11TH- STD - தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்-
1. தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியின் ஊற்றுக்கண்களாக விளங்கும் நூல்கள்:
1. திருக்குறள்
2. நன்னூல்
3. நாலடியார்
4. ஐம்பெரும் காப்பியங்கள்
5. கம்பராமாயணம்
6. வில்லிபாரதம்
2.
மனமொத்த இருவருடையே தோன்றும் காதல்நிலைப்பேறு உடையதாக அமையும் என கூறும் இலக்கண நூல் – தொல்காப்பியம்.
3.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காமவாயில் நிறையே அருளே உணர்வோடு திருவென முறையுற கிளர்ந்த ஒப்பினது வகையே எனும் பாடல்வரி அமைந்துள்ள நூல் – தொல்காப்பியம்.
4.
செம்புல பெயர் நீர் போல எனும் பாடல்வரி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது – குறுந்தொகை.
5.
நின்ற சொல்லர் நீடுதோன்று இனியா என்றும் என்தோள் பிரிவு அறியலரே தாமரை தண்தாது ஊதி மாமிசை சாந்தில் தொடுத்த தீந்தேன் போல புரைமன்ற புரையோர் மேன்மை எனும் பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்- நற்றிணை.
6.
நட்பின் இயல்பு குறித்து உயிர்ஒர் அன்ன செயிர்தீர் நட்பின் எனக்கூறுவது – நற்றிணை.
7.
யாக்கைக்கு உயிர் இயைந்து அன்ன நட்பின் எனும் பாடல்வரி காணப்படும் நூல் – அகநானூறு.
8.
புலி பசி தன்ன மெலிவி லுள்ள துரனுடை யாளர் கேண்மையோடு இயந்த வைகல் உளவாகியரோ என கூறுவது – புறநானூறு.
9.
உயர்நிலை உலகம் அமிழ்தோடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – மதுரைக்காஞ்சி.
10.
மதுரை காஞ்சியை எழுதியவர் - மாங்குடி மருதனார்.
11.
வாய்மை நிறைந்த நட்பே துய்மையானது சிறந்தது தகுதியானது என கூறியவர் - மாங்குடி மருதனார்.
12.
அரிய நெல்லிக்கனியைஅவ்வைக்கு கொடுத்தவன் - அதியமான் நெடுமானஞ்சி.
13.
கோப்பெருஞ்சோழனோடு வடக்கு இருந்து உயிர்விட்டவன் – பிசிராந்தையார்.
14.
பாரியின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் – கபிலர்.
15.
பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர் எல்லாம் கடன் எனக்கூறும் நூல் – கலித்தொகை.
16.
கலித்தொகையை தொகுத்தவர் – நல்லந்துவனார்.
17.
உண்மையான செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பது தான் என கூறியவர் – நல்வேட்டனார்.
18.
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புண்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் - நற்றிணை.
19.
உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என கூறியவர்- பெருங்கடுங்கோ - கலித்தொகை
20.
பொய்யா செந்நா என கூறும் நூல் – புறநானூறு. (வாய்மையை பேசும் நா உண்மையான நா)
21.
பொய்டுபு அறியா வயங்கு செந்நாவின் எனக் கூறுவது – பதிற்றுபத்து.
22.
வாய்மையை பிழையா நன்மொழி என கூறுவது – நற்றிணை.
23.
பொய்மையை பொய் பொதி கொடுஞ்சொல் என கூறுவது – நற்றிணை.
24.
நிலம்புடை பெயர்வது ஆயினும் சொற்புடை பெயர்தலோ இலரை எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் – நற்றிணை.
25.
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொலாநி பொய்ப்பு அறியலையே எனக் கூறுவது – பதிற்றுபத்து.
26.
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் எனும் பாடல்வரி இடம் பெற்ற நூல் – புறநானூறு.
27.
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே எனக்கூறும் நூல் – நற்றிணை.
28.
ஏதுமில்லா நிலையில் விதை திணையை உரலில் இட்டு இடித்து உணவளித்த செய்தியை கூறும் நூல் – புறநானூறு.
29.
விருந்தினருக்கு உணவளிக்க வரகினை கடனாக பெற்று வருவது குறித்து கூறும் நூல் – புறநானூறு.
30.
உணவிடுவதற்காக தன் வீரவாளை ஈடு வைத்ததை கூறும் நூல் – புறநானுறு.
31.
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை என் விருந்தோம்பல் கைகூடாத வாழ்க்கை என கூறியவர் – பெருங்குன்றுர்கிழார்- புறநானூறு.
32.
விருந்தினர்களின் தொடர்ச்சியான வருகையால் ஊடல் கொள்ள நேரவில்லாமல் போனதாக தலைவி வருந்தியதை கூறும் நூல் – நற்றிணை.
33.
தமிழர் வீட்டுவாசலில் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை எதன் சிறந்த அடையாளம் - விருந்தோம்பல் பண்பு.
34. இல்லற வாழ்வின் கடமைகள்:
1. விருந்தோம்பல்
2. கற்பொழுக்கம்
3. பெரியோரை பேணல்
4. நன்மக்கட்பேறு
35.
புலி தங்கி சென்ற குகை போல அவனை மட்டும் தான் ஈன்ற வயிறு உள்ளது என போர்வீரனின் தாய் கூறியதை கூறும் தமிழர் கருவூல நூல் – புறநானூறு.
36.
மக்கட்பேறே உயர்ந்த பேறு என்பதை மயக்குறு மக்களை இல்லோராக்கு பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே என கூறும் நூல் – புறநானூறு.
37. சங்க காலத்தில் இருந்த பெண்பாற் புலவகள்
1. ஒளவையார்.
2. நச்செள்ளையார்.
3. நன்முல்லையார்.
4. ஆதிமந்தியார்.
5. நப்பசலையார்.
6. முடத்தாம கண்ணியார்.
7. காக்கை பாடினியார்.
8. பொன்முடியார்.
9. ஒக்கூர் மாசாத்தியார்.
38.
அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் – ஒளவையார்.
39.
ஆடல் பாடல் கலைகளில் சிறந்து விளங்கியவர் - பாடினி விறலி.
40.
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே பாடல் வரியை பாடியவர் – அவ்வையார்- புறநானூறு.
41.
ஆவும் ஆனியிற் பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணி தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இருக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.
42.
காவல்மரம் – கடிமரம்.
43.
காவல் மரங்கள் எவை - வேங்கை ,புன்னை, வேம்பு.
44.
மன்னர் கொடை வள்ளல்களாக திகழ்ந்தனர் என்பதனை விளக்கும் திணை - பாடாண் திணை.
45.
ஆய் அண்டிரன் எனும் குறுநில மன்னன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு வழங்கிய யானைகளின் எண்ணிக்கை யை " வான்மீன் பல பூப்பினும் ஆனாது மண்ணே" என பாடியவர் – முடமோசியார்.
46.
காம்பு சொலி தன்ன அறுவை உடீஇப் பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி பனுவலின் வழாஅ பல்வேறு அடிசில் எனக் கூறுவது- சிறுபாணாற்று படை.
47.
இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி என கூறும் நூல் - சிறுபாணாற்று படை
48.
அரசர்களின் வள்ளல். தன்மையை பாடுவதற்காகவே அமைக்கப்பட்ட நூல்கள் - ஆற்றுபடை நூல்கள்.
49.
சேரர் மன்னரது வள்ளல் தன்மை மற்றும் விருந்தோம்பல் பண்பு கூறுவது – பதிற்றுபத்து.
50.
அக்கால மன்னர்களை திருத்தும் கடமை புலவர்களுக்கும் உண்டு என்பதை கூறும் புறநானூறு - பாடல்வரி- அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்.
51.
நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக தட்டோர் அம்ம இவன் தட்டோரே தள்ளாதோர் இவன் தள்ளாதோரே எனும் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு.
52.
ஏழை பெண்ணின் மானம் காக்க தன்கையையே வெட்டிக்கொண்டவன்- பொற்கைபாண்டியன்.
53.
அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன்னையே தராசு தட்டில் ஏற்றிய மன்னன்- சிபிமன்னன்.
54.
கன்றிழந்த பசுவுக்கு நீதி வழங்க தன்மகனை தேர்காலில் இட்டு கொன்றவன்- மனுநீதிசோழன்.
55.
மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும் எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள பாடல்-
புறநானூறு.
56.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடியவர் - கணியன் பூங்குன்றனார்.
57.
நல்லது செய்ய ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் – புறநானூறு.
58.
உண்டாலம்ம இவ்வுலகம் எனும் பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்- புறநானூறு.
59.
பதிணென்கீழ்கணக்கு நூல்கள்: 18 .
1. அறநூல்கள் எத்தனை-11.
2. புற நூல்கள் எத்தனை-1.
3. அக நூல்கள் எத்தனை-6.
60.
பொறாமை சினம் பேராசை இன்னாச்சொல் தீயதென கருதி புறத்தள்ளி வருதே அறம் ஏன கூறியவர் – வள்ளுவர்.
61. மனித வாழ்க்கைக்கு இன்றிமையாத பண்புகள்:
1. அன்பு.
2. நாணம்.
3. ஒப்புரவு.
4. கண்ணோட்டம்.
5. வாய்மை.
6. இனியவைகூறல்.
7. செய்நன்றியறிதல்.
62.
திருக்குறளுக்கு அடுத்த நாள் நிலையில் வைத்து மதிக்க படும் நீதிநூல்- நாலடியார்.
63.
நாலடியாரை எழுதியவர் – சமணமுனிவர்கள். - தொகுத்தவர் பதுமனார்.
64.
நாலடியார் வலியுறுத்தும் சமண சமய கொள்கைகள்
1. துறவறத்தை பாராட்டி பேசுதல்.
2. உலக இன்பத்தை வெறுத்தல்.
3. ஊழ்வினை மறுபிறப்பு.
4. புலால் உண்ணாமை.
5. உயிர்கொலை புரியாமை.
65.
கற்றறிந்தவர் சிறந்தவர் எனவும் அறிவும் ஒழுக்கமும் மதிப்பை தருவன என கூறும் நூல்- நாலடியார்.
66.
களர்நிலத்து பிறந்த உப்பினை சான்றோன் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும் கற்றறிந்தாரோ தலைநிலத்து வைக்கப்படும் என கூறும் நூல் – நாலடியார்.
67.
மனிதர்களின் மனந்தை பண்படுத்துவது – நாலடியார்.
68. ஒளவையார் பாடியவை நூல்:
1. மூதுரை.
2. நல்வழி.
3. ஆத்திசூடி.
4. கொன்றை வேந்தன்.
69.
தொல்காப்பியத்தின் வழிநூலாக விளங்கும் இலக்கண நூல் – நன்னூல்.
70.
நன்னூலை எழுதியவர் - பவணந்தி முனிவர்.
71.
காப்பிய மரபில் முதலிடத்தை பிடித்து இருப்பது – சிலப்பதிகாரம்.
72.
கோவலன் செய்நன்றி மறவா பண்பினன் என்பதற்கு எ.கா: மணிபல்லவ தீவில்வாழும் மணிமேகலா தெய்வத்தின் பேரை தன் மகளுக்கு வைத்தான்.
73.
யானையிடம் இருந்து முதியவரை காத்த கருணை மறவன்- கோவலன்.
74.
இல்லோர் செம்மல் என கோவலனை புகழ்ந்தவர் - மாடல மறையோன்.
75.
நல்லோர் கூறிய அறநெறி துறந்த எனக்கு நற்கதி உண்டா என யார் யாரிடம் கூறினார் - கோவலன் கண்ணகியிடம்.
76.
போற்றா ஒழுக்கம் புரீந்தீர் என யார் யாரை கூறியது- கண்ணகி – கோவலன்.
77.
யானோ அரசன் யானே கள்வன்
என கூறியவன் - பாண்டியன் நெடுஞ்செழியன்.
78.
மழைவளமா சுரப்பின் வான்பேர் அச்சம், பிழையுயிர் எய்திர் பெரும்பேர் அச்சம்
குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி , மன்பதை காக்கும் நன்குடி பிறத்தல் எனும் பாடல் வரி , சிலப்பதிகாரத்தில் இடப்பெற்றுள்ள காண்டம் மற்றும் காதை - வஞ்சி காண்டம் மற்றும் காட்சி காதை.
79.
சிலப்பதிகாரத்தில் பூத சதுக்கம் எனும் கற்பனைகாட்சி இடம் பெற்றுள்ள காதை- அடைக்கல காதை.
80.
நரகன் உடையார்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பிங் கில்லை எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள காதை - அடைக்கல காதை.
81.
அரசன் நீதி வழங்கும் முறை பற்றி கூறும் காப்பியம்- மணிமேகலை
82.
காயசண்டிகையின் கணவன் – காஞ்சனன்.
83.
உதயகுமாரனை கொன்றவன் – காஞ்சனன்.
84.
அறமெனபடுவது யாதன கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர் கெல்லாம் உண்டியும் உறையும் உறையுளும் அல்லது கண்டதில் எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள காப்பியம் - மணிமேகலை. ( ஆபுத்திரனேடு மணி பல்லவமடைந்த காதை)
85.
கணிகை மகள் (அழைத்தவன் சோழ மன்னன்)- மணிமேகலை.
86.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி எனும் குறளுக்கு இலக்கணமாய் திகழ்ந்த காப்பியங்கள்- சிலம்பு மற்றும் மணிமேகலை.
87.
தமிழில் விருத்தாபாவில் தோன்றிய முதல் காப்பியம் - சீவக சிந்தாமணி.
88.
திருத்தக்கதேவர் சோலையில் காட்சியின் மூலம் விளக்குவது – நிலையாமை.
89.
சீவகனின் தந்தை - சச்சந்தன்.
90.
வளையாபதி தொகுத்து கூறும் அறங்கள்:
பொய் கூறாதீர் , புறங்கூறாதீர் , யாரையும் இகழ்ந்து பேசாதீர்
தீயவற்றை பேசி உடல் வளர்க்காதிர் , உயிர்கொலை செய்து அதன் ஊணை உண்டு
உங்கள் உயிரை வளர்க்க நினைக்காதிர் , கள்வனுடன் தொடர்பு கொள்ளாதிர்
களவு கொள்ளாதீர்
91.
பாளையாம் தன்மை செத்தும் , பலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் , காமுறும் இளமை செத்தும்
நாளும்நாள் சாகின் றோமல் , நமக்கு நாம் அழித்து ஏன்னோ- என கூறுவது – குண்டலகேசி.
92.
சோழ பேரரசு எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் - கம்பராமாயணம்.
93.
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்இல் கேள்வி ஆகும் முதல் திண்பணை போக்கி அருந்தவத்தின் சாகம் தழைந்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்- கம்பராமாயணம் / பாலக்காண்டம் / நகரபடலம்.
94.
கல்வியே அனைத்து அறத்திற்கும் அடிப்படை என கூறியவர் - கம்பர்.
95.
செஞ்சோற்று கடனுக்காக துணிந்தவன் உயிர் விட – கும்பகர்ணன்.
96.
நற்பண்புகளின் இருப்பிடமாக திகழ்ந்த இராமன் பிறந்த இடம் – அயோத்தி.
97.
தந்தை சொல்லுக்கு கட்டுபட்டு போரில் ஈடுபட்டவர்கள்- இந்திரஜித் , மேகநிதன்.
98.
இந்திய மொழிகள் அனைத்திலும் காணப்படும் இதிகாசங்களுள் ஒன்று –மகாபாரதம்.
99.
வடமொழியில் மகாபாரத்தை இயற்றியவர் – வியாசர்.
100. திருராட்டிரனின் 100 புதல்வர்கள் – கெளரவர்கள். (மூத்தவன் துரியோதனன்).
101. போர்களத்தில் துரியோதனன் பக்கம் நின்றவர்கள்.
1. பீஷ்மர்
2. துரோணர்
3. கிருபர்
4. கர்ணன்
5. விதுரர்
102. பொறுமை எனும் அறத்தை தருமம் மூலமாக வெளிப்படுத்துவது – வில்லிபாரதம்.
103. ஆய் அரசு அழிப்பினும், குரவர் நல்உரை மறுக்கானும், பிறர் புரிந்த நன்றியது சொல்லினும் ,ஒருவர் வாழ மனையில் உண்டு பின்னும் ,அவருடன் சுழன்று பொர உண்ணணும், இரவி உள்ளவும் மதியம் உள்ளளவும், இருவர்களே நரகில் எய்துவர் எனும் வரிகள் - காணப்படும் நூல் - வில்லிபாரதம்.
104. பாரத போரின் முறைகளை மீறி பாண்டவர்களின் புதல்வர்களை கொன்றவன்- அசுவதாமன்.
105. போர்களத்தில் அறம் பிறழா நெறிமுறை சூதாடுவது பல தீச்செயல்களுக்கு நிகரானது என எடுத்து கூறும் நூல் – வில்லிபாரதம்.
106. பொருத்துக:
1. தாய்மைக்கு - விசையை மாதவன் மற்றும் குந்தி.
2. கற்பிற்கு - கண்ணகி சீதா மற்றும் பாஞ்சாலி.
3. தந்தை பாசத்திற்கு – தசரதன்.
4. பொறுமைக்கு - தருமன் மற்றும் இராமன்.
5. நட்பிற்கு - குகன் மற்றும் அனுமன்.
6. தொண்டிற்கு - இலக்குவன் மற்றும் அனுமன்.
7. ஈகைக்கு – கர்ணன்.
8. நீதி வழுவா அரசாட்சி க்கு – பாண்டியன்.
9. தியாகத்திற்கு - பீஷ்மா மற்றும் பரதன்.
10. விவேகத்திற்கு - விதூரன்.
11. கூடா நட்பிற்கு - கூனி சகுனி மற்றும் கட்டியங்காரன்.
12. ஒழுக்க பிறழ்விற்கு - கோவலன் மற்றும் இராவணன்.
13. பொறாமைக்கு - துரியோதனன் சூர்ப்பனகை மற்றும் காந்தாரி.
14. வழிதவறிய மக்களை நல்வழிபடுத்தியவன் – திருராட்டிரன்.
15. பெண்மையை இழிவுபடுத்தியவன்- துச்சாதனன்.
107. திருவள்ளுவர் காலத்திலும் அவருக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திலும் நடந்த ஆட்சி – முடியாட்சி.
108. மன்னன் தண்டித்தாலும் நீதி வழங்கிய அமைப்பு - அறங்கூறு அவையம்.
109. அறுங்கூறு அவையம் பற்றி கூறும் நூல்கள் - பத்துபாட்டு மற்றும் மதுரைக்காஞ்சி.
110. அறன்நிலை திரியா அன்பின் அவையம் எனும் பாடல்வரி இடம் பெற்ற நூல் – புறநானூறு.
111. மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியா தாங்கு எனும் பாடல்வரிகள் காணப்படும் நூல் – நற்றிணை.
112. அறங்கெழு நல்லவை எனும் சொல் இடம்பெற்ற நூல் – அகநானூறு.
113. முறையுடை அரசன் செங்கோல் அவையத்து எனும் பாடல்வரி காணப்படும் நூல்- குறுந்தொகை.
114. அரைசுகோல் கொடினும் அறங்கூறு அவையம் என கூறுவது – சிலப்பதிகாரம்.
115. பாலாற்று வென்றான் எனும் ஊர்கள் காணப்படுவது - வட ஆர்க்காட்டு ஆரணி மற்றும் வேலூர் மாவட்டம்.
116. செய்யாறு வென்றான் ஊர்கள் காணப்படும் இடங்கள்
- வட ஆர்க்காடு செய்யாறு வட்டம் மற்றும் தென் ஆற்காட்டு விழுப்புரம் வட்டம்.
117. அறந்தாங்கிய சீலன் எனும் பகுதி காணப்படுவது – தஞ்சை.
118.
சாரந்தாங்கிய வீரன் காணப்படுவது- நிலக்கோட்டை வட்டம்.
0 Comments
THANK FOR VISIT