11TH- STD - மராத்தியர்-

1.    தமிழகத்தில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்தியவர்வெங்கோஜி - 1674 - 1832 .

2.    மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி- கொங்கணம்.

3.    மராத்தியர்களின்  வலிமையாக திகழ்ந்தது - கொரில்லா போர்.

4.    மராத்தியர் காலத்தில் பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் -துக்காராம், ராம்தாஸ்,ஏகநாதர்.

5.    மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை. துறவிகள் பெரும்பாலும்  சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் - நீதிபதி ரானடே.

6.    மராத்திய அரசுக்கு தலைநகராக விளங்கியது - ராய்கர்.

7.    சிவாஜி பிறந்த ஆண்டு  - 1627.

8.    சிவாஜி பிறந்த இடம்  - ஷிவ்னர்.

9.    சிவாஜி தந்தை  - ஷாஜி போன்ஸ்லே.

10.   சிவாஜி தாய்  - ஜீஜாபாய்.

11.   சிவாஜி பாதுகாவலர்  - தாதாஜி கொண்டதேவ்.

12.   சிவாஜி குரு - ராம்தாஸ்.

13.   சிவாஜி தாய் வழி  - தேவகிரி ஆண்ட யாதவ வழித்தோன்றல்.

14.   சிவாஜி தந்தை வழி - மேவார் ஆண்ட சிசோடியாக்கள் வழித்தோன்றல்.

15.   அகமது ஷாவின் அமைச்சராகவும் முன்னால் அடிமையாகவும் இருந்தவர் - மாலிக் அம்பர் .

16.   1646 ல் சிவாஜி  பீஜப்பூர் சுல்தானிடம்  இருந்து கைப்பற்றிய கோட்டையை - தோர்னா.

17.   தாதாஜி கொண்டதேவ் மறைந்த ஆண்டு -1647.

18.   எந்த இடத்தை சிவாஜி கைப்பற்றிய பின்பு மராத்தியர் மத்தியில் பிரபலம் அடைந்தார் - ஜாவ்லி.

19.   ராணுவ செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்த ஆண்டு - 1469-1655.

20.   1659 ல் பீஜப்பூர் சுல்தான் சிவாஜியை வீழ்த்த யாரை அனுப்பினார்-அஃப்சல்கான்.

21.   மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக சூளுரைத்தவர்- அஃப்சல்கான்.

22.   ஔரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறிய ஆண்டு - 1658.

23.   ஔரங்கசீப் சிவாஜியை அடக்க யாரை அனுப்பினார் - செயிஷ்டகான்.

24.   சூரத் நகரை சிவாஜி சூறையாடிய ஆண்டு -1664.

25.   சிவாஜியை அடக்க ஔரங்கசீப் இரண்டாவது முறையாக யாரை அனுப்பினார் - ராஜா ஜெய்சிங்.

26.   சிவாஜிக்கும் ஜெய்சிங்க்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1665 ஜூன் - 11.

27.   சிவாஜி ராய்கர் கோட்டையில் சத்திரபதி பட்டத்துடன்  அரியணை ஏறிய ஆண்டு - 1674 ஜூன் - 6.

28.   சிவாஜி 53 - வயதில் மறைந்த ஆண்டு -1680.

29.   ஒளரங்கசீப் மகன் - இரண்டாம் அக்பர்.

30.   இரண்டாம் அக்பருக்கு பாதுகாப்பு கொடுத்தவர் - சாம்பாஜி.

31.   1708 - ஷாகு மராத்திய அரசரான போது அவருக்கு ஆதரவாக இருந்தவர் - பாலாஜி விஸ்வநாத்.

32.   ஷாகு - பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வாவாக நியமித்த ஆண்டு -1713.

33.   சிவாஜி அரசவையில் எட்டு அமைச்சர்கள் கொண்ட ஆலோசனை அவை -அஷ்டபிரதான்.

34.   சிவாஜி தனது அரசை எத்தனை மாகாணங்களாக பிரித்தார் - 4.

35.   மாகாணங்கள் பிராந்த் எனப்படும் - பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன.

36.   மராத்தியர் ஆட்சியில் மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக எத்தனை சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது - 30%. பின்னர் 40%. நிர்ணயிக்கப்பட்டது.

37.   சிவாஜி பகுதிகளிலிருந்து வசூலித்த முக்கிய வருவாய்கள்- சௌத், சர்தேஷ்முகி.

          1.    சௌத்         - 1/4 பங்கு வரி.

          2.    சர்தேஷ்முகி - தகுதியின் காரணமாக கூடுதல் வருவாயில் - 10 %.

38.   காலாட்படையின் இரண்டு பிரிவு - ரெஜிமெண்டுகள் ,பிரிகேடுகள்.

39.   9 - வீரர்கள் கொண்ட சிறிய படை பிரிவுக்கு தலைவர் - நாயக் .

40.   குதிரைப்படையின் இரண்டு பிரிவுகள் - பர்கிர்கள், ஷைலேதார்கள்.

41.   குதிரைப் படையின் தலைமைத் தளபதி - சாரிநௌபத்.

42.   கிரிமினல் வழக்குகளை விசாரித்தவர் - பட்டேல்.

43.   சிவில் வழக்குகளை தீர்த்து வைத்தவர் - கொத்வால்.

44.   மேல்முறையீடுகளின் தலைமை நீதிபதி - நியாயதேஷ்.

45.   இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் - ஹாஜிர்மஜ்லிம்.

46.   பேஷ்வாக்களின் ஆட்சி -1713 - 1818.

47.   முதல் பேஷ்வா: பாலாஜி விஸ்வநாத்.

          1.    பாலாஜி விஸ்வநாத் - 1713 - 1720.

          2.    முதலாம் பாஜிராவ் -1720 - 1740.

          3.    பாலாஜி பாஜிராவ் -1740 - 1761.

48.   பேஷ்வா என்ற பாரசீகம் சொல்லின் பொருள் - முதன்மையான () பிரதம அமைச்சர்.

49.   கொங்கணம், கண்டேரி ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டியவர்- பாலாஜி விஸ்வநாத்.

50.   பேஷ்வாவுக்கு தலைமை தளபதியாக விளங்கியவர் - திரிம்பக்ராவ்.

51.   தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் போர்த்துகீசியர் இடமிருந்து மராத்தியர் கைப்பற்றிய ஆண்டு- 1738.

52.   1739 -ல் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ஆட்சியாளர் - சாஹூ இடம் உதவி கோரினார் .

53.   ஆப்கானிஸ்தானில் துராணி சாம்ராஜ்யத்தை நிறுவியவர்-அகமது ஷா அப்தாலி.

54.   பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு- 1757. சிராஜ் உத் தெளலா - ஆங்கிலேயர்.

55.   ஆங்கில அரசு காலூன்ற வழிவகுத்த போர்:

          1.    முதலாம் பானிபட் போர் -1526. பாபர் -  இப்ராஹிம் லோடி.

          2.    இரண்டாம் பானிபட் போர் -1556. அக்பர் -  ஹெமு.

          3.    மூன்றாம் பானிபட் போர் -1761 ஜனவரி 14. சதாசிவ ராவ் - அகமது ஷா அப்தாலி.

          4.    உத்கிர் போர் -1760.

56.   நாதிர்ஷா படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு - 1739.

57.   கோகினூர் வைரம் மயிலாசனம் ஆகியவற்றை கைப்பற்றி சென்றவர் - நாதிர்ஷா.

58.   அகமது ஷா அப்தாலி தில்லியை விட்டு வெளியேறுமுன் தனது பிரதிநிதியாக யாரை நியமனம் செய்தார் - மீர் பக்ஷி.

59.   கடைசி பேஷ்வா- இரண்டாம் பாஜிராவ்.

60.   முதலாவது ஆங்கிலேய - மராத்தியப் போர் -1775 -1782 சால்பை உடன்படிக்கை -1782.

61.   இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய போர்-1803 – 1806 பஸ்ஸின் உடன்படிக்கை - 1802.

62.   மூன்றாம் ஆங்கிலேய-மராத்திய போர் -1817 – 1819  பூனா ஒப்பந்தம் - 1817.

63.   பேஷ்வாக்களின் கீழ் பெரிய மாகாணங்கள் - சர் - சுபாஷ்தார்கள் என்றழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் கீழ் இருந்தன.

64.   மாவட்டங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள் - மம்லத்தார் & காமாவிஸ்தார்.

65.   மாவட்ட அளவில் கணக்குகளை கவனித்துக் கொண்ட அதிகாரிகள்- தேஷ்முக் & தேஷ்பாண்டே.

66.   மராத்தியர் ஆட்சியில் அதிகாரிகளிடமிருந்து என்ன பெயரில் முன்பணம் வசூலிக்கப்பட்டது - ரசத்.

67.   நகரங்களிலும் மாநகரங்களிலும் தலைமை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டனர் - கொத்வால்.

68.   சௌத் வரி பிரிக்கப்பட்ட விதம் - 100%.

          1.    25  %     - ஆட்சியாளருக்கு.

          2.    66 %      - படைகளை பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு.

          3.    6 %        - பண்டிட் சச்சீவுக்கு (பிராமணர்).

          4.    3 %        - வரிவசூல் செய்வோருக்கு.

69.   வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்கு சமமான எந்த வரிகள் வசூலிக்கப்பட்டது - குர்ஜா பட்டி , தஸ்தி பட்டி.

70.   காவலர்களாக கிராமத்தில் பணியில் ஈடுபட்டவர்கள்- மகர்கள்.

71.   நீதி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் - கொத்வால்.

72.   மராத்திய ராணுவத்தின் முக்கிய பலம் - குதிரைப்படை.

73.   சிவாஜி ஆட்சி காலத்தில் குதிரைப்படையின் தலைமைத் தளபதி - சாரிநெளபத்.

74.   மராத்தியர் ஆட்சியில் முக்கிய வருவாய் - நில வருவாய்.

75.   மராத்திய ஆயுதப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் -போர்த்துக்கீசியர்,இந்தியக் கிறித்துவர்கள்,ஆங்கிலேயர்கள்.

76.   கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படை தளங்களை கட்டியவர் -பாலாஜி விஸ்வநாத்.

77.   நயங்காரா என்ற அமைப்பை உருவாக்கியவர்கிருஷ்ணதேவராயர்- 1509 – 1529.

78.   தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மிகப்பெரிய நயங்காராக்கள்- செஞ்சி,தஞ்சாவூர்,மதுரை.

79.   தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சி முடிவுற்ற ஆண்டு - 1673.

80.   தஞ்சாவூரில் மராத்தியர் ஆட்சி துவங்கிய ஆண்டு- 1676. வெங்கோஜி - தன்னை அரசராக அறிவித்தார்

81.   மராத்திய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ஆட்சியாளர்- தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி.

82.   இரண்டாம் சரபோஜி ஜெர்மானிய சமயப் பரப்பு குழுவை சேர்ந்த  யாரிடம் கல்வி பயின்றார் -ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ்.

83.   மேற்கத்திய அறிவியல் மற்றும் மருத்துவத்தை கையாளும் மருத்துவராக திகழ்ந்தவர் - இரண்டாம் சரபோஜி.

84.   இரண்டாம் சரபோஜி கல்வித் துறையின் முன்னோடியாக யாரை கருதினார் -சி.எஸ்.ஜான்.

85.   1803 - தஞ்சாவூரில் கிறித்துவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீன பொது பள்ளியை நிறுவியவர் - இரண்டாம் சரபோஜி.

86.   புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக நவவித்யா முறையை அரசவை நடத்திய பள்ளிகளில் அறிமுகம் செய்தவர் - இரண்டாம் சரபோஜி.

87.   முக்தாம்பாள் சத்திரம் நிறுவப்பட்ட ஆண்டு-1803. சரபோஜியின் விருப்பமான அன்ன சத்திரம்.

88.   மதபரப்பாளர்கள் கண்ணந்தன்குடியில் நடத்திய ஏழை கிருத்துவ மாணவர்களுக்கான பள்ளியை ஆதரித்தவர்- இரண்டாம் சரபோஜி.

89.   மனிதர்களுக்காகவும்,விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்தகளைத் தயாரிக்க இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்ட அமைப்பு - தன்வந்திரி மஹால்.

90.   18 - தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தை உருவாக்கியவர் - இரண்டாம் சரபோஜி.

91.   பாரம்பரிய இந்தியக் கலைகளான நடனம் மற்றும் இசையை ஆதரிப்பதில் பெரும் கொடையாக விளங்கியவர்-இரண்டாம் சரபோஜி.

92.   கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக் கருவிகளான கிளாரினெட் ,வயலின் ஆகிய கருவிகளை அறிமுகம் செய்தவர் -இரண்டாம் சரபோஜி.

93.   இரண்டாம் சரபோஜி தமிழ்நாட்டின் முதலாவது வன உயிரியல் பூங்காவை எங்கு அமைத்தார்-தஞ்சாவூர்.

94.   40 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சரபோஜி மரணமடைந்த ஆண்டு - 1832 மார்ச் 7 .

95.   சரபோஜி- இறுதியாத்திரையில் 90 ஆயிரம் பேருக்கு அதிகமாக கலந்து கொண்டனர்.

96.   முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இவரை தவிர எவரிடமும் அது இளவரசர் தன்மையோடு அலங்கரித்தது இல்லை - பிஷப் ஹீபர்.

97.   இரண்டாவது ஆங்கிலேய-மராத்தியப் போரின்போது ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்தவர்-வெல்லஸ்லி பிரபு.

98.   சிவாஜியின் ராணுவ அமைப்பில் மிக சிறிய படை அலகின் தலைவராக இருந்தவர் - நாயக்.

99.   சிவாஜி ஆட்சி காலத்தில் குதிரைப்படையின் தலைமைத் தளபதிசாரிநெளபத்.

100. மாவட்டங்களின் பேஷ்வாக்களின் பிரதிநிதிகள்- மம்லத்தூர் காமாவிஸ்தார்.

101. நகரங்களிலும் மாநரங்களிலம் தலைமை அதிகாரி  -கொத்வால் .

102. ஆளுநர் மன்றோவின் கல்விக் கணக்கெடுப்புக்காக அறிக்கை உருவாக்கப்பட்ட ஆண்டு- 1823 .

103. தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக 21-இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன.

104. முதலாம் சரபோஜி ஆட்சி  -1712 முதல் 1728 வரை 16 ஆண்டுகள்

105. பிரதாப் சிங் ஆட்சி - 1739 முதல் 1763 வரை

106. துல்ஜாஜி ஆட்சியில் அமர்ந்த ஆண்டு- 1787.

107. நாணயத் தொழிற்சாலைகளில் முறைகேடுகள் இருந்ததால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்ட ஆண்டு - 1760.

108. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர் - நாதிர் ஷா.

109. முக்ராக்சஸ்யா என்ற புத்தகத்தை எழுதியவர் - இரண்டாம் சரபோஜி.

110. வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்மராத்தியர்.

111. சிவாஜியின் குருராம்தாஸ்.

112. புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் - ஜெய்சிங்க்கும் இடையே கையெழுத்தானது.

113. சிவாஜியின் ஆலோசனை சபை - அஷ்டபிரதானம் என்று அழைக்கப்பட்டது

114. மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் 1/4 செளத் என வசூலிக்கப்பட்டது.

115. சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவர்நாயக்

116. மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா - முதலாம் பாஜி ராவ்.

117. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர் - நாதிர் ஷா.

118. சால்பை உடன்படிக்கை - உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ-மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

119. இரண்டாவது ஆங்கிலோ-மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர்-ஜெனரலாக இருந்தவர் - வெல்லெஸ்லி பிரபு.

120. கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தவர்-பட்டேல்.

121. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர்- பாலாஜி விஸ்வநாத்.

122. நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் - கிருஷ்ண தேவராயர்.

123. மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டதுதன்வந்திரி மஹால்.

124. இரண்டாம் சரபோஜி எழுதிய நூல்கள் -குமாரசம்பவ சம்பு,தேவேந்திர குறவஞ்சி, முத்ரராக்சஸ்யா.

125. பொருத்துக:

          1.    அமத்யா  - அரசின் அனைத்து பொது கணக்குகள்.

          2.    சுமந்த்  - போர் மற்றும் அமைதி.

          3.    பண்டிட் ராவ்    - பொது ஒழுக்க நடைமுறைகள்.

          4.    வாக்கிய நாவிஸ் - அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்.

          5.    சிவாஜி - மலை எலி

          6.    தைமுர் ஷா - லாகூரின் வைஸ்ராய்

          7.    தேசிங்கு   - செஞ்சி