12TH- STD - காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு-

1.    வேவல் பிரபுவுக்கு பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு வந்தவர-மெளண்ட்பேட்டன் பிரபு.

2.    மெளண்ட்பேட்டன் பிரபு 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்த நாள் -1947 ஜூன் 3.

3.    1947-ஜூன் 14 இல் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மெளண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - மீரட்.

4.    காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஆண்டு -1948 ஜனவரி 30.

5.    சர் சிரில் ராட்கிளிஃப்  இந்தியா வந்தடைந்த ஆண்டு -1947 ஜூலை 8.

6.    இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையை நிர்ணயிக்கும் ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது -சர் சிரில் ராட்கிளிஃப்.

7.    இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரிவினையை பற்றி கவிதை எழுதியவர் -W.H. ஆடன்.

8.    1947 -ஆகஸ்ட்  முதல் 1947-நவம்பர்  வரை 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர்.

9.    5.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து பாக்கிஸ்தானுக்கு சென்றனர்.

10.   எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை - கஃபிலா எனப்பட்டது.

11.   எந்த வரலாற்று அறிஞர்  கூற்றுப்படி 1947 - 48 இல் 5லட்சம் முஸ்லிம் அல்லாத அகதிகள் பஞ்சாப் மற்றும் தில்லிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர் - ஞானேந்திர பாண்டே.

12.   இந்திய அரசியலமைப்பின் வரைவை இந்தியர்கள்தான் உருவாக்க வேண்டும்; பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக எந்த ஆண்டு  அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது -1934.

13.   டெல்லி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு -1950 ஏப்ரல் 8.

14.   இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற அடிப்படைக் கருத்து 1922  -லேயே யாரால் முன்வைக்கப்பட்டது -காந்தியடிகள்.

15.   இந்திய அரசாங்கச் சட்டம் 1935 இன் அடிப்படையில் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்ற ஆண்டு  -1946 ஆகஸ்ட்.

16.   1946 - நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது.

17.   அரசமைப்பு நிர்ணயசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 224.

18.   1931 மார்ச் - இந்திய தேசிய காங்கிரஸ் எங்கு நடந்த கூட்டத்தில் அடிப்படை உரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - கராச்சி.

19.   ஜவகர்லால் நேரு இந்திய அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்திய ஆண்டு-1946 டிசம்பர் 13.

20.   அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்-1946 டிசம்பர் 9.

21.   அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் தலைவர் - இராஜேந்திர பிரசாத்.

22.   இந்திய அரசமைப்பு அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1949 நவம்பர் 26.

23.   அடிப்படை உரிமைகள் குறிக்கோள் தீர்மானத்தின் 5- ஆம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன .

24.   அரசமைப்பின் சட்டமொழி குறிக்கோள் தீர்மானத்தில் இருந்தும் ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10 இல் வெளியிட்ட அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையிலிருந்தும் எடுக்கப்பட்டது.

25.   இந்திய ஒன்றியத்துடன் இணைணய மறுத்த சுதேசி அரசுகள் - காஷ்மீர் ,ஜுனாகத் , ஹைதராபாத்.

26.   சுதேசி அரசுகளை இந்தியாவோடு இணைக்கும் பணியை திறம்பட செய்து முடித்தவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்.

27.   இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்தவர் -சர்தார் வல்லபாய் பட்டேல்.

28.   சுதேச அரசுகள் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த மூன்று போராட்டங்கள்:

          1.    திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பு அரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவான் ஆகிய சி.பி. இராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புரா வயலார் ஆயுதப்போராட்டம்.

          2.    பிரஜா மண்டல் மற்றும் ஒரிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள்

          3.    மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள்

29.   இந்திய அரசாங்க சட்டம் 1935  கீழ் உருவாக்கப்பட்ட சட்ட ஆவணமே பிரிவினையின்போது ஒப்பந்தமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

30.   காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்ற போராட்டத்தை அரசுக்கு எதிராக தொடங்கியவர் -மகாராஜா ஹரிசிங்.

31.   மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பிய அரசர் -ஜுனாகத் அரசர்.

32.   இந்திய ஆளுகைக்கு கீழ் படிய மறுத்து ஐதராபாத் அரசை சுதந்திர அரசாக அறிவித்தவர் -ஹைதராபாத் நிஜாம்.

33.   ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 370 - இன் படி தனி அந்தஸ்து வழங்கப்பட்டது .

34.   1966 - இல் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாநிலங்கள் - ஹரியானா , இமாச்சலப் பிரதேசம்.

35.   இந்திய தேசிய காங்கிரஸ் எந்த மாநாட்டில் மொழி வாரியான மாகாணங்கள் அமைக்கப்படுவதன் மூலம் தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது -நாக்பூர் 1920.

36.   நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு-1928. (பிரிவு 86 - மொழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைப்பு)

37.   1946 ஆகஸ்ட் 31 இல் யார் ஆந்திர மாகாணத்திற்கான கோரிக்கையை அரசியலமைப்பு நிர்ணய சபையின் முன்வைத்தார்-பட்டாபி சீதாராமையா.

38.   அரசமைப்பு நிர்ணய சபை தலைவர் ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் ஒன்றை அமைத்து ஆண்டு -1948 ஜுன் 17.

39.   மூவர் ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு-1948 டிசம்பர் 10.

40.   மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய அமைக்கப்பட்ட மூவர் குழு - (J.V.P. COMMITTEE) - ஜவகர்லால் நேரு , வல்லபாய் படேல் ,பட்டாபி சீதாராமையா.

41.   J.V.P. குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு -1949 ஏப்ரல் 1.

42.   ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1952 அக்டோபர் 19 இல் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் - பொட்டி ஸ்ரீராமுலு.

43.   இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 குறிப்பிடுவது :

          1.    புதிய மாநிலத்தை உருவாக்கலாம்.

          2.    எந்த மாநிலத்தின் நிலப் பகுதியையும் அதிகரிக்கலாம்.

          3.    எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் குறைக்கலாம்.

          4.    எந்த மாநிலத்தில் எல்லையையும் மாற்றியமைக்கலாம்.

44.   மாநில மறுசீரமைப்பு ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது- பசல் அலி.

உறுப்பினர் - கே.எம். பணிக்கர் , எச்.என். குன்ஸ்ரூ.

45.   மாநில மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1956.

46.   1960 மே- மகாராஷ்டிராவில் இருந்து எந்த மாநிலம் உருவாக்கப்பட்டது -குஜராத்.

47.   இந்திய தேசிய காங்கிரசால் எந்த ஆண்டு மொழிவாரி மாகாணப் சீரமைப்பு அமைக்கப்பட்டது -1920.

48.   இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி - ஜவகர்லால் நேரு.

49.   எந்த ஆண்டு சீனா ஜப்பானிய காலனிய விரிவாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது-1949.

50.   சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1 இல் முதன் முதலாக அங்கீகரித்த நாடு- இந்தியா.

51.   எந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீது இருந்த உரிமையை அங்கீகரித்தது -1954.

52.   பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு -1955.

53.   எந்த ஆண்டு சீன அரசாங்கம் பௌளத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியதால், பெளத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்-1959.

54.   லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்தியப் படை மீது சீனா தாக்குதல் நடத்திய ஆண்டு -1959.

55.   1960 ஏப்ரல் சூ - யென் - லாய் டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார் -

56.   இந்திய சீனா போர் ஏற்பட்ட ஆண்டு -1962.

57.   ஆசிய உறவுகளுக்கான மாநாடு:

          1.    டெல்லி1947.

          2.    இந்தோனேஷியா1948.

          3.    கொழும்பு - 1954.

58.   ஆப்பிரிக்க - ஆசிய மாநாடு - இந்தோனேஷியா -1955.

59.   ஜவகர்லால் நேரு, எகிப்து அதிபர் நாசர், யூகோஸ்லாவியா வின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து 1961 இல் அணுசக்தி ஆயுத குறைப்பு மற்றும் சமாதானைத்திற்கான அழைப்பு விடுத்தார்.

60.   ஜேவிபி குழு -  1948.

61.   சர் சிரில் ராட்கிளிஃப் - எல்லை வரையறை ஆணையம்

62.   பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம்

63.   நேரு குழு அறிக்கை - 1928.

64.   சீன மக்கள் குடியரசு -1950 ஜனவரி -1

65.   பாண்டுங் மாநாடு - 1955 ஏப்ரல் .

66.   ஆசிய உறவுகள் மாநாடு -1947 மார்ச் .

67.   அணிசேரா இயக்கத்தின் தோற்றம் -பெல்கிரேடு.

68.   ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் -பட்டாபி சீதாராமையா.

69.   1946 அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் -ஜவஹர்லால் நேரு.

70.   பி. ஆர் அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது - பம்பாய்.