11TH- STD - தமிழர் கலைகள்

1.    ஒரு நாட்டின் பன்முக பண்பாட்டு அடையாளம்கலைகள்.

2.    தமிழ்நாட்டின் முதன்மை அல்லது ஆய கலைகள் எத்தனை- 64.

3.    ஆயக்கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை என கூறியவர்கம்பர்.

4.    அழகுக்கலைகளை 5 - ஆக பிரித்தவர் - மயிலை சீனி வேங்கடசாமி.

5.    அழகு கலைகள் :

          1.    கட்டிடக்கலை

          2.    சிற்பக்கலை

          3.    ஒவியக்கலை

          4.    இசைக்கலை

          5.    காவியக்கலை

6.    காலத்தைகடந்து தமிழரின் கட்டிடகலைக்கு இன்றளவும் சான்றாக இருப்பதுகோயில்கள்.

7.    கட்டிடங்களை அமைக்கும் முறைகள் பற்றி கூறப்பட்டு இருந்த நூல்மனைநூல்கள்.

8.    மனைநூல்களை நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடம் என கூறியவர்- இளங்கோவடிகள்.

9.    கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டதற்கு சான்று - சபாநாயகர் மண்டபம் ,சிதம்பரம் நடராஜர் கோயில்.

10.   எத்தனையாம் நூற்றாண்டிற்கு முந்தைய கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டிடங்களாக இருந்தது - பொ..6.

11.   பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்கள் - குடைவரை கோயில்.

12.   குடைவரை கோயிலின் பகுதிகள் - கருவறை ,முன்மண்டபம் ,தூண்கள்.

13.   முதல்குடைவரை கோயில் - மண்டகப்பட்டு ( விழுப்புரம்)

14.   மண்டகபட்டு குடைவரை கோயிலை கட்டியவர் - முதலாம் மகேந்திர வர்மன் ( 7 ஆம் நுற்றாண்டு)

15.   முற்கால பாண்டியர்கள் அமைத்த முதல் குடவரை கோயில் எங்குள்ளது - பிள்ளையார் பட்டி.

16.   குடவரை கோயிலின் வேறுபெயர்கள்- மண்டபக் கோயில்கள் ,பாறைக்கோயில்.

17.   ஒற்றை கோயிலுக்கு .கா - மாமல்லபுரம் மகிராசுரமர்த்தினி கோயில்.

18.   கருங்கள்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டிடங்கள்கற்றளிகள்.

19.   கற்றளி அமைக்கும் முறை யாருடைய காலத்தில் தொடங்கியது-முதலாம் நரசிம்ம வர்மன் (( கி.பி 7 ஆம் நூற்றாண்டு).

20.   காலத்தால் முந்தைய கற்றளிகள் காணப்படும் இடங்கள்-மாமல்லபுரம் காஞ்சிபுரம், பனமலை.

21.   பழைய செங்கற்களாலான கோயில்களை கற்றளிகளாக மாற்றி அமைத்தவர்கள் - பிற்கால சோழர்கள்.

22.   இந்திய கோயில் கட்டிட கலையின் வகைகள்- நாகரம், வேசரம் திராவிடம்.

23.   சிகரத்தின் அமைப்பு நான்கு பக்கங்களை கொண்டு சதுரமாக காணப்பட்டால் அந்த கட்டிடக்கலைநாகரம். (வட இந்தியா)

24.   சிகரம் வட்ட வடிவமாக இருந்தால் அந்த கட்டிடகலை பாணி வேசரம். ( மத்திய இந்தியா)

25.   சிகரம் எட்டுபட்டை ( எண்பட்டை) அமைப்புடன் காணப்பட்டால்திராவிடம். (தென் இந்தியா)

26.   திராவிட கலை பரவியுள்ள எல்லை - வடக்கே கிருஷ்ணாநதி முதல் தெற்கே குமரி வரை.

27.   திராவிட கட்டிடக்கலை பரவியுள்ள நாடுகள்பர்மா, இலங்கை ,மலேசியா , கம்போடியா.

28.   இந்துகோயில்களின் கர்ப்ப கிரகம் எனும் கருவறை மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற அமைப்புவிமானம்.

29.   விமானத்தை பொதுவாக எவ்வாறு அழைப்பர் - ஷடங்க விமானம்.

30.   ஷடங்க விமானம் என்பது எத்தனை உறுப்புகளை குறிக்கும்- 6.

31.   ஷடங்க விமான உறுப்புகள் மனித உறுப்புகள்:

          1.    அதிட்டானம்பாதம்.

          2.    பித்திகால்.

          3.    பிரஸ்தரம்தோள்.

          4.    கண்டம்கழுத்து.

          5.    சிகரம்தலை.

          6.    ஸ்துபிமகுடம்.

32.   விமானத்தில் பெரும்பாலும் அமைந்து இருக்கும் கலசங்களின் எண்ணிக்கை- 1.

33.   விமானங்கள் யாருடைய காலத்தில் மிக உயரமானவையாக அமைக்கப்பட்டது- சோழர்கள் காலத்தில்.

34.   கோயில்உறுப்புகளில் அழகானது மற்றும் முக்கியமானது- கோபுரம்.

35.   கோபுரம் உச்சியில் அமைந்து இருக்கும் கலசங்களின் எண்ணிக்கை - ஒன்றுக்கு மேற்பட்ட.

36.   சாரங்கபாணி கோயில் அமைந்துள்ள - இடம் கும்பகோணம்.

37.   கோயில்களில் கோபுரம் அமைத்தல் யார் காலத்தில் தொடங்கி யார் காலத்தில்  உன்னத நிலையை அடைந்தது - பல்லவர் , விஜயநகர போரரசு.

38.   முதன் முதலாக சிறு கோபுரம் அமைக்கப்பட்ட கோயில் - காஞ்சி கைலாசநாதர் கோயில். ( இராஜசிம்மன்).

39.   கோயில் விமானத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்பல்லவர்கள் ,சோழர்கள்.

40.   கோயில் விமானங்களை சிறியதாகவும் கோபுரங்களை பெரியதாகவும் அமைத்தவர்கள் - விஜய நகர மற்றும் நாயக்கர்கள்.

41.   மிக உயர்ந்த கோயில் கோபுரங்கள் யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது - கிருஷ்ண தேவராயர்.

42.   கிருஷ்ண தேவராயர் பெரிய கோபுரங்களை அமைத்த இடங்கள் .இராஜ கோபுரம்- காஞ்சி ,திருவண்ணாமலை ,சிதம்பரம்.

43.   காஞ்சியை தலைநகராக கொண்டு 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்- பல்லவர்கள்.

44.   பழமையான பல்லவர் காலத்து கோயில்கள் காணப்படும் இடங்கள்- மண்டகப்பட்டு ,பல்லாவரம் ,மாமண்டூர் ,வல்லம், மகேந்திரவாடி ,சீயமங்கலம் ,தளவானூர் ,திருச்சி.

45.   எந்த கோயிலின் வெளிமுகப்பு முழுதும் யாழிமுகம் செதுக்கப்பட்டு உள்ளது- சாளூவன்குப்பம்.

46.   சாளூவன்குப்பம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறதுபுலிக்குகை.

47.   காஞ்சி கைலாச நாதர் கோயிலை கட்டியவர்- இராஜசிம்மன்/ இரண்டாம் நரசிம்ம வர்மன்.

48.   பாண்டியர்களின் குடைவரை கோயில்கள் காணப்படும் இடங்கள்:

          1.    மகிபாலன்பட்டி

          2.    மூவரைவென்றான்

          3.    பிரான்மலை

          4.    அழகிய பாண்டியபுரம்

          5.    பிள்ளையார் பட்டி

          6.    மலையடிக்குறிச்சி

          7.    திருப்பரங்குன்றம்

          8.    குன்றக்குடி

          9.    சித்தன்னவாசல்

         10.   திருமயம்

         11.   குடுமியான் மலை

49.   பாண்டியர் காலத்து ஒற்றை கற்றளிக்கு .கா. - வெட்டுவான் கோயில்.(கழுகுமலை)

50.   தென்னகத்து எல்லோரா என சிறப்பிக்கப்படும் கோயில் - வெட்டுவான் கோயில்.

51.   பாண்டியர் கால கட்டிட கலைக்கு சிறந்த சான்று - திருகற்றளிநாதர் கோயில்.( திருப்பத்துர்)

52.   தமிழக கட்டிட கலை வரலாற்றில் யாருடைய காலம் பொற்காலம் என அறியப்படுகிறது - பிற்கால சோழர்கள் காலம்.

53.   புதுக்கோட்டை உள்ள நார்த்தாமலை கோயிலை கட்டியவன் - விஜாலய சோழன்.

54.   எந்த கோயிலின் வெளிச்சுவர் சதுர வடிவிலும் உட்சுவர் வட்ட வடிவிலும் உள்ளது- நார்த்தாமலை கோயில்.

55.   காவிரியாற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கோயில்களை கட்டியவன்ஆதித்தசோழன்.

56.   பிரம்மபுரிச்சுவரர் கோயில் மற்றும் எறும்பூர் கடம்பேஸ்வரர் கோயிலை கட்டியவன்- பாரந்தக சோழன்.

57.   சோழர் கால கட்டிட கலையில் யாருடைய பங்கு குறிப்பிடத்தக்கது- செம்பியன்மாதேவி.

58.   தென்னகத்தின் மேரு என சிறப்பிக்க படும் கோயில் - தஞ்சை பெரிய கோயில்.

59.   தமிழக கட்டிடகலையின் மணிமகுடமாக விளங்கும் கோயில்- தஞ்சை பெரிய கோயில்.

60.   முற்றிலும் கருங்கற்களை கொண்டு 216 அடி உயரம் மற்றும் 13 அடுக்கு கொண்ட விமானத்தை கொண்ட இராஜராஜேஸ்வரம் கோயிலை கட்டியவர்- முதலாம் இராஜராஜன்.

61.   தஞ்சை பெரிய கோயிலின் முதல் வாசல் - கேரளாந்தகன் திருவாசல். இரண்டாம் வாசல்இராஜராஜன் திருவாசல்.

62.   தஞ்சை பெரிய கோயிலில் உள்ள எண்கோண வடிவிலான சிகரத்தின் எடை- 80 டன்.

63.   தஞ்சை பெரிய கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு1987.

64.   கங்கை கொண்ட சோழப்புரத்தை கட்டியவர் ( 170 அடி உயரம்)- முதலாம் இராஜேந்தின்.

65.   திரிப்புவனம் கம்பககரேசுவரர் கோயிலை கட்டியவன் (126 அடி)- மூன்றாம் குலோத்துங்க சோழன்.

66.   விஜய நகர கால கோபுரங்கள் உள்ள கோயில்கள் காணப்படும் இடங்கள்- திருவண்ணாமலை மதுரை , இராமேஸ்வரம்.

67.   ஜலகண்டேஸ்வரர் கோயில் எங்கே உள்ளதுவேலூர்.

68.   விஜயநகர கட்டிடகலையை பின்பற்றி எழுந்த கட்டிடக்கலை - நாயக்கர் கால கட்டிடக்கலை.

69.   கால் மண்டபம் மற்றும் 1000 கால் மண்டபம் எழுப்புதல் யாரின் சிறப்புநாயக்கர்க்களின்.

70.   நாயக்கர் கால கட்டிடக்கலை க்கு .கா - திருமலைநாயக்கர் மகால், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில்) மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருச்சி தாயுமானவர் கோயில்.

71.   குதிரைமண்டபம் காணப்படும் கோயில்திருவரங்கம்.

72.   1000 கால் மண்டபம் காணப்படும் கோயில்கள் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவரங்கம் , சிதம்பரம் நெல்லையப்பர் கோயில் , திருவண்ணாமலை இராமேஸ்வரம்.

73.   சிற்பகலையின் தோற்றுவாய்நடுகற்கள்.

74.   நடுகற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்கள் - தொல்காப்பியம் ,அகநானுறு புறநானூறு.

75.   நடுகற்களின் வேறு பெயர்கள் - வீரக்கல் ,நினைவுக்கல்.

76.   கல்லினால் செய்யப்படும் சிற்பம்- கற்சிற்பம்.

77.   உலோகத்தினால் செய்யப்படும் சிற்பங்கள் - படிம உருவங்கள்.

78.   சங்க காலத்தில் மரசிற்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தததை எந்த நூலின் மூலம் அறியலாம்பரிபாடல்.

79.   சுடுமண் சிற்பங்கள்மற்றும் ஒடுகள் கண்டறியப்பட்ட இடங்கள்- கொற்கை அரிக்கமேடு ,உறையூர்.

80.   சிற்ப கலைஞர்களை மண்ணீட்டாளர் என அழைக்கும் வழக்கம் இருந்ததாக கூறும் காப்பியம்மணிமேகலை.

81.   காவிரிபூம்பட்டினத்தில் இருந்த சுதை சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள்  கண்டுகளித்ததாக கூறும் காப்பியம்- மணிமேகலை.

82.   தமிழ்நாட்டில் பௌளத்த சமண சமயங்கள் பரவிகிடந்த காலம் - பொ.3முதல் 10 வரை.

83.   தொடக்கத்தில் பௌளத்தர்கள் எதை வணங்கிணர்பாதப்பீடிகை,தரும சக்கரம்.

84.   சமணர்கள் வழங்கியது - அருகபெருமாள் உருவம் , தீர்த்தங்கரர்கள் உருவம்.

85.   சுதை என்பது சுண்ணாம்பை அரைத்து கரும்புச்சாறு வெல்லச்சாறு நெல்லிக்காய் சாறு வச்சிரம் போல உருவங்கள் செய்வது என கூறியவர்தட்சிணாமூர்த்தி.

86.   சிற்பத்தின் வகைகள் - தனிசிற்பம் , புடைப்பு சிற்பம்.

87.   தமிழ்நாடு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு அமைந்துள்ளதுமாமல்லபுரம்.

88.   தொடக்க கால சிற்பங்கள் எதனால் செய்யப்பட்டு இருந்தன-  மரம், சுதை.

89.   கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்ட கோயில் - சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்.

90.   சுதையால் செய்யப்பட்ட கடவுள் உருவங்கள் காணப்படும் கோயில்- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சி பாண்டவதூத பெருமாள் கோயில்.

91.   கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை பின்பற்ற பட்ட காலம்- பல்லவர் காலம்.

92.   உலோகத்திலான சிற்பங்கள் செய்யப்பட்ட காலம் - சோழர் காலம்.

93.   தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறு அமைப்பதுபிரதிமை.

94.   பிரதிமை உருவங்களில் பழமையானது - பல்லவ அரசர்களின் உருவங்கள்.

95.   உலோகங்களால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் தோன்றிய காலம்- சோழர்கள் காலம்.

96.   கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம்- பல்லவர் காலம்.

97.   துவாரபாலகர் உருவம் புடைப்பு சிற்பமாக காணப்படும் கோயில்கள் யார் காலத்தியது - முதலாம் மகேந்திர வர்மன்.

98.   தமிழ்நாட்டின் முதல் கற்சிற்பம் - துவாரபாலகர் புடைப்பு சிற்பம்.

99.   மாமல்லபுரத்தில் எதன் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ள மண்டபம் - கோவர்த்தன மலை மண்டபம்.

100. கங்கை பூமிக்கு வர யார் சிவபெருமானை நோக்கி தவம் இருந்த காட்சி மாமல்லபுரத்தில் காணப்படுகிறதுபகீரதன்.

101. ஒரே மலையில் இரண்டு குடைவரை கோயில் காணப்படும் இடம்நாமக்கல்.

102. ஒரே கல்லான ஆன மற்றும் உலகின் மிகப்பெரிய நந்தி சிற்பம் எங்குள்ளது-– ஆந்திராஅனந்தபூர்- லெபாஷி.

103. யாருடைய காலத்தில் தழ்ந்த புடைப்பு சிற்பங்கள் காணப்பட்டது- பல்லவர்கள் காலம்.

104. உயர்ந்த புடைப்பு சிற்பங்கள் யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது- சோழர்கள் காலம்.

105. இந்தியாவில் உள்ள நந்தி சிற்பங்களில் இரண்டாவது பெரிய சிற்பம் உள்ள கோயில் - தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி.

106. தஞ்சை கோயில் நந்தி யின் அளவுகள்

          1.    உயரம் 12 அடி

          2.    நீளம் 19.5 அடி

          3.    அகலம் 8.25 அடி

107. நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ள கோயில்- தாராசுரம்.

108. தாராசுர கோயிலை கட்டிய சோழ மன்னன் - இரண்டாம் இராஜராஜன்.

109. சங்க காலத்திலும் உலோக சிற்பங்கள் இருந்து இருக்கலாம் என கூறும் நூல்கள்- மதுரை காஞ்சி ,குறுந்தொகை ,பட்டினபாலை.

110. உலோக சிற்பங்கள் மற்றும் செப்பு திருமேனிகளின் காலம் - சோழர்கள் காலம்.

111. சோழர்கள் கால செப்பு திருமேனிகளின் உலக புகழ் பெற்றது - விகம பரம நடராஜர் சிலை.

112. சோழர்கால சிற்பகலையின் தொடர்ச்சி-  பிற்கால பாண்டியர்கள்.

113. ஒவ்வு எனும் வினைச்சொல்லில் இருந்து தோன்றியது- ஒவியம்.

114. ஒவ்வு என்பதன் பொருள்  - ஒன்றை பற்று ஒன்றை போலவே இருத்தல்.

115. ஒவியக்கலையின் வகைகள் - காட்சி ஒவியம் ,கற்பனை ஒவியம்.

116. ஒவியங்களை இலக்கியத்தில் எவ்வாறு பதிவு செய்துள்ளனர் - சித்திர செய்தி , வட்டிகை செய்தி.

117. எந்தெந்த கோடுகளை பயன்படுத்தி ஒவியங்கள் வரைந்தனர்வளைக்கோடு,  கோணக்கோடு , நேர்கோடு.

118. கோட்டோவியத்தின் வேறு பெயர்கள் - புனையா ஒவியம் ,வரிவடிவ ஒவியம்.

119. மடலேறுதலின் போது பனை ஒலையில் கோடுகளால் வரைந்த ஒவியம்- வரிவடிவ ஒவியம்

120. வரிவடிவ ஒவியம் பற்றிய செய்திகள் முதன்முதலில் கண்டறியப்பட்ட நூல்நெடுநல்வாடை.

121. புனையா ஒவியத்தில் பலவித வண்ணங்களை பயன்படுத்தினால்-முழு ஓவியம்.

122. ஒவியம் வரைவோர் எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டனர்

          1.    ஒவியன்

          2.    கண்ணுள் வினைஞர் 

          3.    ஒவிய வல்லோன்

          4.    ஒவிய புலவன்

123. புடைப்பு ஒவியங்கள் காணப்படும் இடங்கள்:

          1.    காவிரிபூம்பட்டினம்

          2.    அரிக்கமேடு

          3.    காஞ்சி

          4.    செங்கம்

124. கறுப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் தீட்டப்பட்ட பானைகள் கண்டறியப்பட்ட இடம்- கீழடி.

125. மக்கள் கூட்டத்தை காட்டும் ஒவியம்பிரதிமை.

126. தெய்வ வடிவங்களை காட்டும் ஒவியம்பதுமை.

127. ஒவியம் பற்றிய செய்திகள் காணப்படும் தொன்மையான இலக்கண நூல்தொல்காப்பியம்.

128. எழுத்து என்னும் சொல்லின் பொருள்ஒவியம்.

129. ஒவியம் தீட்ட அரண்மனையில் அமைக்கப்பட்டு இருந்த பகுதி - ஓவிய மாடம்.

130. தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் அமைத்து இருந்ததை கூறும் நூல்நெடுநல்வாடை.

131. பல்லவர் கால ஒவியங்கள் காணப்பட்ட பகுதி - பனமலை காஞ்சி ,திருமலைபுரம்.

132. சோழர் கால ஒவியங்கள் காணப்பட்ட பகுதி - கருவூர்தேவர் ஒவியம், தஞ்சை சிவன் நாட்டியமாடும் பெண்கள் ஒவியம், சேரமான் பெருமாள் நாயனார் ஒவியங்கள்.

133. சித்தன்னவாசல் ஒவியம் காணப்படும் மேற்கூரை பகுதிஏழடிபட்டம்.

134. சுவர் ஓவியங்களுக்கு சான்று - உதயணணின் பள்ளியற சுவர் ,கோப்பெருந்தேவி பள்ளியறை சுவர்.

135. சித்திர மாடத்தில் இருந்த போது இறந்த பாண்டிய மன்னன் -பாண்டியன் நன்மாறன்.

136. சித்திர மாடத்திலேயே பாண்டியன் நன்மாறன் இறந்த செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல்-புறநானூறு. ( மாங்குடி மருதனார்)

137. பாண்டியனின் சித்திர மாடங்கள் பற்றி நக்கீரர் எழுதிய நூல்நெடுநல்வாடை.

138. திருப்பரங்குன்றம் கோயில் மண்டபத்தில் எழுதொழில் அம்பலம் ஒவிய சாலை பற்றி கூறும் நூல்பரிபாடல்.

139. உதயணனின் பள்ளியறை சுவர் ஒவியம் பற்றி கூறப்பட்டுள்ள நூல்பெருங்கதை.

140. புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலன் தந்தை மாசத்துவன் தவமியற்றிய சாலைகளிலும் ஒவியங்கள் காணப்பட்டதாக கூறும் காப்பியம்மணிமேகலை.

141. படம் எனும் சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டதுபடாம்.

142. படாம் என்பதன் பொருள்துணி.

143. சித்திரம் எழுதும் கோல்துகிலிகை.

144. துணி ஒவியத்தின் வேறு பெயர்கள்- சித்திரபடாம் ,சித்திர திரை.

145. காவிரிபூம்பட்டினத்தின் உவவனம் எனும் சோலையின் காட்சி சித்திரபடாம் போல அழகாக இருந்ததாக கூறியவர் - சித்தலை சாத்தனார்.

146. ஒவியம் வரையப்பட்ட துணி ஒவிய எழினி என கூறியவர்இளங்கோவடிகள்.

147. ஒவியம் வரைய பயன்படும் பலகை - வட்டிகை பலகை.

148. புவிசார் குறியிடு பெற்ற ஒவியம்-தஞ்சாவூர் ஒவியம்.

149. தஞ்சாவூர் ஒவியங்கள் வண்ணங்கள்:

          1.    மைய ஒவியம் - நீலம் பச்ச மஞ்சள் வெள்ளை

          2.    பின்புலம் - கரும்பச்சை சிவப்பு மற்றும் அடர்நீலம்

150. தமிழின் நாற்கவிகளில் ஒன்றுசித்திரக்கவி.

151. இசை என்பதுகாரணப்பெயர்.

152. இசைக்கு அடிப்படைஒசை.

153. ஏழிசை நரம்பின் ஒசை எனும் வரிகள் காணப்படுவதுதிருப்பதிகம்.

154. இசை யின் வகை: 7 அவை:

          1.    குரல்

          2.    துத்தம்

          3.    கைக்கிளை

          4.    உழை

          5.    இளி

          6.    விளரி

          7.    தாரம்

155. ஏழிசைகளில் எந்த இசை வளர்ச்சிக்கு ஆதாரமானதுதாரம்.

156. இசை தோன்றும் இடங்கள்:

          1.    குரல் - மிடறு

          2.    துத்தம் - நாவு

          3.    கைக்கிளை - அண்ணம்

          4.    உழை - சிரம்

          5.    இளி - நெற்றி

          6.    விளரி - நெஞ்சு

          7.    தாரம் - மூக்கு

157. உயர்ந்து செல்லும் இசை நிரலைஆரோசை.

158. தாழ்ந்து செல்லும் இசை நிரலை- அமரோசை.

159. இசைக்கருவிகளின் வகைகள் - தோல் / துளை / நரம்பு / கஞ்ச கருவி.

160. குழலினிது யாழினிது என்று கூறியவர்வள்ளுவர்.

161. துளைக்கருவிகளில் தொன்மையானதுகுழல்.

162. குழலின் வேறு பெயர்கள் - வேய்ங்குழல் புல்லாங்குழல்.

163. குழல் செய்ய பயன்படுத்த பட்ட பொருள்கள்மூங்கில், சந்தனம் ,கருங்காலி செங்காலி.

164. முல்லை நிலத்தவரின் முதன்மை இசைக்கருவிவேய்க்குழல்.

165. வில்யாழ் என்பதுநரம்புக்கருவி.

166. ஆநிரைகளை மேய்க்கும் ஒருவன குமிழ் மர கொம்புகளை வில்லாக வளைத்து அதில் மரல் நாரினை நரம்பாக கட்டி வில்யாழ் அமைத்து குறிஞ்சி பண் வாசித்தான் என கூறும் நூல் - பெரும்பாணாற்றுபடை.

167. வில்யாழை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட யாழ்கள்:

          1.    பேரியாழ்,

          2.    மகரயாழ்

          3.    சகோடயாழ்

          4.    செங்கோட்டியாழ் ,

          5.    பெருங்கலம் எனும் ஆதியாழ்

168. தொல்காப்பியம் கூறும் தோல் இசை கருவிகளில் ஒன்றுபறை.

169. தோல் இசைக்கருவிகளின் தாய்  - பறை.

170. தோல்கருவிகள் 30 என கூறியவர் - அடியார்க்கு நல்லார்.  (பேரிகை படகம் இடக்கை உடுக்கை சிறுபறை பெருபறை மற்றும் நாழிகை பறை)

171. அதிகம் பயன்படுத்தபட்ட தோல் கருவிமத்தளம்.

172. இசைக்கும் போது எதனை முதன்மை கருவியாக கொள்வர்மத்தளம்.

173. இடையிடையே வாசிக்கப்படும் இடைக்கருவிசலிகை.

174. உடுக்கை வாசிப்பவர் மற்றும் கெட்டிமேளம் வாசிப்பவர் காணப்படும் கோயில்கள் (தென்னிந்திய கல்வெட்டு களில்)-இராஜராஜேஸ்வர கோயில்.

175. முதுநாரை முதுகுருகு எனும் இசைநூல்கள் இருந்தததை குறிப்பிடும் நூல்-இறையனார் களவியல் உரை.

176. பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயம் இந்திரகாளியம் போன்ற இசைநூல்களை பற்றி கூறியவர்-அடியார்க்கு நல்லார்.

177. இசை நுணுக்கம் என்னும் நூலை எழுதியவன்- யந்தன் எனும் பாண்டிய இளவரசன்.

178. குலோத்துங்கன் இசைநூல் பற்றி எந்த உரைபாயிரத்தில் கூறப்பட்டுள்ளது- யாப்பருங்கல காரிகை.

179. பஞ்சமரபு எனும் நூலை எழுதியவர்-அறிவனார்.

180. பஞ்சமரபு எனும் நூலை உரையோடு வெளியிட்டவர்- . சுந்தரேசனார்.

181. இசைத்துண்கள் காணப்படும் இடங்கள்- திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, செண்பக நல்லூர், மதுரை தாடிக்கொம்பு அழகர்கோயில்,  கிருஷ்ணாபுரம், தென்காசி, குற்றாலம் சுசீந்திரம், களக்காடு.

182. ஆண் இசைக்கலைஞர் பாணர்.

183. பெண் இசைக்கலைஞர் பாடினி.

184. இசைக்கலைஞர் வகைகள்- இசைப்பாணர் , யாழ்ப்பாணர் , மண்டைப்பாணர்.

185. துளைக்கருவி வாசிப்பவர், தோல்கருவி வாசிப்போர் நரம்புகருவி இசைப்போர் கண்டத்தால் பாடுவோர் என இசைக்கருவி வாசிப்போர் வகைகளை பற்றி கூறும் காப்பியம்- சிலப்பதிகாரம் .(இந்திர விழாவூரெடுத்த காதை)

186. யாழ்பாணர் பற்றிய செய்தி அதிகம் காணப்படுவது- சிறுபாணாற்றுபடை , பெரும்பாணாற்றுபடை.

187. ஐந்திணைகளின் பண்கள்:

          1.    குறிஞ்சி - குறிஞ்சிப்பண்

          2.    முல்லை - சாதாரிபண்

          3.    மருதம் - மருதப்பண்

          4.    நெய்தல் - செவ்வழிப்பண்

          5.    பாலை -பஞ்சுரப்பண்ட

188. மலை பகுதியில் விளைந்து இருந்த தினைபயிரை உண்ணவந்த யானை அங்கு இசைக்கப்பட்ட குறிஞ்சி பண்ணை கேட்டு தினைபயிரை உண்ணாமல் இசையில் மயங்கி நின்றது என கூறும் நூல்- அகநானூறு.

189. போரில் புண்பட்ட வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பற்ற பாடப்பட்ட பண் (புறநானூறு)-காஞ்சி பண்.

190. மருதப்பண்ணை பாடிய போது பொழுது விடிந்தது என கூறும் நூல் - மதுரைக்காஞ்சி.

191. மாலை வேளைமில் செவ்வழிபண் இசைக்க உதவிய கருவிகள்- ஆகுளி, முழவு.

192. நிலம் அடிப்படையிலான பண்கள் தவிர சங்க காலத்தில் காணப்பட்ட மற்ற பண்கள்- காமரம், நைவளம்.

193. பரிபாடலில் காணப்படும் இசைப்பாடல்கள்-வெறியாட்ட பாடல் ,வள்ளை பாடல்.

194. மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்கு துணை நின்றவர்கள் என சிலப்பதிகாரம்

கூறுவது- இசை ஆசிரியன் மத்தளம் இசைக்கும் தண்ணும்மை ஆசிரியன் வேய்குழல் ஊதுவோன் யாழ் ஆசிரியன்.

195. இயக்கங்களை கொண்டு இசையின் வகைகள்- முதல்நடை வாரம் கூடை திரள்.

196. சிலப்பதிகாரத்தில் இசைக்குறிப்பு நிரம்பிய காதைகள்- அரங்கேற்று காதை, ஆய்ச்சியர் குரவை,  கானல்வரி  வேனிற் காதை, கடலாடு காதை,  புறஞ்சேரியிறுத்த காதை.

197. யார் தேவார பாடல்களை பண் சுமந்த பாடல்கள் என குறிப்பிட்டார்-மாணிக்கவாசகர்.

198. செய்யுளை பண் அமைபாபோடு படைப்பாளனே படைபாபதற்கு .கா தேவாரம்.

199. எருமையின் கனைப்பொலி கேட்டதும் வேய்குழலை ஊதியதும் இசையினை கேட்டு எருமை வீடு வந்து சேர்ந்தது என கூறியவர்- திருஞானசம்பந்தர்.

200. தம்மானையறியாத பதிகத்தை பாடியவர்-சுந்தரர் . (கொல்லி மற்றும் கௌவானம் பண்)

201. கொல்லிப்பண் மற்றும் கௌளவானப்பண் நல்லிரவில் பாடப்பட்டது என கூறியவர்- சேக்கிழார்.

202. யாழ்பாணர் மரபில் வந்த பாடினியை கொண்டு பழைய பண் அமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தவர் (திருமுறை கண்ட புராணம்)-திருமுறை கண்ட சோழன்.

203. பண்களை கோயில்களில் பாட ஒதுவார்களை நியமித்தவன்  - திருமுறைகண்ட சோழன்.

204. குடுமியான் கல்வெட்டை பொறித்தவர் -முதலாம் மகேந்திர வர்மன்.

205. எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய எனும் வரிகள் காணப்படும் கல்வெட்டு-குடுமியான் கல்வெட்டு.

206. எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய என்பது எதை குறிக்கிறது- சங்கீரணம் எனும் இசைப்பற்றி.

207. தேவாரங்களில் காணப்படாத சாளரபாணி காணப்படுவது- திருவிசைப்பா.

208. இடைக்காலத்தில் தோன்றிய இசைமரபுகள் என வெள்ளை வாரணர் குறிப்பிடுவன- தேவார பண், சேக்கிழார் கால பண், சாரங்க தேவர் கால பண்.

209. கீர்த்தனைகளை பாடியவர்-கோபால கிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயர்.

210. நடனக்கலையின் வேறுப்பெயர்கள்- ஆடல்கலை , கூத்து கலை.

211. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள கூத்து வகைகள்:

          1.    வேவன் ஆடும் வெறிக்கூத்து.

          2.    வீரர்கள் ஆடும் கருங்கூத்து.

          3.    பெண்கள் ஆடும் வள்ளிகூத்து.

          4.    இளையவீரனின் வெற்றி கூறும் கழனிலை கூத்து.

212. சங்க காலத்தில் கூத்துக்கலையை வளர்த்தவர்கள்-கூத்தர்கள்.

213. கூத்தர் இன ஆண்கள்- கூத்தன் ஆடுமகன் , ஆடுகள் மகன்.

214. அரசர்கள் விறலியருக்கு பரிசளித்த செய்தியினை பாடியவர்- கோவூர் கிழார், மாங்குடி மருதனார்.

215. சிலப்பதிகாரத்தில் குறிப்பிட படும் நாடக மகளிர் எனும் தொடர் நடனமகளிர் கூத்தமகளிர் விறலியர் எனும் பொருளை அழிப்பதாக கூறியவர்- மா. இராசமாணிக்கனார்.

216. நடனக்கலை கற்பிக்கும் ஆசிரியர்-தலைக்கோல் ஆசான்.

217. பெண்குழந்தைகள் நடனம் கற்கும் வயது- 7வயது முதல் 12 வயது வரை. ( 6 வருடங்கள்).

218. தலைக்கோல் ஆசான் எந்த இருவகை கூத்துக்களில் சிறந்தவராக இருக்க வேண்டும்- வேத்தியல், பொதுவியல் கூத்துக்கள்.

219. அடியார்க்கு நல்லார் கருத்துப்படி கூத்தின் வகைகள்- சொர்க்கம், மெய்க்கூத்து அபிநயம், நாடகம்.

220. இசையுடன் கூடிய தூய நடனம்- சொர்க்கம்.

221. இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம்-மெய்க்கூத்து.

222. இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம்-அபிநயம்.

223. ஆடல் என்பது எல்லா வகை கூத்துகளையும் குறிக்கும் என கூறியவர்-அடியார்க்கு நல்லார்.

224. ஆடல் வகைகள்:

          1.    நின்றாடல் (6)

          2.    வாழ்ந்தாடல் (5)

225. இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம் - நாடகம்.

226. நின்றாடல் வகைகள்-அல்லியம், கொடு கொட்டி , குடைக்கூத்து,  குடக்கூத்து , பாண்டரங்கம், மல்லியம்.

227. வீழ்ந்தாடல் வகைகள்- துடி கடையம், பேடு மரக்கால் பாவை.

228. அகக்கூத்து மற்றும் புறக்கூத்து ஆகிய இரண்டுமே ஆடல் என கூறியவர்- அடியார்க்கு நல்லார்.

229. புறக்கூத்தில் காட்டப்படும் முத்திரைகள்- பிண்டி, பிணையல்.

230. அகக்கூத்தில் காட்டப்படும் முத்திரைகள் - எழிற்கை, தொழிற்கை.

231. ஒரு கையில் காட்டப்படும் முத்திரை மற்றும் அதன் வகைகள் - பிண்டி, 24 வகைகள.

232. பிணையலின் வகைகள் எத்தனை-13.

233. நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து வந்த முறையின் வழிமுறை வழாமல் என கூறும் காப்பியம்-சிலப்பதிகாரம்.

234. வேத்தியல் கூத்தின் வேறு பெயர்கள்- வசைக்கூத்து,  வரிக்கூத்து, சாந்திகூத்து,  இயல்பு கூத்து.

235. பொதுவியல் கூத்தின் வேறுபெயர்கள்- புகழ்கூத்து, வரிசாந்தி கூத்து, வினோத கூத்து,  தேசிய கூத்து,  தமிழ் கூத்து.

236. கூத்து பற்றிய நூல்கள்:

          1.    பரதம், அகத்தியம் ,முறுவல் ,செயந்தம் ,குணநூல்.

          2.    செயிற்றியம், இசை நுணுக்கம் ,இந்திர காளியம்,

          3.    பஞ்சமரபு ,பரத சேனாதிபதியம், மதிவாணன் நாடக தமிழ், கூத்த நூல்.

237. அடியார்க்கு நல்லார் காலத்தில் மறைந்த கூத்து நூல்கள்- பரதம், அகத்தியம்.

238. குரவைக்கூத்து என்பது- 7-9பேர் வட்டமாக நின்று ஆடுதல்.

239. குரவைகூத்தின் வகைகள்-குன்றக்குரவை , ஆய்ச்சியர் குரவை.

240. சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி மகேந்திர வர்மன் குறிப்பிட்ட நூல்- மத்த விலாச பிரகடனம்.

241. சிவபெருமானின் நடனங்களான பதாகை நடனம் லதா விருச்சிக நடனம் ஊர்த்துவ தாண்டவம் மற்றும் ஆனந்த தாண்டவ சிற்பங்கள் காணப்படும் கோயில்-காஞ்சி கைலாசநாதர் கோயில்.

242. கூத்தன் மற்றும் கூத்தியர் உருவ சிற்பங்கள் காணப்படும் கோயில்-காஞ்சி வைகுந்த பெருமாள்கோயில்.

243. கூத்தப்பெருமான் என நாயன்மார்களால் போற்றப்பட்டவன்- தில்லை சிவபெருமான்.

244. பல்லவர்கள் காலத்தில் நடனமாதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- மாணிக்கத்தார், கணிகையர்.

245. 42-நடன மாதர் சிற்பங்கள் காணப்படும் கோயில்-காஞ்சி முக்திச்சுவரர் கோயில்.

246. யாருடைய கால சிற்பாங்களில் கூத்தியர் தனிநடன சிலை இடம் பெற்றது- சோழர்காலம்.

247. பதியிலார் எனும் நடனத்தில் புகழ்பெற்றவர்களை உலகெங்கிலும் இருந்து வர செய்த சோழன் (தஞ்சை கல்வெட்டு)-இராஜராஜசோழன்.

248. காமராச வள்ளி ஊரில் சாக்கை கூத்தாடும் ஒருவருக்கு சாக்கைமாராயன் என பட்டம் வழங்கிய சோழன்- இராஜேந்திர சோழன்.

249. கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளர தொடங்கிய காலம்-நாயக்கர் காலம்,

250. பரதத்தில் ஒருகை முத்திரை- இணையா வினைக்கை.

251. இருகை முத்திரைகள்-

          1.    பிண்டிகை. இணைக்கை.

          2.    பிணைக்கை. இரட்டை கை.

252. விளையாட்டு என்பது- விரும்பி ஆடும் ஆட்டம்.

253. கெடவரல் பண்ணை ஆயிரண்டும்விளையாட்டு எனும் பாடல்வரி இடம்பெற்ற பழமையான இலக்கண நூல்-தொல்காப்பியம்.

254. சிறுமிகளை விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவது போல் நடித்து விளையாடுவது-கெடவரல்

255. உழவர்கள் பயிர்செய்வது போல நடித்து விளையாடுவது- பண்ணை விளையாட்டு.

256. உழவர்கள் பயிர்செய்வது போல நடித்து விளையாடுவது -பண்ணை விளையாட்டு.

257. எண்வகை மெய்பாட்டில் ஒன்றான உவகை நான்கு வழிகளில் தோன்றும் என கூறியவர்-தொல்காப்பியர்.

258. செல்வம் புலனே புணர்வு விளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே எனும் பாடல்வரி காணப்படும் இலக்கண நூல்-தொல்காப்பியம்.

259. குழந்தைகளுக்கான பத்து பருவங்கள் பற்றி  கூறும் சிற்றிலக்கியம்-பிள்ளைத்தமிழ்.

260. பிள்ளைத்தமிழின் வகைகள்-ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்.

261. பிள்ளைத்தமிழின் பொது பருவங்கள்-7

262. பெண்பால் பிள்ளைத்தமிழின் இறுதி 3 பருவங்கள்- அம்மானை ,கழங்கு, ஊசல்.

263. ஆண்பால் பிள்ளைத்தமிழின் இறுதி 3 பருவங்கள்-சிற்றில், சிறுதேர், சிறுபறை.

264. விளையாட்டு என்பது உவகை சுவையில் ஒன்று என கூறியவர்தொல்காப்பியர்.

265. நாட்டுப்புற வீர விளையாட்டுகள்:

          1.    ஏறுதழுவுதல்.

          2.    சிலம்பாட்டம்.

          3.    சடுகுடு.

          4.    இளவட்டக்கல்.

          5.    உரிமரம்.

266. ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படுவது- முல்லைக்கலி.

267. வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு களில் முதன்மையானது-ஏறு தழுவுதல்.

268. காளையின் கொட்டேறி எனும் திமிலை பிடித்து அடக்குவது-சங்ககால முறை.

269. ஏறு தழுவுதலின் பகுதிகள்- வாடிவாசல் , திட்டவாசல்.

270. ஏறு தழுவுதலில் கலந்து கொள்ளும் மாடு- சல்லிமாடு.

271. உடற்பயிற்சி தற்காப்பு போராட்டம் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட விளையாட்டு- சிலம்பாட்டம்.

272. உடலில் உள்ள வர்ம நாடிகளை நோக்கி அடிக்கும் சுவடு முறை- தட்டுவர்ம சுவடு.

273. சிலம்பாட்ட பிரிவுகள்- அடிச்சு பிரிவு , பூட்டு பிரிவு.

274. சிலம்பாட்டம் சிறப்பாக கொண்டாடபடும் மாவட்டம்- குமரி.

275. வெட்சி கரந்தை போன்ற போர் முறையின் தொடர்ச்சி என எந்த விளையாட்டை கூறுவர்- சடுகுடு.

276. சடுகுடு பாண்டிய நாட்டில்-குட்டி.

277. சடுகுடு  சோழ நாட்டில்-பளிச்சப்பிளான் பலீன், சடுகுடு.

278. சடுகுடு தென்சோழ நாட்டில்-சடுகுடு.

279. சடுகுடுவில் கடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் யாரிடம் காணப்பட்டது- பாண்டிய நாடு.

280. சடுகுடுவில் பின்கோடு பக்ககோடு மற்றும் நடுகோடு இட்டு விளையாடும் பழக்கம் கொண்டவர்கள்- கொங்கு நாட்டவர்.

281. விரும்பிய பெண்ணை மணக்க விளையாடப்பட்ட விளையாட்டு- இளவட்டக்கல்.

282. உரிமரம் எதிலிருந்து பெறபடுகிறது -உதிய மரம்.

283. உரிமரம் ஏறுதல் சிறப்புற்று காணப்படும் இடம்- மதுரை.

284. தமிழக நாட்டுபுற விளையாட்டு களில் ஒன்று - கில்லி.

285. கில்லியின் வேறு பெயர்கள்- புல்லுக்குச்சி,  கில்லி தாண்டு, சில்லாங்குச்சி.

286. கில்லி விளையாட்டில்:

          1.    சிறிய குச்சி- கில்லி .

          2.    பெரிய குச்சி-தாண்டல்.

287. பண்ணாங்குழியின் வேறு பெயர்கள் (14குழிகள்) - பல்லாங்குழி ,பள்ளாங்குழி ,பன்னாங்குழி.

288. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் எனும் நூலின் ஆசிரியர் - தேவநேயன். (1952).