பன்னிரெண்டு வீடுகளிலும் ராகு இருப்பதற்கான பலன்கள்
இராகு சூரியனை
ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும்.
பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை
சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர
தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.
இராகு தான் அமர்ந்த
இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும்.
இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால்
அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும்.
அகப்பட்ட கிரகம்
வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு
உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது.
உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த
நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.
இராகுவை போல கொடுப்பவன்
இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை,
வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு
நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.
இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம்
மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.
பலமிழந்த இராகு-
ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு,
எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.
இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
லக்கினத்தில்
ராகு
ராகு 1 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு
அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும்.
துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு
இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.
ஜாதகன் சோம்பல்
உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும்
இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம்.
நோயின் தன்மைகளும்,
வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு
தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை
இருக்காது.
சிலருக்கு சொத்து
சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும்
வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும்,
மேஷம், ரிஷபம்,
கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள்
எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
========================================================
ராகு
2ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 2 ஆம் வீட்டில் இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும்.
புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம்.
குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான
வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது
நன்மை தரும்.
ஜாதகனுக்குக் குறைந்த
அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம்
உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில்
படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன்.
பொதுவாகவே இரண்டில்
தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல
காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச்
சேர்க்க விடமாட்டான்.
========================================================
ராகு
3ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய
சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல
தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக
இருக்கும்.
ஜாதகன் மற்றவர்களைக்
கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து
விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா
பின்னே?) தாராள மனமுடையவன்.
ஊதாரி. கையில்
காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத்
செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு
செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
அதோடு குபேரயோகம்
போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம்
வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.
========================================================
ராகு
4ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி
பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில்
கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவ ஜோதிடத்தின்படி,
இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள்
வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல்
செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது.
வண்டி வாகனங்கள்
இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும்.
உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள்.
சிலருக்கு தன்
தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான்
மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.
========================================================
ராகு
5ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால்
கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம்
இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி
காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.
ஜாதகன் சுயநலவாதி.
தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது.
சற்றுக் கோப தாபம் உடையவன்.
உறவினர்கள் அவனைக்
கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு
குழந்தை பிறப்பது தாமதமாகும்.
சிலருக்கு ஒரு
குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக்
குழந்தை இருக்காது.
========================================================
ராகு
6ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார்.
இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில்
புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில்
புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.
ஜாதகனுக்கு வயிற்றுக்
கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும்.
அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள்.
ஜாதகன் தர்ம சிந்தனைகளை
உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான்.
சாப்பாட்டு ராமனாக இருப்பான் என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான்.
அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும்.
வெற்றிகள் பலவற்றை
அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால்,
சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான்.
பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக
இருப்பான்.
========================================================
ராகு
7ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள்
தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும்.
துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள்
இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும்
திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும்.
கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
ஜாதகன் ஊதாரியாக
இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு
மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம்
இருக்காது.
சுதந்திரமாக இருக்க
ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண
வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.
பெண்களால் திட்டு
வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான
வாழ்க்கை அமையும்.
========================================================
ராகு
8ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 8 ஆம் வீட்டில் இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம்
தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை
சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும்
வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில்
படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில்
தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
ஜாதகன் அடிக்கடி
துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும்
ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும்
அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும்.
முன் கர்ம வினை
தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது.
துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம்
செய்யக்கூடியவர்கள். சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில்
தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும்.
வெற்றிச் செல்வி
விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் பெண்களாக இருந்தால்
மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
========================================================
ராகு
9ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த
அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம்
பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள்.
சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.
ஜாதகத்தில் மற்ற
அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான்.
இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று
எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக
ஜாதகன் இருப்பான்.
இந்த இடத்து ராகு
ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக
இருக்கும்!
========================================================
ராகு
10ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம்
நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும்.
தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும்.
கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
ஜாதகன் செய்யும்
தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும்.
சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.
சிலர் வீரதீரச்
செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக்
கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து
ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்.
========================================================
ராகு
11ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில்
குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும்
கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய
புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.
பதினொன்றாம் இடத்தில்
ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான்.
நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக
இருப்பான்.
செய்யும் தொழிலில்
அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும்
கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான்.
வளம் உடைய வாழ்க்கை
அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக
ஜாதகன் இருப்பான்.
========================================================
12.
ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்:
ராகு 12 ஆம் வீட்டில் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும்
வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை
ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத
செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஜாதகன் பாவச் செயல்களைச்
செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில்
கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும்.
வலுவில்லாதவன்.
மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி
அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்)
சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
___________________________
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT