PAGE NO: 149 12TH STD பக்தி இயக்கம் TOTAL QUESTION : 250
1.
இந்துசமய நெறிகளுள் மிக சிறப்பானது-பக்திநெறி ,கருமநெறி ,ஞானநெறி ,யோக நெறி.
2. மிக எளிமையான நெறி- பக்திநெறி.
3. பக்தி எனும் சொல் எந்த சொல்லில் இருந்து தோன்றியது- பஜ்.
4. இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ஆழ்ந்த அன்பு-பக்தி
5. பஜ் என்பதன் பொருள்-வழிபாடு.
6. பக்தியின் வகைகள்-பரபக்தி, அபரபக்தி.
7. பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் ஒரு கடவுளை மட்டும் வழிபாடு செய்தல்- அபரபக்தி.
8. உலகம் தழுவிய அன்பு நெறி- பரபக்தி.
9. பக்தி இயக்கம் வெளிகாட்டியது- கடவுள் ஒருவரே.
10. நாயன்மார்கள் எத்தனை பேர்- 63-சிவனடியார்.
11. சமயசாரிகள் அல்லது சைவ சமய குரவர் யாவர்- அப்பர் சம்பந்தர் ,சுந்தரர் , மாணிக்கவாசகர்.
12. நாயன்மார்கள் பாடலை தொகுத்தவர்- நம்பியாண்டார் நம்பி.
13. 63-நாயன்மர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து அருளியவர்- சேக்கிழார்.
14. பெரிய புராணத்தின் வேறுப்பெயர்- திருத்தொண்டர் புராணம்.
15. 1,2,3 திருமுறைகளை அருளியவர் ( திருகடைகாப்பு)- திருஞானசம்பந்தர்.
16. 4,5,6 திருமுறைகளை அருளியவர்- அப்பர்.
17. 7-வது திருமுறையை அருளியவர்- சுந்தரர்.
18. 8-வது திருமுறையை அருளியவர்- மாணிக்கவாசகர்.
19. 9-வது திருமுறையில் வருவது- திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு.
20. 10-வது திருமுறை- திருமந்திரம். (திருமூலர்).
21. 11-வது திருமுறை- தோத்திர பாடல்.
22. 12-வது திருமுறை- பெரிய புராணம்.
23. சோழ நாட்டில் சீர்காழியில் சிவபாத
இருதையருக்கு மகனாக பிறந்தவர் - திருஞானசம்பந்தர்.
24. இறைவி உமாதேவியால் 3 வயதில் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்- சம்பந்தர்.
25. சமணர்களை வென்று சைவ சமயத்தை நிலைநாட்டியவர்- திருஞானசம்பந்தர்.
26. மயிலாப்பூரில் இறந்த பெண்ணின்
எலும்பை எடுத்து பெண்ணுருவாக்கியவர்- திருஞானசம்பந்தர்.
27. திருமறைக்காடு சிவலாயத்தில்கதவுகள் திறக்க பதிகம் படியவர்- திருஞானசம்பந்தர்.
28. சம்பந்தர் ஆண்பனையை பெண் பனை ஆக்கிய இடம்- திருவோத்துர் (செய்யாறு).
29. சம்பந்தர் பதிகத்தை பாடி ஓடத்தை ஓட செய்த இடம்- திருகொள்ளம்புதூர்.
30. சம்பந்தர் எந்த நதியினை எதிர்த்து ஒடும் படி செய்தார்- வைகை.
31. சமணர்கள் அனல் மற்றும் புனல் வாதத்தில் வென்றவர்- சம்பந்தர்.
32. எந்த இடத்தில் பெளத்தர்களை வாதத்தால் சம்பந்தர் வென்றார்- மதுரையில் உள்ள போதுமங்கையில்.
33. சம்பந்தர் எந்த அரசனை சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றினார- மாறவர்மன் அரிகேசரி.
34. சம்பந்தரின் மார்க்கம்- ஞான மார்க்கம்.
35. தினுநாவுக்கரசரின் இயற்பெயர்- மருள்நீக்கியார்.
36. திருமுனை நாட்டில் உள்ள திருவாரூரில் புகழனார் மற்றும் மாதினியாருக்கு
மகனாக பிறந்தவர்- அப்பர்.
37. சமண சமயத்தை பின்பற்றிய போது அப்பரின் பெயர்- தருமசேனர்.
38. யாரால் அப்பர் என திருநாவுக்கரசர் அழைக்கப்பட்டார்- திருஞானசம்பந்தர்.
39. சூலை நோய் நீங்க தன் தமக்கை திலகவதியின் வழிகாட்டுதலால் சைவ மதத்திற்கு மாறியவர்- அப்பர்.
40. அப்பர் எந்த அரசனை சைவ சமயத்திற்கு மாற்றினார்- முதலாம் மகேந்திர வர்மன்.
41. எங்கே அடைக்கபட்டு இருந்த சிவாலய கதவுகளை அப்பர் பதிகம் பாடி திறந்தார்- திருமறைக்காடு.
42. எங்கு அப்பர் தனது தோளில் ரிஷப சூல முத்திரைகளை பொறித்தார்- திருத்தூங்கானை மாடம்.
43. யாரின் மகனை பாம்பு தீண்ட அப்பர் விஷத்தை நீக்கியருளினார்- அப்பூதீயடிகள்.
44. எங்கு அப்பர் சிவபெருமானின் கைலாய காட்சியை கண்டு களித்தார்- திருவையாறு.
45. அப்பரின் பக்தி நெறி- தொண்டு நெறி.
46. சிவாலயங்களை துய்மைப்படுத்த உழவார படையை அமைத்தவர்- அப்பர்.
47. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்னவர்- அப்பர்.
48. அப்பர் சைவ மடத்தை நிறுவிய இடம்- திருப்பூந்துருத்தி. தஞ்சாவூர்
49. வடம் எனும் சொல்லின் பொருள்- ஆலமரத்தடி.
50. கோயிலின் ஆலமரத்தடி யில் ஓம் பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசை வடதளிபூசை என்று கூறியவர்- உ.வே.சா.
51. தாண்டக வேந்தர்- அப்பர்.
52. மகாகவிபாரதியை அச்சமில்லை அச்சமில்லை என பாட வைத்த பாடல் வரிகள்- நாமார்க்கும் குடியெல்லாம் எற தொடங்கும் அப்பரின் பாடல்.
53. பதிகங்களில் எத்தனை வகை பண்களை அப்பர் பாடியுள்ளார்-10
.
54. மாசில் வீணையும் வீங்கிள வேனிலும்
, மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே என பாடியவர்- அப்பர்.
55. சடையனார் மற்றும் இசைஞானியாரின் மகன்- சுந்தரர்.
56. சுந்தரரின் பக்தி மார்க்கம்- சக மார்க்கம்.
57. தம்பிரான் தோழர்- சுந்தரர்.
58. சுந்தரர் எழுதிய நூல்- திருத்தொண்டர் தொகை.
(60- தனிஅடியார் மற்றும் 9 தொகையடியார்)
59. சுந்தரர் இறைவனின் திருவடியால் சூட்டப்பட்ட இடம்- சித்தவமடம்.
60. சுந்தரர் நெல்மலை பெற்ற இடம்- திருகுண்டையூர்
( நாகப்பட்டினம்).
61. சுந்தரர் எங்கு செங்கல்லை பொன்னாக்கியவர்- திருப்புகலூர்.
62. திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பொன்னைஆற்றில் போட்டு சுந்தரர்
எங்கு எடுத்தார்- திருவாரூர் கமலாய குளம்.
63. சுந்தரர் திருவொற்றியூரில் மணந்தவர்- சங்கிலி.
சுந்தரர் திருவாருரில் மணந்தவர்- நாச்சியார்.
64. எங்கு வெள்ளத்தை தடுத்து வழிவிட சுந்தரர் பதிகம் பாடினார்- திருவையாறு.
65. முதலை வாய் பிள்ளையை சுந்தரர் எங்கு சுந்தரர் மீட்டருளினார்- அவிநாசி.
66. பித்தாபிறைகசூடி பெருமானே என பாடியவர்- சுந்தரர்.
67. திருமறைக்காட்டில் பிறந்து வரகுண பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்- மாணிக்கவாசகர்.
68. மாணிக்கவாசகர் எழுதிய நூல்கள்- திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.
69. மாணிக்கவாசகரை இறவன் ஆட்கொண்ட இடம்- திருப்பெருந்துறை.
70. வானாகி ,மண்ணாகி,
வளியாகி, ஒளியாகி, என இறைவனை வாழ்த்தி
பாடியவர்- மாணிக்கவாசகர்.
71. தில்லையில் பௌத்தர்களை வாதத்தில் வென்றவர்- மாணிக்கவாசகர்.
72. ஊமைப்பெண்ணை பேசுமாறு செய்தவர்- மாணிக்கவாசகர்.
73. நரிகளை பரிகளாக்கியவர்- மாணிக்கவாசகர்.
74. வைகை நதியை பெருக்கெடுத்து ஓட செய்தவர்- மாணிக்கவாசகர்.
75. பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டவர்- மாணிக்கவாசகர்.
76. திருநீலகண்டர் எங்கு வாழ்ந்தார்- தில்லை.
77. தீண்டுவராயின் எம்மை திருநீலகண்டமென்றவர்-
திருநீலகண்டர்.
78. திருவாசகத்தில் உள்ள பதிகம் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை-51,656/658.
79. திருவாசகத்தின் 4 -பெரும் பகுதிகள்- சிவபுராணம் ,போற்றி
திரு அகவல், கீர்த்தி திருஅகவல் ,திருவண்ட பகுதி.
80. பல்வகை உயிரிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் திருவாசக
வரிகள்- புல்லாகி பூடாகி.
81. கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கும் திருவாசக வரிகள்- மானுட பிறப்பினுள்
மாதா உதிரத்து ஈரமில் கிருமி செறிவினில் பிழைத்தும்.
82. வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன் என திருத்தொண்ட
தொகை குறிப்பிடுவது- மெய்பொருள் நாயனாரை.
83. அதிபத்தர் என்பதன் பொருள்- சிறந்த பக்தர்.
84. அதிபத்த நாயனார் பிறந்த ஊர்- திருநாகை காரோகணம்.
85. அதிபத்தர் இறைவனுக்கு தங்க மீனை அர்ப்பணிக்கும் விழா நடைபெறும்
பகுதி- காயாரோகண சுவாமி கோயில். ( ஆவணி மாதத்தில்).
86. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்- திண்ணன்.
87. திண்ணன் யாருடன் வேட்டையாட சென்றவர்- நாணன்காடன்.
88. புனிதவதி எனும் இயற்பெயரை கொண்டவர்- காரைக்கால் அம்மையார்.
89. புனிதவதியின் கணவர்- பரமதத்தன்.
90. தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கிய முறையை அறிமுகம் செய்தவர்- காரைக்கால் அம்மையார்.
91. காரைக்காலம்மையார் எழுதிய நூல்கள்- அற்புத திருவந்தாதி , திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் , திருவிரட்டை
மணிமாலை.
92. மாங்கனி திருவிழா நடைபெறும் இடம்- காரைக்கால்.
93. சம்பந்தரை வேதாரண்யத்தில் இருந்து பாண்டிய அரசவைக்கு அழைத்ததில்
முக்கிய பங்கு வகித்த பெண் நாயன்மார்- மங்கையர்க்கரசியார்.
94. மங்கையர்கரசியின் கணவர்- மாறவர்மன் அரிகேசரி.
95. சுந்தரத்தின் தாயார்- இசை ஞானியார்.
96. சந்தானசாரியர்கள்- மெய்கண்டார் ,அருணந்தி சிவாச்சாரியார்,உமாபதி சிவம் மறைஞானசம்பந்தர்.
97. சந்தனம் என்பதன் பொருள்- வம்சாவளி / பரம்பரை.
98. சந்தானத்தின் வகைகள்- அக சந்தானம் , புற சந்தானம்.
99. அக சந்தானக்காரர்கள் எங்கு வாழ்ந்தனர்- கயிலைமலை.
100. ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவெஞான உபதேசம் பெற்றவர்கள்-
அக சந்தானக்காரர்கள்.
101. அக சந்தான பிரிவை சார்ந்தவர்கள்- நந்திதேவர் , சனற்குமாரர் ,பரஞ்சோதியார்.
102. ஆன்மீக அறிவு- பரஞ்சோதியார் - மெய்கண்டதேவர் - அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர்.
103. மெய்கண்ட தேவர் எழுதிய நூல்- சிவஞான போதம்.
104. அருணந்தி சிவாசாரியர் எழுதிய நூல்கள்- சிவஞான சித்தியார் மற்றும் இருபா இருபது.
105. சிந்தாந்த அஸ்டகம் எழுதியவர்- உமாபதி சிவம்.
106. நாயன்மார்களின் சிவ வழிபாட்டை பின்பற்றி கர்நாடகாவில் தோன்றிய
சமய பிரிவு- லிங்காயத்.
107. ஆழ்வார்கள் எதை அருளியதால் திராவிடாச்சயர்கள் என அழைக்கபட்டனர்- நாலாயிர திவ்விய பிரபந்தம்
108. ஆழ்வார்கள் அவதரித்த கால அடிப்படையின் நிலைகள்-3-
1. முற்கால ஆழ்வார்கள்-பொய்கையாழ்வார்
,பூதத்தாழ்வார் , பேயாழ்வார்.
2. இடைக்கால ஆழ்வார்கள்-நம்மாழ்வார்
, மதுரகவியாழ்வார் ,குலசேகர ஆழ்வார் ,ஆண்டாள் , பெரியாழ்வார்
3. பிற்கால ஆழ்வார்கள்-தொண்டரடி பொடியாழ்வார்,திருமழிசை யாழ்வார் திருப்பாணாழ்வார்.
109. பொய்கையாழ்வார் பிறந்த இடம்-திருவெஃகா யதோத்தகாள பொற்றாமரை குளம்.
110. பொய்கையாழ்வாரின் அவதாரம்-பஞ்சசன்யம்/திருசங்கு.
111. முதல் திருவந்தாதி யை பாடியவர்-
பொய்கையாழ்வார். (100 பாடல்கள்)
112. வைணவ திருத்தலங்களில்
பக்தி பாடல்களை இயற்றி அங்கேயே இறைவன் முன் அரங்கேற்றுவது- மங்களாசாசனம்.
113. தமிழகத்தில் மங்களாசனம் செய்தவர்களில் முதன்மையானவர்- பொய்கையாழ்வார்.
114. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவர்- பொய்கையாழ்வார்.
115. மாமல்லபுரம் குருகத்தி மலரில் தோன்றிய ஆழ்வார்- பூதத்தாழ்வார்.
116. தமிழை ஞானத்தமிழ் என கூறியவர்- பூதத்தாழ்வார்.
117. இரண்டாம் திருவந்தாதியை பாடியவர்- பூதத்தாழ்வார்.
118. பூதத்தாழ்வார் எதன் அம்சம்- கெளமோதகி .(கையில் உள்ள ஆயுதம்)
119. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக என பாடியவர்- பூதத்தாழ்வார்.
120. சென்னை மயிலாப்பூரில் பிறந்த ஆழ்வார்- பேயாழ்வார்.
121. பேயாழ்வாரின் அம்சம்- நாந்தகம். ( திருமாலின் 5 ஆயுதங்களில் ஒன்று).
122. மூன்றாம் திருவந்தாதியை பாடியவர்- பேயாழ்வார்.
123. எல்லாவற்றிற்கும் சரியானது எது எனும் தீர்வு யாரிடம் உள்ளதாக
பேயாழ்வார் கூறகனார்- துளசிமாலை அணிந்த திருமால்.
124. திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாக பிறந்தவர்- திருமழிசையாழ்வார்.
125. திருமழிசையாழ்வாரின் சீடர்- கணிகண்ணன்.
126. திருமழிசையாழ்வார் திருமாலை தரிசித்த இடம்- திருவெஃகா,இரண்டாவது கும்பகோணம்.
127. திருமழிசையாழ்வார் சிறப்பு பெயர்கள்- பக்தி சாரார்,திருமழிசை பிரான், குடமுக்கிற்புலவர்.
128. திருமழிசை அருளிய நூல்கள்- நான்முகன்திருவந்தாதி ,திருசந்த விருத்தம்.
129. நம்மாழ்வார் பிறந்த ஊர்- ஆழ்வார் திருநகரி.
130. தமிழ் செய்த மாறன்-
நம்மாழ்வார்.
131. நம்மாழ்வார் இயற்றிய நூல்கள்- திருவாசிரியம் , பெரிய திருவந்தாதி , திருவாய்மொழி.
132. நம்மாழ்வார் இயற்பெயர்- சடகோபன் குடிபெயர் மாறன்.
133. நம்மாழ்வார் சிறப்பு பெயர்கள்- பாராங்குசன் , வழுதி வளநாடன், வகுளாபரணன், குருகூர்நம்பி , காரிமாறன்.
134. மதுரகவியாழ்வார் பிறந்த ஊர்- திருக்கோளூர்.
135. இவர் எல்லாமறிந்த ஞானி என யார் யாரை கூறினார்- நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார்.
136. நம்மாழ்வாரை இறைவாக கொண்டு மதுரகவி பாடிய பாசுரம்-கண்ணிநூண்சிறுதாம்பு.
137. திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார்- குலசேகர ஆழ்வார்.
138. நம்மாழ்வார் ஒரு நாட்டிற்கோ ஒரு சமயத்திற்கோ ஒரு இனத்திற்கோ
உரியவர் அல்லர் என கூறியவர்- திரு. வி. க.
139. ஆனித செல்பந்து அரம்பையர்கள் தற்குழ
....மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே என பாடியவர்- குலசேகர ஆழ்வார்.
140. நாடாளும் மன்னனாக இருப்பதை காட்டிலும் திருவேங்கடசுனையில்
மீனாக இருத்தலே மேல் என திருவேங்கடபெருமாள் மீது இருந்த ஈடுபாட்டை
வெளிப்படுத்தியவர்- குலசேகர ஆழ்வார்.
141. திருமால் கோயில்களில் உள்ள கருவறை படியின் பெயர்- குலசேகர படி.
142. குலசேகர ஆழ்வார் இயற்றிய பாசுரங்கள்- பெருமாள் திருமொழி.
143. பெரியாழ்வார் பிறந்த ஊர்- திருவில்லிப்புதூர்.
144. பெரியாழ்வாரின் வேறுபயர்கள்- விஷ்ணு சித்தன் ,பட்டர்பிரான்.
145. பிள்ளைத்தமிழ் இலக்கிய முன்னோடி- பெரியாழ்வார்.
146. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் என திருமாலை குழந்தையாக
பாவித்து பாடியவர்- பெரியாழ்வார்.
147. பெரிமாழ்வார் பாடிய பாசுரங்கள்- திருபல்லாண்டு , பெரியாழ்வார் திருமொழி.
148. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்- ஆண்டாள்.
149. ஆண்டாளுக்கு பெரியாழ்வார் இட்ட பெயர்- கோதை நாச்சியார்.
150. ஆண்டாளின் சிறப்பு பெயர்- சூடி கொடுத்த சுடர்கொடி.
151. ஆண்டாள் படைத்த பாசுரங்கள்- திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
152. பாவை நோன்பை அடிப்படையாக கொண்டு
ஆண்டாள் படைத்த பாசுரம்- திருப்பாவை.
153. யாருடைய பாடல்கள் நாயக நாயகி பாவத்தை உணர்த்துகின்றன- ஆண்டாள்.
154. ஆழிமழை கண்ணா என திருமாலை அழைத்தவர்- ஆண்டாள்.
155. தொண்டரடிபொடியாழ்வார் பிறந்த ஊர்- திருமண்டங்குடி.
156. தொண்டரடிபொடியாழ்வாரின் இயற்பெயர்- விப்ர நாரயணர்.
157. தொண்டரடி பொடியாழ்வார் எங்கு நந்தவனம் அமைத்து பெருமாளுக்கு
தொண்டு புரிந்தார்- திருவரங்கம்.
158. தொண்டரடி பொடியாழ்வாரின் நீதி கருத்துக்களை கூறும் பாசுரம்- திருமலை பாசுரம்.
159. தொண்டரடி பொடியாழ்வார் இயற்றிய பாசுரங்கள்- திருபள்ளியெழுச்சி,திருமாலை.
160. ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகர் உளான் என பாடியவர்- தொண்டரடி பொடியாழ்வார்.
161. திருபாணாழ்வார் இயற்றிய பாசுரம்- அமலனாதிபிரான்.
162. திருப்பாணாழ்வார் பிறந்த இடம்- உறையூர்.
163. கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணய் என பாடியவர்- திருப்பாணாழ்வார்.
164. திருவாலி திருநகரியில் பிறந்த ஆழ்வார்- திருமங்கையாழ்வார்.
165. எதிரிகளுக்கு எமன் எனும் சிறப்புப்பெயர் பெற்றவர்- திருமங்கையாழ்வார்.
166. திருமங்கையாழ்வார் இயற்றிய நூல்கள்:
1. பெரிய திருமொழி
2. திருகுறுந்தாண்டகம்
3. திருநெடுந்தாண்டகம்
4. திருவெழுக்கூற்றிருக்கை
5. சிறிய திருமடல்
6. பெரிய திருமடல்
167. ஆலய பணியே சமூக பணிக்கு அடிப்படை
என்பதை ஏற்படுத்தியவர்கள்- ஆழ்வார்கள்.
168. வைணவ நடைமுறை மற்றும் தத்துவம் தோன்ற காரணமானவர்கள்- ஆச்சாரியர்கள்.
169. ஆச்சாரியர்கள் புலமை பெற்று இருந்த மொழிகள்- வடமொழி மற்றும் தமிழ்.
170. தமிழ் சொற்களும் வடமொழி சொற்களும்
கலந்து எழுதப்பட்ட உரைநடை- மணிபிரவாள நடை.
1. மணி என்பது- முத்துமணி.
2. பிரவாளம் என்பது- பவளமணி.
171. நாதமுனிகள் பிறந்த இடம்- காட்டு மன்னார் கோயில்.
172. நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களை தொகுத்தவர்- நாதமுனி.
173. நாதமுனி இயற்றிய நூல்கள்- நியாய தத்துவம் , யோக இரகசியம்.
174. திருவில்லிபுதுரில் பிறந்தவர் மற்றும் ஆளவந்தாரின் மாணவர்- இராமனுஜர்.
175. எதற்கு இராமனுஜர் உரை எழுதினார்- பிரம்ம சூத்திரம்.
176. யாரை கொண்டு இராமனுஜர் திருவாய்மொழிக்கு ஆராயிரபடி உரை எழுதினார்- திருக்குருகைபிரான் பிள்ளை.
177. யாரிடம் இராமனுஜர் திருவெட்டெழுத்தை கற்றார்- யமுனாச்சாரியார் ,திருகோட்டியூர் நம்பிகள்.
178. விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கியவர்- இராமனுஜர்.
179. இராமனுஜர் எழுதிய நூல்கள்:
1. வேதாந்த சங்கிரகம்
2. கீதாபாஸ்யம்
3. கத்யதிரயம்
4. சரணாகதி கத்தியம்
5. திருவரங்க கத்தியம்
6. ஸ்ரீபாஷ்யம்
7. வைகுண்ட கத்தியம்
180. யாருடைய காலத்திற்கு பின் வைணவம் வடகலை மற்றும் தென்கலை என பிரிந்தது- இராமனுஜர்.
181. இலய நூழைவு போராட்டத்தின் முன்னோடி- இராமனுஜர்.
182. ஆன்மாவே பரம்பொருளின் சாரம் என கூறியவர்- இராமனுஜர்.
183. அறிவாக உள்ள ஆன்மா மாற்றமடைவது இல்லை என கூறியவர்- இராமனுஜர்.
184. இராமனுஜர் இறுதிவரை எங்கு இறைப்பணி செய்தார்- ஸ்ரீரங்கம்.
185. நிம்பார்க்கரின் கொள்கை- வேதாவேதம்.
186. மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன் மற்றும் இராதை ஆகியோரே
பரம்பொருள் என கூறியவர்- நிம்பார்க்கர்.
187. நிம்பார்க்கரின் இராதாகிருஷ்ணன் வழிபாட்டை பின்பற்றியோர் அதிகம்
காணப்பட்ட பகுதி- உத்திர பிரதேசம்.
188. மத்துவர் பிறந்த இடம்- கர்நாடகா உடுப்பி கல்யாண்பூர்.
189. மகாவிஷ்ணு லட்சுமி அவதாரத்தை தம் பக்தி கோட்பாட்டின் ஆதாரமாக
கொண்டவர்- மத்துவர்.
190. மத்துவர் ஏற படுத்திய பக்தி கோட்பாடு- துவைதம். (இருமைக்கொள்கை).
191. மத்துவரின் கோட்பாடு
எந்த தலைப்பில் தொகுக்கபட்டுள்ளன- சர்வமூலம்.
192. மத்துவரின் சீடர்- ஜெய தீர்த்தர்.
193. ஜெய தீர்த்தர் எழுதிய நூல்கள் எவை- தெற்கு பாஷ்யம் விளக்க உரை, வேதாந்த சூத்திரங்களுக்கு உரை.
194. அத்வைதத்தை உருவாக்கி ய ஆதிசங்கரரருக்கு முக்கியமானவர்- வசஸ்பதி மிஸ்ரா.
195. வதவாலி எனும் நூலை எழுதியவர்-
ஜெய தீர்த்தர்.
196. மத்துவரின் எத்தனை நூதுக்கு விளக்கவுரை உள்ளது-18.
197. நியாய சுதாவை எழுதியவர்- ஜெய தீர்த்தர்.
198. நியாய சுதாவிற்கு விளக்கவுரை எழுதியவர்- இராகவேந்திரர்.(புவனகிரி)
199. தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பக்தி நெறியில் மூலம் பாலமாக திகழ்ந்தவர்- இராமனந்தர்.
200. இராமனந்தர் பிறந்த இடம்- அலகாபாத்.
201. இராமானந்தரின் குரு- இராமானுஜர்.
202. இராமர் சீதை வழிபாட்டை பரப்பியவர்- இராமனந்தர்.
203. தமது பக்தி கோட்பாடுகளை இந்தியில் பரப்பியவர்- இராமனந்தர்.
204. இராமனந்தரின் சீடர்கள்:
1. முஸ்லிம் நெசவாளி – கபீர்.
2. செருப்பு தைக்கும் தொழிலாளி – ராய்தாசரா.
3. முடிதிருத்தும் தொழிலாளி- சேனா
4. மாமிசம் வெட்டுவோர் -சாதனா
5. ஜாட் இன குடியானவர் -தன்னா
6. பொற்கொல்லர் -நரஹரி
7. இராஜபுத்திர இளவரசர்- ஃபிபர்
8. ஆனந்தனந்தர்
9. சுர்சுரானந்தர்
10. சுர் ஆனந்தர்
11. சர்கரி
12. பத்யாவதி
205. புருஷபக்ஷா எனும் நீதி போதனை கதைகளை எழுதியவர்- வித்யாபதி.
206. வித்யாபதி எந்த மொழியில் கோரக்சா விஜயம் எனும் நாடக நூலை எந்த மொழியில் எழுதினார்- மைதிலி மொழி.
207. யாருடைய கோட்பாடுகள் மகாராஷ்டிர தர்மம் என அழைக்கப்படுகிறது- ஞானேஷ்வர்.
208. ஞானேஷ்வரி என்பது எதன் விளக்கவுரை- பகவத்கீதை.
209. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும்
அம்ருதானுபவ எனும்
நூலை எழுதியவர்- ஞானேஷ்வர்.
210. பசவர் தோன்றிய இடம்- கர்நாடகா.
யாரிடம் அமைச்சராக பணிபுரிந்தார்- சாளுக்கிய மன்னன்.
211. பசவரை பின்பற்றியோர்- விரசைவர அல்லது லிங்காத்து.
212. நதியின் சங்கமதலைவன் என யாரை பசவர் போற்றுகிறார்- சிவபெருமான்.
213. பசவர் எந்த மொழியில்
தனது போதனைகளை பரப்பினார்- கன்னடம்.
214. விதோபா பக்த கோட்பாட்டை பின்பற்றியவர்- நாமதேவர்.
215. நாமதேவர் எங்கு பிறந்தார்- மகாராஷ்டிரா பண்டரிபுரம்.
216. யாருடைய கருத்துக்கள் மகாராஷ்டிர தங்கம் என அழைக்கப்பட்டன- நாமதேவர்.
217. இந்து முஸ்லிம் ஒள்றுமையை வளர்த்த இராமனந்தாரின் புகழ்பெற்ற
சீடர்- கபீர்.
218. கபிர் மக்களுக்கு போதித்தவை:
இராமனும் இரஹூமும் ஒன்றே
கிருஷ்ணனும் கரீமும் ஒன்றே
அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்றே
219. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே
களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் என கூறியவர்- கபீர்.
220. கபீரின் பாடல் தொகுப்பு- தோஹாக்கள்.
221. குருநானக் எங்கு எப்போது பிறந்தார்-1469 ,தால்வண்டி.
222. குருநானக் யாருடைய சீடர்- கபீர்.
223. குருநானக் எந்த உணவுகூடத்தில் சமபந்தி உணவருந்தும் முறையை
தொடங்கி வைத்தார்- லங்கர்.
224. சீக்கிய புனித நூல்- ஆதிகிரந்தம்.
225. சிக்கிய மதத்தின் முதல் குரு- குருநானக்.
226. வல்லபசாரியார் எங்கு பிறந்தார்- காசி.
227. யாருடைய அரசவைக்கு சென்று கிருஷ்ண
வழிபாட்டை வலியறுத்தினார்- கிருஷ்ண தேவராயர்.
228. வல்லபசாரியார் உருவாக்கிய பக்தி மார்க்கம்- புஷ்டி மார்க்கம்.
229. சுத்த அத்வைதத்தை தோற்றுவித்தவர்- வல்லபசாரியார்.
230. வல்லபசாரியார் தனது நூல்களை எழுதிய மொழி- வடமொழி மற்றும் ப்ரிஜ் மொழி.
231. வல்லபசாரியார் எழுதிய நூல்கள்- சுபோதினி சிந்தாந்த இரகசியா.
232. வல்லபசாரியார் பாடல்கள் இன்றும் எங்கு ஒலிக்கிறது- இராஜஸ்தான், குஜராத்.
233. சைத்தன்யர் எங்கு பிறந்தார்- வங்காளம்.
234. எப்போது துறவியானார்-25 வயதில்.
235. சைத்தன்யர் தத்துவம்- அசிந்திய பேதாபேதம்.
236. இராமயணத்தை இந்தியில் இராமசரித மானஸ் என எழுதியவர்- துளசிதாசர்.
237. வட இந்தியாவில் இராமர் வழிபாட்டு முறையை கொண்டு வந்தவர்- துளசிதாசர்.
238. துளசிதாசர் எழுதிய நூல்கள்:
1. வினயபத்திரிக்கா
2. கீதாவளி
3. தோகாவளி
4. பார்வதி மங்களம்
5. ஜானகிமங்களம்
239. ஆக்ராவின் பார்வையற்ற கவிஞர்- சூர்தாசர்.
240. சூர்தாசர் இயற்றிய நூல்கள்- சூர்சாகர் ,சாகித்ய இரத்னா.
241. அக்பர்அவையில் கிருஷ்ண பக்தி பாடலை பாடியவர்- சூர்தாசர்.
242. சூர்தாசர் தோற்றுவித்த பக்தி பிரிவு- இராதாவல்லபி.
243. மீராபாய் எந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர்- இராஜபுத்திரர்.
244. மீராபாய் தமது கருத்துக்களை பரப்பிய மொழி- பிரிஜ்.
245. சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குரு- குருராமதாசர்.
246. குருராமதாசர் எழுதிய நூல்- தசபோதா.
247. குருராமதாசரின் குரு- பகவான்ராம்.
248. சஜ்ஜன்காட் என்பதன் பொருள்- துறவிகளின் கோட்டை.
249. சஜ்ஜன்காட்டை உருவாக்கியவர்- சத்ரபதி சிவாஜி.
250. துக்காராம் யாருடைய சமகாலத்தவர்- ஏக்நாத் மற்றும் சிவாஜி.
251. விஷ்ணுவை விட்டலா எனும் பெயரில் வழிப்பட்டவர்- துக்காராம்.
252. துக்காராம் மராத்திய மொழியில் பாடிய பாடல்- அபங்கம்.
253. இந்தியாவில் பன்முக பண்பாடு பரவ அடித்தளம்- சூபி இயக்கம்.
254. இந்துஸ்தான் பறவை- அமிர்குஸ்ரு.
255. குவாலியர் இசை முறையை அறிமுகபடுத்தியவர்- அமிர்குஸ்ரு.
256. அமிர்குளஸ்ரு வால் கண்டறியப்பட்ட இசைக்கருவி- சிதார்.
257. இறைவனை வழிபடும் போது பாடி
ஆனமா மனம் உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணக்கும் செயல்- நாத யோகா.
0 Comments
THANK FOR VISIT