12TH-ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

1.    இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் எந்த ஆண்டு மாதத்தில் உருவாக்கப்பட்டது  - 1920. அக்டோபர்

2.    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்கள்.

          1.    எம். என். ராய்

          2.    அபானி முகர்ஜி

          3.    எம்.பி.டி. ஆச்சார்யா

          4.    முகமது அலி

          5.    முகமது ஷாஃபிக்

3.    எந்த ஆண்டு முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வந்தனர்  -  1921 ஜூன் 3.

4.    கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு தொடுக்கப்பட்ட ஆண்டு - 1924.

5.    மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்ட ஆண்டு - 1929.

6.    கான்பூர் சதி வழக்கு யார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது -ஹோம்ஸ்.

7.    செளரி செரா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தவர்ஹோம்ஸ்.

8.    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு   - 1925.

9.    எந்த ஆண்டு இந்தியாவெங்கிலும் இருந்து வந்திருந்த பல்வேறு கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது  - டிசம்பர் 1925.

10.   இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து  யார் சென்று கலந்துகொண்டார்  - சிங்காரவலர்.

11.   1923 மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடியவர்  -  சிங்காரவேலர்.

12.   எந்த  ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் சிங்காரவேலர் முக்கியப் பங்கு வகித்தார்  -   1928.

13.   காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற  ஆண்டு - பிப்ரவரி , செப்டம்பர் -1927.

14.   லில்லுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு - 1928.ஜனவரிஜூலை.

15.   கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு -  1928.

16.   வங்காளத்தின் சணல் ஆலைகளில் பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற ஆண்டு  - 1929 -ஜூலை, ஆகஸ்ட்.

17.   திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு  - 1928. ஜூலை.

18.   பம்பாயில் ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு - 1928. ஏப்ரல்.

19.   ஆங்கிலேய அரசு தொழிற்தகராறுகள் சட்டத்தை இயற்றிய ஆண்டு -  1928 .

20.   பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா சட்டத்தை இயற்றிய ஆண்டு-  1928.

21.   பகத்சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன்வாலா என்ற இடத்தில்  பிறந்தார்  -1907 செப்டம்பர் 28.

22.   பகத்சிங்கின் எத்தனை வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது - 14.

23.   ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் எனும் அமைப்பு யாரால் தோற்றுவிக்கப்பட்டது  -  சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி.

24.   ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்ளிகன் அசோசியேஷன் என்று பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவ்வமைப்புத் திருத்தியமைக்கப்பட்ட    ஆண்டு -  செப்டம்பர் 1928.

25.   ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச் சித்தாந்தங்களும் இந்தப் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது  - 1917.

26.   சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்   -  பகத்சிங்.

27.   1929 ஏப்ரல் 8 இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசியவர்  - பகத்சிங்.

28.   லாகூர் சிறைச்சாலையில் எப்போது  அதிகாலையில் பகத்சிங்  ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்  - 1931 மார்ச் 23.

29.   1928 டிசம்பர் மாதத்தில் லஜபதி ராய் மீது தாக்குதல் நடத்தியவர்  - ஜேம்ஸ்  . ஸ்காட்டு.

30.   ராயின் மரணத்திற்கு பொறுப்பான லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் . ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக  பலியானாவர்  -  சாண்டர்ஸ்.

31.   1920 பிற்பகுதியில்  யார் சிட்டகாங் ஆயுதப்  படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியவர் - கல்பனா தத்.

32.   கம்யூனிஸ்ட் தலைவர் -பி.சி.ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டவர்-கல்பனா தத்.

33.   இந்தியக் குடியரசு ராணுவத்தைச் சேர்ந்தவர் -கல்பனா தத்.

34.   Chittagong Armour Raiders Reminiscences- என்பது யாருடைய சுயசரிதை - கல்பனா தத்.

35.   சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவர்  -  சூரியாசென்.

36.   வங்காளத்தில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர்  - சூர்யா சென்.

37.   எப்போது இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது  -  1930 ஏப்ரல் 18.

38.   சூர்யா சென்-பிப்ரவரி 1933 இல் அவர் கைதானார்.

39.   சூரியாசென் எப்போது  தூக்கிலிடப்பட்டார்  - 1934 ஜனவரி 12.

40.   64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் - ஜதீந்திரநாத் தாஸ்.

41.   மார்ச் 1931 நடந்த கராச்சி அமர்வு யார் தலைமையில் நடந்தது - சர்தார் வல்லபாய் படேல்.

42.   1929 -1930 இல் 311 கோடியாயிருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 1932 -1933 இல் எத்தனை கோடியாகச் சரிந்தது  - 132 கோடி.

43.   முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு  - 1854.

44.   பம்பாயில் பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார்  - கவஸ்ஜீ நானாபாய் தவர் (1815 -1873)

45.   1914 ஆம் ஆண்டு வாக்கில், பம்பாய் மாகாணத்திற்குள்  எத்தனை நூற்பு நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன  -  129.

46.   1875 -76 க்கும் 1913-14க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள் எண்ணிக்கை 47 லிருந்து எத்தனை ஆக அதிகரித்தது  - 271.

47.   முதல் பயணிகள் ரயில்  பம்பாய்க்கும் தானவுக்குமிடையே இயங்கிய ஆண்டு  - 1853.

48.   பிரிட்டிவஷாரால் நிர்வகித்து, ரயில்வே நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் 1911 - எத்தனை நபர்கள் பணியில் இருந்தனர்  - 98,723.

49.   1853 ஏப்ரல் 16 , 3:35 பிற்பகல் அன்று இந்தியாவின் முதல் இரயில் பயணம் பம்பாயிலுள்ள போரி பந்தர் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எவ்வளவு தொலைவிலுள்ள தானே சென்றடைந்தது  - 34 கி.மீ.

50.   முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது  - 1855.

51.   1914 ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும்  எத்தனை ஆலைகள் இருந்தன  -  64.

52.   1943 இல் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் எந்த இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் நிறுவப்பட்டது  - ராய்கஞ்ச்,

53.   எந்த ஆண்டு பீகாரிலுள்ள சாகி நகரில் பாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) - முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது - 1907.

54.   ஐரோப்பியர்கள் குழு ஒன்று வங்காள இரும்பு நிறுவனத்தை நிறுவ முயற்சித்த ஆண்டு- 1875.

55.   வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை அமைக்கப்பட்ட ஆண்டு - 1889.

56.   அதன் உற்பத்தி 1912-13இல் 31,000 டன்னிலிருந்து 1917-18இல்  எத்தனை டன்னாக அதிகரித்துள்ளது   - 1,81,000.

57.   ஜே.என், டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா. பரோடாவில்உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர். 

58.   இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுப்பவர்  -  ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா.

59.   எந்த ஆண்டு  நிறுவப்பட்ட அவருடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் ஆனது  - 1868.

60.   ஒரு தேசியவாதியாய், குர்லா, பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு எந்த பெயரிட்டார்  - சுதேசி.

61.   தோரப்ஜி டாடா  அவரது தந்தையின் நீண்ட காலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை  எந்த  ஆண்டில் நிறுவினார்   - 1907.

62.   எந்த ஆண்டு   மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமானது  - 1910.

63.   இந்திய அறிவியல் கழகம் ஒன்றை டாடா குழுமம் எங்கு நிறுவியுள்ளது - பெங்களூர்.

64.   முதல் முறையாக ஒரு தொழிற்துறை ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு - 1916.

65.   எந்த ஆண்டில் லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் - கூப்பர் பேப்பர் மில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது  - 1882.

66.   ஐரோப்பியர்களால்  நிறுவப்பட்ட ஆலைகள் - இதகர் காகித ஆலை, பெங்கால் காகித ஆலை.

67.   மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கிய ஆண்டு  -  1904.

68.   எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன  - 19 நூற்றாண்டு.

69.   எந்த ஆண்டில்  கான்பூரில் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது  - 1860.

70.   1905 முதன் முதலாக இந்தியருக்குச் சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று எங்கு அமைக்கப்பட்டது - கல்கத்தா.

71.   எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது  - 19 நூற்றாண்டு.

72.   சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட்  -  1919.

73.   எந்த ஆண்டில்  அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்  - 1939.

74.   பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் துறையில் எத்தனை இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன – 8.

75.   கோயம்புத்தூரில் எந்த ஆண்டில்   ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது  - 1896.

76.   கோயம்புத்தூரில் எத்தனை ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின  -  29.

77.   1932 -கோயம்புத்தூர் மாவட்டத்தில்  எந்த இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது  - மதுக்கரை.

78.   கான்பூர் சதி வழக்கில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் -

          1.    முசாபர் அகமது

          2.    சவுகத் உஸ்மானி

          3.    நளினி குப்தா

          4.    எஸ்.. டாங்கே

79.   கான்பூர் சதி வழக்கில் ஆரம்பத்தில் எத்தனை பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது -13.

80.   டிசம்பர் 1925 இல் பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர் - எம். சிங்காரவேலர்.

81.   எம். சிங்காரவேலர் :

          1.    காலம் (1860 - 1946) - மதராஸில் பிறந்தார்

          2.    இளமைக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார்

          3.    திரு. வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து

          4.    தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை தோற்றுவித்தார்

          5.    1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளை முதல்முறையாக நாட்டில் மே தினத்தை கொண்டாடினார்.

          6.    1928 ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

82.   முக்கிய வேலை நிறுத்தங்கள்:

          1.    காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தம் - 1927.

          2.    லில்லுவா ரயில் பணிமனை வேலை நிறுத்தம் - 1928.

          3.    கல்கத்தா துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்- 1928.

          4.    திருச்சிராப்பள்ளியில் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம் -1928.

          5.    வங்காளத்தில் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலை நிறுத்தங்கள்-1929.

          6.    பம்பாயில் ஜவுளி தொழிலாளர் வேலைநிறுத்தம். 1928.

83.   மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட மூவர்- பிலிப் ஸ்ப்ராட்,பான் ப்ராட்லி,லெஸ்டர் ஹட்சின்சன். (மொத்தம் 32  - பேர் கைது செய்யப்பட்டனர்).

84.   மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடியவர்கள் - கே.எஃப். நாரிமன், எம்.சி. சக்லா.

85.   மீரட் சதி வழக்கு :

          1.    1933 ஜனவரி 16 இல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியது.

          2.    27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

          3.    ரோமன் ரோலண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

86.   பகத்சிங் தன்னை இணைத்துக்கொண்ட அமைப்புகள்:

          1.    நவ்ஜவான் பாரத் சபா.

          2.    இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன்.

87.   இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன் என்ற அமைப்பை தொடங்கியவர்கள்  -சச்சின் சன்யால் ,ஜோகேஷ் சட்டர்ஜி.

88.   நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்" என்ற நூலை எழுதியவர் - பகத்சிங்.

89.   நான் படிக்க ஆரம்பித்தேன் என்னுடைய முந்தைய நம்பிக்கைகளும் தீர்மானங்களும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்திற்கு உள்ளானது- பகத்சிங்.

90.   லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் - (சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணை) - ராஜகுரு , சுகதேவ் ,ஜதீந்திரநாத் தாஸ் , பகத்சிங் மேலும் 21 பேர்.

91.   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டு-1930 அக்டோபர் 7.

92.   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்  தூக்கிலிடப்பட்ட ஆண்டு -1931 மார்ச் 23, லாகூர்.

93.   புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கை துப்பாக்கியில் சுடுவதோ அல்ல புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமையாகும்- பகத்சிங்.

94.   தங்கள் இறுதி மூச்சு அடங்கும் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக "புரட்சி ஓங்குக " என்று முழங்கியவர்கள்-ராஜகுரு, சுகதேவ், பகத்சிங்.

95.   1931 - எந்த காங்கிரஸ் மாநாட்டில் "அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் " பற்றிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது - கராச்சி.

96.   கிசான் சபா - விவசாயிகள் சங்கம்.

97.   அமெரிக்கா - ல் உண்டான பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.  (வால் தெரு)