11TH- STD - உள்ளாட்சி அரசாங்கங்கள் -

1.    அரசாங்க நிர்வாக கட்டமைப்பில் இறுதிநிலை அலகாக உள்ளது - உள்ளாட்சிகள்.

2.    அரசின் திட்டங்களும் வளங்களும் அடித்தட்டு மக்களை சென்றடைய முக்கிய வழியாக விளங்குவது - உள்ளாட்சிகள்.

3.    இந்தியாவில் கிராம உள்ளாட்சி அரசாங்கங்கள் - பஞ்சாயத்து ராஜ் - என்ற பொது பெயரில் அழைக்கப்படுகின்றன

4.    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வகைகள்:

          1.    மாநகராட்சிகள்.

          2.    நகராட்சிகள்.

          3.    நகரியங்கள். (தொழில் நகரங்கள்).

          4.    பேரூராட்சிகள்.

          5.    பாளைய வாரியங்கள். (ராணுவ அமைப்பில் உள்ள இடங்கள்)

5.    10- இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை- மாநகராட்சிகள்.

6.    10 -லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை - நகராட்சிகள்.

7.    புதிய தொழிற்சாலைகள் அமைக்கின்ற இடங்களில் நகரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன

8.    ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களில் -பாளைய வாரியங்கள்-ஏற்படுத்தப்படுகின்றன.

9.    ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் :

          1.    தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குதல்.

          2.    அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி வழங்குதல்.

          3.    ஊரகப் பகுதிகளுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்துதல்.

          4.    ஊரகப் பகுதிகளுக்கு மின்சாரம் , ஆரோக்கியம், சமூக பாதுகாப்பு மற்றும் வீடு வழங்குதல்.

10.   உள்ளாட்சி அரசாங்கங்கள் விதிக்கும் சில வரிகள் - சொத்து வரி , தொழில் வரி , குடிநீர் வரி.

11.   ஜைன மதத்தை தோற்றுவித்தவர் - மகாவீரர்.

12.   கிராமங்கள் அளவு மற்றும் வழும் முறை பற்றி புத்த இலக்கியங்கள் , ஜைன இலக்கியங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன .

13.   கெளடில்யரின் எந்த  நூல் கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்குகிறதுஅர்த்தசாஸ்திரம்.

14.   மெளரியர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அலகுகளாக இருந்தது - கிராமம் , மாவட்டம்.

15.   யாருடைய காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்துள்ளன - சோழர்கள்.

16.   காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட யாருடைய கால கல்வெட்டுகள் உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன - முதலாம் பராந்தக சோழன்.

17.   வீரநாராயண சதுர்வேதி மங்கலம்  என்ற ஊரில் மகாசபைக்கு நாட்டுக்கு துரோகம் இழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டவர்- முதலாம் ராஜராஜ சோழன்.

18.   பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிட்டவர்கள்:

          1.    சர் சார்லஸ் மெட்கேப்.

          2.    சர் ஜார்ஜ் பேர்டு வுட்.

          3.    எல்பின்ஸ்டோன்.

19.   முகலாயப் போரரசு:

          1.    பல மாகாணங்கள்  - பராக்னாஸ்.

          2.    மாகாணங்களில் உட்பிரிவுகள்  - சர்க்கார்.

          3.    சர்க்கார்கள் பல கிராமங்களைக் கொண்ட தொகுதி  - பராக்காஸ்.

20.   பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு -1757. (ஆங்கிலேயர் - நவாப்பிடமிருந்து நிலவரி வசூல் உரிமையை பெற்றனர்.)

21.   ரிப்பன் பிரபு தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு- 1882.

22.   1926 - இல் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்க -1417.

23.   1937 - இல் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை - 6250.

24.   1927 - இல் நீதி கட்சி உறுப்பினர்கள் - 545 பேர்கள் மாவட்ட நிர்வாக அமைப்புகளில் நியமிக்கப்பட்டனர்.

25.   இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாகத் துறைகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

26.   மத்திய அரசு - ஒதுக்கப்பட்ட துறைகள்.

27.   மாகாண அரசு - மாற்றி தரப்பட்ட துறைகள்.

28.   காவல், சட்டம் ஒழுங்கு, நீதி போன்றவை  - ஒதுக்கப்பட்ட துறைகள்.

29.   கல்வி மற்றும் பிற துறைகள் - மாற்றி தரப்பட்ட துறைகள்.

30.   தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்ஜியம் வலியுறுத்தியவர்- மகாத்மா காந்தி.

31.   சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர்- ஷர்மா நாராயணன்.

32.   நிர்ணய சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 1949 நவம்பர் 26.

33.   அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் சுய ஆட்சியின் அலவுகளாக பணிபுரிய தேவையான அதிகாரங்களையும் திறனையும் வழங்க வேண்டும் என அரசியல் கூறுகிறும் பிரிவு - சரத்து 40.

34.   சமூக மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1952.

35.   பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும் அதனை செம்மைப்படுத்தவும் இந்திய அரசாங்கம் 1977 ஆம் ஆண்டு யார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது - அசோக் மேத்தா.

36.   1978 ஆண்டு அசோக் மேத்தா குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. இதன்படி எந்த மாநிலங்களின் பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தன-

கர்நாடகா  , மகாராஷ்டிரா , ஆந்திரா , மேற்கு வங்காளம் , குஜராத்.

37.   முதல் 1986 வரை உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்:

          1.    சி.எச். அனுமந்த ராவ் குழு - 1984.

          2.    ஜி.வி.கே. ராவ் குழு - 1985.

          3.    எல்.எம். சிங்லி குழு - 1986.

38.   73 வது , 74 -வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1992 .

பகுதி- IX, IX-A என்ற இரு பகுதிகளை இணைத்து, சரத்து 243 - 243 ZG .

39.   மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கூறும் சட்டப்பிரிவு- 243 -B.

40.   ஜவகர்லால் நேரு ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்து ராஜ் - க்கான அடிக்கல் நடப்பட்ட ஆண்டு - அக்டோபர் - 2, 1959.

41.   பஞ்சாயத்து ராஜ் பற்றி குறிப்பிடும் அட்டவணை- 11 - வது அட்டவணை.

42.   கிராம அளவில் - கிராம பஞ்சாயத்து.

43.   மாவட்ட அளவில்- மாவட்ட பஞ்சாயத்து.

44.   20 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை - இடைநிலை பஞ்சாயத்து.

45.   உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - 1 / 3 பங்கு.

46.   பஞ்சாயத்துகளின் பதவிக்காலம்- 5 - ஆண்டுகள்.

47.   2011 - ஆம் ஆண்டு இந்தியாவின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ எத்தனை  கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன - 2,50,000.

48.   பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் பொன்விழா ஆண்டு (50 ஆண்டு) - அக்டோபர் 2, 2009.

49.   மத்திய சட்டமான  பாளைய வாரியங்கள் எந்த ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன  - 1924.

50.   74 - வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 1992-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு எந்த ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது - ஜூன் 1993.

51.   பேரூராட்சி :

          1.    மக்கள் தொகை 5000 க்கு மேலும் 15,000-க்கு மிகாமலும் இருக்கும்.

          2.    பேரூராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 3 க்கு குறையாமலும் 15 - விட மிகாமலும் இருக்கும்.

          3.    சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்படும் நகராட்சி நிர்வாகம் அனுபவம் பெற்ற ஒரு உறுப்பினர் - தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருப்பர்.

          4.    பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

52.   கிராமசபை கூட்டங்கள் - 4 முறை.

          1.    குடியரசு தினம் - ஜனவரி - 26.

          2.    உழைப்பாளர் தினம் -  மே 1.

          3.    சுதந்திர தினம் - ஆகஸ்ட் - 15.

          4.    காந்தி ஜெயந்தி -  அக்டோபர் - 2.

53.   நகராட்சி - மக்கள் தொகை:

          1.    நகராட்சி -15,000 மேலும் 3 லட்சத்திற்கு கீழும்.

          2.    வகையினம் - 1 லட்சமும் அதற்கு மேலும்  - 20 - 50 வரை உறுப்பினர்கள்.

          3.    வகையினம் - 50,000 முதல் 1 லட்சம் வரை  - 15 - 30 வரை உறுப்பினர்கள்.

          4.    வகையினம் - 50,000 க்கு கீழ்  - 10 - 15 வரை உறுப்பினர்கள்.

54.   நகர மன்றத்தின் பணிகள் பொறுப்புகள் இந்திய அரசியலமைப்பில்  எந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது - 12-  வது அட்டவணை.

55.   1992 ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட திட்ட குழுவில் மொத்த உறுப்பினர்களில் எத்தனை பங்கிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்4 / 5 .

56.   இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு - மாநகராட்சி.

57.   மாநகராட்சியின் தலைமை நிர்வாகி- மாநகராட்சி ஆணையர்.

58.   எந்த சட்டத்திருத்தம் வார்டு குழுக்களை ஏற்படுத்தியது - 74 வது திருத்தம்.

59.   நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் முதல் ஐந்து இடங்கள் -

          1.    புனே -  5.1

          2.    கொல்கத்தா - 4.6

          3.    திருவனந்தபுரம் - 4.6

          4.    புவனேஸ்வர் - 4.6

          5.    சூரத் - 4.5

60.   74 -வது சட்டத் திருத்தத்தின் மூலம் 12 வது அட்டவணையில் மாநகராட்சி மேற்கொள்ளவேண்டிய எத்தனை பணிகளை குறிப்பிட்டுள்ளது - 18 பணிகள்.

61.   மாநகராட்சியின் தலைமை நிர்வாகிஆணையர்.

62.   மாநகராட்சி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் - மாநில அரசிடம் உள்ளது.

63.   மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் - 3 ஆண்டுகள். மாநில அரசாங்கம் விரும்பினால் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம்.

64.   எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது -73வது ,74.

65.   தமிழ்நாட்டில்

          1.    கிராம பஞ்சாயத்து - 12,564.

          2.    ஊராட்சி ஒன்றியம் - 388.

          3.    மாவட்ட பஞ்சாயத்து  - 31.

66.   மாநகராட்சியின் தலைவர் - மேயர்.

67.   தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் - 1958.

68.   73- வது திருத்தத்தின்படி தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1994.

69.   தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு- 1996.

70.   1994 - சட்டத்தின்படி தமிழ்நாட்டில் முதலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக எத்தனை பிரதிநிதிகள் பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்-1,17,000.

71.   தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடைபெற்ற ஆண்டுகள் - 1996  ,  2001 , 2011.

          1.    மாநகராட்சிகள் - 15.

          2.    நகராட்சிகள் - 148.

          3.    பேரூராட்சிகள்  - 561.

72.   பாளைய வாரியச் சட்டம் - 2006.

73.   ஒரு பேரூராட்சி 20,000 முதல் 25,000 வரையிலான மக்கள் தொகையை கொண்டு சிறிய நகரமாகும்.

74.   இந்தியாவில் நகர்பாலிகா என்பது 1,00,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகர உள்ளாட்சியை நிர்வகிக்கும் அமைப்பு .

75.   இந்தியாவில் இரட்டை ஆட்சி 1919 முதல் 1935 வரை நடைபெற்றது.

76.   சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது - 1687.

77.   எதன் மூலம் இரட்டையாட்சி முதலில் ஏற்படுத்தப்பட்டது - இந்திய அரசாங்க சட்டம் 1919.

78.   நகர்பாலிகா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1989.

79.   73 மற்றும் 74 வது சட்ட திருத்தத்தில் உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது - தொகுதியில் பெண்களின் மக்கள்தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

80.   மாநில நிதி ஆணையத்தின் பொறுப்புகள் - வரி வருவாய் மாநில அரசுக்கும் , உள்ளாட்சி அமைப்புக்கு பகிர்தல் தொடர்பான பரிந்துரை.

81.   மாவட்ட திட்ட குழு உருவாக்கப்பட்டது - 73 - வது சட்டத்திருத்தம்.

82.   ஜவஹர் ரோஜ்கர் யோஜனா - வேலைவாய்ப்புக்கு உத்திரவாதமாளித்தல்.

83.   எவ்வாறு டெல்லி வளர்ச்சி அமைப்பு 1957 டிசம்பர் 30ல் உருவாக்கப்பட்டது -பாராளுமன்ற சட்டத்தின் மூலம்.

84.   எந்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு பங்கு இல்லை - பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல்.

85.   உள்ளாட்சி அமைப்பின் தந்தை எனக் கருதப்படுபவர் - ரிப்பன் பிரபு.

86.   மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது -மாநில தேர்தல் ஆணையம்.

87.   இந்திய அரசியலமைப்பின் உள்ளாட்சி அரசாங்கம் குறித்த சட்ட விதிமுறைகள் -உறுப்பு 40 , உறுப்பு 243 முதல் 243 (0) , உறுப்பு 243 (P) முதல் 243 (ZG)

88.   அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்துராஜ் அமைப்பினை பொருத்துக- ஊராட்சி ஒன்றியம் - மாவட்ட பஞ்சாயத்து - கிராம பஞ்சாயத்து.