11TH-  STD ஊரக பொருளாதாரம்-

1.    இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என கூறியவர் - காந்தியடிகள்.

2.    இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரகப் பகுதிகளுக்கு அடிப்படை அடிப்படை அலகுகாக அமைவது -வருவாய் கிராமம்.

3.    2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த கிராமங்கள் -  6,40,867.

4.    121 கோடியாக உள்ள மொத்த மக்கள் தொகையில் மக்கள் ஊரகங்களில் வசிக்கின்ற மக்கள் -  68.84%.

5.    ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலே இறந்து அவன் சந்திக்கும் கடனையே விட்டு செல்கிறான் என்று கூறியவர் -ஆங்கில எழுத்தாளர் சர் மால்கம் டார்லிங்.

6.    ஒருபுறம் கிராமங்கள் காளியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாக உள்ளன இது இரட்டை நஞ்சாக்கள என குறிப்பிட்டவர்  - சுமாசர்.

7.    தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று -சிறியது  அழகு -என்ற நூலில் விளக்கியவர்-சுமாசர்.

8.    PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்-  அப்துல் கலாம்.

9.    பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக 2010 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் - பீட்டர் டயமண்ட், கிரிஸ்டோர் பிசாரிட்ஸ், டேல் மார்ட்டின்கன்.

10.   பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்படி வேலை இன்மை வேலை காலி இடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்து கொள்ள பயன்படும் முறைDMP. முறை.

11.   வேளாண் தொழிலாளர் விசாரனணக் குழு அறிக்கையின்படி எத்தனை சதவிகித வேளாண் தொழிலாளர்கள் குறை வேலை உடைமையில் உள்ளனர் - 84%.

12.   SSI ஆனது எந்த ஆண்டின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டத்தின்படி வகைப்படுத்தப்படுகிறது -2006.

13.   கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலை- ஊரக கடன் சுமை.

14.   இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கெடுப்பின்படி எத்தனை சதவிகித மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர்- 73% .

15.   1975 -ஆண்டு இந்திய அரசாங்கம் ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய ஊரக வங்கிகள் பணிபுரிந்து கொண்டு குழு அமைக்கப்பட்டு எந்த வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன - வட்டார ஊரக வங்கிகள். Regional Rural Banks. 

16.   ஒரே மாதிரியான சமூக பொருளாதார பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை கொண்ட தன்னிச்சையான அமைப்பு - சுய உதவி குழு.

17.   SBLP திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு-  1992.

18.   NABARD இன் எந்த திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவி குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும் - SHG வங்கி இணைப்பு  திட்டம்.

19.   சிறு குறு நிதி நிறுவனங்களுக்குகும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கி- முத்ரா வங்கி. MUDRA  .

20.   MUDRA முத்ரா வங்கி எப்போது துவங்கப்பட்டது -  2015 ஏப்ரல்-8.

21.   தேசிய ஊரக நல அமைப்பு- NRHM  ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 2005 ஏப்ரல் 12.

22.   இனப்பெருக்கம், தாய்மைப்பேறு , சிசு , குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரின் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு - தேசிய ஊரக நல அமைப்பு.

23.   ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை வாங்கவோ அல்லது விற்கவோ ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு - ஊரக அங்காடி.

24.   இந்தியாவின் ஊரக சாலை பகுதி - 26.50 லட்சம் கிலோமீட்டர்.

25.   இதில் சாலைகள் போடப்பட்ட பகுதி -13.5 லட்சம் கிலோமீட்டர்.

26.   உலகிலேயே மிகப்பெரிய சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உள்ள நாடு- இந்தியா.

27.   1950 ஆம் ஆண்டில் இந்திய சாலைகளின் நீளம் -4 லட்சம் கிலோமீட்டராக இருந்தது.

28.   ஊரகப் பகுதிகளுக்கு மின் வசதியை ஏற்படுத்தித் தருவது - ஊரக மின்மயமாக்கல்.

29.   மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர்- கில்பெர்ட் ஸ்லேட்டர்.

30.   1918 - ஆண்டு கில்பெர்ட் ஸ்லேட்டர் வெளியிட்ட புத்தகம் -தென்னிந்திய கிராமங்கள்.

31.   தேவைக்கு அதிகமாக வேலையை பலர் செய்வது -குறை வேலையின்மை.

32.   2011-2012 மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதியில் எத்தனை கோடி மக்கள் ஏழையாகவும் வறுமைக்கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர் -22%.

33.   உலக ஏழை மக்களின் தொகையில் எத்தனை  சதவீதம்% இந்தியாவில் உள்ளனர்-22%

34.   20 அம்ச திட்டம் -1975.

35.   ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (IRDP)-  1978.

36.   ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) -1979.

37.   வேலைக்கு உணவு திட்டம் (FWP)-1977.

38.   தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (NREP)-1980.

39.   ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (RLEGP) - 1983.

40.   ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் (JRY) - 1989.

41.   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்( MGNREGS ) - 2006.

42.   பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY) - 2010.

43.   பாரத் நிர்மான் யோஜனா - 2005.

44.   இந்திரா ஆவாஸ் யோஜனா - 1985 - 1986.

45.   ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM) -2005.

46.   ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY) -2009.

47.   தேசிய ஊரக நல திட்டம் -2005.

48.   தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்-2011.

49.   தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் -2013.

50.   2016 அக்டோபர் 4, நிலவரப்படி வேலையின்மை:

          1.    ஊரக வேலையின்மை  -7.8%

          2.    நகர்புற வேலையின்மை -10.1%

          3.    இந்திய மொத்த வேலையின்மை- 8.5%

51.   2018 -ல் இந்திய சாலைகளின் நீளம் - 34 லட்சம் கிலோமீட்டர்.

52.   1950 - 51 ல் இந்திய சாலைகளின் நீளம் - 4 லட்சம் கிலோமீட்டர்.

53.   ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பது - மக்கள் தொகை அடர்த்தி.

54.   HDI - மனிதவள மேம்பாட்டு குறியீடு.

55.   WEI - மகளிர் வல்லமை குறியீடு.

56.   GDI - பாலின வேறுபாடு குறியீடு.

57.   PQLI - இயல் தர வாழ்க்கைக் குறியீடு.

58.   GNHI - மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு.

59.   ஊரகப் பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரி அளவு -2400.

60.   திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 - 2010 ல் ஊரகப் பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவிகிதம்-54.10%. மொத்த வறுமை சதவீதம் - 33.80%

61.   ஊரக வறுமைக்கான காரணங்கள்:

          1.    நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை.

          2.    பண்ணை சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பின்மை.

          3.    பொதுத் துறைகளில் முதலீடு இன்மை.

          4.    பணவீக்கம் .

          5.    குறைந்த உற்பத்தி திறன்.

          6.    குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம்.

62.   வேளாண் தொழிலாளர்கள் விசாரணைக் குழு அறிக்கையின்படி 84 சதவீத வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையுடைமையில் உள்ளனர்.

63.   அவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 82 நாட்கள் வேலையின்றி உள்ளனர் .

64.   ஊரக வேலையின்மைக்கான காரணங்கள்:

          1.    திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை.

          2.    வேளாண்மை பருவகாலம் சார்ந்தது.

          3.    துணைத் தொழில்கள் இன்மை & வேளாண்மையை இயந்திரமயமாக்கல்

          4.    மூலதன செறிவு தொழில்நுட்பம் & கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் .

65.   இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு- 3/4 பங்கு.

66.   கில்பெர்ட் ஸ்லேட்டர் தமிழ்நாட்டில் எந்தெந்த கிராமங்களை ஆய்வுசெய்து 1918 ஆம் ஆண்டு "சில தென்னிந்திய கிராமங்கள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

          1.    வடமலைபுரம் -ராமநாதபுரம்.

          2.    கங்கைகொண்டான் -திருநெல்வேலி.

          3.    பாலக்குறிச்சி -தஞ்சாவூர்.

          4.    துசி -வட ஆர்க்காடு.

67.   ஊரகப் பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது-25%சதவீதம் .

68.   2011 -கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் -60%

69.   2017 -மார்ச் முடிவில் இந்தியாவில் முழுமையாக மின் தொடர்பை பெற்ற கிராமங்களின் சதவீதம்- 99.25 %.

70.   ஓர் அறையையே வீடாக பயன்படுத்தும் குடும்பங்கள்- 38%.

71.   இரண்டு அறைகளை வீடாக பயன்படுத்தும் குடும்பங்கள்- 36%.

72.   NABARAD கணக்கீட்டின்படி-2.2மில்லியன் சுய உதவிக்குழுக்கள்இந்தியாவில் உள்ளன.

73.   சுய உதவி குழுக்கள் மாதாந்திர சேமிப்பு தொகை - ரூ 10 முதல் ரூ 50 வரை.

74.   குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் -2006.

75.   ஊரக வேலையின்மை வகை -3

          1.    வெளிப்படையான வேலையின்மை.

          2.    மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை.

          3.    பருவகால வேலையின்மை.

76.   ஊரக பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினைகள்.

          1.    எழுத்தறிவின்மை, போதிய தொழில்நுட்ப அறிவின்மை.

          2.    வேளாண்மைப் பொருட்களை அங்காடிபடுத்தும் வசதிகள் குறைவு.

          3.    நீர் மின்சாரம் , போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு மருத்துவ வசதி போதுமானதாக இல்லை.

          4.    நலிவடைந்த ஊரகத் தொழிற்சாலைகள்.

          5.    பழமையான தொழில்நுட்ப முறைகள்.

77.   அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலை –வறுமை.

78.   ஊரகப் பகுதியில் மறைமுக வேலையின்மை -25% முதல் 30% வரை.

79.   இந்தியாவில் 2009ம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை -150.

80.   இந்தியாவில் உடல் நலத் தரத்தில் முன்னிலையில் உள்ள மாநிலம்-கேரளா.

81.   ஊரகப் பகுதியின் அடிப்படை அலகாக கருதப்படுவது-வருவாய் கிராமம்.

82.   ஊரகப் பகுதியை கண்டறியும் பண்பு-குறைந்த மக்கள் தொகை அடர்த்தி.

83.   ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு -வேளாண்மையை சார்ந்திருத்தல்.

84.   தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை -மறைமுக வேலையின்மை.

85.   ஊரகப் பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது- ஊரக மேம்பாடு.

86.   ஊரக பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைகளுக்கு தொடர்புடையதாக கருதப்படுவது - சிறிய அளவு நில உடைமை.

87.   ஊரக கடனுக்கு காரணம்-ஏழ்மை.

88.   குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை வாய்ப்பு பெறுவது - பருவகால வேலைவாய்ப்பு.

89.   ஊரக சாலையின் பயன்பாடாக கருதப்படுவது--

          1.    ஊரக அங்காடி வசதி

          2.    வேலைவாய்ப்பு

          3.    ஊரக வளர்ச்சி

90.   முழுமையான  மின் வசதி பெற்றுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்-20.

          1.    சண்டிகர்.

          2.    டெல்லி.

          3.    ஹரியானா.

          4.    இமாச்சல் பிரதேசம்.

          5.    பஞ்சாப்.

          6.    ராஜஸ்தான் .

          7.    டையூ மற்றும் டாமன்.

          8.    தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி.

          9.    கோவா.

         10.   குஜராத்.

         11.   மகாராஷ்டிரா.

         12.   ஆந்திர பிரதேசம்.

         13.   கேரளா.

         14.   லட்சத்தீவு.

         15.   புதுச்சேரி.

         16.   தமிழ்நாடு.

         17.   தெலுங்கானா.

         18.   அந்தமான் நிக்கோபர்.

         19.   சிக்கிம்.

         20.   திரிபுரா.