11TH- STD - பிற்கால சோழர்கள் , பாண்டியர்கள் -
1.
பெ.ஆ. 859 இல் பிற்கால சோழ அரசை நிறுவியவர்- விஜயாலய சோழன்.
2.
விஜயாலயனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் யாருடைய மரபில் வந்தவர்கள் - கரிகால சோழன்.
3.
நாட்டின் எல்லையையும் ஆட்சி முறையின் அடித்தளத்தை விரிவுபடுத்தியவர் - முதலாம் பராந்தகன்.
4.
சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்கள் :
1. கலிங்கத்து பரணி
2. குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ்
3. மூவருலா.
5.
சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்கள் : நன்னூல் , நேமிநாதம் , வீரசோழியம்.
6.
சோழர் காலத்தில் எழுதப்பட்ட பிற நூல்கள்- பாண்டிக்கோவை, தக்காயகப்பரணி.
7.
சோழ அரசு மரபின் கீழ் இருந்த ஆட்சி பகுதி - சோனாடு (அ) சோழ நாடு.
8.
சோழ அரசின் மையப்பகுதி - காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி.
9.
சோழமண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் திரிபு அடைந்தது- கோரமண்டல்.
10.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்திய பகுதி -மும்முடிச்சோழ மண்டலம்.
11.
சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் - முதலாம் ராஜராஜன்.
12.
மாலத்தீவு, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ராஜராஜன் புதிதாக வென்ற பகுதியில் ஒரு கோயில் கட்ட ஆணை பிறப்பித்தார் அக்கோவில் - சிவ தேவாலே. சிவாலயம்.
13.
முதலாம் ராஜராஜன் மகன் - முதலாம் ராஜேந்திரன்.
14.
ராஜராஜனால் மகாதிட்டா என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில்-இராஜராஜேஸ்வரம்.
15.
முதலாம் ராஜேந்திரனால் வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கட்டப்பட்டது -கங்கைகொண்ட சோழபுரம்.
16.
ஸ்ரீ விஜயா மீது தாக்குதல் தொடுத்த படை - ராஜேந்திரனின் கடற்படை
17.
குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா யாரால் தோற்கடிக்கப்பட்டது - முதலாம் ராஜேந்திரன்.
18.
கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர் - முதலாம் ராஜேந்திரன்.
19.
மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜராஜன் போர்தொடுத்த ஆண்டு-1003.
20.
மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜேந்திரன் போர்தொடுத்த ஆண்டு-1009.
21.
சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணி அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலை உள்ள இடம் - கும்பகோணம்.
22.
முதலாம் பராந்தகன் சூடிக்கொண்ட பட்டம் - மதுரை கொண்டான்.
23.
முதலாம் குலோத்துங்க சோழன் சூடிக்கொண்ட பட்டம் - சுங்கம் தவிர்த்த சோழன்
24.
முதலாம் ராஜராஜ சோழன் சூடிக்கொண்ட பட்டங்கள் - மும்முடி சோழன் , ஜெயம் கொண்டான், சிவபாதசேகரன் , அருண்மொழி , ராஜகேசரி.
25. முதலாம் ராஜேந்திரன் சூடிக்கொண்ட பட்டங்கள்- முடிகொண்ட சோழன் , கங்கை கொண்டான் , கடாரம் கொண்டான்.
26.
கடவுளுக்கு இணையாகப் பெருமான் (அ) பெருமகன், உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் ,என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
27.
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய ராஜ குருக்களாக யாரை கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்- ஈசான், சிவன்,சர்வ சிவன்.
28.
பிற்காலத்தில் சோழ அரசாகள் சூடிக்கொண்ட பட்டங்கள்- சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்கரவர்த்தி (மூன்று உலகங்களுக்கானப் பேரரசர்) .
29.
சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாக அளித்த நிலப்பரப்பு-பிரம்மதேயம் , சதுர்வேதி மங்கலம்.
30.
சோழரிடம் இருந்த போர் யானைகள்- 60000.
31.
படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமை- படைப்பற்று.
32.
படைப் பிரிவின் தலைவர்- நயகம் .(படைமுதலி)
33.
படைத்தளபதி -சேனாதிபதி. (தண்டநாயகம்)
34.
சோழர் காலத்தில் இருந்த பல்வேறு உள்ளாட்சி குழுக்கள் - ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார்.
35.
நில உடைமை சார்ந்தோரின் குடியிருப்பு - ஊர் .வேளாண்வகை கிராமம் என அழைக்கப்பட்டது.
36.
பிராமணர்களின் குடியிருப்பு - பிரம்மதேயம்.
37.
முதலாம் இராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம்- மாநகரம் என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
38.
உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காக சுங்கவரியை நீக்கிய சோழ அரசன் - முதலாம் குலோத்துங்க சோழன்.
39.
சுங்கம் தவிர்த்த சோழன் -முதலாம் குலோத்துங்க சோழன்.
40. வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்கள் மன்றம் -நாட்டார்.
41.
நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் அளிக்கப்பட்ட பட்டங்கள்:
1. ஆசுடையான் - நில உரிமையாளர்.
2. அரையன் - வழி நடத்துவோர்.
3. கிழவன் - தலைவர்.
42.
நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணபடுத்தியவர்கள் - நாட்டுக் கணக்கு , நாட்டு வையவன்.
43.
உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல்:
1. கிராமம் - 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
2. தேர்தலில் போட்டியிட வயது - 35 முதல் 75 வயது வரை இருக்க வேண்டும்.
3. வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
44.
சோழர் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்திற்கு என தனியாக ஒரு துறை என்ன பெயரில் இயங்கியது- புறவு வரி திணைக்களம். தலைவர் - புறவு வரித்திணைக்கள நாயகம்
45.
சோழர் காலத்தில் நில அளவிட்டு பணியில் ஈடுபட்டவர்கள் -நாடு வகை செய்கிற.
46.
சோழர் காலத்தில் நில அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்ட அலகுகள் - குழி, மா, வேலி,பட்டி, பாடகம்.
47.
சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள்- இறை,காணிகடன்,இறை கட்டின காணிகடன்,கடமை.
48.
சோழர் காலத்தில் விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி -இறை கட்டின நெல்லு.
49.
நீர் வடக்கு தெற்காக ஓடுவது- வடி.
50.
நீர் கிழக்கு மேற்காக ஓடுவது -வாய்க்கால்.
51.
வரியாக வகசூலிக்கப்பட்ட நெல் - களம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்பட்டது.
52.
ஒரு களம் என்பது- 28 கிலோ .
53.
முதலாம் ராஜராஜன் வரிவசூல் முறைப்படுத்தினார்.
54.
ஒரு வேலி நிலத்திற்கு -100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது.
55.
ஒரு வேலி- 6.5 ஏக்கர்.
56. சோழர் காலத்தில் கால்வாய்களுக்கு அரசர்கள் , அரசிகள் கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தன:
1. உத்தம சோழ வாய்க்கால்.
2. பஞ்சவன் மாதேவி வாய்க்கால்.
3. கணபதி வாய்க்கால்.
57.
சோழர் காலத்தில் கிராம சபைகள் பாசனக் குளங்களை பழுதுபார்க்க வசூலிக்கப்பட்ட வரி - ஏரி ஆயம்.
58.
இராஜராஜ சோழனுடைய ஆசான்- கரூர் தேவன்.
59.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அங்குள்ள ஏரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க 16 மைல் நீளமுள்ள ஒரு உறுதியான கட்டுமானத்தை எழுப்பியுள்ளார்.
60.
அதை ராஜேந்திர சோழன் "ஜலமய ஜெயஸ்தம்பம்" என்று குறிப்பிடுகிறார்.
61.
100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்த அரேபிய வரலாற்றாசிரியரான -அல்பெரூனி இக்கட்டுமான அமைப்பை கண்டு வியந்தார்.
62.
நிலக்கொடை அளிக்கப்பட்ட கோயில்கள் -தேவதானம்.
63.
சோழர் காலத்தில் பிரபலம் அடைந்த புராணக் கடவுளர்கள் – சிவன்,விஷ்ணு.
64.
சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் யாரால் இயற்றப்பட்டது -மெய்கண்டர்.
65.
சோழ அரசர்கள் - தீவிர சைவர்கள் .
66.
முதலாம் பராந்தகனும் ,உத்தமச் சோழனும் - சைவ சமயத்தை வளர்க்க நிதி உதவியும் நில கொடையையும் அளித்தார்கள்.
67.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் முதலாம் இராஜராஜனும் அவருடைய மனைவியும் யாரை வணங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது - சிவன்.
68.
ராஜராஜனுடைய பட்டங்களில் ஒன்று - சிவபாதசேகரன். சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது பொருள்.
69.
சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.
70.
ஆடல்வல்லான் - நடராஜன்.
71.
விண்ணப்பம் செய்வோர் - கோயில்களில் பாடல்களைப் பாடுவோர்.
72.
பள்ளிப்படை (கோவில்) - அரசர்கள் புதைக்கப்படும் இடங்கள்.
73.
கோயிரமர் , கோயில் கணக்கு - கோயில் கணக்காளர்.
74.
தேவகன்னி - கடவுளின் பிரதிநிதி.
75.
ஸ்ரீ வைஷ்ணவர், கண்டேசர் - கோயில் மேலாளர்.
76.
சங்கர பாடியார் - எண்ணெய் ஆட்டுபவர்கள்
77.
கங்கைகொண்ட சோழபுரம் - முதலாம் ராஜேந்திரன்.
78.
சோழ கங்கம் என்ற பாசன ஏரி - முதலாம் ராஜேந்திரன்.
79.
பிரகதீஸ்வரர் கோவில் கருவறை மீது உள்ள விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது
80.
தாராசுரம் கோவில் - இரண்டாம் இராஜராஜன்.
81.
கீழப்பழுவூர் , திருவெற்றியூர் கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ள நடன சிற்ப ஓவியங்கள் - குடக்கூத்து ,சாக்கைக்கூத்து.
82.
சோழர் காலத்திலிருந்து வணிக குழுக்கள்:
1. அஞ்சுவண்ணத்தார் - கடல்வழி வணிகர்கள்.
2. மணிக்கிராமத்தார் - உள்நாட்டு வணிகம் செய்தவர்கள்.
3. ஐநூற்றுவர் , திசை ஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர்.
83.
வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி எங்கு உள்ளது - புதுக்கோட்டை.
84.
ஆற்காடு பகுதியிலுள்ள எண்ணயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் - முதலாம் ராஜேந்திரன். 340 மாணவர்கள், 14 ஆசிரியர்கள்.
85. இரு சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் இடம் :
1. 1048 - புதுச்சேரி.
2. 1061 - திருப்புவனம்.
86.
பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை கைப்பற்றி ஆண்டு- 1264.
87.
1279 - இல் யார் கடைசி சோழ அரசரான மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
88.
உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்.
89.
திருவாலங்காடு செப்பேடுகள்-முதலாம் இராஜராஜ சோழன்.
90.
கரந்தைச் செப்பேடு- முதலாம் ராஜேந்திர சோழன்.
91.
ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கினர்- சம்புவராயர்கள்.
92.
13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பாண்டியர் ஆட்சியின் இறுதி வரை சம்புவராயர்கள் - பாலாறு பகுதியில் அரசியல் செல்வாக்குடன் விளங்கினர்.
93.
சம்புவராயர்களின் அரசு - ராஜ கம்பீர ராஜ்ஜியம் எனப்பட்டது.
94.
சம்புவராயர்கள் தலைநகரம் - படைவீட்டில் அமைந்திருந்தது.
95.
சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணன் சம்புவராயன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்து பின்னாளில் விஜயநகரத்தின் குமார கம்பணரால் தோற்கடிக்கப்பட்டார்.
96. குமார கம்பணர் - தெற்குநோக்கி மதுரை வரை படையெடுத்துச் சென்றார் குமார கம்பணர் மதுரை சுல்தானைத் தோற்கடித்து முழு வெற்றி பெற்றார்.
பாண்டியர்கள்
97.
அசோகர் தன் கல்வெட்டுகளில் யாரை தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களாக குறிப்பிடுகிறார் - சோழர் , சேரர் ,பாண்டியர் ,சத்திய புத்திர்.
98.
பாண்டியர்களின் தொடக்ககால தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது- கொற்கை.
99.
பாண்டியர்களின் தொடக்க கால கல்வெட்டுக்களில் மதுரை- மடிரை .
100.
தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையை - கூடல்.
101.
பாண்டி நாட்டை சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ள சொல் - கூடல்.
102.
கூடல் பாண்டியரின் தலைநகரமாக குறிப்பிடும் நூல்கள் - பத்துப்பாட்டு, பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி.
103.
கூடல் - எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது
104.
பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 3 நூற்றாண்டு வரை - சங்ககாலப் பாண்டியர் வரலாறு.
105.
பிற்கால பாண்டியர் குறித்த செய்திகளை வழங்கும் இலக்கியங்கள்- மதுரை தல வரலாறு, பாண்டிய கோவை, மதுரை திருப்பணி மாலை.
106.
நெடுஞ்சடையான் - வேள்விக்குடி மானியம்.
107.
எந்த பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக்குறிப்புகள் அக்காலகட்ட அரசியல் , சமூக , பண்பாட்டு வளர்ச்சியை குறித்து உதவுகின்றன-மார்கோபோலோ, வாசஃப், இபன்பதூதா.
108. எந்த நூலில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது:
1. இறையனார் அகப்பொருள்
2. திருவிளையாடல் புராணம்
3. பெரியபுராணம்
109.
மணிமேகலையை இயற்றிய சீத்தலை சாத்தனார் – மதுரை.
110.
பாண்டியரின் ஆட்சி பகுதி -பாண்டி மண்டலம், தென் மண்டலம் ,பாண்டியநாடு.
111.
பாண்டியர்களின் ஆட்சி எல்லைகள்:
1. வட எல்லை - புதுக்கோட்டை வழியாக ஓடும் வெள்ளாறு.
2. தென் எல்லை -இந்தியப் பெருங்கடல்.
3. மேற்கு எல்லை -மேற்கு தொடர்ச்சி மலைகள்.
4. கிழக்கு எல்லை -வங்காள விரிகுடா.
112.
களப்பிரர்களிடமிருந்து பாண்டியர் பகுதியை கடுங்கோன் மீட்டதாக செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
113.
சேரர்களை வென்றதால் சேந்தன் என்பவர் வானவன் என்ற பட்டம் பெற்றார் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
114.
தொடக்க கால பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி மாறவர்மன் 642 இல் பதவி ஏற்றார் என்பதை - வைகை ஆற்றுப் பகுதி கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கூறுகின்றன.
115.
சமணர்களைக் கழுவேற்றிய கூன்பாண்டியனே - அரிகேசரி மாறவர்மன் என்று அடையாளம் காணப்படுகிறார்.
116.
சைவத் துறவியான திருஞானசம்பந்தர் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு யாரை மாற்றினார் -கூன்பாண்டியன்/ அரிகேசரி மாறவர்மன்.
117.
புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர்-ஜதில பராந்தக நெடுஞ்சடையன்/ முதலாம் வரகுணன்
118.
பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவர்- முதலாம் வரகுணன்.
119.
பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் பகுதிகளுக்கு விரிவுபடுத்தியவர்- முதலாம் வரகுணன்.
120.
பல விஷ்ணு கோயில்களை கட்டியவர் - முதலாம் வரகுணன்.
121.
இலங்கைக்கு படையெடுத்து அங்கு தன் அதிகாரத்தை நிலை நிறுத்தியவர் - ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் .
122.
மூன்றாம் நந்திவர்மனிடம் தோற்றவர்- ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் .
123.
திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டவர் -இரண்டாம் வரகுணன்.
124.
1190 -இல் சடையவர்மன் ஸ்ரீவேல்லபன் முதலாம் குலோத்துங்கன் னுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு பாண்டிய நாட்டில் ஆட்சியை துவக்கினார்.
125.
சுந்தரசோழபுரம் என்ற வேளாண் குடியிருப்பு பகுதியை "சுந்தர சோழ சதுர்வேதி மங்கலம்" என்று பெயர் மாற்றி இறையிலியாக பிராமணர்களுக்கு வழங்கியவர்- சடையவர்மன் ஸ்ரீவல்லபன்.
126.
13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வம் மிக்க அரச மரபினராக மாறினார்கள்.
127.
பாண்டியர்களின் தலைநகராக இருந்தது- மதுரை.
128.
பாண்டியர்களின் பெரும் துறைமுகமாக விளங்கியது- காயல்.
129.
வெனிஸைச் சேர்ந்த புகழ்பற்ற பயணி - 1288லும் 1293 லும் இருமுறை காயலுக்கு வந்துள்ளார்- மார்க்கோ போலோ. (இத்தாலி)
130.
இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்பு மிக்க ஆட்சியாளர் - சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
131.
தமிழ்நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன் , ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தை செலுத்தியவர் -சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
132.
யாருடைய ஆட்சிக் காலத்தில் பாண்டிய அரசு வலிமையின் உச்சத்தில் இருந்தது - சடையவர்மன் சுந்தரபாண்டியன். (1251 - 1268).
133.
கண்ணூரில் நடந்த போரில் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரனை வென்று சூறையாடிய பகுதி - மால்வா.
134.
கடலூரை மையமாகக் கொண்டு வட தமிழகத்தில் செல்வாக்குடன் ஆட்சி நடத்திய காடவர்களையும் அடக்கி கப்பம் செலுத்த பணித்தவர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
135.
சுந்தர பாண்டியனுக்கு பிறகு மாறவர்மன் குலசேகரன் பாண்டியன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்- 40 ஆண்டுகள்.
136.
மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இரு மகன்கள்- மூத்தவர் சுந்தரபாண்டியன் , இளையவர் வீரபாண்டியன்.
137.
1302 - இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.
138.
கோபமடைந்த மூத்தமகன் தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தவர்-சுந்தர பாண்டியன்.
139.
உள்நாட்டுப் போரில் வென்று ஆட்சியைப் பிடித்தவர்- வீரபாண்டியன்.
140.
சுந்தரபாண்டியன் டெல்லிக்கு தப்பிச்சென்று யாரிடம் அடைக்கலமானார்-அலாவுதீன் கில்ஜி.
141.
இந்நிகழ்வே மாலிக்காபூர் தமிழக படையெடுப்புக்கு வழிவகுத்தன.
142.
1311 இல் மாலிக்காபூர் மதுரையை அடைந்தபோது அங்கே யாரும் இல்லை.
143.
அமீர் குஸ்ருவின் கணிப்பின்படி மாலிக்காபூர் மதுரையில்இருந்து எடுத்து சென்றது :
1. 512 யானைகள் - 5000 குதிரைகள்.
2. வைரம் , முத்து, மரகதம், மாணிக்க நகைகள் - 500 மூட்டைகள் .
144.
சொக்கநாதர் கோயிலை இடித்து ஏராளமான விலைமதிக்க முடியாத பொருட்களை எடுத்துச் சென்றவர்- மாலிக்காபூர்.
145.
1335 இல் டெல்லி சுல்தானுக்கு கட்டுப்படாமல் மதுரை அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டவர்- ஆளுநர் ஜலாலுதீன் அஸன் ஷா.
146.
பாண்டிய அரசர்களை போற்றும் மரபாக இருந்தது - கூடல்கோன், கூடல்நகர் காவலன் ,மதுரபுர பரமேஸ்வரன்.
147. தொடக்க கால பாண்டியருக்கான பட்டங்கள்:
1. பாண்டிய அதியரசன்.
2. பாண்டிய மகாராசன்.
3. மன்னர் மன்னன்.
4. அவனிப சேகரன்.
5. ஏக வீரன்.
6. சகலபுவன சக்கரவர்த்தி.
148. பிற்காலப் பாண்டியருக்கு சமஸ்கிருதத்தில் அமைந்த பட்டங்கள்:
1. கோதண்டராமன்.
2. கோலாகலன்.
3. புவனேகவீரன்.
4. கலியுக ராமன்.
149. பாண்டியருக்கு தூய தமிழில் அமைந்த பட்டங்கள்:
1. செம்பியன்.
2. வானவன்.
3. தென்னவன்.
150.
பாண்டியர் குதிரைகளை எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தனர் -அரபு.
151.
பாண்டியர் அரண்மனை - திருமாளிகை, மனபரணன் திருமாளிகை.
152. பாண்டியர் காலத்தில் அரியணைகளுக்கு பெயரிடும் வழக்கம் இருந்தது. அத்தகைய அரியணைகளின் பெயர்கள்:
1. முன்னைய தரையன்.
2. பாண்டியத் தரையன்.
3. கலிங்கத் தரையன்.
153.
அரசர்கள் அரியணைகளில் இருந்து கட்டளைகளை வாய்மொழியாக பிறப்பித்தார்கள். அவை - திருமந்திர ஓலை.
154.
பாண்டிய மண்டலம் என்பது - பல வளநாடுகளை கொண்டது
155.
ஒரு வளநாடு - பல நாடுகளாகவும் , கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது
156.
நாடு, கூற்றம் ஆகியன - மங்கலம், நகரம், ஊர் , குடி ஆகிய குடியிருப்புகளை கொண்டவையாக இருந்தன.
157.
" மடக்குளக்கீழ் மதுரை" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது- மதுரை நகரம்.
158.
உத்தர மந்திரி - முதன்மை அமைச்சர்.
159.
எழுத்து மண்டபம் -அரசு தலைமைச் செயலகம்.
160.
மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன்கரி – பாண்டிய அமைச்சர்கள்.
161.
நாட்டார் களின் வேலை- வரிகளை விதிப்பது.
162.
பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்- சாலபோக நிலம்.
163.
இரும்பு உலோக வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்- தட்டார் காணி.
164.
மர வேலைக்கு செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம்- தச்சர் மானியம்.
165.
கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவுக்கு வழங்கப்பட்ட நிலம்- பட்ட விருத்தி.
166.
நில அளவீடுகளின் போது எத்தனை அடி நீளமுள்ள கழிகளைப் பயன்படுத்தினர் -14 அடி ,24 அடி.
167.
பொ.ஆ, 800 - ஐச் சேர்ந்த - மானூர் கல்வெட்டு (திருநெல்வேலி) கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
168.
பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து பதிவு செய்துள்ளார் -வாசாஃப்.
169.
குதிரையின் சராசரி விலை - 220 செம்பொன் தினார்கள்.
170.
பாண்டியர் காலத்தில் வணிக குழுக்கள் நிறுவப்பட்ட இடம் – கொடும்பாளூர்,பெரியகுளம்.
171.
குதிரை வாணிகம் செய்வோர் – குதிரைச்செட்டி.
172.
முழுவீச்சில் இயங்கிய துறைமுகம் – காயல்பட்டினம். தூத்துக்குடி
173.
கனம் , கழஞ்சு, பொன் - தங்க நாணயங்கள்.
174.
தவளம் – பொருட்காட்சிகள்.
175.
தெரு -வணிகர்கள் குடியிருப்புப் பகுதி.
176.
நில உடமையாளர்கள்- பூமிபுத்திரர்.
177. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனங்கள்:
1. வாசுதேவப்பேரேரி.
2. வீரப்பாண்டியப்பேரேரி.
3. ஸ்ரீ வல்லவப் பேரேரி.
4. பராக்கிரமப்பாண்டியப்பேரேரி.
178. பாண்டியர் காலத்தில் பெயரிடப்பட்ட ஏரிகள்:
1. திருமால் ஏரி.
2. மாறன் ஏரி.
3. கலியன் ஏரி.
4. காடன் ஏரி.
179.
ஆறு, ஏரி , குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பயன்படும் அமைப்பு - மடை, குமிழி, மதகு.
180.
சமஸ்கிருத கல்வியை ஊக்குவிக்க வழங்கப்பட்ட அறக்கொடைகள் - பட்ட விருத்தி , சாலபோகம்.
181. பிராமணர்கள் சமஸ்கிருதம் பயின்ற நிலையங்கள்:
1. கடிகை
2. சாலை
3. வித்யா ஸ்தானம்
182. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய இலக்கிய நூல்கள்:
1. திருப்பாவை.
2. திருவம்பாவை.
3. திருவாசகம்.
4. திருக்கோவை.
5. திருமந்திரம்.
183. பாண்டிய அரசர்கள் மேற்கொண்ட சடங்குகளை பற்றி கூறும் வேள்விக்குடிச் செப்பேடு:
1. அசுவமேத யாகம்.
2. ஹிரண்யகர்பா.
3. வாஜபேய யக்னா.
184. பண்டைய பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் காணப்படும் இடங்கள்:
1. பிள்ளையார்பட்டி
2. திருமயம்
3. குன்றக்குடி
4. திருச்செந்தூர்
5. கழுகுமலை
6. கன்னியாகுமரி
7. சித்தன்னவாசல்
185. பாண்டியர் கால ஓவியங்கள் காணப்படும் கோயில்கள்:
1. சித்தன்னவாசல்
2. அரிட்டாபட்டி
3. திருமலைபுரம்
4. திருநெடுங்கரை
186.
சித்தன்னவாசல் குகையில் காணப்படும்
9 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு யாரால் உருவாக்கப்பட்டது- இளம் கெளதமர்.
187. பாண்டியர் காலத்தில் சுறுசுறுப்பான கடல் வணிக மையங்கள்:
1. சிந்தாமணி
2. மயிலாப்பூர்
3. திருவெற்றியூர்
4. திருவாடனை
5. மகாபலிபுரம்
188.
யாருடைய கடல்வழி படையெடுப்புகள் ஸ்ரீவிஜய அரசு வரை விரிவடைந்திருந்தன - முதலாம் ராஜேந்திரன்.
189.
காவிரி படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி - சோழமண்டலம்.
190.
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து -2 ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள்
191.
1 கலத்துக்கு சமம் - 28 கி.கி.
192.
கெடா உள்ள இடம் -மலேசியா.
193.
முதலாம் ராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் நிர்வகிக்கப்பட்ட ஒரு குழு -மாநகரம்.
194.
எங்கு பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டினார் - வட இந்தியா.
195.
பாண்டியர்களின் முதல் தலைநகரம்- கொற்கை.
196.
வறட்சிப் பகுதியான ராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் கட்டியது –ஏரிகள்.
197.
பொருத்துக:
1. படைமுகாம் - படை வீடு.
2. புறக் காவல் படைகள்- நிலைப்படை.
3. தலைவர் - படை முதலி.
4. படைத்தளபதி -தண்டநாயகம்.
198.
பொருத்துக:
1. விஜயாலய சோழன் -
பெ.ஆ. 850 - 871.
2. முதலாம் பராந்தகன் - பெ.ஆ. 907 - 955.
3. முதலாம் இராஜராஜ சோழன் - பெ.ஆ. 985 - 1014.
4. முதலாம் ராஜேந்திரன் - பெ.ஆ. 1012 - 1044.
5. முதலாம் குலோத்துங்க சோழன் - பெ.ஆ. 1071 - 1122.
0 Comments
THANK FOR VISIT