PAGE NO: 59    12TH  STD  ஆட்சித்துறை  TOTAL QUESTION : 112         

1.    குடியரசுத் தலைவருக்கான தகுதி பற்றி குறிப்பிடும் சரத்து - சரத்து 58.

2.    குடியரசுதலைவர் பதவிக்கான குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு வாக்காளர்கள் முன்மொழிவு செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் வேட்பாளர் தேர்வு குழுவின் 50 உறுப்பினர்கள் மூலம் வழிமொழியப்படவேண்டும் என்றும் கூறும் சரத்து - சரத்து 52.

3.    குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கியில் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் -15000. (1/6 பங்கு வாக்கு)

4.    குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியான வயது - 35.

5.    இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து -சரத்து 52.

6.    இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை குடியரசுத்தலைவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படுத்த வகை செய்யும் சரத்து - சரத்து 53.

7.    குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை:  ஒற்றை மாற்றத்தக்க வாக்கெடுப்பு மற்றும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில்.

8.    குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிற வாக்காளர் குழு:

          1.    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

          2.    மாநிலங்களின் சட்டசபைகளின் கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

          3.    டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டம் மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

9.    குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

10.   நாட்டின் பெயரளவு தலைவர் - குடியரசுத் தலைவர்

11.   நாட்டின் உண்மையான தலைவர் - பிரதமர்.

12.   குடியரசு தலைவரின் பதவி காலத்தை பற்றி குறிப்பிடும் சரத்து - சரத்து 56.

13.   குடியரசு தலைவர் பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுப்பார் -துணை குடியரசுத் தலைவர்.

14.   குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்.

15.   குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் சரத்து - சரத்து 61.

16.   குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றம்சாட்டப்பட்ட தீர்மானம் எத்தனை நாட்களுக்கு முன் வழங்கப்படவேண்டும்- 14 .

17.   குடியரசு தலைவர் பதவி நீக்கம் :

                1.    எந்தவொரு அவையிலும் அதன் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

                2.    குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வழங்குவதன் மூலம் அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்படும்.

                3.    அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு குறையாத பெரும்பான்மையால் நிறைவேற்றப்படவேண்டும்.

18.   குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் அல்லது இறப்பு ஆகியவற்றில் பதவி காலியாகும் போது குடியரசுத் துணைத் தலைவர் எத்தனை மாதத்திற்கு பதவி வகிப்பார் -6 மாதம்.

19.   குடியரசுத் தலைவர்:

          1.    மக்களவை - 2 ஆங்கிலோ- இந்தியன் நியமனம்.

          2.    மாநிலங்களவை - 12 உறுப்பினர்கள் நியமனம்.

          3.    குடியரசுத்தலைவர் இல்லம் - ராஷ்டிரபதி பவன்.

          4.    முப்படை தலைவர் - குடியரசு தலைவர்.

20.   குடியரசுத் தலைவர் இல்லாத போது அவரது பதவியை தற்காலிகமாக வகிப்பவர்- குடியரசுத் துணைத் தலைவர் () உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி () உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி.

21.   குடியரசு தலைவரின் நெருக்கடிக்கான அதிகாரங்கள் எந்த பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது - XVIII.

22.   நாடாளுமன்றத்தின் அவைகளின் கூட்டங்களை கூட்டுவது மக்களவையை ஒத்தி வைப்பது மற்றும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்.

23.   நிதி குழுவை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர். 5 ஆண்டுக்கு ஒரு முறை அமைக்கப்படும்.

24.    பகுதி – XVIII :

          1.    தேசிய நெருக்கடி - சரத்து 352.

          2.    மாநில நெருக்கடி- சரத்து 356.

          3.    நிதி நெருக்கடி - சரத்து 360.

25.   உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்பவர் - குடியரசுத் தலைவர்.

26.   குடியரசுத் தலைவர் 6 வகையான அதிகாரங்களை பெற்று திகழ்கிறார் அவை :

          1.    ஆட்சித்துறை 

          2.    சட்டத்துறை

          3.    நிதித்துறை 

          4.    நீதித்துறை

          5.    நெருக்கடி கால அதிகாரங்கள்

          6.    இதர அதிகாரங்கள்

27.   குடியரசுத் தலைவர் அதிகாரங்கள் :

          1.    சட்ட முன்வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே சட்டம் ஆக முடியும்.

          2.    தண்டனைகளை மாற்றவும் குறைக்கவும் மன்னிப்பு வழங்கவும் அதிகாரம் உண்டு.

          3.    நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க செய்வார்.

28.   இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பதவி - அமெரிக்கா நாட்டின் பதவியை போன்றது.

29.   துணை குடியரசுத் தலைவர் பதவியை பற்றி குறிப்பிடும் சரத்து - சரத்து 61.

30.   துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை:  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் விகிதாச்சார முறையில் மாற்றத்தக்க ஒற்றை வாக்குமூலம்

31.   மாநிலங்களவையின் அலுவல்வழி தலைவர் - குடியரசுத் துணை தலைவர்.

32.   எந்த சரத்தின் படி குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவை அலுவல்வழி தலைவராக செயல்படுகிறார்- சரத்து 64.

33.   குடியரசுத் துணை தலைவர் பற்றிய சரத்துகள்- சரத்து 63 - 70.

34.   குடியரசுத் தலைவர் பற்றிய சரத்துகள்- சரத்து 52 – 62.

35.   பிரதமர் - சரத்து 74 - 78

36.   நாடாளுமன்றம் - சரத்து 79 - 123

37.   பிரதமர் என்பவர் சமமான அமைச்சர்களில் முதன்மையானவர். அத்துடன் காபினட் அமைப்பின் அடிப்படை தூணாகவும் உள்ளார். அப்பதவியும் பொறுப்பும், அப்பதவி இருக்கும் வரையிலும் ஒப்பிட முடியாத ஒன்றாகவும் தனிச்சிறப்புமிக்க அதிகார மையமாகவும் விளங்குகிறது- மார்லே பிரபு.

38.   இந்திய அரசமைப்பின் பகுதி v இல் உள்ள சரத்து 52 - முதல் 78  வரை ஒன்றிய ஆட்சித்துறை பற்றி கூறுகின்றன .

39.   பிரதமர் முறை எந்த நாட்டின் முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது இங்கிலாந்து.

40.   பிரதமர் :

          1.    பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் பற்றிய குறிப்புகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லை.

          2.    பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் எதுவுமில்லை.

          3.    மக்களவையில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியில் தலைவரையே பிரதமராக குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்.

41.   அரசமைப்பின் 75 வது உறுப்பு பிரதமரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது.

42.   அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்

43.   மக்களவையில் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவராக உள்ளவர் - பிரதமர்.

44.   அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்- பிரதமர்.

45.   நாடாளுமன்றத்துக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர் - பிரதமர்.

46.   நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சி குழு போன்றவற்றின் தலைவராக செயல்படுபவர் - பிரதமர்.

47.   அரசமைப்பு 74 வது உறுப்பின் படி குடியரசுத் தலைவருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும், பிரதம அமைச்சரைத் தலைவராக கொண்ட அமைச்சர்கள் குழு இருக்கும்.

48.   நிழல் அமைச்சரவையை கொண்டுள்ள நாடுஇங்கிலாந்து.

49.   குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை - அமைச்சர்கள் பதவியில் இருப்பர்.

50.   பிரதமரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்கள்  - குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

51.   நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு துறையிலும் உள்ள விவகாரங்களைப் பற்றி ஆராய தமது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறது  - நிழல் அமைச்சரவை.

52.   இந்திய அரசமைப்புபடி அமைச்சர்கள் தனியாகவும் கூட்டாகவும்  -மக்களவைக்கு பொறுப்பானவர்கள்.

53.   மாநில அரசு பற்றி குறிப்பிடும் பகுதி - VI.

54.   மத்திய அரசு பற்றி குறிப்பிடும் பகுதி-V.

55.   மாநில அரசின் நிர்வாகத்தை பற்றி குறிப்பிடும் சரத்து - 153 - 167.

56.   அரசமைப்பின் - 153  வது உறுப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.

57.   1956 - ஆம் ஆண்டி அரசமைப்பு திருத்த படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக ஒருவரே இருக்க முடியும்.

58.   ஆளுநர் நியமனம் பற்றி குறிப்பிடும் சரத்து - 155.

59.   ஆளுநரின் பதவிக் காலம் பற்றி கூறும் சரத்து - 156.

60.   மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் - ஆளுநர்.

61.   மாநிலத்தின் உண்மையான செயல் அதிகாரம் பெற்றவர்-முதலமைச்சர்.

62.   ஆளுநரின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறும் சரத்து-154.

63.   ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஒரு பகுதி என்று கூறும் சரத்து -168.

64.   குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலத்தில் அரசமைப்பு 356 வது உறுப்பின்படி பரிந்துரைக்க அதிகாரம் பெற்றவர் -ஆளுநர்.

65.   ஆளுநர் மூலம் நியமனம் செய்யப்படுபவர்கள் :

          1.    மாநில அரசின் தலைமை வழக்கறிஞர்.

          2.    மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

          3.    துணை சார்பு நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள்.

66.   ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் சரத்து - 213.

67.   ஆளுனர் பிறப்பிக்கும் அவசர சட்டம் சட்டமன்றம் கூடியதிலிருந்து-6 வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

68.   ஆளுநர் மேலவைக்கு - 1/6 பங்கு உறுப்பினர்களை நியமனம் செய்கிறார் -

69.   மாநில சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கில இந்திய பிரதிநிதிகளை நியமனம் செய்பவர்-ஆளுநர்.

70.   அரசமைப்பின் 164 (1)உறுப்பின் படி மாநிலத்தின் முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் .

71.   மாநில அரசில் அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் -முதலமைச்சர்.

72.   அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு இடையான ஒரு இணைப்பாக செயல்படுகிறவர்முதலமைச்சர்.

73.   ஆளுநருக்கு உதவியாகவும் ஆலோசனை வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு நியமிக்கப்படுவதைப் பற்றி கூறும் சரத்து -163 (1).

74.   அரசமைப்பின்படி -ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடரலாம்.

75.   ஆனால் நடைமுறையில் -முதலமைச்சரின் விருப்பமுள்ள வரை அமைச்சர்கள் பதவியில் தொடர்வர்.

76.   அமைச்சர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் - முதலமைச்சருக்கு பொறுப்பானவர்கள் ஆவார்.

77.   எந்த நாட்டின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்று அழைக்கப்படுகிறது - இங்கிலாந்து.

78.    பிரதமர் எதன் தலைவர் - அரசாங்கம்.

79.   எந்த அவசர நிலை இதுவரை அறிவிக்கப்படவில்லை - நிதி நெருக்கடி நிலை.

80.   இந்திய அரசமைப்பின் கீழ் , மக்களவையின் நிலை- உயர்ந்த நிலை.

81.   குடியரசு துணைத் தலைவரின் தேர்தல் தொடர்பாக யார் முடிவு செய்வார்கள் -உச்சநீதிமன்றம்.

82.   கேபினட் அமைச்சரவையில் எந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் - கேபினட் தகுதியுள்ள அமைச்சர்கள்.

83.   மாநிலங்கள் அவையை தலமை வகித்து நடத்துபவர்- தலைவர்.

84.   இந்திய குடியரசு தலைவர் யாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்கிறார்-கலை, இலக்கியம், சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களை.

85.   மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 250.

          1.    இந்திய குடியரசுத் தலைவர்- 52

          2.    குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம்- 53

          3.    குடியரசுத்தலைவர் தேர்தல்- 54

          4.    குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்- 56

          5.    குடியரசு தலைவரின் தகுதிகள்- 58

          6.    குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம்- 61

          7.    குடியரசு துணைத்தலைவர் தேவை பற்றி கூறுவது- 63

          8.    துணை குடியரசு தலைவர் பதவி வழி மாநிலங்களவை தலைவர்- 64

          9.    துணை குடியரசுத் தலைவர் தேர்தல்- 66

         10.   குடியரசுத் தலைவர் தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு அளித்தல்- 72

         11.   பிரதமர், அமைச்சரவையை பற்றி கூறுவது- 74

         12.   பிரதமர் நியமனம்- 75

         13.   மாநில ஆளுநர் பற்றி கூறுவது- 153

         14.   ஆளுநர் நியமனம்- 155

         15.   ஆளுநர் பதவி காலம்- 156

         16.   ஆளுநரின் தகுதிகள்- 157

         17.   குற்றங்களை மன்னிக்க ஆளுநருக்கான அதிகாரம்- 161

         18.   ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஒரு பகுதி- 168

         19.   ஆளுநர் அவசர ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரம்- 213

         20.   முதலமைச்சர், அமைச்சர்கள் நியமனம்- 164-(1)

         21.   தேசிய நெருக்கடி- 352

         22.   மாநில நெருக்கடி- 356

         23.   நிதி நெருக்கடி- 360

         24.   உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் நீதி பேராணைகள்- 226

         25.   மாநில உயர் நீதிமன்றங்கள்- 214

         26.   மாநில ஆண்டு நிதிநிலை அறிக்கை- 202