11TH- STD - தமிழக பண்பாடு - ஓர் அறிமுகம்-

1.    பண்படு என்பதன் பொருள்-சீர்படுத்துதல் , செம்மைப்படுத்துதல்.

2.    பண்படு என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதேபண்பாடு.

3.    பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்- டி.கே. சிதம்பரநாதனார்.

4.    உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்கிறது தொல்காப்பியம்.  (உயர்ந்தோர் - பண்பாடு)

5.    பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று - குறிப்பிடுகிறது - கலித்தொகை.

6.    பண்புடையார் பட்டுஉண்டு உலகம்  என்கிறார் - திருவள்ளுவர்.

7.    பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகள் -மொழி, உணவு,உடை, வாழ்க்கைமுறை ,செய்யும் தொழில், எண்ணங்கள்.

8.    மாந்தனது அகவுணர்வு வளர்ச்சியையும் சீர்மையையும் குறிப்பது -பண்பாடு .(Culture).

9.    மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையை குறிப்பது -நாகரிகம். (Cvillzadion).

10.   தமிழர் தோற்றம் பற்றி நான்கு வகையான கருதுகோள்கள் உள்ளன அவை.

          1.    தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

          2.    தென் இந்தியாவின் பழங்குடிகள்.

          3.    ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரபிக் கடல் வழியாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்.

          4.    மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்பில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர்.

11.   தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகள்:

          1.    இலக்கிய சான்றுகள்.

          2.    வெளிநாட்டவரின் குறிப்புகள்.

          3.    தொல்பொருள் சான்றுகள்.

12.   தமிழக பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்வதற்கு பெரிதும் துணை புரிபவை-

          1.    தொல்காப்பியம் (இலக்கண நூல்).

          2.    சங்க இலக்கியங்கள் (எட்டுத்தொகை , பத்துப்பாட்டு).

13.   தொல்காப்பியத்தின் எந்த அதிகாரம் பழந்தமிழரின் அக,புற வாழ்க்கை முறைகளைப் பற்றி கூறுகிறது - பொருளதிகாரம்.

14.   அக்கால மக்களின் சமூக, பெருளாதார வாழ்க்கையை படம்பிடித்து காட்டுவது-எட்டுத்தொகையும் , பத்துப்பாட்டும்.

15.   சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையை அன்பின் ஐந்திணைகளாக பகுத்துள்ளன அவை :

          1.    குறிஞ்சி.

          2.    முல்லை.

          3.    மருதம்.

          4.    நெய்தல் .

          5.    பாலை.

16.   முதற்பொருள் - நிலம், பொழுது.

17.   கருப்பொருள்- வழிபடு தெய்வம், வழிகாட்டு முறைகள் வாழ்க்கைமுறை, விளையும் பொருள்கள்.

18.   உரிப்பொருள்- காதல் வாழ்வு, பல்வேறு உணர்வு நிலைகள்.

19.   யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய சங்ககாலப் புலவர் - கணியன் பூங்குன்றனார்.

20.   சேர மன்னர்களின் வணிக முறை, ஆட்சி சிறப்பு, போர்த்திறம் கொடைத்திறம் முதலியனவற்றை பற்றி விரிவாக விளக்கும் நூல்  - பதிற்றுப்பத்து.

21.   இசைப்பாடலாகிய எந்த  பாடல் பாண்டியர்களின் தலைநகராகிய மதுரையின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடுகிறது - பரிபாடல்.

22.   பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும் - 5 .

23.   ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிர் சொன்ன பக்கமும் - தொல்காப்பியம் (பொருள், புறத்திணையில்.

24.   தம்மை போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளை சூறுகின்ற பெருமனம் படைத்தவர்களாக புலவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பதை எந்த நூல்கள் புலப்படுத்துகின்றன - ஆற்றுப்படை நூல்கள்.

25.   நிலவளம், காதலின் சிறப்பு ஆகியவற்றை பற்றி பேசும நூல்கள் - குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு.

26.   காதலையும், வீரத்தையும் ஒருசேரப் பேசும் நூல் - நெடுநல்வாடை.

27.   பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறும் நூல்- மதுரைக்காஞ்சி.

28.   முட்டாச் சிறப்பின் பட்டினம் என்று பட்டினப்பாலை சொற்றொடர் குறிப்பிடும் நாடு- சோழ நாடு.

29.   தமிழர் ஆட்சி முறை, ஆடல், பாடல், கலைவளம் மற்றும் புகார் மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்புகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசும் வரலாற்று ஆவணமாகத் திகழும் நூல்  - சிலப்பதிகாரம்.

30.   சமய அற கருத்துகளையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் நூல்மணிமேகலை.

31.   எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வணிக தொடர்பு கொண்டு இருந்தன என்று கூறும் நூல் - எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்.

32.   பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகம் பற்றி குறிப்பிடுகின்ற நூல்கள்  .

          1.    ஸ்டிராபோ எழுதிய பூகோள நூல்.

          2.    பிளினி எழுதிய உயிரியல் நூல்.

          3.    தாலமி எழுதிய பூகோள நூல்.

33.   ஸ்டிராபோ - அகஸ்டஸின். சமகாலத்தவர்.

34.   சேர நாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும்-கண்ணூருக்கும் கொச்சிக்கும் இடையில் அமைந்திருந்தன .

35.   அரேபியாவிலிருந்து கிரேக்கத்திலிருந்து வணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் செறிந்து கிடந்தன என்று கூறும் நூல் -எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்.

36.   பொது ஆண்டிற்கும் முன்  5 நூற்றாண்டு முதல்- கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்-(தமிழ் சொற்கள் கிரேக்க மொழியில்)

37.   தமிழ்- கிரேக்கம்:

          1.    அரிசி - அரிஸா.

          2.    கருவா (இலவங்கம்) - கார்ப்பியன்.

          3.    இஞ்சிவேர் - சின்ஞிபோராஸ்.

          4.    பிப்பாலி - பெர்ப்பெரி.

38.   சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் .

          1.    துகிம் (மயில் தோகை).

          2.    ஆல்மக் (அகில் மரங்கள்).

39.   சேரநாட்டு துறைமுகப் பட்டினங்களை ரோமர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

          1.    தொண்டியை - திண்டிஸ்.

          2.    முசிறியை - முஸிரிஸ்.

          3.    பொற்காட்டை - பகரி.

          4.    குமரியை - கொமாரி.

40.   ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்-பொ..மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

41.   ஹிப்பாகிரேட்டஸ் மிளகை - இந்திய மருந்து என்றே குறிப்பிட்டுள்ளார்.

42.   தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்- மஸ்லின் துணி , ஏலக்காய் , இலவங்கம்.

43.   சங்க காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள்:

          1.    திருப்பரங்குன்றம்

          2.    நாகமலை

          3.    ஆனைமலை

          4.    கீழக்குயில்குடி

44.   பல்லவர்காலக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் :

          1.    மண்டகப்பட்டு

          2.    மகேந்திரவாடி

          3.    திருச்சி

          4.    பல்லாவரம், தளவானூர்.

45.   தமிழக கீழை கடற்கரை துறைமுகங்கள்:

          1.    கொற்கை - கொல்சாய்.

          2.    நாகப்பட்டினம் - நிகாமா.

          3.    காவிரிப்பூம்பட்டினம் - கமரா.

          4.    புதுச்சேரி - பொதுகே.

          5.    மரக்காணம்- சோபட்மா.

          6.    மசூலிப்பட்டினம்- மசோலியா.

46.   எந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் பல்லவர்கால வரலாற்றை அறிய முடிகிறது- காஞ்சி.

47.   எந்த சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு, சோழர் கால கிராம ஆட்சி முறையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது- பராந்தக சோழன்.

48.   கிராம உறுப்பினர்களின் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகியவற்றை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு.

49.   மக்களின் பண்பாடு, அரசியல் ,வாழ்க்கை முறை, நீதி, சமூகை உறவு, பொருளாதார நிலை போன்றவற்றை எடுத்துரைக்கும் கல்வெட்டுக்கள் :

          1.    தஞ்சை

          2.    திருவெற்றியூர்,

          3.    மேலப்பழுவூர்

          4.    சிதம்பரம்

          5.    திருவாரூர்

          6.    மதுரை

          7.    கன்னியாகுமரி

50.   கிராம ஊராட்சி சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க யாருடைய காலத்தில்  குடவோலை முறை பயன்படுத்தப்பட்டது - சோழர்.

51.   பாண்டியர் காலப் பட்டயங்கள்:

          1.    வேள்விக்குடி பட்டயம்.

          2.    தளவாய்புரச்செப்பேடு.

          3.    சின்னமனூர் சாசனம்.

          4.    சிவகாசி செப்பேடுகள்.

52.   சோழர் காலப் பட்டயங்கள் :

          1.    திருவாலங்காடு பட்டயங்கள்.

          2.    கரந்தை செப்பேடுகள்.

          3.    அன்பில் பட்டயங்கள்.

          4.    லெய்டன் பட்டயங்கள்.

53.   சங்ககாலத்தில் செப்பு நாணயங்கள் எந்த  வடிவமானவை - சதுர வடிவம் (ஒருபுறம் யானை, மறுபுறம் இரட்டை மீன்கள்).

54.   யவனர்கள் தமிழகத்தில் -மதுரை , புகார் -ஆகிய இடங்களிலிருந்து தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

55.   பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காணப்பட்ட சின்னங்கள் -இரட்டை மீன் , கப்பல் , நந்தி.

56.   முதலாம் ராஜராஜன் காலத்தில் வெளியிடப்பட்டநாணயங்களில், புலியும் அதன் அருகில் இரட்டை மீன் கொண்ட வடிவங்களும் காணப்படுகின்றன.

57.   இரண்டாம் வரகுணனின் தங்க நாணயம், கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகின்றது.

58.   மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடைய காலம் - முதலாம் மகேந்திரவர்மன்.  

59.   குகைக்கோயில்கள் காணப்படும் இடங்கள் :

          1.    திருப்பரங்குன்றம்

          2.    மண்டகப்பட்டு

          3.    மகேந்திரவாடி

          4.    மாமல்லபுரம்

          5.    சித்தன்னவாசல்

60.   பழந்தமிழகம் - வடக்கே வேங்கடம் முதல் தெற்கே  குமரி - வரை பரவி இருந்தது.

61.   வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து -தொல்காப்பியம் (பாயிரம்).

62.   குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலத்தை  - பாலை - என்றும் இலக்கியங்கள் பகுத்தன.

63.   மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்றாக இணையும் பகுதி- நீலகிரி.

64.   வினையே ஆடவர்க்கு உயிரே - குறுந்தொகை.

65.   தமிழை வளர்ப்பதற்காக புலவர் பலரையும் ஒருங்கிணைத்து தமிழ்ச் சங்கங்களை நிறுவியவர்கள் - பாண்டியர்கள்.

66.   முச்சங்கங்கள்:

          1.    முதற்சங்கம் - தென்மதுரை -காய்சினவழுதி - கடுங்கோன்.

          2.    இடைச்சங்கம் - கபடபுரம் - வேண்டேர்ச் செழியன் - முடத்திருமாறன்.

          3.    கடைச்சங்கம் - இன்றைய மதுரை -முடத்திருமாறன் - உக்கிரப் பெருவழுதி.

67.   குடும்ப வாழ்க்கைக்கு உரிய அடிப்படை பண்புகள் - மக்கட்பேறு விருந்தோம்பல் - பெரியோரை மதித்தல்.

68.   மூன்றாம் தமிழ் சங்ககாலநூல்கள் என்று கூறும் நூல்கள்- பத்துப்பாட்டு , எட்டுத்தொகை. (சங்க இலக்கியங்கள்)

69.   சங்கங்களைப் பற்றிய வரலாறு, நக்கீரர் எழுதிய எந்த உரையிலும் கூறப்பட்டுள்ளது- இறையனார் களவியல்.

70.   தமிழர்கள், தம் வாழ்க்கையை இரு கூறுகளாகப் பிரித்தனர் அவை -

          1.    அகம் (அன்பு - அகவாழ்வு).

          2.    புறம் (வீரம் - புற வாழ்வு).

71.   அகத்திணை ஐந்து வகைப்படும் அவை:

          1.    குறிஞ்சி

          2.    முல்லை

          3.    மருதம்

          4.    நெய்தல்

          5.    பாலை

72.   புறத்திணை ஏழு வகைப்படும் அவை :

          1.    குறிஞ்சி

          2.    முல்லை

          3.    மருதம்

          4.    நெய்தல்

          5.    பாலை

          6.    பெருந்திணை

          7.    கைக்கிளை

73.   அகத்திணை, புறத்திணை சார்ந்த செய்திகளை தொல்காப்பிய எந்த அதிகாரம் விரிவாக விளக்குகிறது - பொருளதிகாரம்.

74.   சிறுபொழுது, பெரும்பொழுது:

          1.    குறிஞ்சி - யாமம் - கூதிர், முன்பணி.

          2.    முல்லை - மாலைகார்.

          3.    மாருதம் - வைகறை - 6 பெரும்பொழுது.

          4.    நெய்தல் - எற்பாடு - 6 பெரும்பொழுது.

          5.    பாலை - நண்பகல் -  இளவேனில், முதுவேனில், பின்பனி.

75.   உரிப் பொருள்:

          1.    குறிஞ்சி - மலை - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

          2.    முல்லை -காடு  - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

          3.    மருதம் -  வயல் - ஊடலும் ஊடல் நிமித்தமும்.

          4.    நெய்தல் - கடல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

          5.    பாலை - மணல் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

76.   புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளை எத்தனை ஆக பகுத்துள்ளது - 12.

77.   எட்டுப் புறத்திணைகள் போருக்கான காரணங்களையும் போர் நடைபெறும் முறைகளையும் கூறுகின்றன அவை:

          1.    வெட்சி

          2.    கரந்தை

          3.    வஞ்சி

          4.    காஞ்சி

          5.    உழிஞை

          6.    நொச்சி

          7.    தும்பை

          8.    வாகை

78.   மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றை சிறப்பித்துப் பாடுவது - பாடாண் திணை.

79.   விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே - தொல்காப்பியம். (பொருளதிகாரம்).

80.   தொல்லோர் சிறப்பின்  என்று விருந்துக்கு அடை கொடுத்து கூறியவர்இளங்கோவடிகள்.

81.   விருந்தோம்பும் பண்பு கணவன், மனைவியின் தலையாய கடமை என  - சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

82.   விருந்து புறத்தா தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று. –திருக்குறள்.

83.   இரவில் வாயிற்கதவை அடைக்கும் முன்னர் விருந்தினர் யாரும் உளரா என பார்ப்பது குறித்து கூறும் சங்க இலக்கிய நூல் – நற்றிணை.

84.   மழவிடை பூட்டிய குழாஅய்த்டை நீரத் தேக்கிலை பகுக்கும் புல்லி நல் நாட்டு எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல் – அகநானூறு.

85.   பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறையை குறிப்பிடுகிற நூல்-மடைநூல்.

86.   அரசர்கள் பின்பற்ற வேண்டிய தலையாய பண்புகள்:

          1.    கல்வி

          2.    தறுகண்

          3.    இசை

          4.    கொடை

87.   ஆட்சி செய்த பகுதிகள்:

          1.    பேகன் - பழனி மலை.

          2.    பாரி - பறம்பு மலை.

          3.    திருமுடிக்காரி - மலையாமா நாடு.

          4.    ஆய் அண்டிரன் - பொதியமலை.

          5.    அதியமான் - தகடூர்.

          6.    நள்ளி - கண்டீர மலை.

          7.    வல்வில் ஓரி - கொல்லிமலை.

88.   மயிலுக்கு போர்வை தந்தவர் - பேகன்.

89.   முல்லைக்கு கொடி படர்வதற்கு தம் தேரையே தந்தவர் - பாரி.

90.   குதிரைகளை பரிசாக வழங்கியவர் - திருமுடிக்காரி.

91.   நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்தவர் -ஆய் அண்டிரன்.

92.   அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்தவர்-அதியமான்.

93.   மலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கியவர்நள்ளி.

94.   யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர் - வல்வில் ஓரி.

95.   பொன், செம்பு ஆகிய உலோகங்கள் மீது பொறிக்கப்படும் எழுத்துக்கள்பட்டயங்கள்.

96.   உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என தொல்காப்பியம் கூறுகிறது.

97.   நல்ல வழிமுறைகளை பின்பற்றி பண்பாட்டில் சிறந்து விளங்குபவர்களே உயர்ந்தவர்கள்.

98.   தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை-7.

99.   புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தை பற்றி கூறுவதுபுறத்திணை.

100. மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலியவற்றை சிறப்பித்து பாடுவது- பாடான்திணை.

101. பொருந்தாக் காதலை - பெருந்திணை. என்று கூறுவர்.

102. பொ..மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்ஹிப்பாகிரேட்டஸ்.

103. ஆன்மா எதிலிருந்து வந்தததோ அதிலே சேர – லயமாகுதல்.

104. ஆன்மா லயமாகும் இடம் – கோயில்கள்.

105. தேவார திருவாசக பாடல்கள் எங்கு பாடப்படும் – சிவன்கோயில்.

106. வைணவ கோயில்களில் பாடப்படும் - நாலாயிர திவவிய பிரபந்தம்.

107. மழை புயல் வெள்ள காலங்களில் மக்களின் புகலிடம் – திருக்கோயில்கள்.

108. சமுதாய புகலிடமாகவும் ஊர் பணி மன்றங்களாகவும் செயல்படுவது- கோயில்கள்.

109. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என பாடியவர் – ஒளவையார்.

110. மொழி  முன்பு தோன்றியது – ஓவியம்.

111. ஒவிய எழுத்துக்கள் இன்றளவும் காணப்படும் மொழிகள் - ஜப்பானிய மற்றும் சீன மொழிகள்.

112. இசையுடன் கூடிய கூத்து – நாட்டியம்.

113. கூத்துவகைகளை இயம்புவது – சிலப்பதிகாரம்.

114. கட்புலனாகும் இன்பத்தை தருவது – ஆடற்கலை.

115. கைவழி கண்களும் கண்வழி மனமும் செல்ல ஆடுதல் - ஆடலின் நூட்பம்.

116. நடனமகள் – விறலி.

117. நடனமகன் – கூத்தன்.

118. முருகனை வழிப்பட்டு ஆடுவது – குன்றக்குறவை.

119. திருமாலை வழிப்பட்டு ஆடுவது - ஆய்ச்சியர் குரவை.

120. இலக்கியங்களில் காணப்படும் கூத்துக்கள்:

          1.    வள்ளிக்கூதது .

          2.    குன்ற குரவை .

          3.    ஆய்ச்சியர் குரவை.

          4.    துணுங்கை கூத்து .

          5.    குணலை கூத்து.

121. சிவன் ஆடுகின்ற கூத்து – தாண்டவம்.

122. ஆடிப்பெருக்கின் மூலமாக சிறப்பிக்க படும் ஆறு - காவிரி ஆறு.

123. தமிழக வீர விளையாட்டுக்கள் - விற்போர் மற்றும் மற்போர்.

124. தமிழக பெண்குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்கள் -அம்மானை ,ஊசல்.

125. ஆண்குழந்தை விளையாடும் விளையாட்டுக்கள் - சிற்றில் ,சிறுதேர், சிறுபறை.

126. ஜல்லிகட்டின் மற்றொரு பெயர் - ஏறு தழுவுதல்.

127. தமிழர்கள் உலகிற்கு வழங்கிய மருத்துவம் - சித்த மருத்து.

128. தமிழ்நாட்டின் நடனம் – பரதநாட்டியம்.

129. பரதநாட்டியத்தில் உள்ள கை அசைவுகள் – ஹஸ்தம். கை என்பதன் சமஸ்கிருத சொல் – ஹஸ்தம்.

130. பரதநாட்டியத்தில் கை அசைவுகள்:

          1.    ஒற்றைக்கை (இணையாக்கை).

          2.    இரட்டைக்கை (இணைந்தகை.