12TH- STD - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி -
1.
காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஆண்டு - 1915.
2.
தேசியம் என்பது:
1. ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் என பொருள் .
2. அது தனது நாட்டை ஏனைய நாடுகளை காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது
3. ஏனைய நாடுகளுக்கு போட்டியாக தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு (அ)மனப்போக்காகும்.
3.
இண்டிகோ கழகம் நடைபெற்ற ஆண்டு (வடக்கு வங்காளம்)- 1859 - 1860.
4.
1919- இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமையற்றியவர் -மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி.
5.
1770 -1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக எத்தனை மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது - 25 மில்லியன்.
6.
1793 -1900 வரையிலான காலப்பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை - 5 மில்லியன்.
7.
1891 -1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமேஇந்தியாவில் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் - வில்லியம் டிக்பை.
8.
1866 -ஒரிசா பஞ்சத்தின்போது ஒன்றரை மில்லியன் மக்கள் பட்டினிக்குப் பலியான நிலையில் ஆங்கிலேயர் எத்தனை மில்லியன் பவுண்ட் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர் - 200 மில்லியன்.
9.
ஒரிசா பஞ்சத்தின் தூண்டுதலின் காரணமாக இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்கியவர் - தாதாபாய் நெரோஜி.
10.
எந்த காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டாண்டுகள் பருவமழைப் பொய்த்துப் போனதால் மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது - 1876-1878.
11.
ஓரிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்பட்ட தலையிடாக் கொள்கையையே பின்பற்றிய அரசப்பிரதிநிதி - லிட்டன் பிரபு.
12.
மதராஸ் மாகாணத்தில் எத்தனை மில்லியன் மக்கள் பஞ்சத்திற்குப் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது - 5 மில்லியன்.
13.
சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்ட ஆண்டு - 1815.
14.
மதராஸ் மாகாண ஆளுநர் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக எந்த மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார் - தஞ்சாவூர்.
15.
எந்த ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டதால் பேரசின் காலனிகளுக்கு குடிபெயரும் செயல்பாடுகள் ஊக்கம் பெற்றன - 1843.
16.
தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை:
1. 1837 - 10,000.
2. 1846 - 80,000.
3. 1855 - 1, 28,000.
4. 1877 - 3,80,000 .
17.
எந்த ஆண்டு மொரிஷியஸில் 30,218 ஆண்களும் 4,307 பெண்களும் குடியேறியதாக அரசே அறிவித்தது - 1843.
18.
நூற்றாண்டின் இறுதியில் எத்தனை தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்தது மெரிஷியஸ் சென்றனர் - 5,00,000.
19.
இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1835.
20.
இந்தியாவில் அறிமுகம் செய்யவேண்டிய ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் - டி.பி. மெக்காலே.
21.
பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய டங்களில் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு - 1857.
22.
1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர் - T.B, மெக்காலே.
23.
மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1823.
24.
கல்வி தொடர்பாகவும், எம்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழிகாட்டுவது -பொதுக்குழு வின் பொறுப்பாகும்.
25.
கீழ்த்திசைக் குழு கல்வி எந்த மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது - பிராந்திய மொழிகளில்.
26.
ஆங்கில மரபுக் குழு மேலைக் கல்வி எந்த வழியில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது - ஆங்கில மொழி.
27.
மெக்காலே எந்த குழுவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் - ஆங்கில மரபு.
28.
1835 - இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்- T.B, மெக்காலே.
29.
பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1857.
30.
இந்திய தண்டனைச் சட்டம் -1870.
31.
பிராந்திய மொழிச் சட்டம் -1878.
32.
சையத் அகமது கானால் நிறுவப்பெற்றது-அலிகார் இயக்கம்.
33.
சீர்திருத்த இயக்கங்கள்:
1. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய் -1828.
2. பிரார்த்தன சமாஜம் -ஆத்மராம் பாண்டுரங் -1867.
3. அலிகார் இயக்கம் - சையது அகமது கான்
34.
மீட்பு இயக்கங்கள்:
1. ஆரிய சமாஜம்
2. ராமகிருஷ்ணர் இயக்கம்
3. தியோபந்த் இயக்கங்கள்
35.
ராஜா ராம்மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு - 1828.
36.
பிரார்த்தனை சமாஜம் நிறுவிய ஆண்டு - 1867.
37.
ஆரிய சமாஜம் நிறுவிய ஆண்டு -1875 .
38.
ராஜா ராம்மோகன் ராயின் வங்கமொழிப் பத்திரிகை - சம்வத் கெளமுதி,
39.
ராஜா ராம்மோகன் ராயின் பாரசீக மொழிப் பத்திரிக்கையான - மிராத்-உல். அக்பர்.
40.
அராபிய, பாரசீக, சமஸ்சகிருத மொழிகளிலிருந்த மத, வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்த அறிஞர்கள் - வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ் முல்லர்
41.
தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும். மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சனைகள இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும் என எழுதியவர் - அரவிந்தகோஷ்.
42.
சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association - MNA)எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1852 பிப்ரவரி 26.
43.
சென்னைவாசிகள் சங்கம் உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்-கஜுலு லட்சுமி நரசு.
44.
சென்னைவாசிகள் சங்கத்தின் மனு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது ஆண்டு - மார்ச் 1853.
45.
இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் தலைவரான H.D செய்மோர் சென்னை வந்த ஆண்டு – அக்டோபர்-1853.
46.
எந்த ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தொடர அனுமதி வழங்கியது - 1853.
47.
லட்சுமிநரசு இயற்கை எய்திய ஆண்டு - 1866.
48.
சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டுக்கு பிறகு செயலிழந்தது -1881.
49.
சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - மே 1884.
50.
சென்னை மகஜன சங்கம் தொடக்க விழா நடைபெற்ற ஆண்டு- 1884 மே 16.
51.
இந்திய தேசிய காங்கிரஸ் இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதிவரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்திய ஆண்டு - 1875.
52.
அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்த ஆண்டு - 1877.
53.
வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டு - 1878.
54.
இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடைபெற்ற ஆண்டு - 1883.
55.
பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி டிசம்பர் 1884-சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்-ஆலன் ஆக்டவியன் ஹியூம்.
56.
இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் உருவாக்கப்பட்ட ஆண்டு- 1885 டிசம்பர் 28.
57.
இந்திய தேசிய காங்கிரஸ் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் - W.C பானர்ஜி.
58.
1897 - சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்- பாலகங்காதர திலகர்.
59.
ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை இந்தியர்களால் ஆவேசமாக எதிர்க்கப்பட்ட ஆண்டு - 1905.
60.
1905 தொடங்கப்பட்ட ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்தது - சுதேசி இயக்கம்.
61.
1885 -இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் - பத்திரிகையளரகளாக இருந்தனர்.
62.
இந்தியாவின் குரல். ராஸ்த் கோப்தார் எனும் இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் - தாதாபாய் நெளரோஜி.
63.
சுரேந்திரநாத் பானர்ஜி ஆசிரியராகப் பணிபுரிந்த பத்திரிகை - பெங்காலி.
64.
கேசரி, மராட்டா ஆகியப்பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியவர் - பாலகங்காதர திலகர்.
65.
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்புக்கு அவர் அழைப்பு விடுத்தவர்- திலகர்
66.
திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124யு யின் கீழ்குற்றம் சாட்டப்பட்டார் - 1897 ஜூலை 27.
67.
இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் என அறியப்படுபவர் - தாதாபாய் நௌரோஜி.
68.
தொடக்கால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் - தாதாபாய் நௌரோஜி.
69.
தாதாபாய் நெரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும்,நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1870.
70.
தாதாபாய் நௌளரோஜி 1892 இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் எந்த அமைப்புகளை உருவாக்கினார் - இந்திய சங்கம் , கிழக்கிந்தியக்கழகம்.
71.
தாதாபாய் நெரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் -3 முறை.
72.
தாதாபாய் நௌளரோஜி எழுதிய எந்த புத்தகம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும் - வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும். இந்நூலில் அவர் செல்வச்சுரண்டல் எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.
73.
1835 -1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எத்தனை மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார் -13 மில்லியன்.
74.
லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வாதாடினார் - தாதாபாய் நௌளரோஜி.
75.
இவையனைத்தும் தாயகக் கட்டணம் எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு எத்தனை மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நௌளரோஜி உறுதிபடக் கூறினார்-30 மில்லியன்.
76.
வைகுண்ட சுவாமிகள், இராமலிங்க அடிகள், அயோத்திதாசர் - தமிழ்நாடு.
77.
நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சிவிட்டோம்" என்று கடிதம் எழுதியவர் -எல்பின்ஸ்டன். சர்ஜான் லாரன்ஸ்.
78.
யார் அரச பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதா மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றனர் - ரிப்பன் பிரபு.
79.
இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கொண்ட 14000 நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கில பாராளுமன்றத்திற்கு அனுப்பிய அமைப்பு - சென்னை வாசிகள் சங்கம்.
80.
சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்த மாநாடு -பம்பாய்.
81.
காங்கிரசின் முக்கிய கோரிக்கைகள்:
1. அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய கோரிக்கையாகும்.
2. நிலவரி குறைக்கப்பட வேண்டும் எனவும் ஜமீன்தார்களின் சுரண்டல்களிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரியது.
3. இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிக வரி விதிக்கும் படி காங்கிரஸ் பரிந்துரை செய்தது.
4. குடிமைப் பணித் தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
82.
தீவிர தேசியவாதிகள்:
1. பிபின் சந்திர பால்.
2. பால கங்காதர திலகர்.
3. லாலா லஜபதி ராய்.
83.
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்கு திலகர் அழைப்பு விடுத்ததால் கைது செய்யப்பட்ட ஆண்டு - ஜூலை - 27 1897.
84.
தாதாபாய் நெளரோஜி இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு-1892.
85.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற ஆண்டுகள்: 1930, 1935 ,1941, 1945.
86.
இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு:
1. 1918 – பம்பாய்.
2. 1920 – கல்கத்தா.
3. 1923 – டெல்லி.
4. 1942 – பம்பாய்.
87.
ஜோதிபா பூலே - பூனே.
88.
நாராயண குரு -கேரளா.
89.
அய்யன்காளி - கேரளா.
90.
பாலகங்காதர திலகர் -கேசரி
91.
தாதாபாய் நெரோஜி - இந்தியாவின் குரல்
92.
மெக்காலே - இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
93.
வில்லியம் டிக்பை - மெட்ராஸ் டைம்ஸ்
94.
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1835
95.
அடிமைமுறை ஒழிப்பு - 1843
96.
சென்னைவாசிகள் சங்கம் - 1852
97.
இண்டிகோ கலகம் -1859-60
98.
சரியான கால வரிசையைத் தேர்வு செய்க:
1. சென்னைவாசிகள் சங்கம்.
2. இந்தியச் சங்கம்.
3. கிழக்கிந்திய கலகம்.
4. சென்னை மகாஜன சபை.
0 Comments
THANK FOR VISIT