PAGE
NO : 29 12TH - STD சட்டமன்றம் TOTAL QUESTION : 80
1.
மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் - சபாநாயகர்.
2. நாடாளுமன்றம் - ஈரவைகளைக் கொண்டது:
1. மக்களவை / லோக்சபா / கீழவை .
2. மாநிலங்களவை / ராஜ்யசபா/ மேலவை.
3. ஒன்றிய சட்டமன்றம் என்பது
– நாடாளுமன்றம்.
4. இந்தியாவில் " நாடாளுமன்ற முறை" மற்றும் ஈரவை முறை"
எந்த நாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது - இங்கிலாந்து , அமெரிக்கா.
5. நாடாளுமன்றம் - ஆண்டுக்கு 3 கூட்டத்தொடர்:
1. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் - பிப்ரவரி - மே.
2. மழைக்காலக் கூட்டத்தொடர் -ஜூலை - ஆகஸ்ட்.
3. குளிர்காலக் கூட்டத்தொடர்- நவம்பர் - டிசம்பர்.
6. பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு. - 2010. (மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை)
7. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதலி நீக்கம் செய்யும் முறை - பழிச்சாட்டுதல்.
8. அமைச்சர்கள், தனித்தனியாகவும் கூட்டாகவும் யாருக்கு பொறுப்புடையவர்கள்- மக்களவைக்கு.
9. மக்களவை மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் எத்தனை பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்-1/10.
10. மக்களவை:
1. மொத்த உறுப்பினர்கள் - 545 .(552 மிகாமல் - 530 + 20 +2)
2. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் - 543.
3. பெரும்பான்மை - 272.
4. ஆங்கிலோ - இந்தியன் உறுப்பினர் - 2.
5. மக்களவையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்.
6. மக்களவை தகுதியான வயது - 25.
11. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்க முடியாது.
12. இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர்.
13. மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.
14. நாடாளுமன்ற தலைமை செயலகத்தின் நிர்வாக தலைவர் மக்களவை -சபாநாயகர்.
15. சபாநாயகர் :
1. மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர்.
2. மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க படுவார்.
3. சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடக்க உதவுவது ஆகியவை சபாநாயகரின் கடமைகள்.
16. ஒரு திருத்த சட்டம் முன்மொழிவதற்கு யாரிடம் அனுமதி பெறபட வேண்டும்- சபாநாயகர்.
17. சிறப்புரிமை குறித்து எந்த விளக்கமும் வேண்டி ஆய்வு செய்யவும் விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமை குழுவுக்கு பரிந்துரைப்பது – சபாநாயகர்.
18. நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடருக்கு தலைமை தாங்குபவர்-சபாநாயகர்.
19. எந்தத் திருத்த சட்டத்தின்படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதி இழப்பு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது - 52 வது திருத்த சட்டம்.
20. நாடாளுமன்றத்தில் இருபுறமும் வாக்கு சமநிலையில் இருக்கும்போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்துவார் - முடிவு செய்யும் வாக்கு / Casting vote.
21. மாநிலங்களவை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1952 ஏப்ரல் 3.
1. மாநிலங்களவை- கலைக்கப்படாத அவை.
2. மொத்த உறுப்பினர்கள் -
250 மிகாமல்.
3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து உறுப்பினர்கள்.
238.
4. குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினர்கள். 12.
5. மாநிலங்களவை பதவிக்காலம் - 6.
ஆண்டுகள் ( 2 ஆண்டு - 1/3).
6. மாநிலங்களவை தகுதியான வயது- 30
22. இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆட்சி மன்றம் -மாநிலங்களவை/ மேலவை / ராஜ்யசபா/
23. சட்டமுன் வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நிலை - அறிக்கை நிலை.
24. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை - மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் மாற்றத்தக்க ஒற்றை வாக்குமூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ படி.
25. மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பவர் - துணை குடியரசுத் தலைவர்.
26. மக்களவைக்கு இணை0யான அதிகாரம் மாநிலங்களவை எதில் பெற்றுள்ளது - சட்டம் இயற்றுதல்.
27. எந்த முன் வரைவுகளைத் தவிர்த்து ஏனைய முன் வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் - பணம்/ நிதி.
28. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்- 1951 இன் கீழ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்க வேண்டும்.
29. மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எந்த ஆண்டு திருத்த சட்டத்தின் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்டது - 2003.
30. மாநிலங்களவை உறுப்பினர்கள்:
1. மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2. உத்தரப்பிரதேச மாநிலம் - 31 உறுப்பினர்கள் . அதிக மக்கள்தொகை .
3. சிக்கிம் - 1 உறுப்பினர் . குறைவான மக்கள்தொகை.
4. தமிழ்நாடு - 18 உறுப்பினர்கள்.
31. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கூட்டத்தொடர் முடிந்த 40 நாட்களுக்கு வரையிலும் ஒரு உறுப்பினர் மீது உரிமையில் வழக்குகளில் கீழ் கைது செய்ய முடியாது -
32. நாடாளுமன்றத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவை - கீழ் அவை.
33. நாட்டின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் இயற்றும் அவை - கீழ் அவை.
34. பணம் சார்ந்த முன்வரைவுகளின் மீது கீழ் அவை/ லோக்சபா க்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ளது .
35. பணம் சார்ந்த நடவடிக்கைகளில் மாநிலங்களவை எத்தனை நாட்களுக்கு மட்டுமே காலதாமதமப்படுத்த முடியும் -14.
36. அரசியலமைப்பு திருத்தி அமைக்கவும் அவசரகால நிலை பிரகடனத்தை வெளியிடவும் அதிகாரம் பெற்றது- மக்களவை.
37. மாநிலங்களவை மக்களவை சம நிலையில் உள்ள இடங்கள் :
1. முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.
2. திருத்த சட்டம் முன் வரவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.
3. செலவினங்கள் தொடர்பான முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.
4. குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் பதவி நீக்கம்.
38. நிதி முன்வரைவு சட்ட உறுப்பு - 110.
39. ஒரு முன்வரைவு , பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் - சபாநாயகர்.
40. ஈரவையின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் - சபாநாயகர்.
41. அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் மக்களவை
42. அவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
43. சரத்து
249 இன் படி மாநிலங்களவை மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் சட்டம் இயற்ற முடியும்.
44. சரத்து 312 இன் படி அனைத்து இந்திய தேர்வாணையத்தை உருவாக்க மாநிலங்களவைக்கு அதிகாரம் உள்ளது .
45. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக செயல்படுவது- மாநிலங்களவை.
46. அரசமைப்பு 108வது திருத்தச்சட்டம் என்பது
- பெண்கள் இட ஒதுக்கீடு.
47. நாடாளுமன்றத்தில் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என கூறும் சரத்து- 120.
48. நாடாளுமன்றம் இருவகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகிறது அவை :
1. நிதி முன்வரைவு.
2. நிதி சாராத முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு.
49. எத்தனை மாதத்திற்கு முன் மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்குகோ தெரிவிக்க வேண்டும்-1 மாதம்.
50. ஒவ்வொரு சட்ட முன்வரைவு கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும்:
1. முதல் வாசிப்பு.
2. இரண்டாம் வாசிப்பு.
3. குழுநிலை.
4. அறிக்கை நிலை.
5. மூன்றாவது வாசிப்பு.
51. சபாநாயகர் இல்லாத காலங்களில் ஈரவைகளின் கூட்டு கூட்டங்களுக்கு தலைமையேற்று நடத்துபவர் - துணை சபாநாயகர்.
52. எந்த அட்டவணையில் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன-7வது.
53. மத்தியப் பட்டியலில் உள்ள முக்கிய துறைகள் (ஒன்றிய பட்டியல்): மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.
1. பாதுகாப்பு , வங்கி சேவை , ரயில்வே , அஞ்சல் மற்றும் தந்தி
2. நாணயம் , வெளிநாட்டு விவகாரங்கள் , வான் வழிகள்,
3. தகவல் தொடர்பு , துறைமுகங்கள் , வெளிநாட்டு வர்த்தகம்.
54. பொதுப்பட்டியலில் உள்ள முக்கிய துறைகள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியும்.
1. கல்வி , வனம் , தொழிற்சங்கம்,
2. திருமணம் , தத்து எடுத்தல்
3. வாரிசுரிமை , கலப்படம்.
55. மாநிலப் பட்டியலில் உள்ள முக்கிய துறைகள் :
1. காவல் துறை , சிறைச்சாலை , மது , நிலம்,
2. விவசாயம் , உள்ளாட்சி அரசாங்கம் , மாநில பொது பணிகள்
3. நீர் பாசனம் , பொது சுகாதாரம் , கால்நடை வளர்ப்பு.
56. பட்டியலில் குறிப்பிடாத எஞ்சியுள்ள அதிகாரங்களை பெற்றிருப்பது - மத்திய அரசு.
57. சாதாரண சட்ட முன்வரைவை மாநிலங்களவை எத்தனை மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடியும்- 6 மாதம் .
58. நிதி முன்வரைவை 14 நாட்கள் மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்.
59. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் நம் நாட்டில் தனிநபர் வருமானத்தை போல் 68 மடங்கு அதிகம்.
60. 2010 -2012 ஆம் ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 227 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளது - (852 மணி நேரம் - 577 மணி நேரம் கூச்சல் குழப்பங்கள்).
61. எந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளை விட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது -சிங்கப்பூர் ,ஜப்பான் , இத்தாலி.
62. ஒரு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தேவையான ஆதரவு :
1. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவு.
2. வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கவேண்டும்.
63. அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை பற்றி குறிப்பிடும் சரத்து- 368.
64. அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம் அவை:
1. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை.
2. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை.
3. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50 சதவீதத்திற்கு மேல் மாநில சட்டமன்றங்களின் ஆதரவு.
65. புதிய மாநிலங்களை உருவாக்குவது, எல்லைகளை மாற்றி அமைப்பது- நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை.
66. மாநிலங்களில் மேலவை உருவாக்குவது அல்லது நீக்குவது -நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை.
67. அடிப்படை உரிமைகள் , அரசு நெறிமுறை கொள்கைகள் திருத்தம் செய்ய -நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை.
68.
நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநில சட்டமன்றங்களின் ஆதரவுடன் கீழ்க்கண்ட எதைத் திருத்தம் செய்யலாம்:
1. குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் முறைகள்.
2. மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.
3. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்.
4. ஏழாவது அட்டவணையில் அடங்கியுள்ள பட்டியல்கள்.
69. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் -ஆளுநர்.
70. ஆளுநர் மூலம் நியமனம் செய்யப்படுபவர்கள்:
1. அமைச்சரவை நியமனம்.
2. மாநில அரசு தலைமை வழக்கறிஞர்.
3. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள்.
4. மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1 -ஆங்கிலோ - இந்தியன்.
71. நாடாளுமன்றத்தில் உள்ள நிலை குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப - 6 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
72. மக்களவை மாநிலங்களவ கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் 1/10- பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
73. மத்திய அரசாங்க தலைவர்-பிரதமர்.
74. மத்திய அரசின் தலைவர் - குடியரசு தலைவர்.
75. மாநில அரசாங்க தலைவர் - முதலமைச்சர்.
76. மாநில அரசின் தலைவர் - ஆளுநர்.
77. மாநிலங்களவையின் தலைவர் - துணை குடியரசுத் தலைவர்.
78. தேசிய சட்டமன்றம் - நாடாளுமன்றம்.
79. சட்டம் இயற்றுகின்ற உச்ச அமைப்பு - சட்டமன்றம்.
80.
மாநிலத்தின் செயல் அதிகாரம் பெற்றவர் - ஆளுநர்.
0 Comments
THANK FOR VISIT