PAGE NO: 12TH-
STD - வங்கியியல் - TOTAL
QUESTION:102
1.
நவீன வாணிபத்தின் முதுகெறும்பாக செயல்படுவது எது – வங்கித்துறை.
2.
1864 ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி -இங்கிலாந்து வங்கி
3.
தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது - 1921.
4.
சீனா மைய வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு – 1928.
5.
நியூஸிலாந்து ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு – 1934.
6.
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு – 1934.
7.
சிலோன் மைய வங்கி அமைக்கப்பட்ட ஆண்டு – 1950.
8.
இஸ்ரேல் மைய வங்கி அமைக்கப்பட்ட ஆண்டு -1954.
9.
வங்கி வாடிக்கையாளர் க்கு முகவராக இருந்து செய்யும் பணிகளை முகமைப்பணிகள் என அழைக்கிறோம்
10.
நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் ,போன்ற மதிப்பு மிக்க பெருட்களை
11.
பாதுகாக்க பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகிறது.
12.
இந்திய ரிசர்வ் வங்கி 2018 -2019 ம் ஆண்டில் தனது உபரி நிதியிலிருந்து மத்திய அரசுக்கு எத்தனை கோடி வழங்கியுள்ளது - 68, 000கோடி.
13.
நாட்டிதுள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவது - மைய வங்கி.
14.
இந்திய ரிசர்ல் வங்கி தனது பணியை துவங்கிய ஆண்டு - ஏப்ரல் -1- 1935.
15.
இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - ஜனவரி - 1, 1949.
16.
இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப் பணத்தை தவிர அனைத்து வகையான காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் எது - ரிசர்வ் வங்கி.
17.
ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு -1937.
18.
ரிசர்ல் வங்கியின் நிர்வாகம்:
1. ஆளுநர்.
2. நான்கு துணை ஆளுநர்.
3. மைய நிர்வாக குழு உறுப்பினர்கள்.
19.
காத பணம் வெளியீடு முறை துவங்கிய ஆண்டு - 18 ம் நூற்றாண்டு.
20.
காகிதப் பணத்தை முதல் முதலில் அச்சடித்த வங்கிகள்:
1. சென்னை வங்கிகள்
2. மும்பை வங்கிகள்
3. வங்காள வங்கிகள்
21.
அன்னிய செலவாணி மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1999.
22.
செலுத்துதல் மட்டும் தீர்வு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 2007.
23.
வங்கி குறை தீர்ப்பாய திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1995.
24.
வங்கி நெறிமுறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 1949.
25.
தள்ளுபடி விகித கொள்கை என்று அழைக்கப்படுவது- வங்கி விகித கொள்கை.
26.
கடன் கட்டுப்பாடு முறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1939.
27.
பிணைய பரிவர்த்தனை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1934.
28.
வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகியகால கடனை அளித்தல் மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும் என்று கூறியவர் – கல்பர்ட்சன்.
29.
1565 ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றிய உலகின் முதல் மைய வங்கி - ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வாங்கி.
30.
பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி பெற்ற ஆண்டு -1897.
31.
வங்கிக் கலையின் அடிப்படையில் 1864ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி - இங்கிலாந்து வங்கி.
32.
1920 -ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 (ம) 1954 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் - மைய வங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
33.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக (Agant) இருந்து செய்யும் பணிகள்-
முகமைப்பணிகள்.
34.
வங்கிகள் தன் வாடிக்கையாளர் - களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் - பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம்.
35.
மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது-கடன் உருவாக்கம்.
36.
வங்கிக் கடன் - என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் போல் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது ஆகும்.
37.
நவீன வங்கிகளால் உருவாக்கப்படும் வைப்புக்கள் இருவகைப்படும்:
1. முதல்நிலை அல்லது செயலற்ற வைப்புகள் (Primary or Passive Deposits)
2. பெறப்படும் அல்லது செயல்படும் வைப்புகள் (Derived or Active Deposits)
38.
ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தினை வங்கியில் செலுத்துகிறார் எனில் அவரது பெயரில் பற்று வைக்கப்படும். இது - முதல்நிலை வைப்பு அல்லது செயல்படா வைப்பு
39.
ஒருவருக்கு வழங்கப்படும் கடன், ரொக்கமாக கையில் கொடுக்கப்படாமல் அவர் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை - பெறப்பட்ட வைப்பு அல்லது செயல்படும் வைப்பு.
40.
இந்திய ரிசர்வ் வங்கி 2018 -2019 ஆண்டில் தனது உபரி நிதியிலிருந்து - 68,000 கோடி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
41.
இந்திய ரிசர்வ்வங்கி 1934 ம் ஆண்டு சட்ட விதிப்படி அமைக்கப்பட்ட ஆண்டு-1935 ஏப்ரல் 1.
42.
இந்திய ரிசர்வ்வங்கி தேசிய மயமாக்கப்பட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான ம ஆண்டு -1949- ஜனவரி - 1 .
43.
RBI இன் முதல் ஆளுநர் - ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith).
44.
அந்நியச் செலாவணியின் பாதுகாவலன் - இந்திய ரிசர்வ்வங்கி.
45.
காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கிய ஆண்டு -18ம் நூற்றாண்டில்.
46.
தனியார் வங்கிகளான முதலில் காகிதப் பணத்தை அச்சடித்த வங்கிகள்- வங்காள வங்கி, மும்பை வங்கி , சென்னை வங்கிகள்.
47.
ஷெர் ஷா சூரி - என்பவரால் 1 க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.
48.
சமஸ்கிருதச் சொல்லான - ரெளப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
49.
அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கி - இந்திய ரிசர்வ்வங்கி.
50.
1999 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்படி - அந்நிய செலாவணி மேலாண்மையும் நிர்வகிப்பினையும் மேற்கொள்கிறது.
51.
2007 ஆம் ஆண்டு- செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
52.
சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund) இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக - இந்திய ரிசர்வ் வங்கி - விளங்குகிறது.
53.
இந்திய ரிசர்வ் வங்கி வங்கி குறை தீர்ப்பாயத்தினை அறிமுகப்படுத்திய ஆண்டு -1995.
54.
வங்கிகளின் திறனை அளவிடும் விதமாக உலகளவில் ஏற்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் (அடிப்படையில்)- இந்திய ரிசர்வ் வங்கி இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியத்ததை அமைத்துள்ளது.
55.
கடன் கட்டுப்பாட்டு நுட்பம் - என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம்.
56.
கடன் கட்டுப்பாட்டு முறைகள்- 1934ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் மற்றும் 1949 ஆம் ஆண்டின் வங்கி நெறிமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டபூர்வ அங்கீகாரத்தினை பெறுகிறது.
57.
வங்கி விகிதக் கொள்கை என்பது - தள்ளுபடி விகித கொள்கை (Discount Rata Policy).
58.
முதல்நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்கள் தள்ளுபடி செய்கிறது என்பதே - வங்கி விகித கொள்கை.
59.
கடன் தன்மை கட்டுப்பாட்டுமுறை (அ) தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள் என்பது தெரிந்தெடுத்த துறைகளில், தொழில்கள் வணிகங்கள் அல்லது பயன்களில் மட்டும் கடன் கட்டுப்பாட்டினை கொண்டு வருவது.
60.
மாறும் ரொக்க இருப்பு விகிதம் முதன்முதலாக அமல்படுத்தியது மற்றும் அதை பரிந்துரைத்தது யார் - பரிந்துரைத்தது கீன்ஸ் , அமல்படுத்தியது பெடரல் ரிசர்வ் சிஸ்டம்.
61.
கடன் பங்கீடு முதன்முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் - இங்கிலாந்தின் மையவங்கியான இங்கிலாந்து வங்கியில் இம்முறை பயன்படுத்தப்பட்டது.
62.
மாறும் தெகுப்பு வரையறை - என்பது ஒவ்வொரு வணிக வங்கியும் எவ்வளவு அதிகபட்ச கடன் மற்றும் முன்பணம் கொடுக்கலாம் என்பதனை மைய வங்கி வரையறுப்பது.
63.
மாறும் மூலதன சொத்து விகிதம் வணிக வங்கிகள் - என்பது தங்களது சொத்து மதிப்பில் எந்த அளவு மூலதனமாக வைத்துக்கொள்ளலாம் என்பதனை மைய வங்கி வரையறை செய்வது.
64.
நெறிமுறைத் தூண்டல் - என்பது வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் ஒரு முறை.
65.
ஈட்டுக் கடன்கள் மீதான விளிம்பு தொகை தேவையை மாற்றுதல் எந்த நாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது - அமெரிக்கா.
66.
ஈட்டுக் கடன்களின் விளிம்புநிலை தொகை தேவையை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது - அமெரிக்க பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் இயக்குநர் குழு
67.
அமெரிக்காவின் பிணைய பரிவர்த்தனை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1934.
68.
பணத்தின் அளிப்பைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்படும் கருவிகளே - ரெபோ - விகிதம் மற்றும் மீள்ரெப்போ விகிதம்.
69.
ரெப்போ விகிதம் எப்பொழுதும் மீள்ரெப்போ விகிதத்தை விட - அதிகமாகவே ஆக இருக்கும்.
70.
வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே - ரெப்போ விகிதம்.
71.
வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே - மீள் ரெப்போ விகிதம்.
72.
இந்திய ரிசர்வ் வங்கி தனக்குக்கீழாக மூன்றடுக்கு முறை வழியாக விவசாயத்திற்கான கடனை வழங்கி வந்தது-
1. மாநில கூட்டுறவு வங்கிகள் (மாநில அளவு).
2. மத்திய கூட்டுறவு வங்கிகள் (மாவட்ட அளவு).
3. துவக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் (கிராம அளவு).
73.
1982 -ஆண்டிற்கு பிறகு விவசாய கடன் சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் - நபார்டு வங்கி (NABARD) இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டது.
74.
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1963-ஜூலை- 1.
75.
ஊரக நிதி வழங்கும் நிறுவனங்களில் அடுத்த முக்கியமான வங்கியமைப்பு வட்டார ஊரக வங்கிகள் ஆகும். இது - கிராமின் வங்கிகள் .
76.
வட்டார ஊரக வங்கிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1975.
77.
விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கியினை பாராளுமன்றத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1982 ஜுலை.
78.
யார் நபார்டின் தலைவராக இருப்பார்- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்.
79.
இந்திய தொழில் நிதிக் கழகமை அமைக்கப்பட்ட ஆண்டு -1948 ஜுலை- 1.
80.
இந்திய தொழில் கடன் மற்றும்முதலீட்டுக் கழகம்(Industrial Credit and investment Corporation of
India (iCiC)) அமைக்கப்பட்ட ஆண்டு – 1955 - ஜனவரி 5.
81.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி(IDBI), பிப்ரவரி 15, 1976 ஆம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது.
82.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI) எந்த ஆண்டு முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது - பிப்ரவரி 15, 1976.
83.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் (IDBI) சிறப்புச் செயல்பாடாக வளர்ச்சி உதவி நிதி என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கியுள்ளது.
84.
EXIM ஏற்றுமதி-இறக்குமதி வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1982 மார்ச்.
85.
இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதிக் கழக சட்டத்தின்படி பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிதிக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1951.
86.
பண அளிப்பு மற்றும் வ ட் டிவிகி தத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே - பணவியல் கொள்கை.
87.
பணவியல் கொள்கை யாரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது- மில்டன் ஃபிரைட்மேன்.
88.
1976 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மில்டன் ஃபிரைட்மேன்.
89.
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1867-1960 (Monetary Historyof the United states )
என்ற நூலின் ஆசிரியர் - மில்டன் ஃபிரைட்மேன்.
90.
விரிவாக்க பணக்கொள்கை என்பது - மலிவுப் பணக்கொள்கை.
91.
சுருக்கப் பணக்கொள்கை என்பது - அருமைப் பணக்கொள்கை .
92.
வேலைவாய்ப்பு, வட்டி, மற்றும் பணத்திற்கான பொதுக் கோட்பாடு முழுவேலைவாய்ப்பு என்ற பணவியல் கோட்பாட்டின்குறிக்கோளாகும் இந்த நூலின் ஆசிரியர் - கீன்ஸ்.
93.
மின்னணு வங்கியானது - நிகழ்நிலை வங்கி முறை (Online Banking) அல்லது இணைய வங்கி முறை (Internet Banking).
94.
மொத்த பணமதிப்பு தீர்வு - என்தன் பொருள் பணப்பரிவர்த்தனைகள் அறிவுறுத்தலின்படி ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படுகிறது .
95.
தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முன்ற அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1967.
96.
பணம் வழங்கும் வங்கி (Payment Bank) எப்போது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- ஆகஸ்ட் 2015.
97.
வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தானியங்கி இயந்திரம் மூலம் பணம் எடுப்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டை-பற்று அட்டை.
98.
கடன் வாங்குபவர் தொடர்ந்து 90 நாட்களில் வட்டியையோ அல்லது கடன் தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை - செயல்படாத சொத்து.
99.
அதிக நீர்மைத் தன்மையை கொண்டதும் குறுகியகாலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும் சந்தை - பணச் சந்தை.
100. நீண்டகால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை - மூலதனச் சந்தை.
101. அரசின் சட்டபூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் - பணமதிப்பு நீக்கம்.
102.
இந்தியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும்1000 மதிப்பிலான காகிதப்பணம் மதிப்பு நீக்கப்பட்ட ஆண்டு – 2016 நவம்பர்- 8.
0 Comments
THANK FOR VISIT