12 வீடுகளிலும் சூரியன் இருப்பதற்கான பலன்கள்

கிரகங்களின் தத்துவம் சூரியன்

இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும். சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும்.

சூரியனை வைத்து தகப்பனார், உடல்பலம், ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்க வேண்டும்.இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார்.

உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும். ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில்  கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது.  ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின்  ஏழு சந்தங்களை  ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும்.உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார்.

அக்னி இவருக்கு அதி தேவதை.

ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை.

மாணிக்கம் உகந்த ரத்தினம்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!

சூரியன் ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம்  ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன்  இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ  மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை  உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட  உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர  சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன்  சூரியன்.

சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன்.

கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள்  உண்டு.

தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன்.

உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை  நட்சத்திரக்கு உரியவன்.

சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம்.

உச்ச வீடு மேஷம்,

நீச்ச  வீடு சுக்கிரன்.

சூரியனார் கோவில்

அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்

நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று. சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.

இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி

இறைவி : சாயாதேவி,உஷாதேவி

தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி

ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு

நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும்.

இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.

ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீடு அந்த கிரகத்திற்க்கு அது உகந்த வீடா அல்லது அந்த வீடு பகை வீடா என்று பார்க்க வேண்டும். அந்த வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலன்கள் சரியாக இருக்கும். சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.

========================================================

லக்கினத்தில் சூரியன் இருந்தால்.

லக்கனத்தில் சூரியன் இருந்தால் தலை வழுக்கை தலையாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது ஏறு நேற்றியாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு முதல் வீட்டில் சூரியன் இருக்கிறது ஆனால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லை என்று கேட்க வேண்டாம். எல்லாம் பொது பலன்கள் மட்டும்தான்.

ஜாதகர் சுறுசுறுப்பானவர்.செந்நிற மேனி உடையவர்.

தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

==========================================

இரண்டில் சூரியன் இருந்தால்.

சூரியன் 2ஆம் வீட்டில் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும். சூரியன் இரண்டாம்  வீட்டில் இருந்தால் கண்ணில் நோய் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரன் வீடான கடகம் லக்கனம் ஆக இருப்பவர்கள் கண்ணில் ஒரு கோடு இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வீட்டில் சூரியன் இருக்கும் போது அந்த நபர் மிக சிறந்த திறமையாளராகவும் இருப்பார். அந்த லக்கனம் மேஷமாகவும் அல்லது சிம்மமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நபருக்கு பணம் நன்றாக வரும். நல்ல படிப்பையும் கொடுப்பார்.ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும் தலையில் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்கள். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கோபமும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள்.

கல்வி சுமாராக இருக்கும்நல்ல உழைப்பாளி.

ஜாதகருக்குப் பொருள் சேரும்.

==========================================

மூன்றில் சூரியன் இருந்தால்,

சூரியன் 3 ஆம் வீட்டில் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.

ஜாதகர் பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்.

==========================================

நான்கில் சூரியன் இருந்தால்,

சூரியன் 4 ஆம் வீட்டில்  நல்ல பலத்தோடு இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தாயார் நல்ல நலத்துடன் வாழ்வார்கள்.நான்காம் வீட்டு சூரியன் கெட்டு இருந்தால் தாயார் நலம் பாதிக்கப்படும். மகிழ்ச்சி உண்டாகாது. அரசாங்கத்தில் பணியாற்றி மிகவும் குறைவாக சம்பாதித்து தந்தையின் சொத்துகளை அழிப்பார். இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.அரசியல் செல்வாக்கு இருக்கும்.

==========================================

ஐந்தில் சூரியன் இருந்தால்,

சூரியன் 5 ஆம் வீட்டில் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல அறிவாற்றலை தருவார் . மலை பிரதேசங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும்.சூரியன் கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். இந்த இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் குறைந்து இருக்கும்.

குடும்பம் அளவாக இருக்கும்;வாழ்க்கை வளமாக இருக்கும்.

தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்.

==========================================

ஆறில் சூரியன் இருந்தால்

சூரியன் 6 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தால் பகைவர்கள் இருப்பார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை தருவார். நல்ல பணிகளை செய்ய வைப்பர் .செல்வம் குவியவைப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கவைப்பார். நல்ல ஜரணசக்தி கிடைக்கும்.6- ஆம் இடத்து சூரியனால் சிற்றின்ப வேட்கையை அதிகமான தருவார். அரசாங்கத்தின் மூலம் பொருள் செலவு ஏற்படும். மனைவியின் உடல் நிலை சரியாக இருக்காது.

பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

==========================================

ஏழில் சூரியன் இருந்தால்

சூரியன் 7 ல் இருந்தால் ஆண் ஜாதகராக இருந்தால் பெண்களால் மனசிக்கலை தருவார். உடம்பில் அடிபடும். உடம்பு சுகம் இருக்காது கவலைகள் வரும் 7 ஆம் இடத்து சூரியனால் அரசாங்கத்திற்க்கு எதிராக ஈடுபடவைக்கும். திருமணவாழ்வில் தடை உண்டாகும். தொழிலில் வருமானத்தை உண்டுபண்ணமாட்டார். வாழ்க்கை துணையின் நலத்தை கெடுப்பார்.

ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.

பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.

எதையும் சரிவரச் செய்யாதவர்.

==========================================

எட்டில் சூரியன் இருந்தால்

சூரியன் 8 ல் உள்ள சூரியனால் கண் பார்வையை மங்கசெய்வார். அதிக காலம் வாழ்வது கடினம் ஆயுளை குறைக்க செய்வார். செல்வத்தை இழக்க செய்வார். நண்பர்கள் மூலமும் பெண்கள் மூலமும் தீமைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை விட்டு பிரிவார்கள். உடலில் மர்மபாகங்களில் உபத்திரம் உண்டாகும். மனதில் எப்பொழுதும் கவலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.எவருக்கும் பணிந்து போகாதவர்

இரக்கமற்ற குணத்தை உடையவர்சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்.

==========================================

ஒன்பதில் சூரியன் இருந்தால்

சூரியன் 9 ல் உள்ள சூரியனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தந்தையிடம் நன்றாக நடந்துகொள்வார் தந்தையாரின் பாசம் இவருக்கு கிடைக்கும்.பகைவீட்டில் இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு கெடுக்கும். அடிக்கடி பயணம் செய்ய வைக்கும் நல்ல அறிவு வெற்றி வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பெறவைக்கும்.

தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும் ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்சுய முற்சியால் செல்வம் சேரும்.

==========================================

பத்தில் சூரியன் இருந்தால்

சூரியன் 10 ல் உள்ள சூரியனால் நல்ல கல்வி கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய நேரிடும் வாகன வசதி கிடைக்கும். பெரிய தொழில்களை நிர்வகிக்க முடியும்.

ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்உடல் நலம் சீராக இருக்கும்தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்.

==========================================

பதினொன்றில் சூரியன் இருந்தால்,

சூரியன் 11 ல் உள்ள சூரியனால் செல்வம் குவிய செய்வார். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வர் நல்ல உடம்பு பலம் உண்டாகும். பல்வேறு துறைகளில் வருவாய் வர செய்வார். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அரசாங்க வேலை கிடைக்கும்.

ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்.

==========================================

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்

சூரியன் 12 ல் உள்ள சூரியனால் தொழில்களில் வீழ்ச்சியை உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை உண்டாக்குவார் செல்வ வளம் இருக்காது. புனித காரியங்களுக்காக செலவு செய்திடவைப்பார். புனித யாத்திரை செய்திடவைப்பார்.

ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.

அதிகமான செலவுகள் ஏற்படும்.ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.உழைத்து முன்னேற்றம் காண்பவர்.

 

 

12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்

லக்னத்தில் சூரியன் : சூரியன் முதல் வீட்டில் இருந்தால்:உயிர், உடல்

ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் முதல் வீட்டில் சூரியன் இருந்தால் அது உங்களுக்கு புனிதமானது. இது உங்கள் நடத்தை,செயல் திறன் உயர்த்தும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் மன நிலை படைத்தவர்களாக இருப்பீர்கள். உடன்பிறப்புகளுக்கு அதிர்ஷ்டமாகவும்.

அரசாங்கத்துடன் நல்ல உறவை வளர்த்து கொள்வீர்கள். தந்தையை மதிப்பீர்கள். உங்கள் வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். கூடுதலாக, இந்த அமைப்பு ஜாதகருக்கு வழுக்கை மற்றும் கண் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

லக்கினம் மேஷமாகி அங்கே சூரியன் இருந்தால்  அதுவும் உச்சம் பெற்ற சூரியனால்,நல்ல செல்வாக்குடன் இருப்பான் ,ஆனால் பொறுப்பற்ற நடத்தைகளும் உண்டு.

லக்கினம் மீனமாகி அங்கே சூரியன் இருந்தால் பெண்களால் மிகவும் நேசிக்க படுவான் .

லக்கினம் சிம்மமாகி அங்கே சூரியன் இருந்தால் கம்பீரமான தோற்றம் இருக்கும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்றால்  இரவு குருடனாகவும் ,கண்களில் கோளாறு உடையவனாகவும் இருப்பான் ,பல் வரிசை ஒழுங்காக இருக்காது .

லக்கினம் கடகமாகி அங்கே சூரியன் இருந்தால்  கண்களிலே புள்ளி விழ கூடும். வார்த்தைகளில் திக்கள் ஏற்படும் .கொடுத்த வாக்குறுதியை காப்பார்த்த மாட்டார், வார்த்தைகளில் விரசம் கலந்து காணப்படும்.

சொட்டை விழலாம், ஒற்றை தலைவலி, அடர் புருவம், மலச்சிக்கல்

உடல் வலி வரலாம்.

தற்பெருமை உடயவர்கள்,தங்கள் என்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்,முன் கோபம் உடயவர்கள்.

இரண்டாவது வீட்டில் சூரியன் இருந்தால் : குடும்பம் &வாக்கு.

உங்கள் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் சூரியன் இருந்தால், நீங்கள் இருப்பதைக் கொண்டு தன்னிறைவு பெறுகிறீர்கள். அரசு அல்லது அரசாங்க செயல்பாடுகளிலிருந்து நிதியைப் பெறுவீர்கள். இருப்பினும், செல்வத்தை குவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

மாமியார் தரப்பிலிருந்து செல்வம் சேர வாய்ப்புள்ளது. நீங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் வயிறு சார்ந்த பிரச்சினை ஏற்படும். மேலும், பிடித்த வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அனாவசிய செலவு,மிரட்டலுடன் கூடிய வருவாய்,உள்ளதை உள்ள படி பேசி வம்பை விலை கொடுத்து வாங்குறது ,கண்ணருகே அடிபடும்.

மூன்றாவது வீட்டில் சூரியன் இருந்தால் : உடன் பிறப்பு, தைரியம்.

உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் சூரியன் இருந்தால், நீங்கள் வலிமைமிக்க மற்றும் கண்ணியமான நபராக ஜொலிப்பீர்கள். நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். மேலும் நீங்கள் ஒரு பேராசிரியர் அல்லது ஆசிரியராக வளர முடியும்.

நீங்கள் தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தால் மனசாட்சி படி வியாபாரம் செய்ய முன்னேற்றம் ஏற்படும். இப்படி இருக்க சூரியன் எந்த தீங்கு விளையும் தராது. இருப்பினும், சில கெட்ட பழக்கங்கள் உங்களிடம் வரக்கூடும்.

எதிலும் தைரியத்துடன் செயல்பட கூடியவர்கள்.தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும்.பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும்.காது வலி மந்தம்.

நான்காவது வீட்டில் சூரியன் இருந்தால் : தாய் ,வீடு, வாகனம்.

உங்கள் ஜாதகத்தில் நான்காவது வீட்டில் சூரியன் இருந்தால், உங்களின் சேமிக்கும் போக்கு சிறப்பாக இருக்கும். மேலும், நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகளால் சூழப்படக்கூடிய சூழல் இருக்கும். பெற்றோருடனான உறவுகளில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் சகோதரர்களுடன் நல்ல உறவுகள் இருக்கும்.

4ம் வீட்டில் சூரியன் இருக்கும்போது வெள்ளி வியாபாரம் நன்மை பயக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டால் அது நன்மை பயக்கும். இவர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்பது அவசியம். இல்லையெனில் போதை பழக்கத்தை விட்டு வெளியேறுவது கடினம்.

தொழில் வாய்ப்புகள் கூடும்.தற்பெருமை கொண்டவர்கள்.சுய சம்பாத்தியம் மூலம் முன்னேற்றம் அடைய கூடியவர்கள்.தாய் வழி உறவு ஒருவருக்கு ஊர் தலைமை.அதிகம் வேலை இருக்கும்.கல்வி,காடு சார்ந்த பகுதிகளில் வீடு அமையும்.

சூரியன் ஐந்தாவது வீட்டில் இருந்தால் :  பிள்ளைகள், பூர்வ புண்ணியம்.

ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் சூரியன் இருந்தால், நீங்கள் எப்போதும் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவீர்கள். கோபம் உங்கள் வேலையை கெடுக்கக்கூடும். மக்கள் மத்தியில் சிடுமூஞ்சி நபராக காட்சிப்படுத்தும்.

உடல்நலனில் அக்கறை தேவை. நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், உங்களின் வியாபாரம் சிறக்கும் போது ஆரோக்கியம் பிரச்சினை தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் போது வணிகம் குறைவாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிறிய விஷயங்களினால் கூட மனம் சோகமாக இருக்கும்.

முன் கோபம் ,கண்டிப்பு, மிரட்டல். பெயர் புகழுக்காக மெனக்கெடுவது. அவமானங்கள், சிறிய குடும்பமாக இருக்கும்.வாழ்க்கை வளமாக இருக்கும்.தன்னுடைய முயற்சியால் உயர்வு அடைய கூடியவர்கள்.

ஆறாவது வீட்டில் சூரியன் இருந்தால்: எதிரி, நோய் ,கடன்.

ஜாதகத்தில் 6 வது வீட்டில் சூரியன் இருக்க ஜாதகரை வலிமை மிக்கவனாக ஆக்குகிறது. எதிரிகளை தோற்கடிக்கும் திறனை அதிகரிக்கிறது. உங்கள் பேச்சு, செயல்பாடு கடுமையானதாக இருந்தாலும், சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் வாழ்க்கையில் இரண்டு முறை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்திலும் வேலையிலும் எப்போதும் லாபம் உண்டு. ஆனால் உங்களுக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, அந்த துறையில் ஒரு சிறிய மாற்றம் கூட ஏற்படுவது கடினம். கண் பிரச்சினைகள் எரிச்சலூட்டும் மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். தாய் மாமனுக்கு நல்லதில்லை.

7வது வீட்டில் சூரியன் இருந்தால்:  மனைவி,நண்பர்கள்.

ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சூரியன் இருப்பது பெரிய நல்ல பலனைத் தராது. அந்த வகையில் சூரியனின் இருப்பு பல சிக்கல்களைத் தருகிறது. உங்கள் சுயமரியாதை அதிகம் கருத்தில் கொள்வர், இது மற்றவர்கள் முன் உங்களை ஆணவமிக்கவராக காட்டும்.

நீங்கள் உத்தியோகத்தில் பல நன்மைகளை அனுபவிக்ககூடிய துறையில் பணியாற்றுவீர்கள். திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறவுகளால் தொந்தரவுகளைச் சந்திக்க நேரிடும்.

உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள்,எதிர்ப்புகலை வெல்ல கூடியவர்கள்.பாராட்டுகளை பெற கூடியவர்கள்.அலைபாயும் மன நிலையை கொண்டவர்கள்.ஆரோக்கியம் பாதிக்க கூடும்.பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்

8வது வீட்டில் சூரியன் இருந்தால் :  ஆயுள்.

ஜாதகத்தில் எட்டாவது வீட்டில், சூரியன் சில நேரங்களில் லாபத்தையும் சில சமயங்களில் இழப்பையும் தரும். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும் மற்றும் சேமிப்பு பழக்கம் சிறப்பதன் மூலம் நிதி நிலை அதிகரிக்கும்.

மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனை செல்வத்தின் ஆதாயத்தை அதிகரிக்கும். கண் பிரச்சினைகள் மற்றும் இதய பிரச்சினைகள் தொந்தரவாக இருக்கும். பொறுமை இல்லாததால் கோபம் அதிகரிக்கும். போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து ஒதுங்கி இருங்கள். இல்லையேல் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும்.

தந்தையுடனான உங்கள் உறவு இனிமையானது, எப்போதும் மற்றவர்கள் உதவ முன்வருவார்கள், நீங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவீர்கள்.

ஆயுள் பலம் கொண்டவர்கள்.எதிலும் கால தாமதமான முடிவை எடுக்க கூடியவர்கள்.மண்டை உடைவது, அபராதம், காவல் ,சிறை, உள்ளூர் தலைவர்களுடன் குடுமிப்பிடி.

9ம் வீட்டில் சூரியன் இருந்தால் : தந்தை, வெளிநாடு.

ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில், சூரியன் இருப்பது கருணையின் உணர்வை எழுப்பும். குடும்பத்தினருடனான உறவுகள் சிறப்பாக இருக்கும், ஆனால் தந்தையுடன் எப்போதும் பிரிவினை இருக்கக்கூடும். உங்களுக்கு வழிநடத்தும் திறன் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் இயற்கையாக கொடூரமான ஆளாக இருக்க முடியும், மேலும் யோகா மற்றும் தியானம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். 21 வயதிற்குப் பிறகு, பிரச்சினைகள் மெதுவாக மங்கத் தொடங்குகின்றன. வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்புக்கள் உள்ளன, ஆனால் உங்கள் பிள்ளையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டி வரும்.

பகலில் பிறந்தால் தந்தைக்கு நல்லது. பெரியவர்களின் ஆதரவு உண்டு, லாங் டூர் அடிக்கிற தொழில்.

10 வது வீட்டில் சூரியன் இருந்தால் : தொழில்.

பத்தாவது வீட்டில் சூரியன் இருப்பது சாதகமான முடிவுகளைத் தரும். இது உங்களை அறிவார்ந்தவராகவும், பிரபலமாகவும் ஆக்குகிறது. எதிலும் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியைத் தரும்.

உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது அல்லது அரசாங்கத்தால் கௌரவிக்கப்படலாம் அல்லது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். தாராள மனப்பான்மை காரணமாக புகழ் கிடைக்கும். தந்தையுடனான உங்கள் உறவு திருப்திகரமாக இருக்கும். 22 வயதிற்குப் பிறகு, ஐஸ்வர்யாங்கள் முழு வாழ்க்கைக்கு கிடைக்கும்.

அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.நீண்டு நாட்கள் வாழ்வான்.செல்வந்தனாக மாறுவான்.மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்.கொள்கைக் குன்றாக இருப்பான்.அரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

11 வது வீட்டில் சூரியன் இருந்தால் :லாபம்.

ஜாதகத்தில் 11 வது வீட்டில், சூரியன் இருப்பது நல்ல முடிவுகள் கிடைக்கும். பணக்காரராகவும் மற்றும் வலுவானவராகவும் இருப்பார்கள். சுய மரியாதை மீது கவனமாக இருப்பார்கள், குறைவாக பேசக்கூடியவர்கள். சரியான இடத்தில் முதலீடு செய்வது பெரும் நன்மைகளைத் தரும்.

ஒரு லட்சிய நபராக இருப்பார்கள். பெரிய அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சூரியனின் இந்த நிலை தாய்க்குச் சரியானதாக இருக்காது. வயிற்றுப் பிரச்சினைகளுடன். குழந்தைகள் அவதிப்படுவர்.

அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.நீண்டு நாட்கள் வாழ்வான்செல்வந்தனாக மாறுவான்.மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்.கொள்கைக் குன்றாக இருப்பான்.அரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

12 வது வீட்டில் சூரியன் இருந்தால் :  விரயம்

ஜாதகத்தில் 12 வது வீட்டில் சூரியன் ஒரு கலவையான பலன் தரும். நம்பிக்கை குறைவாக இருக்கும். சூரியனின் இந்த நிலை இளைய உடன்பிறப்புகளுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்த துறையிலிருந்தாலும் நல்ல வளர்ச்சி பெறுவீர்கள்.

அதே சமயம் இந்த நிலைமை குழந்தைகளுக்கு நல்லதல்ல. வெளிநாடு செல்லக்கூடிய ஆசை நிறைவேறும். நிதி ரீதியாக முன்னேறுவது கடினம். அபிலாஷைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைக்க வேண்டிவரும்...

தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.தனது விருப்பம்போல் செலவு செய்ய கூடியவர்கள்.புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்..

==========================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.