பன்னிரெண்டு வீடுகளிலும் செவ்வாய் இருப்பதற்கான பலன்கள்

========================================================

செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார்.

திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை,அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும். அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல்வரிசையில வைத்து  எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள்,  நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம்  இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல்,  வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம்.  ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன்.

மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள்.  மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய  நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம்  ஆவதில்லை.

லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்  உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும்  செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள  யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.

அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய்.

உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன்.

தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார்.

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இவருக்கு சிறப்பு நாட்கள்தாம். நமதுமனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். செவ்வாயின் அருள் வேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும்.

தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள்.

தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.

ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.

ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் இருப்பார்கள்.

========================================================

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும்.

செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.

குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள். செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!

இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!

========================================================

மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும்.

இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.

உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். (பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:

========================================================

ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது.

5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

========================================================

ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.

நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும் ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்

அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்

=======================================================

ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.

தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்

அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.

========================================================

எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம் எட்டிபார்க்காது. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்

நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.

========================================================

ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார்.           9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள் ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.

========================================================

பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம். ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன் ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன். மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும் ஜாதகன் தேடிப்பிடிப்பான்.

========================================================

பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும் வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும் மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?) நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே

தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான். ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்

=======================================================

12 பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:

செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.

கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள் ஏற்படலாம். ஜாதகன் சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி! பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்

துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால் கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்

===========================================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.