PAGE NO : 1 12TH STD இந்திய அரசமைப்பு TOTAL QUESTION :90
1.
மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது -1968.
2. இந்திய அரசியல் அமைப்பின் முதன்மை வரைவாளர் டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் எந்த சரத்தை எழுத மறுத்தார் - 370 . (எழுதியவர் - கோபால சுவாமி)
3. அரசமைப்பு உறுப்பு எதன் கீழ் ஆங்கிலோ - இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் - 333.
4. மாநிலங்களவை முதல் கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு - 1952 மே 13.
5. பிரிட்டன் நாட்டில் இருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு-
1. நாடாளுமன்ற அரசு.
2. ஒற்றைக் குடியுரிமை.
3. சட்டத்தின் ஆட்சி.
6. 26.11.1949 அன்று எத்தனை உறுப்பினர்கள் அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர் - 284.
7. மதசார்பு அரசுக்கு எடுத்துக்காட்டு - பாகிஸ்தான், வாடிகன் நகரம்.
8. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் -1946 டிசம்பர்9.
9. அரசியலமைப்பு நிர்ணய சபையின் கடைசி கூட்டம் -1950 ஜனவரி 24.
10. இந்திய அரசியலமைப்பில் சமதர்மம் என்ற சொல் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது - 42 வது திருத்தம் 1976.
11. தென்னாப்பிரிக்காவில்' இருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு :
1. அரசியலமைப்பு சட்டத்திருத்தம்.
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு .
12. 1955 குடியுரிமைச் சட்டம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 2015 பிப்ரவரி 27 .
13. மக்களவை :
1. மொத்த உறுப்பினர்கள் –
545.
2. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் –
543.
3. குடியரசுத்தலைவர் இரண்டு ஆங்கிலோ – இந்தியன் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
4. மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
5. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.
14. தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்துதல்-2014 ஆகஸ்ட் 1.
15. பொதுக்கணக்கு குழு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்- மக்களவைத் தலைவர்.
16. தமிழ்நாடு:
1. மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள்- 234.
2. பொது தொகுதி உறுப்பினர்கள்- 189.
3. தனி தொகுதி உறுப்பினர்கள்- 45.
4. முதல் சட்டமன்றம் அமைக்கப்பட்டது - 03 - 05 - 1952.
5. 15 வது சட்டமன்றம் அமைக்கப்பட்டது -21
- 05- 2016.
17. மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவை கொண்டு வந்தவர்: திருச்சி சிவா.
1. 2014 -தனிநபர் சட்ட முன்வரைவு.
2. 2015 ஏப்ரல் 24 -
மேலவை.
3. 2016 பிப்ரவரி 26 -
மக்களவை .
4. 45 ஆண்டுகளுக்கு பிறகு மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு .
18. மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் எத்தனை நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்- 76 .(20.07.1956 - 10.10.1956 ).
19. வரதட்சனை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1961 மே -9.
20. முகப்புரையில் அமைந்துள்ள சொற்களை வரிசை:
1. இறையாண்மை.
2. சமதர்ம.
3. மதச்சார்பின்மை.
4. மக்களாட்சி.
5. குடியரசு.
21. பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு -103 வது அரசமைப்பு திருத்த சட்டம்.
22. 1976 ,42 வது சட்ட திருத்தம் யாருடைய ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது -இந்திரா காந்தி.
23. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கஹாவை தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக் கொண்டவர் - ஜே. பி. கிருபளானி.
24. கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியவர் - அம்பேத்கர்.
25. கிராம பஞ்சாயத்து அமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து- சரத்து 40. (பகுதி V. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் எனும் பிரிவில் உள்ளது).
26. மாநிலங்களவைக்கு மேலவை என்ற பெயர் எப்போது மாநிலங்களவை தலைவரால் அறிவிக்கப்பட்டது -1954 ஆகஸ்ட் 23.
27. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது- அயர்லாந்து. (பகுதி IV, சரத்து 36 - 51)
28. நெருக்கடிநிலை காலங்களில் எந்த அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது
- சரத்து 20, 21.
29. முதல் 14 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்கும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 86 வது திருத்தம் , 2002.
30. இந்திய அரசியலமைப்பு அதிக இறுக்கமான தன்மையும் கொண்டதுமில்லை ; அதிக நெகிழ்வு தன்மை கொண்டதுமில்லை.
31. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசியல் நிர்ணய சபை ஆகஸ்ட் 14, 1947 அன்று மீண்டும் கூடியது.
32. நிர்ணய சபைக்கு மக்கள் தொகைக்கு ஏற்றபடி 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
33. டிசம்பர் 9, 1946 முதல் ஜனவரி 24 , 1950 வரை அரசியல் நிர்ணய சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு எத்தனை தொகுதிகளை கொண்டது-12.
34. இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - லிருந்து எடுக்கப்பட்டவை ---
1. கூட்டாட்சி விதிகள்.
2. ஆளுநர் பதவி.
3. நீதித்துறை.
4. பொதுத் தேர்வாணையங்கள்.
5. நெருக்கடிக்கால விதிகள்.
6. நிர்வாக விவரங்கள்
35. மத்திய அரசின் நிர்வாக தலைவர் - குடியரசு தலைவர்.
36. மத்திய அரசின் உண்மையான தலைவர் - பிரதமர்.
37. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் -அடிப்படை உரிமைகள்.
38. சிறார் இலவச கட்டாய கல்வி செட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 2009.
39. அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளது- பகுதி -IV.
40. பகுதி IV A , சரத்து 51 A
எந்த சட்ட திருத்தத்தின் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது - 42 வது திருத்தம் 1976.
41. உச்சநீதிமன்ற உத்தரவையே அல்லது தீர்ப்பையே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் பெற்றது உச்சநீதிமன்றம்.
42. சொத்துரிமை எந்த சட்ட திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு 300A வில் சாதாரண சட்டமாக தற்போது உள்ளது - 44 வது திருத்தம் 1978 . (சரத்து 31 A)
43. இந்திய அரசியலமைப்பின் பாகம் IV ன் கீழ் முதுமை, வேலையின்மை நோய்வாய்ப்படுதல், உடல் வலிமை கொண்டோர் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்கள், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை , வளங்கல் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன .
44. கிராம சுயராஜ்யம் என்ற கருத்துடன் தொடர்புடையவர் - மகாத்மா காந்தி.
45. மாநிலங்களவை :
46. மொத்த உறுப்பினர்கள் -250.
47. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்- 238.
48. குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யும் உறுப்பினர்கள்- 12.
49. மாநிலங்களவை ஒரு - நிரந்தரமான அமைப்பு, கலைக்க முடியாது.
50. மாநிலங்களவை பதவிக்காலம் - 6 ஆண்டுகள் .
51. 1/3 பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்.
52. மாநிலங்கள் குழு அவை இந்திய அரசாங்க சட்டம் 1919ன் கீழ் உருவாக்கப்பட்டது-1921 முதல் செயல்பட்டு வருகிறது.
53. மாநிலங்களவை கூட்டத்தொடர் : 3 முறை.
1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் - பிப்ரவரி - மே .
2. மழைக்கால கூட்டத்தொடர்- ஜூன் - ஆகஸ்ட் .
3. குளிர்கால கூட்டத்தொடர் - நவம்பர் – டிசம்பர்.
54. இராஜாஜி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஆண்டு -1937.
55. யாருடைய ஆட்சியில் இந்து திருமண சட்டம் திருத்தப்பட்டு சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன - சி. என். அண்ணாதுரை.
56. அரசமைப்பில் தரப்படாத நிறுவனம் எது -திட்ட ஆணையம்.
57. முகப்புரையில் இடம்பெறும்' நாம்' என்னும் சொல் எதைக் குறிக்கிறது - இந்திய மக்கள்.
58. அரசியலமைப்பை இறுதிபடுத்த அரசியலமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது - 1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்றாண்டுகள்.
59. இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை மக்களாட்சி , குடியரசு நாடு என்று கூறும் அரசியலமைப்பின் பாகம் – முகப்புரை.
60. பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 2002 மார்ச்.
61. பிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட அரசிலமைப்பு :
1. குடியரசு.
2. முகப்புரையில் சுதந்திரம்.
3. சமத்துவம் .
4. சகோதரத்துவம்.
62. அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - ரஷ்யா / சோவியத் யூனியன்.
63. இந்திய அரசியலமைப்பு - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
64. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் - பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
65. சரத்து 343 ஒன்றிய அரசின் அலுவல் மொழி 1963 க்குப் பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் ஏன்று கூறுகிறது.
66. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என கூறும் சரத்து - சரத்து 1(1).
67. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு -1967 .(சி.என். அண்ணாதுரை)
68. மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவு திட்டமாக மேம்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்.
69. வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான கர்ணம் பதவிக்கு முடிவு கட்டியவர் - எம்.ஜி.ஆர்.
(1977-1987)
70. மண்டல் ஆணையம் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஆண்டு -1992 நவம்பர் .கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
71. தமிழகத்தில், பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனங்கள் , பழங்குடியினர் ஆகியோருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது -69%.
72. எந்த ஆண்டில் முதன்முறையாக எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரே பொதுக்கணக்கு குழு தலைவராக மக்களவை தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்-1967 - 1968.
73. 1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை பொதுக்கணக்கு குழு எத்தனை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது – 1596.
74. நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளன -(கடைசி - 1970) -14 .(2014 - திருச்சி சிவா , மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள்-15.
75. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தனிநபர் சட்டங்கள்:
1. இஸ்லாமிய வகுப்புவாரி சட்ட முன்வரைவை 1952 - சையத் முச்சமத் அகமத் (21.05.1956)
2. இந்திய பதிவு திருத்த சட்ட முன்வரைவு 1955 - எஸ்.சி.சமந்தா(06.04.1956 ).
3. நாடாளுமன்ற செயல்முறைகள் சட்ட முன்வரைவு 1956 - ஃபெரோஸ் காந்தி (26.05.1956).
4. குற்ற செயல் முறை திருத்த சட்ட முன்வரைவு 1956 - ரகுநாத் சிங் 01.09.1956.
76. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இணைப்பதற்கு முன்பு மன்னராக இருந்தவர்-ராஜா ஹரிசிங்.
77. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு -370.
78. ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் பதவி- சதா - ஐ – ரியாஷத்.
79. ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற பதவிக்காலம் - 6 ஆண்டுகள்.
80. சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று 1952-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் - ஸ்ரீராமலு.
81. சங்கரலிங்கனார் :
1. பிறப்பு - 1895 இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமம்.
2. பெற்றோர்- கருப்பசாமி - வள்ளியம்மாள்.
3. 1917 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
4. ராஜாஜியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
5. 1930 இல் காந்தியுடன் தண்டி உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு பெற்றார்.
82. 1956 ஜூலை 27 இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி உண்ணாவிரதம் தொடங்கியவர்-76. சங்கரலிங்கனார்.
83. மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையில் உறுப்பு- சரத்து 125 இன் கீழ் எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவை தேர்வுகுழுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டுவர முடியும்-
84. மக்களவை , மாநிலங்களவை இணைந்தது இந்திய நாடாளுமன்றம் ஆகும். இரண்டில் ஒரு அவை இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது -ஜவகர்லால் நேரு.
85. மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது - மாநிலங்களவை.
86. நாடாளுமன்றத்தில் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம்- உறுப்பினர்களின் கேள்வி நேரம்.
87. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறுகிறது -3 முறை.
88. அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை :
1. அடிப்படை உரிமைகள்.
2. நீதி சீராய்வு.
3. குடியரசு தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம்.
4. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கும் முறை.
5. குடியரசுத் துணைத் தலைவர் பதவி நீக்கும் முறை.
89. கனடா அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை :
1. ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி.
2. மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள்.
3. பொதுப்பட்டியல்.
4. மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம்.
5. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு.
90. ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை:
1. வணிகம்.
2. வர்த்தக சுதந்திரம்.
3. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம்.
0 Comments
THANK FOR VISIT