12TH- STD - தீவிர தேசியவாதத்தின் எழுச்சி சுதேசி இயக்கமும்-

1.    ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு- வங்கப்பிரிவினை.

2.    பிரிவினைத் திட்டம் முதன்முதலில்-மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது.

3.    தீவிர தேசியவாதிகள்:

          1.    பாலகங்காதர திலகர் - மகாராஷ்டமிரா.

          2.    பிபின் சந்திர பால் - வங்களம்.

          3.    லாலா லஜபதி ராய் - பஞ்சாப்.

4.    சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்கள்:

          1.    அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது.

          2.    அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது.

5.    இந்தியாவின் பலபகுதிகளில் எந்த மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் முக்கியச் சாதனையாகும  -  வட்டார.

6.    தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் - கேசரி, வங்காளத்தில்- யுகந்தர் ஆகிய பத்திரிக்கைகளின் ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும் .

7.    பொதுக்கூட்டங்கள் சட்டம் -1907.

8.    வெடி மருந்துச் சட்டம் -1908.

9.    செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் -1908.

10.   இந்தியப் பத்திரிகைச் சட்டம் -1910.

11.   கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆண்டு  -  1899 ஜனவரி 6.

12.   1899 - கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தவர் -  கர்சன் பிரபு.

13.   எந்த ஆண்டு இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது - 1904.

14.   அலுவலக ரகசிய சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1904.

15.   வங்காளத்தை பிரிக்க 1905 இல் ஆணை பிறப்பித்தவர் -கர்சன் பிரபு.

16.   டிசம்பர் 1903 இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை தீட்டியிருந்தார்- கர்சன் பிரபு.

17.   அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

18.   ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய- நோக்கமாகும்

19.   புவியியல் அடிப்படையில் எந்த ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது - பாகீரதி.

20.   முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என  டாக்காவில் கர்சன் முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார் -  பிப்ரவரி 1904.

21.   ரவீந்திரநாத் தாகூரைமையமாகக் கொண்டு -வங்கமொழி இலக்கிய மதிப்பைப் பெற்றுவிட்டது-   

22.   வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது  -1905  ஜூலை 19.

23.   1905 ஜுலை 17 -கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

24.   அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர்  -  சுரேந்திரநாத் பானர்ஜி.

25.   கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது - 1905 ஆகஸ்டு 7.

26.   அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது  - 1905 அக்டோபர் 16.

27.   சென்னையைச் சேர்ந்த தேசியவாதியான - சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து "தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி" எனச் சுருக்கமாக விளக்கினார்  -  G.சுப்பிரமணியம்.

28.   சுதேசி என்பதன் பொருள் -'ஒருவரது சொந்தநாடு' .

29.   சுதேசி இயக்கமானது நம்முடைய தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்கானது" - கோபால கிருஷ்ண கோகல.

30.   யாருடைய கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - மகாதேவ் கோவிந்த் ரானடே.

31.   1920 - களில் காந்தியடிகள் அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமைகளோடு இணைத்துச் சுதேசி சிந்தனைக்குப் புதிய பொருளைக் கொடுத்தார்.

32.   சுய உதவி பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தவர் - ரவீந்திரநாத் தாகூர்.

33.   சுய உதவி எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாகளை பயன்படுத்த அழைப்பு விடுத்தவர்-சுதேசி இயக்கம் -ரவீந்திரநாத் தாகூர்.

34.   வட்டார மொழியில் கல்வி " எனும் கருத்தை கூறியவர் -சதீஷ் சந்திரா.

35.   சதீஷ் சந்திராவால் "விடிவெள்ளி கழகம்" நிறுவப்பட்ட ஆண்டு-1902.

36.   வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே 1902-விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகி விட்டது-    சதீஷ் சந்திரா.

37.   தீவிர தேசியவாதத் தலைவர்களின்பொதுவான குறிக்கோள்களில் ஒன்று - சுயராஜ்ஜியம் () சுயாட்சி .

38.   யாருடைய கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும் -பிபின் சந்திரபால்.

39.   1906- யார் இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்த - மிண்டோ பிரபு.

40.   எந்த ஆண்டு கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது -1906.

41.   தீவிர தேசியவாதிகளின் கோட்டை எது - பூனா.

42.   தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ்-  மேத்தா காங்கிரஸ்.

43.   1870 இல் யார் விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன  - விவேகானந்தர்.

44.   ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அமைப்பு-  அனுசீலன் சமிதி.

45.   புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி உருவான ஆண்டு - 1906.

46.   சுதேசி இயக்கத்தின் மூலம் புறக்கணிக்கப்பட்டது :

          1.    அன்னிய பொருட்களை புறக்கணிப்பது.

          2.    அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது.

          3.    நீதிமன்றங்களை புறக்கணித்தல்.

          4.    பட்டங்களை துறந்து விடுதல்.

          5.    அரசுப் பணிகளை கைவிடுதல்.

          6.    ஆங்கிலேயரின் அடக்கு முறை தாங்க இயலாத அளவிற்கு சென்றால் ஆயுதப் போராட்டங்களை கைக்கொள்வது.

47.   சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய ஆங்கில அதிகாரி- டக்ளஸ் கிங்ஸ்போர்டு.

48.   அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடினார்   -  சித்தரஞ்சன் தாஸ்.

49.   அரவிந்த கோஷ் இயற்கை எந்திய ஆண்டு - 1950.

50.   மிண்டோ-மார்லி அரசியல்அமைப்புச் சீர்திருத்தங்கள்அறிவிக்கப்பட்ட ஆண்டு - டிசம்பர் 1908.

51.   எந்த ஆண்டு முதல் தீவிர தேசிய வாதம் சரிய தொடங்கியது -1908.

52.   சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின -1907.

53.   .. சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்தியபோது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது - 1906.

54.   சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தின் முதலீடு:

          1.    மொத்த முதலீடு -ரூ 10 லட்சம்.

          2.    பங்கு பிரிப்பு - 40,000.

          3.    ஒரு பங்கு - ரூ 25.

55.   1906 - சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தவர்- .சி.

56.   S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்- ..சி.

57.   சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து யார் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார  - லோகமான்ய திலகர்.

58.   ஒரு நல்ல பேச்சாளரை ..சி தேடிக் கொண்டிருந்த தருணத்தில் சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த யாரை சந்தித்தார்  - சுப்ரமணிய சிவா.

59.   1907 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ..சி யும் ,சுப்பிரமணிய சிவாவும் தூத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினர் .

60.   கோரல்மில் தொழிலாளர்களின் படுமோசமான வேலை வாழ்க்கைச் சூழல்கள் ..சி., சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது  - 1908.

61.   பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதை " சுதேசி தினமாக" திருநெல்வேலியில் கொண்டாடியபோது கைது செய்யப்பட்டவர்கள்- (1908 மார்ச் 12).

          1.    ..சி.

          2.    சுப்பிரமணிய சிவா.

          3.    பத்மநாபர்.

62.   சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்து உடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வது அல்ல -பால கங்காதர திலகர்.

63.   சுயராஜ்யம் என்பது அன்னியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைதல் என்பதாகும்- பிபின் சந்திரபால்.

64.   கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  ஆண்டு - மார்ச் 1908.

65.   தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி பத்திரிகை- சுதேசமித்திரன்.

66.   தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிடப்பட்ட முதல்தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவியவர் -  ஜி சுப்பிரமணியம்.

67.   சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராக யார் பணியாற்றினார். அது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகும்-சுப்பிரமணிய பாரதி.

68.   சுப்ரமணிய பாரதியின் அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை - 1905 சந்தித்தது முதலாவதாகும். குருமணி (ஆசிரியர்) என அவரால் குறிப்பிடப்பட்ட அப்பெண்மணி அவரின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்  .

69.   திலகரின் Tenets of New party எனும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் -  பாரதி.

70.   பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய எந்த வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது - இந்தியா.

71.   6 - மாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திர பால் -1907 மார்ச் 9 விடுதலை செய்யப்பட்டார்.

72.   ..சி. யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட  ஆண்டு - 1908 ஜூலை 7.

73.   அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவுக்கு 10-ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக ..சி.க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப் பெற்றது.

74.   அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டன விதிக்கப்பெற்றார் -..சி.

75.   திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் - சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு - ஜுன் 1911இல்

76.   1880 - திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றினார்.

77.   பாண்டிச்சேரியில் வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வழங்கியவர் -  .வே. சுப்ரமணியம்.

78.   தன்னாட்சி இயக்கம் - 1916

79.   சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது  - லாலா லஜபதி ராய்.

80.   விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1905 நவம்பர் 5.

81.   வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்ட ஆண்டு  - 1906 ஆகஸ்ட்.

82.   புரட்சிகர வார இதழ்-யுகாந்தர்.

83.   1906 ஆகஸ்ட் இல் சங்பூரில் முதல் சுதேசி கொள்கையை நடத்தியது - கல்கத்தா அனுசீலன் சமிதி

84.   மணிக்தலா என்னும் இடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் ஒரு மதசார்பு பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில் கூடத்தை நிறுவியவர்-ஹேம்சந்திர கனுங்கோ.

85.   டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டது - குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி.

86.   1908 -ஏப்ரல் 30 - தவறுதலாக குண்டுவீசி 2 ஆங்கிலப் பெண்கள் கொலை செய்யப்பட்டனர்.

87.   அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் -சித்தரஞ்சன் தாஸ்.

88.   அரவிந்த் கோஷ் விடுதலைக்கு பின்னர் ஒரு ஆன்மீக

89.   பாதையை தேர்ந்தெடுத்து 1950 இல் இயற்கை எய்தும் வரை எங்கு தங்கியிருந்தார்பாண்டிச்சேரி.

90.   மின்டோ-மார்லி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு-1908 டிசம்பர்.