பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்
கேது சூரியனை ஒரு
முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த
வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள்
அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார், மாந்தரீகம், ஞானம், மோட்சம்.,விநாயகர்
வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.
சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன்
என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும்,
மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது. எளிமை, கடுமை இரண்டுக்கும்
உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும்,
பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில்
நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம்.
கேதுவைப்போல கெடுப்பவன்
இல்லை என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும்.
தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம்.
கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.
ஞான காரகன் என்ற
புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின்
உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான். விஞ்ஞானம்,
மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
நீச பாஷைகளில்
தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு
உரிய தலம். கேது தோஷமுள்ளவர்கள் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடலாம்.
செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டை மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும்.
கேது பகவானுக்குரிய தோத்திரம் பாடி வழிபட்டு வர எல்லா நலன்களும் பெறலாம்.
லக்கினத்தில்
கேது
கேது 1 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் பிரச்சினை உண்டாகும். தொழில்
திறமை இருக்கும் உடம்பில் பிரச்சினை உருவாகும். சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில்
கேது தங்கியிருந்தால் இந்த நாட்டையை ஆளலாம். செவ்வாய் வீடான விருச்சகத்தில் தங்கி இருந்தாலும்
அந்த யோகம் கிடைக்கும் பிற வீடுகளில் இருந்தால் அந்தளவுக்கு இருக்காது கஷ்டத்தில் தான்
வாழ்க்கை வாழவேண்டிருக்கும். நான் பார்த்த வரையில் சனியின் வீடுகளில் அல்லது சனியுடன்
கேது இருந்தால் அந்த ஜாதகன் பணக்காரகனாகத்தான் இருப்பார்.
ஜாதகன் புத்திசாலியாக
இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத்
தெரியாத
விஷயங்களும் இந்த
அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள். சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக
இருப்பினும் ஞானம் இருக்கும்.மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று
ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்
சிலர் ஜாதகத்தில்
உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும்
வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில்
கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன்.
கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
========================================================
இரண்டில்
கேது
கேது 2 ஆம் வீட்டில் இருந்தால் தன பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில்
பிரச்சினை உண்டாகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்காது. குடும்பத்தில் செய்வினை
கோளாறுகள் இருக்கும்.
குடும்பத்தில்
நிம்மதி குறைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் முடிந்தவுடன்
குழந்தை பேறும் தடை ஏற்படும்.
ஜாதகன் எதையாவது
பேசிக்கொண்டே இருப்பவன். படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம்
உடையவனாக இருப்பான். குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்
சிலர் ஜாதகத்தில்
உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப்
படுபவர்களாக இருப்பார்கள்.
========================================================
மூன்றில்
கேது.
கேது 3 ஆம் வீட்டில் இருந்தால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள்
இவர்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள்.
அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது
தீவிர ஈடுபாடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார் எந்த காரியத்திலும் தடைகள் இருந்து
கொண்டே இருக்கும். பரிகாரம் ராமேஸ்வரம் தான்.
ஜாதகன் உயர்ந்தகுடியில்
பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை
மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன்.
எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக்
கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக
(genius) இருப்பான்.
========================================================
நான்கில்
கேது
கேது 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கிடைக்கும். தாயாரின் வழியில்
பிரச்சினை தான். தாயாரின் உடன் பிறந்தவர்களில் யாராவது ஒருவர் திருமண வாழ்வில் பிரச்சினையில்
இருப்பார்கள். தீய எண்ணங்களில் மனது செல்லும். பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள்.
வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வானங்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே
இருக்கும். வீடு கோவிலுக்கு அருகில் இருக்கும் அதுவும் பிள்ளையார் கோவிலாக இருக்குகூடும்.
இந்த இடம் கேதுவிற்கு
உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல!
நான்காம் வீடு
இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் வரலாம்.
வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம் என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில்
சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது.
ஜாதகனுக்கு மகிழ்ச்சி,
சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும்.
உறவுகளே பகையாக மறிவிடும்.
சிலருக்குத் தாயன்பு
என்பதே இல்லாமல் போய்விடும்.
========================================================
ஐந்தில்
கேது
கேது 5 ஆம் வீட்டில் இருந்தால் கெட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மை
இருக்காது. வயிற்று வலி ஏற்படும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கடுமையான
புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால்
இவர்களுக்கு ஒன்றும் நன்மை நடைபெறாது. விநாயகரை வழிபாட்டு மூலம் இன்பம் காணலாம்.
ஜாதகன் கடினமான
ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன் இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி
இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும்.
அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி
இருக்காது.
இந்த அமைப்பை சந்நியாச
யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை
ஆளும் யோகமாக மாறிவிடும்.
========================================================
ஆறில்
கேது
கேது 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இளமை காலத்தில்
பிரச்சினை இருக்கும். உறவினர் மூலம் நல்ல மரியாதை இருக்கும். நல்ல சுகபோகமான வாழ்க்கை
வாழலாம் கடக ராசியாக இருந்தால் மதுபானம் மீது கடுமையான ஈடுபாடு இருக்கும். ஜலதோஷம்
அடிக்கடி ஏற்படும். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை.
ஜாதகன் அவன் இடத்தில்,
அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில் தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான்.
தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த
பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக
இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.
வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்
========================================================
ஏழில்
கேது
கேது 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் ஏற்படும். திருமணத்தில்
சண்டை சச்சரவு இருக்கும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவி அல்லாத பெண்களுடன்
தொடர்பு ஏற்படும். திருமண வாழ்க்கையை நினைத்து மனக்கவலை அடையும். உடம்பில் நோய் ஏற்படும்.
ஜாதகனுக்கு, அவனுடைய
மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது
உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை
உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்
இந்த அமைப்பை உடைய
சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது கணவன் அமையக்கூடும்
========================================================
எட்டில்
கேது
கேது 8 ஆம் வீட்டில் இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை. ஆயுள் பலம்
குறையும். உடம்பில் நோய் தோன்றி புண் வரும். முறை தவறி நடக்ககூடும். தற்கொலை எண்ணம்
தோன்றும். பொதுவாக கேது இந்த வீட்டில் இருந்தால் நோய்களை தருவார்.
ஜாதகன் அதீத புத்திசாலி.
மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன் சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும்.
சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்
சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும்.
அடுத்தவன் சொத்தை
அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.சிலருக்குப் புகழும் தலைமை
ஏற்கும் தகுதியும் இருக்கும்.
========================================================
ஒன்பதில்
கேது
கேது 9 ஆம் வீட்டில் இருந்தால் பித்ரு தோஷம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும்
தடைகள் ஏற்படும். தந்தையுடன் எல்லா நேரங்களிலும் சண்டை தான் போடுவார். தெய்வ பக்தி
இருக்காது. நண்பர்கள் உதவி செய்வார்கள். மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. பிற மதத்தவர்
உதவி செய்வார்கள்.
ஜாதகன் பல பாவச்செயல்களைச்
செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள்
மிகுந்தவன். சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி விடுவார்கள்.
அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக
செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான். சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
பத்தில்
கேது
கேது 10 ஆம் வீட்டில் இருந்தால் கலைகளில் ஈடுபாட்டுடன் இருந்து கலைஞராக
இருப்பார். பிறர் மனதை நோகடிக்கமாட்டார். இரக்கமனம் இருக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன்
தொழில் செய்து வெற்றிக்கொள்வார். மதங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார். தந்தை நலமுடன்
இருக்கமுடியாது . தந்தை பணத்திற்க்காக கஷ்டபடுவார்.
மக்கள் அனைவரையும்
நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும். சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான்.
அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன் உயர்வான்.
ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.
திறமைசாலியாக இருப்பான்.
செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின்
தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
========================================================
பதினொன்றில்
கேது
கேது 11 ஆம் வீட்டில் இருந்தால் சொத்துக்கள் சேரும் செல்வநிலையில் நன்றாக
வாழ்வார் நண்பர்களின் உதவி இருக்கும். சுகபோகங்களுக்கு குறை இருக்காது. நல்ல பணவரவு
இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் இருப்பார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம்
சண்டை இருக்கும்.
ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம் படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள்
மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்
பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன்
இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும் நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
========================================================
பன்னிரெண்டில்
கேது
கேது 12 ஆம் வீட்டில் இருந்தால் இதுதான் ஜாதகரின் கடைசி பிறவியாக இருக்ககூடும்.
புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். பணசேமிப்பு இருக்காது அனைத்தும் புண்ணிய காரியங்களுக்கு
செலவாகும். இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும்.
நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு வெற்றிக்கொள்வார்.
இந்த இடத்தில்
கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு பேற்றை அடைந்து விடுவான் என்று
நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால்
நம்புவோம்.
ஜாதகன் அடிக்கடி
மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி,
சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்
பாவங்களைச் செய்துவிட்டு
மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன். சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக
இருப்பார்கள் சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
========================================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT