11TH- இந்திய பொருளாதாரம்
1.
இலக்கமுறை(digital)
பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும் என்று கூறியவர் - சுந்தர் பிச்சை, CEO கூகுல்.
2.
ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பை குறிப்பது - மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP.
3.
ஒரு நாட்டின் மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் :
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு - HDI.
2. வாழ்க்கை தரக்குறியீடு - PQLI.
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு - GNHI.
4.
மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியதால் பெரும் பிரிவினை ஆண்டு என அழைக்கப்படும் ஆண்டு - 1921.
5.
மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர் உருவாக்கப்பட்ட ஆண்டு -1972.
6.
மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடரை உருவாக்கியவர் -ஜிக்மே - சிங்யே - வாங்சுக் .
7.
பூட்டான் நாட்டின் நான்காவது மன்னர்- ஜிக்மே - சிங்யே - வாங்சுக்.
8.
நிலைத்த முன்னேற்றம் ,சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு ,சிறந்த நிர்வாகம், போன்றவை உள்ளடக்கியது- மொத்த நாட்டு மகிழ்ச்சி.
9.
தொழில்மயமான வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் நாடுகள்- வளர்ந்த பொருளாதார நாடுகள்.
10. வளர்ந்த பொருளாதார நாடுகளுக்கு எ.கா:
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. கனடா
3. இங்கிலாந்து
4. பிரான்ஸ்
11. முன்னேற்றம் அடையாத , வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய ,மூன்றாம் உலக நாடுகள் :
1. ஆப்பிரிக்கா.
2. பங்காளதேஷ்.
3. மியான்மர்.
4. பாகிஸ்தான்.
5. இந்தோனேசியா.
12.
உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனை யாவது இடம் - 7 . இடம்
13.
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது - கலப்பு பொருளாதாரம்.
14.
இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்- 60%.
15.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண்துறையில் இருந்து எத்தனை சதவீதம் கிடைக்கிறது - 17%.
16.
உலக பொருளாதாரத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எத்தனையாவது இடம் -7.
17.
உலக பொருளாதாரத்தில் இந்தியா வாங்கும் சக்தியில்
(PPP) எத்தனையாவது இடம் - 3.
18.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் துறை -பணிகள் துறை.
19.
2014 - 2015 உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதம் - 7.6%.
20.
2016 - 2017 உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதம் - 7.1%.
21.
மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் எத்தனை சதவீதத்தில் அதிகரிக்கிறது- 1.7 %
22.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் எந்த நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது -ஆஸ்திரேலியா.
23.
உலக நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதம் - 2. 4%.
24.
உலக வருவாயில் இந்தியா எத்தனை சதவீதம் - 1.2%.
25.
உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதம் - 17.5%.
26.
உலக மக்கள் தொகையில் எத்தனை பேரில் ஒருவர் இந்தியர் – 6 பேர்.
27. கர்நாடகத்தின் முக்கிய தங்க சுரங்க பகுதி :
1. கோலார் தங்க வயல்.
2. ஹட்டி தங்க வயல்.
28.
இந்திய மக்கள் தொகை 100 கோடியை தாண்டிய ஆண்டு - 2001.
29.
மக்கள் தொகை 1.33% லிருந்து
1.25% ஆக குறைந்தது இது
"சிறு பிளவு ஆண்டு
" என அழைக்கப்படுகிறது - 1951.
30.
இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% இது மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு என அழைக்கப்படுகிறது -1961.
31.
1000- மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிப்பது – குழந்தை பிறப்பு விகிதம்.
32.
1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையை குறிப்பது - இறப்பு விகிதம்.
1. 1951 - பிறப்பு வீதம் - 39.9 - இறப்பு வீதம்- 27.4.
2. 2001- பிறப்பு வீதம் - 25.4 - இறப்பு வீதம் 8.4.
3. 2011- பிறப்பு வீதம் - 21.8 - இறப்பு வீதம் 7.11.
33.
மிகக் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள மாநிலம் - கேரளா - 14.7%.
34.
அதிக அளவு பிறப்பு விகிதம் உள்ள மாநிலம் - உத்தர பிரதேசம் - 29.5%.
35.
மிகக் குறைந்த இறப்பு விகிதம் உள்ள மாநிலம் - மேற்கு வங்காளம் - 6.3%.
36.
அதிக அளவு இறப்பு விகிதம் உள்ள மாநிலம் - ஓரிசா - 9.2%.
37.
2001 - 2011 மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளில் அதிக மக்கள்தொகை பெருக்கத்தை கொண்டுள்ள மாநிலம் - பீகார்.
38.
2001 - 2011 மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளில் குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ள மாநிலம் -
கேரளா.
39. (BIMARU) பிமாரு என அழைக்கப்படும் மாநிலங்கள்:
1. பீகார் (BI).
2. மத்திய பிரதேசம்
(MA).
3. ராஜஸ்தான் (R).
4. உத்தரப் பிரதேசம் (U).
40.
ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கு மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பது- மக்கள் தொகை அடர்த்தி.
41.
மக்கள் தொகை அடர்த்தி -
1. 1951- மக்கள் தொகை அடர்த்தி
- 117.
2. 2001- மக்கள் தொகை அடர்த்தி - 325.
3. 2011- மக்கள் தொகை அடர்த்தி - 382.
42.
இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தியை விட மிகுந்து காணப்படும் மாநிலங்கள் - கேரளா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம்.
43.
மேற்கு வங்காளம் மக்கள் தொகை அடர்த்தி - 880 .
44.
பீகார் மக்கள் தொகை அடர்த்தி - 1102 .
45.
மிகக் குறைவான மக்கள் தொகை அடர்த்தி உடைய மாநிலம்-அருணாச்சல பிரதேசம். சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள்.
46.
1000 ஆண்களுக்கு பெண்களின் விகிதத்தை குறிப்பது - பாலின விகிதம்.
47.
பாலின விகிதம் - 1000 ஆண்களுக்கு உள்ள பெண்கள்:
1. 1951 - பாலின விகிதம் - 946.
2. 2001 - பாலின விகிதம் - 933.
3. 2011 - பாலின விகிதம் - 940.
48.
2011- குறைவான பாலின விகிதம் உடைய மாநிலம் - ஹரியானா - 877.
49.
2011- அதிக பாலின விகிதம் உடைய மாநிலம் - கேரளா .1084
50.
1901-1911ஆண்டு காலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம்
- 23.
51.
வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம்:
1. 1951 - வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் - 32.1 ஆண்கள்- 32.5 ,பெண்கள்- 31.7.
2. 1991 - வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் - 58.7.
ஆண்கள் - 58.6,பெண்கள்- 59.0.
3. 2001 - வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் - 62.5.
ஆண்கள் - 61.6,பெண்கள்- 63.3.
4. 2011 - வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் - 63.5.
ஆண்கள்- 62.6 ,பெண்கள்- 64.2.
52. இந்திய கல்வி முறை, அடிப்படையில் எத்தனை நிலைகளை கொண்டுள்ளது - 6.
1. குழந்தைக் கல்வி
2. தொடக்கக்கல்வி
3. இடைநிலைக் கல்வி
4. மேல்நிலைக்கல்வி
5. இளநிலைப் பட்டம்
6. முதுநிலைப் பட்டம்
53.
எழுத்தறிவு வீகிதம் : 1951.
1. 4 -ஆண்களில்- ஒருவர்.
2. 12- பெண்களில்- ஒருவர்.
3. சராசரியாக 6 -பேருக்கு - ஒருவர்.
54.
எழுத்தறிவு விகிதம்:
1. 1951 ஆண்டு - சராசரி -18.3 - ஆண்கள் - 27.2. - பெண்கள் - 8.9.
2. 2001 -ஆண்டு - சராசரி - 64.8 -ஆண்கள் - 75.3. -பெண்கள் - 53.7.
3. 2011 -ஆண்டு - சராசரி - 74.04 -ஆண்கள் - 82.1. -பெண்கள் -65.5.
55. எழுத்தறிவு விகிதம்:
1. கேரளா - 94 .- அதிகம்.
2. மிசோரம் - 91.3%.
3. கோவா - 88.7% .
4. தமிழ்நாடு - 80.1%.
5. பீகார் - 61.8% - குறைவு.
56.
உலகின் வலிமையான (ம) பொரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்திய எந்த இடத்தில் உள்ளது – 7.
57.
மக்கள்தொகை அதிகரிக்க துவங்கியதால் எந்த ஆண்டை பெரும் பிரிவினை ஆண்டு என்று கூறுகிறோம் -1921.
58.
இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகல் என்ற கட்டுரையை எழுதியவர்- அம்பேத்கர் .
59.
யாருடைய காலத்தில் இந்திய தொழில் நுட்ப கழகம் மற்றும் ஆராய்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன - ஜவஹர்லால் நேரு.
60.
1976
- வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி அதன் பிறகு மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் வந்தது.
61.
வரவு செலவு திட்டத்தில் 3% -
(GRD) நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு பெருமளவு நிதி பள்ளிக் கல்விக்கே செலவிடப்படுகிறது.
62.
இந்திய ரயில்வே முதல் wi-fi வசதியை எங்கு துவங்கியது - பெங்களூரு.
63.
தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1950.
64.
நிலக்கரி உற்பத்தியில் எந்த இடத்தில் இந்தியா உள்ளது - 3 .
65.
2011 - ன் படி அதிக எழுத்திறவு விகிதம் பெற்றுள்ள மாநிலம் - கேரளா 92%.
66.
2011 - ன் படி குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்றுள்ள மாநிலம் - பிகார் 53%.
67.
இவற்றுள் மக்கள் தொகை அடர்த்தி மிக குறைவாக உள்ள மாநிலம் -அருணாச்சலப் பிரதேசம்.
68.
திட்டமிடுதலை நம் நாட்டில அறிமுகப்படுத்தியவர் - ஜவஹர்லால் நேரு.
69.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமரத்தியா சென் பெற்ற ஆண்டு – 1998.
70.
நாட்டுவரமானத்தை மொத்த மக்கள் தொகையில் வகுக்கக் கிடைப்பது - தலா வருமானம்.
71.
ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர் - ஜவஹர்லால் நேரு .
72.
மூலதன செறிவு நுட்ப முறையில் உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று தொழில் நுட்ப தெரிவு என்ற புத்தகத்தில் அமர்த்தியாகுமார்சென் என்பவர் குறிப்பிடுகிறார்.
73. ஜே.சி.குமரப்பா எழுதிய புத்தகம்:
1. நிலைத்த பொருளாதாரம்.
2. இயேசுவின் வழிமுறைகள்.
3. கிறிஸ்துவம் அதன் பொருளாதரமும்.
74.
இந்திய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா (ம) இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை ஒன்றாக இணைந்த ஆண்டு - 27.8.2007.
75.
பொது (ம) தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது- கலப்புப் பொருளாதாரம்.
76.
மக்கள் தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு - மக்கள் தொகையியல்.
77.
2011 - மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இளைஞர்களின் மக்கட்தொகை அளவில் உள்ளதால் இது மக்கள் தொகை மாறுதலைக் குறிக்கிறது.
78.
B .R .அம்பேத்கார் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை எதன் அடிப்படையில் ஆராய்கிறார் - இந்தியப் ரூபாயின் சிக்கல்கள்.
79.
V.K.R.V இராவ் யாருடைய மாணவராக இருந்தார் - ஜே.எம்.கீன்ஸ்.
80.
பெரும் பிரிவினை ஆண்டு-1921.
81.
சிறு பிளவு ஆண்டு-1951.
82.
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு-1961.
83.
இந்தியாவின் இருப்பு பாதையின் நீளம் - 63000 கி. மீ.
84.
மின் மயமாக்கப்பட்ட பாதையின் நீளம் - 13000 கி. மீ.
85.
புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூலம் - நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு.
86.
புதுப்பிக்க கூடிய மின் சக்தி மூல வளங்கள் - சூரியக் சக்தி, காற்று சக்தி, அலைகள் சக்தி, புவி வெப்ப சக்தி, உயிரி எரிவாயு சக்தி.
87. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் :
1. காடுகள்
2. வனவிலங்குகள்
3. காற்று
4. கடல் வளங்கள்
5. நீர்மின்சக்தி
6. உயிரினத் தொகுதி
7. காற்றாலை மின் உற்பத்தி
88. புதுப்பிக்க இயலாத வளங்கள் :
1. படிம எரிபொருட்கள்
2. நிலக்கரி
3. பெட்ரோலியம்
4. கனிம வளங்கள்
89.
இந்தியா 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடன் உலகின் எத்தனை யாவது இடத்தை பெற்றுள்ளது- 7. (உலக நிலப்பரப்பில் 2.42%)
90.
2007 - ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் காடுகள் எத்தனை மில்லியன் ஹெக்டேர் - 69.09 மில்லியன் ஹெக்டேர்.
91.
இந்தியாவின் காடுகள் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் - 21.02%.
92.
காடுகள் பரப்பளவு :
1. மொத்த காடுகள் - 69.09.
மில்லியன் ஹெக்டேர்.
2. அடர்ந்த காடுகள் - 8.35. மில்லியன் ஹெக்டேர்.
3. ஓரளவு அடர்ந்த காடுகள் - 31.90 .மில்லியன் ஹெக்டேர்.
4. பரந்தவெளி காடுகள்- 28.84. மில்லியன் ஹெக்டேர்.
93.
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது - 3 .
94. எந்த மாநில நிலக்கரி வயல்களில் இருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது:
1. மேற்கு வங்காளம்
2. ஜார்கண்ட்
95. இந்தியாவிலுள்ள இருப்பு:
1. ஹேமடைட்- 14,630 மில்லியன் டன்
2. மேக்னடைட் -10,619மில்லியன் டன்
96.
அலுமினியம் தயாரிக்க பயன்படும் முக்கிய தாது - பாக்சைட்.
97.
60% மைக்கா உற்பத்தியுடன் முதலிடம் வகிக்கும் நாடு - இந்தியா.
98. சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படும் இடங்கள்:
1. டிக்பாய் , பாடர்பூர்
2. நாகர்காட்டிகா , காசிம்பூர்
3. பள்ளியரியா , ருத்ராபூர்
4. சிவசாகர் , மார்ன் -அசாமின்
5. காம்பே வளைகுடா
6. அங்கலேஸ்வர்
7. காலோல் -குஜராத்தின்
99.
தங்கம் கிடைக்கக்கூடிய பகுதி:
1. கோலார் மாவட்டத்தில் உள்ள - கோலார் தங்க வயல் - கர்நாடகா.
2. ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள- ஹட்டி தங்க வயல் - கர்நாடகா.
3. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள - ராம்கிரி தங்கவயல் - ஆந்திரா.
100.
காந்திய பொருளாதார சிந்தனைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவர்-J.C. குமரப்பா.
101.
ஜனநாயக சமதர்மத்தை கொண்டு வந்தவர்-ஜவகர்லால் நேரு.
102.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு -1998.
103.
அம்பேத்கர் முனைவர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை- இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை.
104.
கிராம பொருளாதார முன்னேற்ற கொள்கைகளில் முன்னோடி- ஜோசப் செல்லத்துரை குமரப்பா.
105.
ஜோசப் செல்லத்துரை குமரப்பா - பிறப்பு - (தஞ்சாவூர் - 1892 ஜனவரி 4).
106.
குமரப்பாவை" பச்சை காந்தி "என்று அழைத்தவர் -இராமச்சந்திர குஹா.
107. P.R.பிரமானந்தாவின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக யாரை குறிப்பிட்டார் -
1. D.R. காட்கில்
2. C.N, வக்கில்
3. V.K.R.V.ராவ்
108.
1921 ல் அம்பேத்கர் M.Sc பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை-பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதி பரவலாக்கள்.
109.
காந்தியப் பொருளாதாரம் என்ற கருத்தை உருவாக்கியவர்- ஜோசப் செல்லத்துரை குமரப்பா.
110.
H.W. சிங்கர், J.M.கீன்சின் மாணவர்களில் சிறந்தவராக யார் கருதுகிறார்- V.K.R.V. ராவ்.
111.
இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு - என்ற புத்தகத்தின் ஆசிரியர்
1938 -V.K.R.V. ராவ்.
112.
வறுமை மற்றும் பஞ்சம்: உரிமம் மற்றும் இறப்பு பற்றிய ஒரு கட்டுரையின் ஆசிரியர் -1981-அமர்த்தியா சென்.
113.
1923 ல் எந்த ஆய்வறிக்கையை ஏற்று லண்டன் பொருளாதார பள்ளி அம்பேத்கருக்கு D.SC பட்டம் வழங்கியது-ரூபாயின் பிரச்சனைகள்.
114.
இந்திய ரிசர்வ் வங்கியானது அம்பேத்கர் எழுதிய எந்த நூலின் வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது -ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும்.
115.
முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்" என்ற ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் -V.K.R.V. ராவ்.
116.
அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை" எந்த ஆண்டு குமரப்பா தோற்றுவித்தார் -1935.
117.
குமரப்பா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எழுதிய புத்தகங்கள்:
1. நிலைத்த பொருளாதாரம், இயேசுவின் வழிமுறைகள் – 1945.
2. கிறிஸ்தவம் : அதன் பொருளாதாரமும் வாழ்க்கைமுறையும் – 1945.
118.
யங் இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய கொண்டு அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தவர் - ஜோசப் செல்லத்துரை குமரப்பா.
119.
இந்தியாவின் சுற்றுச்சூழல் சூழலியல் குறித்து அடித்தளமிட்டவர்-ஜோசப் செல்லத்துரை குமரப்பா.
120.
உலக வறுமையை ஓழிப்பதில் சிறந்த கொள்கைகளை வகுத்து தந்தவர் - V.K.R.V. ராவ்.
121.
சீனா, கிழக்கு ஐரோப்பா ,ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று அங்கிருந்து கிராம வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு இந்தியாவில் அமல்படுத்த முனைந்தவர்-ஜோசப் செல்லத்துரை குமரப்பா.
122.
ராவ் அவர்களின் எந்த புத்தகம் பேரியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியது - முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு (1952).
123.
உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று எந்த புத்தகத்தில் அமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளார் -தொழில் நுட்பத் தெரிவு.
124.
சிந்தனையாளர், ஆசிரியர், பொருளாதார ஆலோசகர் மற்றும் நேரடி கொள்கை வடிவமைப்பாளர் என்ற பார்வையில் J.M. கீன்சின் அடிகளைப் பின்பற்றியவர்- V.K.R.V. ராவ்.
125.
ராவ் தேசிய அளவிலான 3 ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கினார்:
1. டெல்லி பொருளாதாரப் பள்ளி -டெல்லி.
2. பொருளாதார வளர்ச்சி கழகம் -டெல்லி.
3. சமூக பொருளாதார மாற்றத்திற்கான கழகம் (பெங்களூர்)
126.
தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் -ஜவகர்லால் நேரு.
127.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது -ஒழுக்கநெறி அடிப்படை.
128. B.R. அம்பேத்கர் இந்திய பொருளாதார பிரச்சினைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார் - இந்திய ரூபாயின் சிக்கல்கள்.
0 Comments
THANK FOR VISIT