பன்னிரெண்டு வீடுகளிலும் சனி இருப்பதற்கான பலன்கள்

சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி  நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம்  பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி  வழங்குவார். சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும்  இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம்.  கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில்  இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும்  பெறவாய்ப்பு உண்டு.

ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும்  வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம்,  பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம்  பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்  வாரி வழங்குவார்.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு.

ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான்.

மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம். சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார்.

சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும்

லக்கினத்தில் சனி இருந்தால்

சனி 1 ஆம் வீட்டில்  இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது.

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு

உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்.குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்.நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்.சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்

கடின மனதை உடையவர்.தந்திரமானவர்.கஞ்சத்தனம் மிக்கவர்.சுத்தமில்லாதவர்.குறுகுறுப்பானவர்.உடற்குறைபாடுடையவர்.

கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்

========================================================

சனி 2ல்  இருந்தால்

சனி 2 ஆம் வீட்டில்  இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்.பிரபலமில்லாமை.தடைப்பட்ட கல்வி.கண்பார்வைக் குறைபாடு . சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்.அதிரடியாகப் பேசுபவர்.சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்.

போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்

========================================================

சனி 3ல்  இருந்தால்

சனி 3 ஆம் வீட்டில்  இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும்.

துணிச்சல் மிக்கவர்.தைரியம் மிக்கவர்.விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்).புத்திசாலித்தனம் மிக்கவர் செல்வந்தர்.சாதனைகள் படைப்பவர்

சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும். அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்.

========================================================

சனி 4ல்  இருந்தால்

சனி 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள்.

மகிழ்ச்சி இல்லாதவர்.திடீர் இழப்புக்களை உடையவர்.குறுகிய மனப்பான்மை உடையவர்.நல்ல சிந்தனையாளர்.அரசியல் ஆதாயம் இல்லாதவர். சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்.

இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள் தாய்க்குக் கண்டம்.

========================================================

சனி 5ல்  இருந்தால்

சனி 5 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.

குறுகிய மனதை உடையவர்.சகஜமாகப் பழகாதவர்.சிலருக்குக் குழந்தைகள் இருக்காது.விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்.எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்.அரசுக்கு எதிராக நடப்பவர்.பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்

========================================================

சனி 6ல்  இருந்தால்

சனி 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது.

பிடிவாதமான ஆசாமி.ஆரோக்கியம் இல்லாதவர்.சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்.வாக்குவாதம் செய்பவர்கள்.சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்.புத்திசாலி.சுறுசுறுப்பானவர்.

சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்.

========================================================

சனி 7ல்  இருந்தால்

சனி 7 ஆம் வீட்டில்  இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்.

ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்

உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்

கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்

இல்லாமல் செய்துவிடுவார். அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா? அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.

சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி.

சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்.சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்.நளினமானவர். மன உறுதியானவர் ஆர்வமுள்ளவர்.அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார். சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்

========================================================

சனி 8ல்  இருந்தால்

சனி 8 ஆம் வீட்டில்  இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும்.

இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்

உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும். சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்.ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை.குடிப்பழக்கம் இருக்கும்.பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்.கண் பார்வைக் கோளாறு இருக்கும்.

தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்.ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்.சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்.ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,.விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.கொடூரமான சிந்தனைகள் உடையவன்.

நீண்ட ஆயுளை உடையவன்.

========================================================

சனி 9ல்  இருந்தால்

சனி 9 ஆம் வீட்டில்  இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது.

ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்

அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும். சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்.

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்.

இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும். சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.சாமியாவது, பூதமாவது போடா என்பான்.

========================================================

சனி 10ல்  இருந்தால்

சனி 10 ஆம் வீட்டில்  இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும்.

இது நன்மை அளிக்கும் அமைப்பு. சிலருக்கு உபகாரச் சம்பளம் கிடைக்கும்.  புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.

சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்

எல்லா வசதிகளும் தேடிவரும்.ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். நல்ல உழைப்பாளி.சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்.

========================================================

சனி 11ல்  இருந்தால்

சனி 11 ஆம் வீட்டில்  இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும்.

இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம். சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்.சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்

சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.

சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்.

வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்.

========================================================

சனி 12ல்  இருந்தால்

சனி 12 ஆம் வீட்டில்  இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும்.

இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்.

சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப் பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்.ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி! எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!

ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான். "போனால் போகட்டும் போடா" என்று பாடுவான். ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும் மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்.

ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்.தனிமைப்பட்டு விடுவான்.

___________________________

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.