12TH- STD இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்-

1.    1939 - ஃபார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கியவர் - சுபாஷ் சந்திர போஸ்.

2.    கிரிப்ஸ் தூதுக்குழு வருகை புரிந்த ஆண்டு -மார்ச் 1942.

3.    காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த முடிவு செய்த ஆண்டு- 1942 ஆகஸ்ட்.

4.    எந்த படை கழகத்தில் ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை வழங்க துரிதப்படுத்தியது- இராயல் இந்தியக் கடற்படை.

5.    விடுதலை வழங்கவும் இந்தியா-பாகிஸ்தான் என்று இத்துணை கண்டத்தை பிரிக்கப்படுவதை மேற்பார்வையிடவும் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் -மெளண்ட்பேட்டன் பிரபு.

6.    வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்து தனது பாவ்னர் ஆசிரமத்திற்கு அருகே 1940 அக்டோபர் 17 முதல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கினார் .

7.    குழு சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1941.

8.    ஆகஸ்ட் கொடை அறிவித்த அரசப்பிரதிநிதி - லின்லித்கோ பிரபு.

9.    ஆகஸ்ட் கொடை அறிவிக்கப்பட்ட நாள் -1940 ஆகஸ்ட் 8.

10.   ஆகஸ்ட் கொடையில் அறிவிக்கப்பட்டவை :

          1.    வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து.

          2.    அதிகமான இந்தியர்களை கொண்டு அரச பிரதிநிதியின் குழுவை விரிவாக்கம் செய்தல்.

          3.    இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனை குழுவை உருவாக்குதல்

          4.    சிறுபான்மையினரின் உரிமைகளை அதிகரித்தல்.

          5.    போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கு என்று ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உறுதியளித்தல்.

11.   1939 -இல் காங்கிரஸ் தலைவர் பதவியை சுபாஷ் சந்திர போஸ் ராஜினாமா செய்த பின்பு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்- ராஜேந்திர பிரசாத்.

12.   முஸ்லிம் லீக் தனிநாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு -1940 -மார்ச்-23.

13.   முஸ்லிம் லீக் தனிநாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாடு  -லாகூர்.

14.   போர்க்கால அமைச்சரவையை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தவர்-வின்ஸ்டன் சர்ச்சில்.

15.   அமெரிக்காவின் "முத்து துறைமுகம்" தாக்கப்பட்ட ஆண்டு -1941 டிசம்பர் 7.

16.   கிரிப்ஸின் வரைவு குழு அறிக்கை பற்றி ஜவகர்லால் நேரு  குறிப்பிடுகையில் நான் முதன் முறையாக இவ் வரைவை வாசித்தபோது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன் என்றார் .

17.   சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து  எந்த ஆண்டு ஆசாத் ஹிந்த் ரேடியோ மூலம் இந்திய மக்களை தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார் -1942 மார்ச்.

18.   1942 ஜூலை 14  எங்குசந்தித்த காங்கிரஸ் கூட்டத்தில் நாடுதழுவிய சட்டமறுப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டதுவார்தா.

19.   வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு -1942 ஆகஸ்ட் 8.

20.   வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் ஆகஸ்டு 20 இல் துவங்கி எத்தனை நாட்கள் நடைபெற்றது -13.

21.   வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது எத்தனை பாட்டாலியன் ராணுவவீரர்கள் பயன்படுத்தப்பட்டன - 57.

22.   தம்லுக் ஜாட்டியா சர்க்கார் " ஏற்படுத்தப்பட்ட இடம் - வங்காளம்.

23.   காந்தியடிகள் 1943 பிப்ரவரி 10 சிறைச்சாலையில் எத்தனை நாட்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் - 21.

24.   வெள்ளையனே வெளியேறு போராட்டம்:

          1.    கைதானவர்கள்- 91836.

          2.    துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்கள் - 1060.

          3.    காவல் கண்காணிப்பு நிலையங்கள்- 208 அழிக்கப்பட்டன.

          4.    இருப்புப் பாதைகள்- 332 அழிக்கப்பட்டன.

          5.    அஞ்சல் அவவலகங்கள் - 945 சேதப்படுத்தப்பட்டன.

25.   ஆசம்கரின் ஆட்சியாளராக இருந்து புரட்சியாளர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் - R.H. நிப்ளெட்.

26.   புரட்சியாளர்கள் எந்த நகரில் ரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறையை நிறுவினர் - பம்பாய்.

27.   இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர்- உஷா மேத்தா.

28.   லின்லித்கோ பிரபுவிற்க்கு பிறகு பதவி ஏற்ற அரசபிரதநிதி -வேவல் பிரபு.

29.   ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க்கைதிகள் யாவரும் யார் தலைமையின் கீழ் விடப்பட்டனர்  (45000 வீரர்கள்) -மோகன் சிங்.

30.   1942- இல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்- மோகன் சிங்.  40000 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்

31.   சிங்கப்பூரில் சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்திய ஆண்டு - 1943 அக்டோபர் 21.

32.   இந்திய தேசிய ராணுவத்தில் ' ராணி ஜான்சி' என்ற படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் - டாக்டர் லட்சுமி.

33.   சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜூலை - 6 -தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூன் - லிருந்து காந்தியடிகளை நோக்கி ஒரு உரையை ஆற்றினார் .

34.   காந்தியடிகளை தேசத்தின் தந்தையே என்று அழைத்தவர் -சுபாஷ் சந்திர போஸ்.

35.   சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கமிட்டியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்ட ஆண்டு -1939.

36.   சுபாஷ் சந்திர போஸ் :

          1.    இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1940 ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டார்

          2.    கல்கத்தாவிலிருந்து 1941 ஜனவரி 16 - 17 நள்ளிரவில் தப்பிய அவர் காபூல் மட்டும் சோவியத் நாடு வழியாக ஒரு இத்தாலி கடவுச்சீட்டை கொண்டு மார்ச்சு மாதத்தில் கடைசி பெர்லின் சென்று சேர்ந்தார்.

          3.    அங்கு ஹிட்லரையும் கோயபல்ஸையும் சந்தித்தார்

          4.    ஆசாத் ஹிந்த் ரேடியோவை உருவாக்க அனுமதி பெற்றார்

          5.    1943 ஜூலையில் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.

37.   சிம்லா மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1945 ஜூன் 25 - ஜூலை 14.

38.   இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவை வழிநடத்தியவர்- ஷா நவாஸ் கான்.

39.   HMIS தல்வார்" என்ற கப்பலில் மாலுமியாக பணியாற்றிய - என்பவர் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார் - B.C. தத்

 (1,100 மாலுமிகள்)

40.   இராயல் இந்திய கப்பற்படை புரட்சி -1946  பிப்ரவரி -18.

41.   HIMS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகள் கராச்சியில் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு -1946 பிப்ரவரி 19.    78 கப்பல்கள், 20,000 மாலுமிகள்

42.   ராயல் கடற்படை மாலுமிகள் கழகத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டவர்- சர்தார் வல்லபாய் பட்டேல்.

43.   முஸ்லிம் லீக்கின் லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1940 மார்ச் 23.

44.   1944 ஏப்ரல் C.R. திட்டம் - ராஜாஜி.

45.   சிம்லா மாநாட்டை கூட்டிய அரசப்பிரதிநிதி - வேவல் பிரபு.

46.   சிம்லா மாநாட்டின் போது காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்  - மெளலானா அபுல் கலாம் ஆசாத்.

47.   ஏப்ரல் 1946 எங்கு  நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபைஉறுப்பினர்கள் மாநாட்டில் " பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட தனிநாடு " என்று வர்ணிக்கப்பட்டதுடெல்லி.

48.   பிரிட்டனில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பதவிக்கு வந்தவர் - கிளெமண்ட் அட்லி.

49.   அமைச்சரவைத் தூதுக்குழு உறுப்பினர்கள் : 3.

          1.    சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ்.

          2.    AV.அலெக்சாண்டர்.

          3.    பெதிக் லாரன்ஸ்.

50.   அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்தடைந்த ஆண்டு- 1946 மார்ச்.

51.   இடைக்கால அரசை நடத்த அரச பிரதிநிதி 14 பேருக்கு  எப்போது அழைப்பு விடுத்தார்-1946 ஜூன் 15.

52.   அமைச்சரவை தூதுக்குழுவின் முன்மொழிவை ஜின்னா நிராகரித்த நாள் -1946 ஜூலை 29.

53.   இடைக்கால அரசு - 14 பேர்.

         1.    காங்கிரஸ் - ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, ஹரி கிருஷ்ணன் மஹ்தப் (மாற்றாக - சரத் சந்திர போஸ்)

         2.    முஸ்லிம் லீக் - முகமது அலி ஜின்னா, லியாகத் அலி கான் ,முகமது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன், அப்துல் ரப் நிஷ்தர்

         3.    சீக்கியர்கள் - சர்தார் பல்தேவ் சிங்

         4.    பார்சிகள் - N.P. இஞ்சினியர் (மாற்றாக - குவர்ஜி ஹொர் முஸ்ஜி பாபா)

         5.    ஒடுக்கப்பட்ட வகுப்பினர்- ஜெகஜீவன் ராம்.

         6.    இந்தியக் கிறுத்துவர்கள் - ஜான் மத்தா.

54.   தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட நாள் -1946 ஆகஸ்ட் 25.

55.   முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்த நாள் -1946 ஆகஸ்ட் 16.

56.   கல்கத்தா வந்தடைந்த காந்தியடிகள் அங்கே போலிகாத்தா என்ற மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியின் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க முடிவு செய்தார்.

57.   காந்தியடிகள் டெல்லியை வந்தடைந்த பின்பு இஸ்லாமியர்களும் இந்தியர்களே அதனால் அவர்களைப் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார்.

58.   நேருவும் மற்ற பதினோரு நபர்களும் இடைக்கால அரசில் பதவியேற்ற நாள்- 1946-செப்டம்பர் – 2

59.   இடைக்கால அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்ட நாள்- 1946 அக்டோபர் 26.

60.   இடைக்கால அரசில் முஸ்லிம் லீக் சார்பில் பங்பெற்றோர் - லியாகத் அலி கான்,I.Iசுந்துரிகர்,A.R. நிஷ்தர்,கஸன்பர் அலி கான்,ஜோகேந்திர நாத் மண்டல்.

61.   கிழக்கு வங்காளத்தின் இன கலவரத்தால் சூறையாடப்பட்டது- நவகாளி.

62.   ஜூலை - ஆகஸ்ட் 1946 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 210 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது -199.

63.   ஜூலை - ஆகஸ்ட் 1946 இல் நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது-76.

64.   மார்ச் 1947 இல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர்- லியாகத் அலி கான். (சோஷலிச நிதிநிலை அறிக்கை என்று வர்ணித்தார்)

65.   வேவல் பிரபு 1947 மார்ச் 22 அரசப் பிரதிநிதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு  யார் நியமிக்கப்பட்டார்-மெளண்ட்பேட்டன் பிரபு.

66.   காங்கிரஸ் செயற்குழு எந்த ஆண்டு இந்தியப் பிரிவினை திட்டத்திற்கு உடன்படுவதாக மொளண்ட்பேட்டனிடம் தெரிவித்தது - 1947-மே-1.

67.   காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15ல் கூடியபோது கோவிந்த் பல்லப் பந்த் இந்திய பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது.

68.   தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது -1940-அக்டோபர் -17.

69.   கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தது-லின்லித்கோ பிரபு.

70.   சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் -1939.

71.   மகாத்மா காந்தியடிகளின்"செய் அல்லது செத்துமடி" என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார் -வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

72.   வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார் -உஷா மேத்தா.

73.   இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார் -ஜவஹர்லால் நேரு.

74.   1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது இந்தியாவின் அரசபிரதிநிதி யார் -லின்லித்கோ பிரபு.

75.   இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது -ஜப்பான்.

76.   இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் - ஜான்சி ராணி படைப்பிரிவு.

77.   சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திரபோஸ் எங்கு ஏற்படுத்தினார்  -சிங்கப்பூர்.

78.   இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது- செங்கோட்டை, புதுடெல்லி.

79.   1945 - இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரச பிரதிநிதி - வேவல் பிரபு.

80.   1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது -ஜவகர்லால் நேரு.

81.   இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார் -கிளமண்ட் அட்லி.

82.   பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தனர் -1948 ஜூன்.

83.   இந்து - முஸ்லீம் கலவரம்நவகாளி.

84.   ஆகஸ்ட் கொடை - லின்லித்கோ பிரபு.

85.   பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் -கோவிந்த் பல்லப் பந்த்.

86.   இந்திய தேசிய இராணுவம் -மோகன் சிங்.

87.   அமெரிக்கக் குடியரசுத் தலைவர் - எஃப்.டி ரூஸ்வெல்ட்.

88.   சீனக் குடியரசுத் தலைவர் - ஷியாங் கே ஷேக்.

89.   பிரிட்டிஷ் பிரதமர் - வின்ஸ்டன் சர்ச்சில்.

90.   ஜப்பான் பிரதமர் - டோஜா.