11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்-

1.    பொ..மு. முதல் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் வலுவான அரசை நிறுவியவர்கள் சாதவாகனர்கள்.

2.    சாதவாகனர்கள் சமகாலத்தவர்கள்- சேர, சோழ, பாண்டியர்கள்.

3.    தக்காணம் உள்ளடக்கிய பகுதிகள்: தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் , கர்நாடகா, மகாராஷ்டிரா.

4.    ஸ்தூபி - என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும்.

5.    தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி 8 ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன.

6.    அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தை குறிக்கின்றது.

7.    தென்னிந்தியா சமுதாய கல்வெட்டு சான்றுகள், இந்தியாவிற்கு வெளியே:

          1.    பெரனிக்கே , குவாசிர் அல் காதம்எகிப்து.

          2.    கோர் ரோரி - ஓமன்.

          3.    குவாங்லுக் - தாய்லாந்து.

8.    பொருளாதாரம் , அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கெளடில்யர் எழுதிய நூல்- அர்த்தசாஸ்திரம்.

9.    சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய நூல் - காஹாசப்தசதி.

10.   தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் -தொல்காப்பியம்.

11.   முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூல் - எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்.

12.   பொ. . முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இயற்கை வரலாறு  என்ற நூலின் ஆசிரியர் - பிளினி.

13.   பொ. . இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜியோகிரபி என்ற நூலின் ஆசிரியர் -தாலமி.

14.   எட்டுத்தொகை பத்துப்பாட்டு எத்தனை பாடல்கள் கொண்ட இலக்கிய கருவூலம்- 2400 .

15.   எட்டுத்தொகை பத்துப்பாட்டு அடி - 3 அடி முதல் 800 அடி .

16.   பதினெனண் கீழ்க்கணக்கு நூல்களில் நீதி மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை பற்றி பேசும் நூல்களில் முதன்மையானவை- திருக்குறள் , நாலடியார்.

17.   பண்பாடு மற்றும் மத வரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாக பயன்படும் காப்பியங்கள்சிலப்பதிகாரம், மணிமேகலை.

18.   தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குவது -அகோகர் கல்வெட்டுகள்.

19.   தமிழகத்தில் ஆட்சி புரிந்த சோழர் , பாண்டியர், கேரளபுத்திரர் , சத்திய புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகின்ற அசோகரின் கல்வெட்டு - 2 பாறைக் கல்வெட்டு.

20.   சங்ககால 450 -க்கும் மேற்பட்ட புலவர்களில் பெண் புலவர்கள் - 30 புலவர்கள்.

21.   சங்ககால பெண் புலவர்களில் மிக முக்கிய பெண்பாற் புலவர்கள்:

          1.    ஒளவையார்  

          2.    அல்லூர் நன்முல்லையார்.

          3.    காக்கைப்பாடினியார்

          4.    காவற்பெண்டு.

          5.    நல்வெளியார்

          6.    ஒக்கூர் மாசாத்தியார்.

          7.    பாரிமகளிர்

22.   சாதவாகனர் ஆட்சி புரிந்த தலைநகர்- பிரதிஸ்தான். மகாராஷ்டிரா- பைத்தன்.

23.   சாதவாகன அரசர்களுள் பெரும் அரசர்- கௌதமபுத்ர சதகர்னி.

24.   சாக அரசர் நாகபனாவை வென்று நாகபனாவின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டவர்-கெளதமபுத்ர சதகர்னி.

25.   கெளதமபுத்ர சதகர்னி தாய் - கெளதம பாலஸ்ரீ.

26.   சாகர், பகல்வர் ,யவனர்கள் ஆகியோரை கெளதமபுத்ர சதகர்னி வெற்றி கொண்டதாக கூறும் கல்வெட்டு - நாசிக் கல்வெட்டு.

27.   அஸ்வமேத யாகத்தை நடத்தியவர் - கௌதமபுத்ர சதகர்னி.

28.   சாதவாகன நாட்டின் எல்லைகளை விரிவடையச் செய்தவர்- வசிஷ்டபுத்ர புலுமாயி.

29.   கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டவர்-யக்னஸ்ரீ சதகர்னி.

30.   சாதவாகன அரசர் ஹாலா இயற்றிய 700 காதற் பாடல்களைக் கொண்ட  நூல்-  காஹாசப்தசதி.

31.   சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது -பொ.. மூன்றாம் நூற்றாண்டு.

32.   சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சம்- நில மானியம் வழங்குவது.

33.   சாதவாகனர் காலத்தில் பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு -நனிகாட் கல்வெட்டு.

34.   அசோகர் கல்வெட்டுகளில் சத்யபுத்ர என குறிப்பிடப்படுபவர் - அதியமான்.

35.   சோழர்கள் தலைநகரம்-  உறையூர்.

36.   சோழர்கள் துறைமுகம்- புகார் () காவிரிப்பூம்பட்டினம்.

37.   சோழர்கள் சின்னம்- புலி.

38.   புகார் துறைமுகத்தில் வணிகம் குறித்து  கடியலூர் உருத்திரங்கண்ணனார் விளக்குகிற நூல்- பட்டினப்பாலை.

39.   கரிகாலன் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பெருமளவில் - பொன் நாணயங்களைத் பரிசாக அளித்துள்ளார்.

40.   இளஞ்சேட்சென்னியின் மகன்- கரிகால சோழன்.

41.   சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுபவர் -கரிகால சோழன்.

42.   கரிகால சோழனின் ஆட்சிமுறை பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை.

43.   வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும்,பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய 11 வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டவர்- கரிகால சோழன்.

44.   காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம்  பெருக்கியதற்காகவும், காவிரி அணை கட்டி நீரபாசன வசதிகள் ஏற்படுத்தி வேளாண்மை வளர செய்தவர்- கரிகால சோழன்.

45.   ராஜசூய யாகத்தை நடத்தியவர் -பெருநற்கிள்ளி.

46.   மத்திய, வடக்கு கேரளா பகுதிகளையும், தமிழ்நாட்டின் கொங்கு பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்- சேரர்கள்.

47.   சேரர் தலைநகரம்   - வஞ்சி .

48.   சேரர் துறைமுகம்           - முசிறி, தொண்டி.

49.   சேரர் சின்னம்        - வில்.

50.   சேர அரசர்கள் , ஆண்ட பகுதிகள், சாதனைகள் குறித்து கூறும் நூல் -பதிற்றுப்பத்து.

51.   கரூர் அருகே மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களை குறிப்பிடும் கல்வெட்டு - புகளூர் கல்வெட்டு.

52.   தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டுள்ளார்சேரல் இரும்பொறை.

53.   முக்கிய சேர அரசர்கள் -இமயவரம்பன் ,நெடுஞ்சேரலாதன்,சேரன் செங்குட்டுவன்.

54.   செப்பு ஈய - நாணங்களைச் சேர அரசர் வெளியிட்டுள்ளார்

55.   பாண்டியர் தலைநகரம்    - மதுரை.

56.   பாண்டியர் துறைமுகம்    - கொற்கை.

57.   பாண்டியர் சின்னம்         - மீன்.

58.   கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது - கொல்கொய்.

59.   கேரளத்தின் தெற்குப் பகுதிகளின் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகே உள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள்- பாண்டியர்கள்.

60.   மாங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டு பாண்டிய அரசன் யாரை குறிப்பிடுகின்றது - நெடுஞ்செழியன்.

61.   முதுகுடுமிப் பெருவழுதி ,தலையாலங்கானத்துச் நெடுஞ்செழியன், பாண்டிய மன்னர்களை குறிப்பிடுவது - மதுரைக் காஞ்சி .

62.   பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி மன்னன் - முதுகுடுமிப் பெருவழுதி.

63.   வேத வேள்விச் சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி  என்ற பெயரில் புராண கதைப் பொறிப்புகளைத் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளவர்- முதுகுடுமிப் பெருவழுதி.

64.   சேரர், சோழர்  , ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்  தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டவர் - நெடுஞ்செழியன்.

65.   கொற்கையின் தலைவனென்றும், பரதவர்களின் தலைவனென்றும் புகழப்படுபவர்- நெடுஞ்செழியன்.

66.   முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்குப் பெயர் பெற்ற துறைமுகம்-கொற்கை.

67.   நாளங்காடி , அல்லங்காடி யில் விற்பனையாகும் பொருட்கள் பற்றி கூறும் நூல்- மதுரைக்காஞ்சி.

68.   தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்ட பாண்டிய மன்னன் - நெடுஞ்செழியன்.

69.   மகதக் கைவினைஞர்கள் , மாளவ உலோக பணியாளர்கள், மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்றோர் தமிழக கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிடும் நூல் -மணிமேகலை.

70.   உமணர் - உப்பு வணிகர்கள்.

71.   இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்கள்- சாத்து .

72.   ரோம நாட்டு ஜாடிகள்- அம்போரா.

73.   களப்பிரர்களின் காலம் - பொ.. 300 - 600 க்கும் இடைப்பட்ட காலம்.

74.   யாருடைய ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்-களப்பிரர்கள்.

75.   சேந்தன் , கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது - களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர்.

76.   சாதவாகனர்கள் ஆட்சி செய்த பகுதிகள் -ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா.