பன்னிரெண்டு வீடுகளிலும் குரு இருப்பதற்கான பலன்கள்
தன்னைத்தானே 9
மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம்,
ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண
உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார்.
குரு பார்வை கோடி
புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.
நவக்கிரகங்களின் குருவாக விளங்குபவர் வியாழபகவான். குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று
வழிபடலாம்.
24 நெய் தீபங்கள்
ஏற்றி 24 முறை மௌன வலம் வரவேண்டும். குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து
மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம்
நிவேதிக்க வேண்டும்.
குருவருள் திருவருள்
என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ
நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள்
செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது.
சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம்,
தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம். குருபகவான்
ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம்.
கோடிஸ்வர யோகம்
அமையும். மேதைகளையும்ழூ ஞானிகளையும் உருவாக்குவது
குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும்,
அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான்.
கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து
பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும். குருபகவான் ஜாதகங்களில்
சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை
பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை
குரு வழங்குவார்.
அறிவு வாயந்த குழந்தைகளை
பெறுவதும் குருபகவான் அருள்தான். பிரஹஸ்பதி,
வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும்,
ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின்
பெருமையை விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது
குரு பலத்தால் ஏற்படும்.
அந்தணர், பசுக்களுக்கு
அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன்
இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா
? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.
வடக்குத் திசை
குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன்
பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.
குரு
12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்.
நவகிரங்களில் முழு
சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான்.
இவர் ஒருவர் நல்ல
நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும்.
இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை
ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும். குரு எப்பொழுதும்
சொந்த மதத்தை குறிப்பவர். அவர் அவர்களின் மதங்களை பின்பற்றினாலே குரு நல்லது செய்கிறது.
ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம்
நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும்.
நவகிரகங்களில்
சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம்,
பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள்,
பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
குரு ஒருவர் ஜாதகத்தில்
பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக
குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி
புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை
செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.
கோட்சார ரீதியாக
ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில்
சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில்
உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள்,
புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு
கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.
ஜென்மத்தில்
குரு
குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன்
இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக
இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும்.
இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம்
காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.
குரு ஜென்ம லக்கினத்தில்
இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை,
நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து
இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.
========================================================
குரு
2ல் இருந்தால்
குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு
சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில்
நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து
கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும்
நல்ல முறையில் இருப்பார்கள்.
தன ஸ்தானமான 2ல்
குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு,
குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார
ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால்
பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.
========================================================
குரு
3ல் இருந்தால்
குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர்
நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம்
மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.
குரு 3ல் இருந்தால்
எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும்.
தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால்
சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம்
ஏற்படும்.
========================================================
குரு
4ல் இருந்தால்
குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை
பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள்
உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம்
இருக்கும்.
கேந்திர ஸ்தானமான
4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல
பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன்
இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து
அமைய தடை உண்டாகும்.
========================================================
குரு
5ல் இருந்தால்
குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால்
நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
திடீர் பணவரவுகள் இருக்கும்.
5ல் குரு இருந்தால்
நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான
குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப
கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.
========================================================
குரு
6ல் இருந்தால்
குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில்
மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள்
நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.
குரு 6ல் இருந்தால்
எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக
அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில்
மன குறை உண்டாகும்.
========================================================
குரு
7ல் இருந்தால்
குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை
பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார்.
மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில்
நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக
இருக்க வாய்ப்பு உண்டு.
குரு ஜென்ம லக்கினத்திற்கு
7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக
இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும்
யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி
தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.
========================================================
குரு
8ல் இருந்தால்
குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம்
முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில்
நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வாதை இல்லாமல் உடனே போகும்.
குரு பகவான் 8ல்
பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில்
நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை
பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை
உண்டாகும்.
========================================================
குரு
9ல் இருந்தால்
குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த
பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு
ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார்.
வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை
நன்றாக இருக்கும்.
குரு பகவான் 9ல்
இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு
நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள்
ஆசி உண்டாகும்.
========================================================
குரு
10ல் இருந்தால்
குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும்.
அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும்.
வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.
குரு பகவான்
10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல்
தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும்
நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது
நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.
========================================================
குரு
11ல் இருந்தால்
குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த
சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும்.
எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.
குரு 11ல் இருந்தால்
தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம்
சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப
வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.
========================================================
குரு
12ல் இருந்தால்
குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய
இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர்
பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில்
ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.
குரு 12ல் இருந்தால்
பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும்.
குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு
சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான
கண் பார்வை உண்டாகும்.
_________________________
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT