பன்னிரெண்டு வீடுகளிலும் புதன் இருப்பதற்கான பலன்கள்

========================================================

புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது.88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர்.

புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.      கல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி  ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை  பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன்.  மிதுனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே. புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம்  உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன்  வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம். நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு  இவைகளுக்கு புதபலமே காரணம்.

புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம்  பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் திருவெண்காடு சென்று புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இங்கே இவருக்கும் பதினெழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புத பகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்யவேண்டும்.

லக்கினத்தில் புதன் இருந்தால்

புதன் 1 ஆம் வீட்டில்  இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.

முதல் பாவத்தில் புதன் வலிமை பெற்றவனாய் இருக்கப்பெற்றவர்.கல்வி ,கலை ,கணிதம் ஜோதிடம் மாந்திரீகம் ஆகியவற்றில் வல்லவராக புகழ் பெறுவார்,

முதல் பாவத்தில் புதன் வலிமை குறைந்தவர் இருக்கப்பெற்றவர்.அறிவில் குறைந்தவராய், அரைகிறுக்காய், தெருத்தெருவாக சோதிடம் பார்த்து திரிபவராய் இருக்க வாய்ப்பு உண்டு.

========================================================

2ல்-புதன் இருந்தால்

புதன் 2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.

கல்வியில் தேர்ச்சி பெற்றவராய், இனிமையான குடும்பம் வாய்க்கப் பெற்றவராக இருப்பார்.

வசதிகளைத் தாமாகதேடி கொள்பவராகவும் ,இனிமை ,கவர்ச்சி நகைச்சுவை ஆகிய தோன்றப் பேசுபவராகவும் இருப்பார்

இரண்டாம் பாவத்தில் புதன்(Puthan) கெட்டவனாய் இருக்க பெற்றவருக்கு இவை அத்தனையும் மாறும்.

========================================================

3ல்-புதன் இருந்தால்

புதன் 3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி.

புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள்.

புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.

சோதிடம் ,அஷ்டமாசித்தி ஆகியவற்றால் அறிவாற்றல் உண்டாகும் .

மிகுந்த புத்திசாலித்தனம் இருக்கும்,போக இன்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும் ,இனிப்பான உணவுகளில் விருப்பம் ஏற்படும் ,

வினோதமான பொருள்களில் ஆசை உண்டாகும், வசதியான வாழ்க்கை அமையும்,எப்போதும் குரலை தாழ்த்தியே பேசுவார்,

========================================================

4ல்-புதன் இருந்தால்

புதன் 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார்.

நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

தந்தைவழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.இலக்கிய படிப்பினால் புகழ் கிட்டும்.வீடு, வாகனம், பெருந்தன்மை ,மிகுந்த புத்திசாலித்தனம் ஆகியன வாய்க்கும்.

========================================================

5ல்-புதன் இருந்தால்

புதன் 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.

நாகரிக போக்கு ஏற்படும்.இவர் அழகிய ஆடைகள் உடுத்துவராய் இருப்பார், மற்றவரைப் பழித்துத்துப் பேசுவார்.

விஷ்ணு பக்தராக இருப்பார் , சில மக்களே பிறப்பர்.

========================================================

6ல்-புதன் இருந்தால்

புதன் 6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.

ஏமாற்றுபவர்களால் தொல்லை  அடைவார். தொழிலில் கவனக் குறைவு ஏற்பட்டு பொருள் இழப்பு உண்டாகும்,

உடலில் வாயு தொல்லை வாயு தொல்லை ஏற்பட்டு தொல்லை வரும்.

========================================================

7ல்-புதன் இருந்தால்

புதன் 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும்.

மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம்.

ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும்.

வியாபாரத்தில் தொல்லை ஏற்படும்.மனைவியினால் சொத்து கிட்டும், மக்கட் பேறு வாய்க்கும். வாழ்க்கை வசதிகள் அமையும்

========================================================

8ல்-புதன் இருந்தால்

புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.

ரத்தசோகை ஏற்படலாம். மனபயம் உண்டாகலாம்.

நீராலும் பிறரின் கொடுமை அல்லது தாக்குதலும் உடலுக்கு ஆபத்து ஏற்படலாம், வாழ்க்கை, போராட்டம் மிகுந்ததாக இருக்கும், எதிரிகள் தொல்லை எப்போதுமிருக்கும்,

========================================================

9ல்-புதன் இருந்தால்

புதன் 9 ஆம் வீட்டில் உள்ள இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார். எப்போதும் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

எப்போதும் நகைச்சுவையோடு பேசுவார். மதப்பற்று ,பக்தி ,ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை உள்ளவர்.

========================================================

10ல்-புதன் இருந்தால்

புதன் 10 ஆம் வீட்டில் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார்.

மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார்.

பத்தாம் பாவத்தில் புதன் இருக்கப் பெற்றவர். விஷ்ணுவிடம் தீவிர பக்தி கொண்டிருப்பார். இலக்கிய ஞானம் மிகுந்தவராக இருப்பார்.

சிறந்த வியாபாரியாகவும் , நகைச்சுவை கலந்து பேசும் அறிவு ஆற்றல் பெற்றவராகவும் ,மற்றவர் மரியாதை கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் கொண்டவராகவும் இருப்பார்.

========================================================

11ல்-புதன் இருந்தால்

புதன் 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள்.

பதினோராம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர், நகை வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்டுவர்,

அழகான மனைவியும் அறிவுள்ள குழந்தைகளும் அமையப்பெற்றவர், ஆலய வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர். நல்ல கல்வியும் அறிவியல் துறையில் ஈடுபாடும் கொண்டவர்,

சிலர் விஞ்ஞானிகள் ஆகவும் மாற வாய்ப்புண்டு, சிறந்த பக்திமான், புத்திமான், நீதிமான் என மற்றவர் புகழ வாய்ப்பு கிட்டலாம், வசதியான வீடு ,வாகனம், அன்பான உறவினர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

========================================================

12ல்-புதன் இருந்தால்

புதன் 12 ஆம் வீட்டில் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும்.

நல்ல துப்பறியும் திறன் இருக்கும். மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம். புதன் கெட்டால் இதற்க்கு நேரமாறான பலன்கள் நடைபெறும்.

பனிரெண்டாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர் பிறர் ஆதரவில் வாழ்பவராக இருப்பார்.

எப்போதும் சிந்தனை செய்து கொண்டும் கவலையோடு இருப்பார். குரலில் தெளிவின்மை, புத்தி மந்தம் ஆகிய குறைகள் ஏற்படலாம்.

_________________________

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.