PAGE NO: 12TH STD சமூக சமய சீர்திருத்த இயக்காங்கள் TOTAL QUESTION: 161
1.
பக்தி இயக்கம் இந்தியாவில் தோன்றிய காலம்- கி.பி 7 முதல் 17.
2. சமூக சமய சீர்திருத்த இயக்கம் யாரால் தொடங்கபட்டது-இராஜாராம் மோகன்ராய்.
3. எந்த நூற்றாண்டுகளில் இந்திய சமூகநிலை உலக நாடுகளுக்கு இடையில் பின்தங்கி இருந்தது-18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு.
4. சமூக சமய விழிப்புனைர்வு காலம்-19 ஆம் நூற்றாண்டு
5. வாரிசு இழப்பு கொள்கையை அறிமுக படுத்தியவர்- டல்ஹெசி.
6. நம் நாட்டின் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவியாக அமைந்த செய்திதாள்கள்:
1.
அமிர்த பஜார் பத்திரிக்கா
2.
தி இந்து
3.
மராத்தா
4.
சுதேசமித்திரன்
5. இந்தியா மற்றும் கேசரி
7. இந்தியாவில் ஆங்கிலம் எப்போது பயிற்று மொழியாக்கப்பட்டது-1835.
8. இந்தியாவில் ஆங்கிலம் பயிற்று மொழியாக காரணமானவர்-மெக்காலே.
9. சார்வஸ் வுட் கல்வி அறிக்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு-1854.
10. சார்லஸ்வுட் கல்வி அறிக்கை படி பல்கலை கழகங்கள் அமைக்கபட்ட இடங்கள்-சென்னை ,பம்பாய் ,கல்கத்தா.
11. இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்த அயல்நாட்டவர்-மார்க்ஸ் முல்லர் மற்றும் வில்லியம் ஜோன்ஸ்.
12. இராஜாராம் மோகன்ராயின் காலம்-1772 – 1833.
13. இராஜாராம் மோகன்ராய் பிறந்த இடம்-வங்காளம்.
14. உருவ வழிபாடு மறைநூல்களின் கருத்துக்கு எதிரானது என இராஜாராம் மோகன்ராய் வங்காள மொழியில் வெளியிட்ட போது அவரது வயது-15.
15. இராஜாராம் மோகன்ராய் புலமை பெற்ற மொழிகள்- பாரசீகம், இலத்தின், கிரேக்கம், வங்கமொழி , ஆங்கிலம்,பிரெஞ்சு,இந்தி, ஹூப்ரு
16. அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி எனும் நூலை வெளியிட்ட ஆண்டு-1811.
17. இராஜாராம் மோகன்ராய் க்கு இராஜா எனும் பட்டம் அளித்தவர்-இரண்டாம் அக்பர்ஷா.
18. இராஜாராமின் அண்ணன் மனைவிக்கு சதி எனும் நிகழ்வு நடந்த ஆண்டு-1811.
19. பிரம்மசமாஜத்தை தோற்றுவித்தவர் மற்றும் ஆண்டு- இராஜாராம் மோகன்ராய்,1828.
20. ஆத்மிய சபை தொடங்கப்பட்ட இடம் மற்றும் ஆண்டு- கல்கத்தா ,1815.
21. பிரம்ம சமாஜத்தின் அடிப்படை தத்துவம்- தூய உள்ளமும் தூய வாழ்வும்.
22. ஒரே கடவுள் சங்கம் என அழைக்கப்பட்ட அமைப்பு- பிரம்ம சமாஜம்.
23. பிரம்ம சமாஜ உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- பிரமோக்கள்.
24. சதி தடைசட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு-1829 டிசம்பர் 4 ( பிரிவு 17).
25. வங்காளத்தில் சதியை ஒழிக்க யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது- வில்லியம் கேரி.
26. இந்தியா முழுவதும் சதி ஓழிக்கப்பட்ட ஆண்டு-1861 விக்டோரியா மகாராணி ஆட்சியின் கீழ்.
27. பெண்குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படும் வழக்கம் இராஜபுத்திரர்கள் குடும்பத்தில் இருந்ததாக கதறியுள்ளவர்- கர்னல்டாட்.
28. பெண்சிசு கொலை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு-1795 பிரிவு 21.
29. விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1856.
30. இயேசுநாதரின் கட்டளைகள் எனும் நூலை எழுதியவர்- இராஜாராம் மோகன்ராய்.
31. விதவை மறுமண சட்டத்தை விரிவுபடுத்த தீவிர இயக்கத்தை ஆரம்பித்தவர்- ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
32. சிறப்பு திருமண சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு- 1872 கேசவ் சந்திரசென்.
33. பரோடா அரசு குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கொண்டு வந்த ஆண்டு-1901.
34. சாரதா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1930.
35. சாரதா சட்டத்தின் படி பெண்ணின் திருமண வயது-14.
36. விதவை பெண்களுக்கென பூனாவில் இல்லம் அமைத்தவர்- பண்டிதர் கார்வே.
37. இந்துசமயத்தை சீர்திருத்திய செம்மல், இந்திய தேசியத்தின் முன்னோடி - இராஜாராம் மோகன்ராய்.
38. இந்திய மறுமலர்ச்சி தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி ,இந்திய புத்துலக சிற்பி - இராஜாராம் மோகன்ராய்.
39. இராஜாராம் தொடங்கிய வங்கமொழி வார பத்திரிகை- சம்வாத் கௌமுகி.
40. சம்வாத் கெளளமுகி தொடங்கப்பட்ட ஆண்டு-1821.
41. இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய பாரசீக பத்திரிகை- மிராத் உல் அக்பர்.
42. இராஜாராம் மோகன்ராய் மறைந்த இடம் மற்றும் ஆண்டு- பிரிஸ்டல் மற்றும் செப்டம்பர் 27, 1833.
43. இராஜாராமை உலகிலேயே நவீனமுறையில் முதன்முதலாக சமய ஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்க பாடுபட்டார் என கூறியவர்- சய்மோனியா வில்லியம்.
44. பரந்த மனித மனத்தை கொண்டவர் இராஜாராம் மோகன்ராய் என கூறியவர்- சீல்.
45. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கபட்ட ஆண்டு-1875.
46. ஆரியா எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அறிவார்ந்தோர் அமைப்பு அல்லது கடவுளின் குழந்தை.
47. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்- தயானந்த சரஸ்வதி.
48. தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்- மூல்சங்கர்.
49. தயானந்த சரஸ்வதி இறந்த இடம்- கத்தியவார் மூர்வி (1824).
50. தயானந்த சரஸ்வதி எங்கு சென்று விரஜானந்தரின் சீடர் ஆனார்- மதுரா.
51. ஆரிய சமாஜம் தொடங்கபட்ட இடம்- பம்பாய்.
52. ஆரிய சமாஜத்தின் தலைமையகம் எங்கு மாற்றப்பட்டது- லாகூர்.
53. சத்யார்த்த பிரகாஷ் எம்மொழி நூல்- இந்தி மொழி நூல்.
54. வேத பாஷ்யம் மற்றும் யஜூர் வேதங்களை சமஸ்கிருத மொழியில் மொழி பெயர்த்தவர்- தயானந்த சரஸ்வதி.
55. தயானந்த சரஸ்வதியின் தாரக மந்திரம் - வேதங்களை நோக்கி செல்.
56. மறை செழித்த நாடே எம்மகேஷ்வரன் வீடு இதனை வணங்குதலே இறைவனை வழங்குதல் என கூறியவர் - தயானந்த சரஸ்வதி.
57. இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர்- தயானந்த சரஸ்வதி.
58. சுத்தி இயக்கத்தை தோற்றுவித்தவர்- தயானந்த சரஸ்வதி.
59. தயானந்த் ஆங்கிலோ வேத பள்ளிகள் ஹன்ஸ்ராஜ் தலைமையில் எங்கு எப்போது தொடங்கப்பட்டது- லாகூர். 1886.
60. DAV கல்வி நிறுவனங்களின் முதன்மை மொழி மற்றும் இரண்டாம் நிலை மொழிகள்- ஆங்கிலம், இந்தி ,சமஸ்கிருதம்.
61. DAV நிறுவனங்களை மேற்பார்வையிடும் அரசு சாரா அமைப்பு – DAVCMC.( DAYANAND ANGLO VEDIC COLLEGE MANAGING COMMITTEE)
62. DAVCMC இன்றளவும் செயல்பட்டு வரும் நாடுகள்- பிஜி,நேபாளம்,மொரிசியஸ், சிங்கப்பூர்.
63. உலகில் சிறந்தவையாக தயானந்த சரஸ்வதி கூறுபவை- வேதசமயம்,நாகரிகம் பண்பாடு.
64. சுயராஜ்ஜியம் என கூறி மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டியவர்- தயானந்த சரஸ்வதி.
65. சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என முழங்கியவர்- திலகர்.
66. சத்யமேவ ஜெயதே எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- வாய்மையே வெல்லும்.
67. சத்யமேவ ஜெயதே எனும் சொல் எதில் இருந்து எடுக்கப்பட்டது- முண்டக உபநிடதம்.
68. ஆரிய சமாஜத்தை நிறுவிய எத்தனை ஆண்டுகளில் தயானந்த சரஸ்வதி இறந்தார்-8 ஆண்டுகளில்.
69. இந்துசமய மார்டின் லூதர் என அழைக்கப்படுபவர்- தயானந்த சரஸ்வதி.
70. 19- ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சி தந்தை தயானந்த சரஸ்வதி என கூறியவர்- தாகூர்.
71. இராமகிருஷ்ண பரஹம்சரின் காலம்-1836-1886.
72. இராமகிருஷ்ண பரஹம்சர் பிறந்த இடம்- கமர்புகூர் - ஹூக்ளி நதிக்கரையில் ( கல்கத்தா)
73. இராமகிருஷ்ண பரஹம்சரின் இயற்பெயர்- கடாதர சட்டர்ஜி.
74. இராமகிருஷ்ண பரஹம்சரின் தொழில்- தட்சணேஸ்வரம் காளி கோயில் அர்ச்சகர்.
75. தட்சிணேஸ்வரம் காளி கோயிலை கட்டியவர்- ராணி ராஸ் மோனி.
76. இராமகிருஷ்ண பரஹம்சரின் மனைவி பெயர்- சாரதாதேவி.
77. இராமகிருஷ்ண பரஹம்சர் யாருடைய சமகாலத்தவர்- தயானந்த சரஸ்வதி.
78. இராமகிருஷ்ண பரஹம்சரை இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை என பாராட்டியவர்- விவேகானந்தர்.
79. விவேகானந்தரின் காலம்- 1863 – 1902.
80. விவேகானந்தரின் பெற்றோர்- விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி.
81. யோக நெறிகள் எனும் நூலை எழுதியவர்- விவேகானந்தர்.
82. இராஜயோகம், கர்மயோகம், பக்தியோகம்,மற்றும் ஞானயோகம் போன்றவற்றின் மூலம் மோட்சத்தை அடையலாம் என கூறியவர்- விவேகானந்தர்.
83. விவேகானந்தரின் இயற்பெயர்- நரேந்திரா தத்தா.
84. விவேகானந்தர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினராக இருந்த போது அதன் தலைவராக இருந்தவர்- கேசவ் சந்திரசென்.
85. விவேகானந்தர் அத்வைத வேதத்தில் எத்தனை ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்- 5-ஆண்டுகள்.
86. விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தியானம் மேற்கொண்ட ஆண்டு-1892.
87. உலக சமய மாநாடு நடைப்பெற்ற இடம் மற்றும் ஆண்டு-சிகாகோ,செப்டம்பர் 11,1893.
88. உலக சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்- மதகுரு கிப்பன்ஸ்.
89. உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் எவ்வாறு தனது உரையை தொடங்கினார்- எனதருமை அமெரிக்க சகோதர சகோதரிகளே.
90. விவேகானந்தர் மன்னர் பாஸ்கர சேதுபதியை மதுரையில் சந்தித்த ஆண்டு-1892.
91. உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்றது என கூறியவர்- விவேகானந்தர்.
92. இராமகிருஷ்ண மிஷன/ இயக்கம் தொடங்கப்பட்ட இடம் மற்றும் ஆண்டு- பேலூர் (வங்காளம்) 1897 மே – 1.
93. வேதாந்த சங்கம் எப்போது எங்கே தொடங்கபட்டது- 1896 ல் நியூயார்க்( அமெரிக்கா).
94. இராகிருஷ்ண மிஷனின் முக்கிய நோக்கம்- துறவறம் மற்றும் மனித சேவை.
95. மேற்கு வங்க சுந்தரவன பகுதியில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை தொடங்கிய அமைப்பு- இராமகிருஷ்ண மிஷன்.
96. விழுமின், எழுமின், உழைமின், என முழங்கியவர்- விவேகானந்தர்.
97. பிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1875.
98. பிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட இடம் மற்றும் தோற்றுவித்தவர்கள்- நியூயார்க்- மேடம் பிளாவாட்ஸ்கி மற்றும் ஹஹன்றி எஸ் ஆல்காட்.
99. பிரம்ம ஞான சபையின் வேறு பெயர்- தியோசோபிகல் இயக்கம்.
100. தியோஸ் மற்றும் சோபாஸ் என்பது எம்மொழி சொல்- கிரேக்க மொழி சொற்கள்.
101. தியோஸ் என்பதன் பொருள்- கடவுள்.
சோபாஸ் என்பதன் பொருள்- அறிவு.
102. பிரம்ம ஞான சபையின் தலைமையகம் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்ட ஆண்டு-1882.
103. அன்னிபெசண்ட் எங்கு எப்போது பிறந்தார்-1847 ல் அயர்லாந்து.
104. அன்னிபெசண்ட் இந்தியாவிற்கு வந்த ஆண்டு-1897.
105. அன்னிபெசண்ட் மத்திய இந்து கல்லூரியை தொடங்கிய ஆண்டு-1898.
106. அன்னிபெசண்டின் வீரமிக்க உணர்ச்சி சொற்பொழிவுகள் அடங்கிய தொகுப்பு நூல்- இந்தியனே விழித்தெழு.
107. பொது வாழ்வு எனும் வார இதழை அன்னிபெசண்ட் வெளியிட்ட ஆண்டு -1914.
108. அன்னிபெசண்ட் தொடங்கிய நாளிதழ்- நவ இந்தியா.
109. பிரம்ம ஞான சபையால் தொடங்கப்பட்ட பள்ளிகள்- ஆல்காட் நினைவு பள்ளி,
ஆல்காட் நினைவு இடைநிலை பள்ளி.
110. இராமலிங்க அடிகளாரின் காலம்-1823 (அக்டோபர் 5) முதல் 1874 வரை.
111. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்- இராமையா,சின்னம்மை.
112. இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பு- திருவருட்பா.
113. இறைவனை அருட்பெருஞ்ஜோதி யாக வழிப்பட்டவர்- வள்ளலார்.
114. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவிய ஆண்டு-1865.
115. வள்ளலார் பதிப்பித்த நூல்கள்:
1. சின்மய தீபிகை
2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டைமண்டல சதகம்
116. வள்ளலாரின் உரைநடை நூல்கள்- மனுமுறை கண்ட வாசகம்,
ஜூவகாருண்ய ஒழுக்கம்.
117. வள்ளலாரின் செய்யுள்- திருவருட்பா.
118. திருவருட்பா எத்தனை பாடல்கள் மற்றும் திருமுறை களை கொண்டது-6000 - 6.
119. திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டவர்- தொழுவூர் வேலதாயுதனார்.
120. ஜுவகாருண்ய ஒழுக்கம் மூலம் ஆன்மநேய ஒருமைபாட்டை வளர்க்கலாம் என கூறியவர்- இராமலிங்க அடிகள்.
121. ஸ்ரீ நாராயண குருவின் காலம்-1856-1928.
122. ஸ்ரீ நாரயண குரு பிறந்த இடம்- செம்பழுந்தி கிராமம் திருவனந்தபுரம் கேரளா.
123. பொதுவாக நானு ஆசான் என அழைக்கபட்டவர்- ஸ்ரீ நாரயண குரு.
124. ஸ்ரீநாரயண குரு மலையாளத்தில் மொழிப்பெயர்த்த நூல்கள்:
1. ஈசோ வாஸ்போ உபநிடதம்.
2. திருக்குறள்.
3. ஒழிவிலொடுக்கம்.
125. ஸ்ரீநாரயண குரு காலத்தில் மக்களின் இரு பிரிவுகள்- அவர்ணர் , சவர்ணர.
126. ஸ்ரீநாரயண குரு கோயில் கட்டிய இடம்- அருவிபுரம்.
127. ஸ்ரீநாரயண தரும பரிபாலன யோகம் எனும் அமைப்பை ஸ்ரீநாரயண குருஎப்போது தொடங்கினார்-1903.
128. ஸ்ரீநாரயண குருவின் கருத்து- ஒரே சாதி ஒரே சமயம் மனித குலத்திற்கு ஒரே கடவுள்.
129. வைகுண்ட சுவாமிகள் பிறந்த ஊர்- சாமிதோப்பு கன்னியாகுமரி.
130. வைகுண்ட சுவாமிகள் எவ்வாறு அழைக்கபட்டார்- முடிசூடும் பெருமாள்,முத்துக்குட்டி.
131. வைகுண்ட சுவாமி வாழ்க்கை வரலாற்றுநூல்- அகிலத்திரட்டு, அம்மானை.
132. அகிலத்திரட்டு அம்மானை யை எழுதியவர்- இராமகோபால்.
133. அய்யா வைகுண்டரின் கொள்கையை பரப்பும் இடங்கள் எவ்வாறு அழைக்கபட்டன- நிழல்தாங்கல்கள்.
134. மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த அய்யா வைகுண்டர் நடத்தியது-துவையல் பந்தி.
135. ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் காலம்-1820-1891.
136. விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள்- மகாதேவ் இரானடே, வித்யாசாகர்.
137. இந்துவிதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1856 – பிரிவு- 15.
138. எந்த பாலத்திற்கு வித்யாசாகர் பாலம் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது- ஹூக்ளி பாலம்.
139. ஜோதிபாபூலே யின் காலம்-1827-1890.
140. பூத்தொடுக்கும் குடும்பத்தில் பிறந்ததால் பூலேஎன அழைக்கப்பட்டவர்- ஜோதிபாய்.
141. ஜோதிபாய் பூலே பெண்கள் பள்ளியை தொடங்கிய இடம்- புத்வார் பீத்.
142. விவசாயிகளுக்காக இரவுநேர பள்ளியை நடத்தியவர்- ஜோதிபாபூலே.
143. சத்ய சோதக் சமாஜத்தை (உண்மையை தேடுவோர் சங்கம்) தோற்றுவித்தவர் மற்றும் ஆண்டு- ஜோதிபாபூலே-1873.
144. அயோத்திதாச பண்டிதரின் காலம்-1845-1914.
145. தமிழ் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்- அயோத்திதாச பண்டிதர்.
146. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர்- காத்தவராயன்.
147. அயோத்திதாச பண்டிதர் எந்த கோட்பாடுகள் நம்பிக்கை கொண்டு இருந்தார்- அத்வைத கோட்பாடு.
148. ஒரு பைசா தமிழன் வெளிவந்த ஆண்டு-1907.
149. ஒரு பைசா தமிழன் என்னவாக பெயர் மாற்றப்பட்டது- தமிழன்.
150. தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர்- கந்துகூரி விரேசலிங்கம்.
151. கந்துகூரி விரேசலிங்கம் காலம்-1848-1919.
152. கந்துகூரி விரேசலிங்கம் பிறந்த இடம்- இராஜமுந்திரி கர்நாடகா.
153. விரேசலிங்கம் 1876 ல் தொடங்கிய செய்தித்தாள்- விவேக வர்த்தினி.
154. ஹூத்காரிணி பள்ளியை விரேசலிங்கம் தொடங்கிய ஆண்டு-1908.
155. ஆந்திராவில் விதவை திருமணத்தை விரேசலிங்கம் நடத்திய ஆண்டு-1881.
156. தந்தை பெரியாரின் காலம்-1879-1973.
157. தந்தை பெரியார் பிறந்த இடம் மற்றும் நாள்- ஈரோடு -1879 -செப்டம்பர் -17.
158. பெரியார் நடத்திய இதழ்கள்- குடியரசு , விடுதலை , புரட்சி.
159. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு-1925.
160. பெரியார் 1929 - 1932 வரை பயணம் மேற்கொண்ட வெளிநாடுகள்- சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ்,ஜெர்மனி,கிரிஸ்
161. பெரியாரை UNESCO புத்துலக தொலைநோக்காளர் மற்றும் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என சிறப்பித்த ஆண்டு-1973.
162. பெரியாரின் முதலாவது சமுதாய போரட்டம் தொடங்கிய இடம்- வைக்கம் கேரளா.
0 Comments
THANK FOR VISIT