீரை மீட்ட ஆண்டு- 1586.

72.   அக்பர் சிந்துவை மீட்ட ஆண்டு- 1591.

73.   அக்பர் காண்டெஷ் பகுதியை கைப்பற்றிய ஆண்டு- 1591.

74.   பெரார் பகுதியை யாரிடமிருந்து கைப்பற்றினார்- சாந்த் பீபி.

75.   அக்பர் இறந்த ஆண்டு - 1605 அக்டோபர் 27.

76.   முஸ்லிமல்லாத மக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை நீக்கியவர்-அக்பர்.

77.   அக்பர் மணந்த ஆம்பர் நாட்டு அரசரின் மகள் - ஹர்க்கா பாய். (ஜோதா அக்பர்).

78.   அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி - ராஜா மான்சிங்.

79.   ஹர்கா பாய் பெற்றெடுத்த இளவரசர் - சலீம்.

80.   அக்பர் காலத்தில் வருவாய்துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய யார் திவானாகப் பதவி உயர்த்தப்பட்டார் - ராஜா தோடர்மால்.

81.   அக்பரின் நண்பர் - பீர்பால்.

82.   முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ராஜபுத்திர அரசுகள்- மேவார் , மார்வார்.

83.   ஹால்டி காட் போர் நடைபெற்ற ஆண்டு - 1576. முகலாயப் படை - ராணா பிரதாப் சிங்

84.   அக்பர் உருவாக்கிய புதிய தலநகரம் - பதேபூர் சிக்ரி.

85.   அக்பர் அறிமுகம் செய்த மிக முக்கியமான முறை - மன்சப்தாரி முறை.

86.   மன்சப்தாரி தகுதியின் இரு வகைகள்  - ஜாட் , சவார்.

87.   ஒவ்வொரு மன்சப்தாரும் பெரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது -  ஜாட்.

88.   மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பது - சவார்.

89.   அனைவருக்கும் அமைதி (சுல்--குல் ) என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தவர்அக்பர்.

90.   அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் எனக் குற்றம்சாட்டியவர் - பதானி.

91.   அக்பர் நிறுவிய வழிபாட்டு கூடம் - இபாதத் கானா.

92.   அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சொல் - தெளகித்--இலாகி . தீன் இலாகி.

93.   தெளகித்--இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் - தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடு.

94.   நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறையை உருவாக்கியவர்  - அக்பர்.

95.   அக்பர் ஆட்சிக் காலத்தில் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் -ராமாயணம் ,மகாபாரதம்,அதர்வ வேதம் ,விவிலியம்,குரான்.

96.   சலீம் என்று அழைக்கப்பட்டவர்  - ஜஹாங்கிர். 1605-1627

97.   ஜஹாங்கிரின் தந்தை - அக்பர்.

98.   ஜஹாங்கீர் உடைய மூத்த மகன் - குஸ்ரு.

99.   14 - மாத கால முற்றுகைக்கு பின்னர் காங்கர கோட்டையை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றவர்  - குர்ரம்.

100. ஜஹாங்கீரின் ஆட்சி வருகைக்கு சாட்சியம் - வில்லியம் ஹாக்கிங்ஸ், சர் தாமஸ் ரோ.

101. சூரத் நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை அமைக்க இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவர்  - சர் தாமஸ் ரோ.

102. எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு ஒரு அடிமையாக கொண்டு வரப்பட்டவர் - மாலிக் ஆம்பூர்.

103. மாலிக் ஆம்பூர் அரசியல், விவேகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை யாரிடம் கற்றுக் கொண்டார் - செங்கிஸ்கான்.

104. செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மனைவி யாரை சுதந்திர மனிதர் ஆக்கினார்  - மாலிக் ஆம்பூர்.

105. மாலிக் ஆம்பூர் மரணம் அடைந்த ஆண்டு - 1626 மே - 14.

106. அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை ஓவியம் தோட்டம் மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் - ஜஹாங்கீர்.

107. ஜஹாங்கீரின் மனைவி  - மெகருன்னிசா.

108. மெகருன்னிசா, ஜஹாங்கிர் எவ்வாறு அழைத்தார்நூர்ஜகான்.

109. ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி - மக்பத் கான்.

110. ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் யாரை மணி முடிசூட்ட முயன்றார் - ஷாரியர்.

111. நூர்ஜஹானின் மருமகன்  - ஷாரியர்.

112. ஷாஜகானின் ஆட்சிக்காலம்- 1627-58.

113. தக்காண ஆளுநர் ஆசம் கான் என்னும் பட்டத்தை பெற்ற ராதத்கான் பேரரசின் படைகளுக்கு தலைமை ஏற்று எந்தப் பகுதியை தாக்கினார்  - பால்காட்.

114. ஷாஜகான் தக்காணத்தை எத்தனை மாநிலங்களாக பிரித்தார் : 4.

          1.    அகமது நகர்

          2.    கான்டேஸ்

          3.    பெரார்

          4.    தெலுங்கானா .

115. ஷாஜகான் தக்காணத்தை நான்கு மாநிலங்களாகப் பிரித்து அதன் ஆளுநராக யாரை நியமித்தார் - ஒளரங்கசிப்.

116. யார் அரசனாவதை ஷாஜகான் விரும்பினார் - தாராஷூகோ. மூத்த மகன்

117. மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சரியாக எனடைபோடுபவராகவும் சிறந்த திட்டமிடல் கொண்டவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தவர்- ஒளரங்கசிப்.

118. முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்தாஜ்மஹால்.

119. இந்தியப் பாரசிக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவை- தாஜ்மஹால்.

120. தனது மனைவி மும்தாஜு அழியாப் புகழை அளிப்பதற்காக - ஷாஜகான் . தாஜ்மஹாலைக் கட்டினார்.

121. பாரசிக வம்சாவளியைச் சேர்ந்த இந்தியராகிய யார் தலைமை கட்டடக்கலை நிபுணராக இருந்தார் - உஸ்தத் அகமத் லஹாவ்ரி.

122. தத்துவஞான இளவரசர் என அழைக்கப்பட்டவர்-  தாராஷூகோ.

123. ஷாஜகானைச் வீட்டுச் சிறையில் அடைத்தவர்- ஒளரங்கசிப்.

124. 1681 இல் ஒளரங்கசிப். மகன்களில் ஒருவரான யார் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாய் தக்காணம் செல்ல நேர்ந்தது - இளவரசர் அக்பர்.

125. வடஇந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக அரங்கேறிய மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள்-

          1.    ஜாட் (மதுரா மாவட்டம்),

          2.    சத்னாமியர் (ஹரியானா பகுதி)

          3.    சீக்கியர்

126. சிக்கியர் கலகமானது, அதிகாரப்பூர்வமாக சீக்கிய குரு என்ற பதவியை வகித்து வந்த சீக்கிய குரு தேஜ்பகதூருக்கு என்பவருக்கு எதிராக அப்பதவியின்மீது உரிமை பாராட்டிய ராம்ராய் மேற்கொண்ட சூழ்ச்சிகளின் காரணமாய் வெடித்தது.

127. சீக்கியரின் ஒன்பதாவது குரு-  தேஜ்பகதூர்.

128. பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்னதைச் சேர்ந்த சுல்தான் என்பவர் ஒளரங்கசிப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றவர்- சிக்கந்தர் அடில்ஷா.

129. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தோற்கடிக்கப்பட்டு கோல்கொண்டா 1687-இல் கைப்பற்றப்பட்டது

130. யாருடைய தலைமையில் மராத்தியர்கள் ஒளரங்கசீப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தனர்  - சிவாஜி.

131. ஓளரங்கசீப் தனது இரு முக்கியத் தளபதிகளான யாரை ஒருவருக்குப் பின் ஒருவராக சிவாஜியைக் கைதுசெய்ய அனுப்பி வைத்தார்- செயிஷ்டகான், ஜெய்சிங்.

132. சிவாஜியைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் சென்றவர்ஜெய்சிங்.

133. 1480 முதல் 1686 வரை ஆட்சி செலுத்திய அடில் ஷாஹி மரபின் தலைநகர்- பீஜப்பூர்.

134. அடில் ஷாஹி வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளரான முகமது அடில்ஷாவின் (1627-1656) மிடுக்கான கல்லறைகோல்கும்பாஸ். (வட்டவடிவக் குவிமாடம்)

135. ரோமின் புனித பீட்டர் தேவாலயத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம்-  கோல்கும்பாஸ்.

136. கோல்கும்பாஸ் உட்சுவற்றின் - நீளம்-135 அடி,உயரம்-178 அடி

137. ஜிஸியா வரி மீண்டும் விதித்தவர்ஒளரங்கசீப்.

138. புதிய கோவில்கள் கட்டப்படக் கூடாதென ஆணைகள் பிறப்பித்த அரசன்- ஒளரங்கசீப்.

139. ஒளரங்கீப் உண்மையான முஸ்லீமாக, வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட அப்வாப் என்னும் வரிவசுலை, அது ஷரியத் சட்டத்தால் ஏற்று கொள்ளப்படவில்லை.

140. யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்து அதிகாரிகள் அதிகமான எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர்ஒளரங்கசீப்.

141. ஷாஜகான் மகபத்கான் உதவியோடு எந்த அரசர்களை பணியை செய்தார்  - அகமது நகர் நிஜாம் ஷாகி.

142. கோல்கொண்டாவின் சுல்தான் தன் அமைச்சர் மீர் ஜூம்லாவை சிறையில் அடைத்ததை காரணம் காட்டி யார் கோல்கொண்டா மீது படையெடுத்தார்  - ஒளரங்கசிப்.

143. அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதைக் கீழ்த்திசை போர்த்துகீசியப் பேரரசின் தலைநகராக்கினார் ஆண்டு - 1510.

144. டச்சுக்காரர்கள் வணிகநிலையங்களை ஏற்படுத்திய ஆண்டு: 1610.

          1.    புலிக்காட் (பழவேற்காடு) – 1610.

          2.    சூரத் – 1616.

          3.    பிமிலிபட்டினம் – 1641.

          4.    காரைக்கால்  - 1645.

          5.    சின்சுரா – 1653

          6.    கொச்சி – 1663

145. டேனியர் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் குடியேற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு-1620.

146. டேனியர் தலைமையிடம் - வங்காளத்தில் - செராம்பூர்.

147. பிரெஞ்சுக்காரர் குடியேற்றங்கள் ஏற்படுத்திய ஆண்டு : 1668.

148. ஆங்கிலேயர்கள் குடியேற்றங்கள் ஏற்படுத்திய ஆண்டு  : 1612.

          1.    சூரத் - 1612.

          2.    சென்னை - 1639 .

          3.    பம்பாய் - 1668 .

          4.    கல்கத்தா -1690

149. முக்காடம்-என்றழைக்கப்பட்டக் கிராமத் தலவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினர்.

150. முகலாயப் பேரரசரிடமிருந்தும், உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்தும் பெற்ற மானியம்- மதாத்--மாஷ்.

151. அய்னி அக்பரி யில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத் தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார்- அபுல் பாசல்.

152. இந்திய முஸ்லீம்கள் - ஷேயிக்சதாஸ் என்றழைக்கப்பட்டனர்.

153. யாருடைய ஆட்சிக் காலத்தில் 15 விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுஅக்பர்.

154. அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்கள்- ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால்

155. மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர் - ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப்.

156. சிவாஜியின் தந்தை ஷாஜி சில காலம் யாரிடம் பணியாற்றினார்ஷாஜகான்.

157. முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது பெறுவதற்கு உரிமை பெற்றிருந்த  பணப்பரிசுமகர்.

158. மணமகன் மணமகளுக்குக் கட்டாயம் தர வேண்டிய பணம்- மகர்.   

159. ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்டப் பயிர் வகைகளை பட்டியலிடுவது- அய்னி அக்பரி.

160. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு எந்த வரியே மிக முக்கியமான வருவாய்- நிலவரி.

161. தோடர்மாலால் அறிமுகம் செய்த ஜப்தி முறையை முறை பிரகடனம் செய்தார்- அக்பர்.

162. விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள்- தஸ்தர்.

163. எந்த தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன -  கர்கானா.

164. பொருட்களைத் தொலைதூர பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்த நாடோடி வணிக இனக்குழுபஞ்சாரா.

165. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் முக்கிய மையமாகத் திகழ்ந்தது- வங்காளம்.