PAGE NO: 59  12TH- STD - தேசிய வருவாய் - TOTAL QUESTION: 70

1.    பெரிய பிரச்சனைகளான வலைவாய்பு இன்மை, பணவீக்கம்மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமாளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட தவிர்க்க முடியாத தயாரிப்பே தேசிய வருவாய் எனும் கருத்துரு கூறியவர் - சாமுவேல்சன்.

2.    தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்-சைமன் குஷ்நெட்ஸ்

3.    ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள்மற்றும் பணிகளின் பண மதிப்பு -தேசிய வருவாய்.

4.    ஒரு நாட்டில் உள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ளஇயற்கை வளங்களை பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துகின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத்தொகை ஆகும் - ஆல்ஃபிரட் மார்ஷல்.

5.    ஓர் ஆண்டில் பொருளாதாரத்தின் உற்பத்தி அமைப்பிலிருந்து பண்டங்களும் பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நிகர வெளியீடாக அவை இறுதிநிலை நுகர்வோர்களுக்கு செல்கின்றன அல்லது அந்த நாட்டில் இருக்கக்கூடிய மூலதன பொருட்களின் இருப்போடு நிகர கூடுதலாகச் சேர்கிறது - சைமன் குஷ்நெட்ஸ்.

6.    GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி -Gross Domestic product.

7.    NDP - நிகர உள்நாட்டு உற்பத்தி - Net Domestic Product.

8.    GNP - மொத்த தேசிய உற்பத்தி - Gross National Product.

9.    NNP - நிகர தேசிய உற்பத்தி - Net National Product.

10.   PI - தனிநபர் வருமானம் - Personal income.

11.   ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே -மொத்த உள்நாட்டு உற்பத்தி.

12.   செலவு முறையில் GDP = C+I+G+ (x- M ).

          1.    C - நுகர்வு பண்டங்கள்.

          2.    I - முதலீட்டு பண்டங்கள்.

          3.    G - அரசின் வாங்குதல்கள்.

          4.    x - M - நிகர ஏற்றுமதி.

13.   ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி - நிகர உள்நாட்டு உற்பத்தி.

14.   GDP - தேய்மானம் =NDP நிகர உள்நாட்டு உற்பத்தி - Net Domestic Product.

15.   ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மொத்த மதிப்பு- மொத்த தேசிய உற்பத்தி .(நிகரவெளிநாட்டு வருமானமும் சேர்க்கப்படும்)

16.   GNP - ல் 5 வகையான முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன.

(c +1+ G+ (x- M)+ ( R • P)

          1.    நுகர்வு – c.

          2.    மூலதனம் -I

          3.    அரசால் வாங்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் -G

          4.    நிகர ஏற்றுமதி -X- M.

          5.    R - P.

17.   சந்தை விலையில் GNP = (C+1+G+(X - M ) + (R - P) .

          1.    சந்தை விலையில் GDP +

          2.    வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிகர வருமானம்

18.   மொத்த தேசிய உற்பத்தி GNP - தேய்மானம் = நிகர தேசிய உற்பத்தி (NNP).

19.   காரணி செலவில் NNP  = சந்தை விலையில் NNP - மறைமுக வரி + மானியம்

20.   ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் - தனிநபர் வருமானம் .(ஓய்வுதியம் சேர்க்கப்படுகிறது)

21.   ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் சராசரி வருமானம்- தலா வருமானம்.

22.   செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள்

23.   தலா வருமானம் = தேசிய வருமானம்/ மக்கள் தொகை.

24.   நிலையான விலையில் தேசிய வருமானம் =நடப்பு விலையில் தேசிய வருவாய் ÷ P1/ P2

25.   GDP யில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டு எண் - GDP குறைப்பான்.

26.   GDP  - குறைப்பான் = பண மதிப்பு GDP/ உண்மை GDP x 100.

27.   தேசிய வருவாயை எத்தனை முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம்- 3.

          1.    உற்பத்தி முறை / மதிப்பு கூடுதல் முறை.

          2.    வருவாய் முறை /காரணிகளின் ஊதிய முறை.

          3.    செலவு முறை.

28.   ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளின் உற்பத்தியின் மொத்தமே  - தேசிய உற்பத்தி.

29.   ஒரு துறையின் வெளியீடு மற்றொரு துறையின் உள்ளீடாக செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒருபொருள் இருமுறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு  - இருமுறை கணக்கிடல் என்று பெயர் .

30.   விவசாயத்துறையின் மொத்த உற்பத்தி எத்தனை வகை பயிர்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுகிறது- 64.

31.   உற்பத்தி நிலைகளில் உற்பத்தி காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி - தேசிய வருமானம் கணக்கிடலாம் .

32.   காரணிகளின் வருவாய் மூன்று வகையான இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .

          1.    உழைப்பாளர் வருமானம்.(கூலி, சம்பளம்).

          2.    மூலதன வருமானம். (இலாபம், வட்டி).

          3.    கலப்பு வருமானம். (விவசாயம் , பண்ணை சிறு தொழில்).

33.   வருமான முறை  Y = w+ r+i+ i+11 (R - P).

          1.    W – கூலி.

          2.    r-வாடகை.

          3.    i-வட்டி.

          4.    11- இலாபம்.

          5.    R –ஏற்றுமதி.

          6.    P-இறக்குமதி.

34.   உற்பத்தி முறையில் - GDP .

          1.    பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் கூட்டப்பட்ட மதிப்பு.

          2.    முதன்மை, இரண்டாம் நிலை, தயாரிப்பு, துணை நிறுவனங்கள்.

35.   காரணி வருவாய் முறையில் - GDP .

          1.    மக்களின் சம்பளம், கூலி.

          2.    தனியார்துறை வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபம்.

          3.    நில உரிமையாளர்கள் பெரும் வாடகை.

36.   செலவு கூட்டு முறையில் - GDP .

          1.    நுகர்ச்சி, அரசு செலவினங்கள்

          2.    முதலீட்டு செலவினங்கள் , இருப்புக்களின் மதிப்பு மாறல்

          3.    ஏற்றுமதி, - இறக்குமதி

37.   செலவின முறை - (GNP = C +1+ 6+ (x - M) )

          1.    C- தனியார் நுகர்வு செலவு

          2.    I -தனியார் முதலீட்டு செலவு

          3.    G - அரசின் கொள்முதல் செலவு

          4.    X - M = நிகர ஏற்றுமதி

38.   தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்க கூடாதவை -

          1.    ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி.

          2.    பழைய பங்கு, பத்திரங்கள்.

          3.    முதியோர் ஓய்வூதியம்.

          4.    விவசாயிகள் விதை மற்றும் உரங்கள்.

          5.    பருத்தி, நூல்களுக்கு செய்யும் செலவுகள்.

39.   உற்பத்தி காரணிகள்-

          1.    நிலம்.

          2.    உழைப்பு.

          3.    மூலதனம்.

          4.    தொழில் முனைவு.

40.   ஒரு நிறுவனம் பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் போது உற்பத்தி காரணிகளுக்கு செய்யும் செலவை குறிப்பது - காரணி செலவு (FC).

41.   அரசுக்கு செலுத்தும் வரிகள் உற்பத்தி செலவில் சேர்ப்பதில்லை.

42.   உற்பத்தியில் உதவித்தொகைகள் நேரடியான விளைவை ஏற்படுத்துவதால், காரணி செலவில் சேர்க்கப்படுகின்றன.

43.   சந்தை விலை = காரணி செலவு - உதவித்தொகைகள்.

44.   காரணி செலவு = சந்தை விலை - மறைமுக வரி + உதவித்தொகைகள்.

45.   பொருளாதாரத்தின்" கணக்கு அல்லது சமூக கணக்கு" என சொல்லப்படுவது - தேசிய வருவாய்.

46.   தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம்.

          1.    பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் தேசிய வருமானத்தில் அத்துறையின் பங்களிப்பு பற்றியும் அறியமுடிகின்றது.

          2.    பணவியல் மற்றும் பொது நிதி கொள்கைகளை உருவாக்க உதவுகிறது.

          3.    திட்டமிடலுக்கு பயன்படுகிறது

          4.    பொருளாதார மாதிரிகளை உருவாக்க பயன்படுகிறது.

          5.    தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது.

          6.    தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமை அறிய பயன்படுகிறது.

          7.    பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமான பகிர்வை கெரிந்துகொள்ள பயன்படுகிறது.

47.   தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் .

          1.    மாற்று செலுத்துதல்கள் .(ஓய்வூதியம், உதவித்தொகை).

          2.    தேய்மானங்கள் மதிப்பீடு செய்வதில் சிரமம்.

          3.    பணம் செலுத்தப்படாத சேவைகள்.

          4.    சட்டவிரோத நடவடிக்கைகளால் கிடைக்கும் வருமானம்.

          5.    சொந்த நுகர்வுக்கான உற்பத்தி மற்றும் விலை மாற்றம்.

          6.    மூலதன லாபம் , புள்ளிவிவர சிக்கல்கள்

48.   இந்தியாவின் GDP யின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ஏறக்குறைய 2 டிரில்லியன் US டாலரில் இருந்து 5  டிரில்லியன் டாலர் வரை வேறுபடுகிறது.

49.   ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்கண்ட துறைகளாக பிரிக்கப்படுகிறது.

          1.    நிறுவனங்கள், குடும்பங்கள்.

          2.    அரசு , வெளிநாட்டு வாணிபம்.

          3.    மூலதன துறை

50.   கூற்றுப்படி அரசு என்பது" ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள் என குறிப்பிடுகின்றனர்.

எடி (Edey)   , பீகாக் (Peacock).

51.   PQLI இல் உள்ளடங்கி உள்ளது - (Physical quality of life index)

          1.    மக்களின் வாழ்க்கைத் தரம்.

          2.    வாழும் காலம்.

          3.    கல்வி அறிவு.

52.   உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான - NNP  - தேசிய வருவாய்.

53.   முதன்மைத் துறை என்பது - விவசாயம்.

54.   தேசிய வருவாய் எத்தனை முறைகளால் கணக்கிடப்படுகிறது- 3 .

55.   எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறதுவருமானம்.

56.   கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப் பெரிய எண்ணாக இருக்கும் – GNP.

57.   கட்டிடத் துறையில் - செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது.

58.   மூன்றாம் துறை- பணிகள் எனவும் அழைக்கப்படுகிறது.

59.   ஒரு நாட்டின் - பொருளாதாரம் செயலை தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.

60.   நாட்டின் மக்கள் தொகை - ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலை வீத வருமானம் கண்டறியலாம்.

61.   GNP = GDP + வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.

62.   மொத்த மதிப்பிலிருந்து  தேய்மானம் கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும் .

63.   இந்தியாவில் நிதியாண்டு என்பது - ஏப்ரல் - 1 முதல் மார்ச் - 31.

64.   NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு - நிகர தேசிய உற்பத்தி.

65.   உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு - காரணி செலவில் NNP என அழைக்கப்படுகிறது.

66.   ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது - தலைவீத வருமானம்.

67.   பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு - உண்மைத் தேசிய வருவாய் என அழைக்கப்படுகிறது.

68.   ஓட்ட (Flow) கருத்துரு  - மாத வருமானம்.

69.   PQLI என்பது - பொருளாதார நலன் ன் குறியீடு ஆகும் -

70.    மிக அதிக அளவிலான தேசிய வருவாய்- தனியார் துறைலிருந்து வருகிறது.