11TH- இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் -
1.
LPG என்பதன் பொருள்- தாராளமயம்,தனியார்மயம் ,உலகமயமாதல்.
2. புதிய பொருளாதார கொள்கையின் மூன்று முக்கிய தூண்கள் :
1. தாராளமயம்
2. தனியார்மயம்
3. உலகமயமாதல்.
3.
பொதுத்துறை நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவது - தனியார்மயமாதல்.
4.
உள்நாட்டு பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது - உலகமயமாதல்.
5.
உலகமயமாக்கலின் நேர்மறை விளைவுகள் .
1. சந்தை விரிவாக்கம்.
2. உள்கட்டமைப்பு வளர்ச்சி.
3. உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
4. பன்னாட்டு ஒத்துழைப்பை.
6.
உலகமயமாக்கலின் எதிர்மறை விளைவுகள்.
1. நெருக்கடி போட்டி.
2. முற்றுரிமை அதிகரிப்பு.
7.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது - முதலீட்டு விலக்கல்.
8.
தாராளமயமாக்கலின் நேர்மறை விளைவுகள்:
1. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு.
2. உற்பத்தி அதிகரிப்பு.
3. தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாடு.
4. GDP வளர்ச்சி வீதம் அதிகரிப்பு.
9.
புதிய தொழில் கொள்கையை அறிவித்த ஆண்டு - 1991 ஜூலை 24.
10.
GDP வளர்ச்சி – இந்தியா:
1. 2014 - 5.6%
2. 2015 - 6.4%
3. 2016 -7.0%
4. 2017 - 7.1 %
11.
வெளிநாட்டு நேரடி முதலீடு – FDI.
12.
வெளிநாட்டு தொகுப்பு முதலீடு – FPI.
13.
பன்னாட்டு பண நிதியம் – IMF.
14.
உள்நாட்டு மொத்த உற்பத்தி – GDP.
15.
வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் – FIPB.
16.
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி- 2251 பில்லியன் அமெரிக்க டாலர்.
17.
உலக மொத்த GDPயில் மதிப்பில் இந்தியாவின் பங்கு - 2.9%.
18.
இந்தியா உலக மக்கள் தொகையில் - 17.5%.
19.
இந்தியா உலக நிலப்பரப்பில் - 2.4%.
20.
தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து இருந்து விலக்கு அளித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை எந்த ஆண்டு தொழில் கொள்கையின் முக்கிய அம்சம்-1991.
21.
போட்டி குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 2010.
22.
எந்த ஆண்டு புதிய தொழில் கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை அகற்றியது - 1991 .
23.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நேரடி வெளிநாட்டு முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும் அமைக்கப்பட்டது - முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம்.
24.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 2016 பிப்ரவரி 18.
25.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் படி சந்தா தொகை:
1. விவசாயிகள் கோடைகால பயிர்களுக்கு - 2% சதவிகிதம்.
2. குறுவை சாகுபடி பயிர்களுக்கு - 1.5% சதவிகிதம் .
26.
பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் படி தோட்டப்பயிர்கள் மற்றும் பணப் பயிர்களுக்கு வருடாந்திர சந்தாசத விகிதமாக இருக்கும் -5%.
27.
காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது மிகப்பெரிய உற்பத்தியாளர்- 2.
28.
1955 ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் படி ஏற்படுத்தப்பட்டத - குளிர்பதன கிடங்கு ஆணை-1964.
29.
கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயின் தகுதிக்கு ஏற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஒரு திட்டம் - உழவர் கடன் அட்டை திட்டம். (கிசன் கிரெடிட் கார்டு).
30.
உழவர் கடன் அட்டை திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1998.
31.
உழவர் கடன் அட்டை திட்டம் யாரால் ஏற்படுத்தப்பட்டது - இந்திய மைய வங்கி மற்றும் விவசாயம் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கி. NABARD BANK.
32.
வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது கால்நடை பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு- விவசாயப் பொருட்களுக்கான அங்காடி குழு.
33.
விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு
-விதைகள்.
34.
எந்த ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தக கொள்கையின்படி அனைத்து இடைவினை மற்றும் மூலதன மூலதன பண்டங்களுக்கான இறக்குமதி சுதந்திரம் ஆக்கப்பட்டது - ஏப்ரல்-1,1992.
35.
இறக்குமதிக்கான தீர்வுகளை பெருமளவு குறைக்க பரிந்துரை செய்துள்ள குழு -
செல்லையா குழு.
36.
இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் 2015-2020 வரையிலான காலத்திற்கான புதிய அயல்நாட்டு வாணிபம் கொள்கையை அறிவித்த ஆண்டு-
2015 ஏப்ரல்-1.
37.
ஏற்றுமதி இறக்குமதி கொள்கையின்படி ஏற்றுமதி உதவிகளை 25 சதவீத அளவை குறைக்கவும் இந்திய பொருட்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்ட கருத்து-
இந்திய தயாரிப்பு.
38.
பாதுகாப்பு, ராணுவ கிடங்கு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதி கோரிக்கைகளுக்கு கால அளவு - 24 மாதங்கள்.
39.
உலக வர்த்தகத்தில் 3% ஆக இருக்கிற இந்தியாவின் பங்கை எந்த ஆண்டுக்குள் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை இருமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது- 2020.
40.
சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு - 2000.
41.
2005 ஆண்டின் சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையின்படி எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலாங்கள் அறிவிக்கப்பட்டன- 400.
42.
1990 துவக்க காலத்தில் எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவங்கப்பட்டன-7.
43.
ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை இந்திய அரசு எந்த ஆண்டு எந்த இடத்தில் துவக்கியது- 1965, காண்ட்லா.
44.
ஏற்றுமதி செயலாக்க மண்டலம் மாதிரிகளின் பயன்பாட் உணர்ந்த நாடுகளில் முதன்மையான நாடு - இந்தியா.
45.
எந்த வரி என்பது நுகர்வோர் நகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும் -GST. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி.
46.
பலமுனை வரி- மதிப்பு கூட்டப்பட்ட வரி VAT.
47.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி நடைமுறைக்கு வந்த- ஆண்டு 2017.
48.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஆண்டு
- மார்ச்- 29, 2017.
49.
எந்த ஆண்டு யார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது- 1991 நரசிம்மம் குழு.
50.
1984-85 இல் வேளாண்துறையின் வளர்ச்சி -3.62%. 1995-96 முதல் 2004 -2005 வரை - 1.97% குறைந்தது
51.
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -16 பிப்ரவரி 2016.
52.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்:
1. கோடை காலப் பயிர்களுக்கு சந்தா – 2 %.
2. குறுவை சாகுபடி பயிர்களுக்கு சந்தா - 1.5 %.
3. தோட்டப்பயிர்கள் மற்றும் பணப் பயிர்களுக்கு சந்தா - 5 %.
53.
NABARD - National Bank
of Agriculture and Rural Development.
54.
ICAR - Indian Council of
Agricultural Research.
55.
APMC - Agricultural
Produce Market Committee.
56.
SEZ - Special Economic
Zones.
57.
EPZ - Expert Processing
Zone.
58.
பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்ட
ஆண்டு – 2003.
59.
1500 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட
ஆண்டு - 2001 .
60.
வர்த்தக கொள்கை உருவாக்கப்பட்ட
ஆண்டு -
ஏப்ரல் 1 ,1992.
61.
எத்தனை
பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன- 71.
62.
வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத்தரவை - 50%.
63.
1980 துவக்கத்தில் மேலும் 7 EPZகள் துவங்கப்பட்டன - Export processing zone . பம்பாய்,நொய்டா,சூரத் சென்னை,ஃபால்டா ,விசாகப்பட்டினம்.
64. GST வரி விகிதங்கள்: 5 .
1. 0%
2. 5%
3. 12%
4. 18%
5. 28%
65.
நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியாக நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதம் குறைக்கப்பட்ட
ஆண்டு -1991- (
SLR. , CRR. )
66.
யாருடைய குழு அறிக்கையின்படி வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன- நரசிம்மம் குழு.
67.
GDP ஐப் பொறுத்து இண்டியா எத்தனையாவது இடத்தில் உள்ளது - 9.
68.
ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட இந்து வளர்ச்சி வீதம் என்பது - குறைவான பொருளாதார வளர்ச்சியை குறிக்கும்.
69.
தனியார் மயமாதலைக் குறிக்கும்:
1. முதலீட்டை திரும்பப் பெறுதல்.
2. தேசியமயம் நீக்கல்.
3. தொடர் நிறுவனமாக்கல்.
70.
இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஓவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டும்.
71.
LPGக்கு எதிரான வாதம் -மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு.
72.
FDI என்பதன் விரிவாக்கம் - வெளிநாட்டு நேரடி முதலீடு.
73.
FPI என்பதன் விரிவாக்கம் -வெளிநாட்டு தொகுப்பு முதலீடு.
74.
உலக அளவில் இந்தியா-பழங்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.
75.
வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கியது - FDI மற்றும் FPI.
76.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழு - சட்டப்பூர்வமான குழு.
77.
புதிய பொருளாதாரக் கொள்கை எதனை உள்ளடக்கியது:
1. வெளிநாட்டு முதலீடு.
2. வெளிநாட்டு தொழில்நுட்பம்.
3. வெளிநாட்டு வர்த்தகம்.
78.
நிதி தொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட
ஆண்டு-1991.
79.
உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் - கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாது .
80.
இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் எங்கு ஏற்படுத்தப்பட்டது -காண்ட்லா.
81.
ஜூலை1, 2017 நாளின் படி GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு - 28%.
82.
தொழில் உடைமை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது-தனியார் மயமாக்கல்.
0 Comments
THANK FOR VISIT