PAGE NO : 111 12TH STD இந்தியாவில் கூட்டாட்சி TOTAL QUESTION :75
1.
உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு" எந்தநாட்டில் உருவானது -அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி கூட்டாட்சி முறையை வழங்குகிறது-பகுதி- VI.
3. எந்த அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப்பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன - பகுதி VII.
4. இந்திய கூட்டாட்சியின் தன்மைகள்:
1. எழுதப்பட்ட அரசியலமைப்பு.
2. அரசியலமைப்பு உயர்வு.
3. அதிகாரப் பகிர்வு.
4. ஈரவை நாடாளுமன்றம்.
5. நெகிழா அரசியலமைப்பு.
6. சுதந்திர நீதித்துறை.
5. மாநில உரிமைகளின், நலன்களின் பாதுகாவலனாக செயல்படுவது-மாநிலங்களவை.
6. அரசியலமைப்பு திருத்தச்சட்டம்"
எந்த பகுதியில் உள்ளது - பகுதி - ХX சரத்து - 368.
7. மத்திய மாநில உரிமைகளுக்கு இடையே முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் அதனை தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றது- உச்சநீதிமன்றம்.
8. சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பின் பகுதிகளை மாற்ற முடிந்தால் அந்த அரசமைப்புக்கு -நெகிழும் அரசமைப்பு - என்பது பெயர்- (எ.கா. - இங்கிலாந்து)
9. சிறப்பு அரசியல் சாசன திருத்த முறை அல்லது அறுதிப் பெரும்பான்மை உள்ள அரசமைப்பிற்கு - நெகிழா அரசமைப்பு - என்று பெயர்.
10. சாதாரண சட்டங்கள் மூலமாக மாநிலங்களின் பெயர்களையும் நிலப்பரப்புகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றது - நாடாளுமன்றம். (சரத்து 3 , 4)
11. தமிழ்நாட்டின் மாநிலங்களவையில் உள்ள இடங்கள்- 18.
12. எந்த சரத்தின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும் - 249.
13. அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் பெற்றது - மாநிலங்களவை.
14. பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் நமது அரசியலமைப்பில் எந்த அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன- மத்திய அரசு.
15. அரசியலமைப்பின் பகுதி
XVIII எதைப் பற்றிக் கூறுகிறது - அவசரகால சட்டங்கள்.
352.356.360.
16. CAG எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் எந்த சரத்தின் படி தேசிய மற்றும் மாநில அளவிலான தணிக்கை அதிகாரத்தை பெற்றுள்ளார் - 148.
17. இந்தியா ஒரு பாதியளவு கூட்டாட்சி முறையான அரசாங்கம் உள்ள நாடாகும். இந்தியா ஒரு வலுவில்லாத கூட்டாட்சி தன்மைகள் உள்ள ஒற்றையாட்சி நாடாகும் என்று கூறியவர்- பேராசிரியர் வேர்.
18. கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மை எது - அதிகாரப்பகிர்வு.
19. மத்திய பட்டியலில் உள்ள முக்கியத் துறைகள் : 100 - துறைகள், (ஒன்றியப் பட்டியல்)
1. பாதுகாப்பு.
2. வங்கித்துறை.
3. நாணயம்.
4. வெளியுறவுத்துறை.
20. மாநிலப் பட்டியலில் முக்கிய துறைகள் : 59.
1. சட்ட ஒழுங்கு .
2. பொது சுகாதாரம்.
3. சுயாட்சி அமைப்புகள்.
4. விவசாயம்
5. வனங்கள்.
21. பொது பட்டியில் உள்ள முக்கியத் துறைகள்
: 52.
1. கல்வி.
2. திருமணம்.
3. குடிமைச் சட்டம்.
22. எந்த சரத்தின் கீழ் புதிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு வழங்கப்பட்டுள்ளது-312. ( 2/3பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன்).
23. இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டம் 1773- கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது.
24. அவசர நெருக்கடிநிலை : பகுதி - 18.
1. தேசிய நெருக்கடி - சரத்து - 352.
2. மாநில நெருக்கடி - சரத்து - 356.
3. நிதி நெருக்கடி - சரத்து
-360.
25. கல்வி இரண்டாவது பட்டியலில் இருந்து மூன்றாவது பட்டியலுக்கு எந்த சட்ட திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டது - 42 வது திருத்தம் - 1976.
26. அரசியலமைப்பின் உறுப்பு
356 - யை தேவையற்ற வார்த்தை என்று வர்ணித்தவர் -அம்பேத்கர்.
27. இந்திய கூட்டாட்சியை"
கூட்டுறவு கூட்டாட்சி"
என விவரித்தவர் - கிரான்வில் ஆஸ்டின்.
28. மத்திய அரசாங்கம் சர்க்காரியா குழுவை எந்த ஆண்டு அமைத்தது -1983.
(247 பரிந்துரைகளை சமர்ப்பித்தது ) (மத்திய மாநில உறவு பற்றிய குழு)
29. தமிழக அரசால் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1969. (மத்திய மாநில உறவு பற்றிய குழு)
30. நமது நாட்டின் நிர்வாக சீர்திருத்தாங்களுக்காக இதுவரையில் இரண்டு நிர்வாக சீர்திருத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அவை :
1. 1966 - மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
2. 2005 - வீரப்ப மெளலி தலைமையில் அமைக்கப்பட்டது.
31. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் சரத்து 262ன் படி நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1956.
32. எந்த ஆண்டு வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது -1971. (ஆரம்பத்தில் ஐந்து மண்டல குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. தற்போது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன).
33. எல்லா மண்டல குழுக்களின் பொது தலைவராக உள்ளவர்- மத்திய உள்துறை அமைச்சர்.
34. அரசியலமைப்பில் எந்த உறுப்பு குடியரசுத்தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறுகின்றது - சரத்து 263.
35. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு முறை குடியரசுத் தலைவர் அமைப்பார் - 5 . (இதுவரை 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன)
36. மத்திய மாநில நிதி பகிர்வில் வரி வருமான பகிர்வு எத்தனை வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது- 5 .
37. மூன்று பட்டியல்களில் உள்ள அதிகாரங்கள் இந்திய அரசாங்கம் சட்டம் - 1935 யை பின்பற்றுகிறது.
38. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தில் மத்திய - மாநில அரசுகளுக்குஇடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் எந்த அரசாங்கம் இயற்றிய சட்டம் செல்லுபடியாகும்- மத்திய அரசு இயற்றிய சட்டம் செல்லும்.
39. இந்திய அரசமைப்பு நீதித்துறையில் கூட்டாட்சி முறையை வழங்கவில்லை. நீதித்துறை ஒருங்கிணைந்த துறையாக உள்ளது.
40. மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் கிடையாது. தேசிய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது.
41. அதிகாரப்பகிர்வு - மத்திய-மாநில உறவுகளில் அச்சாணியாக உள்ளது.
42. இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன்முதலாக கோரியது எது -நேரு அறிக்கை.
43. அரசமைப்பின் சரத்து 262 எவ்வகையான சிக்கல்கள் சம்பந்தப்பட்டது- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்கள்.
44. மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வு மூன்று தளங்களில் காணப்படுகிறது அவை
:
1. சட்டமன்ற அதிகாரப்பகிர்வு
2. ஆட்சித்துறை அதிகாரப்பகிர்வு
3. நிதி அதிகாரப் பகிர்வு
45. இராஜமன்னார் குழு- 1969.
46. சர்க்காரியா குழு- 1983.
47. வெங்கட செல்லையா குழு - 2000.
48. மதன் மோகன் புன்ச்சி குழு - 2007.
49. இந்திய ஆட்சிப் பணி போன்ற அனைத்து இந்திய பணிகளை நீக்குவதற்கு பரிந்துரைத்த குழு எது - இராஜமன்னார் குழு.
50. உச்சநீதிமன்றம் எஸ். ஆர். பொம்மை வழக்கில் தீர்ப்பு வழங்க ஆண்டு - 1994 .(கர்நாடகாவின் பதினோராவது முதல்வர்)
51. விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு - ஐரோப்பிய யூனியன்.
52. மாநிலங்களில் இரட்டையாட்சி அறிமுகம் - 1919.
53. மாநிலங்களில் சுயாட்சி வழங்கிய சட்டம் - 1935.
54. நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1928.
55. பட்டியல் பற்றிய அட்டவணை- 7வது அட்டவணை.
56. எந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட்டாட்சியை உடைக்க முடியாத மாநிலங்களால் உருவாக்கப்பட்ட உடைக்க முடியாத நாடு" என்று கூறியது –அமெரிக்கா.
57. சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் கூட்டாட்சி முறையில் அங்கம் இல்லை.
58. தேர்தல் ஆணையம் 73 வது 74வது அரசியல் சாசன திருத்த சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துகிறது.
59. இந்தியாவின் கூட்டாட்சி" தனித்துவமானது"(சூய் ஜென்ரிஸ் - Sui eneris) என்று வர்ணித்தவர்- பேராசிரியர் அலெக்சாண்டராவிக்ஸ் .
60. சுங்கவரி - மத்திய அரசு.
61. விற்பனை வரி - மாநில அரசு.
62. முத்திரை வரி, கலால் வரி - மத்திய அரசால் விதிக்கப்பட்டு , மாநில அரசு வசூலித்து பயன்படுத்திக்கொள்கிறது.
63. செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி . மத்திய அரசாங்கம் விதித்து வசூலித்து , மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகிறது.
64. நிதிக்குழு அமைப்பைப் பற்றி கூறும் சரத்து - 280. (1 -தலைவர் + 4 உறுப்பினர்)
65. சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி 1990 களில் மாநிலங்களுக்கு இடையே குழு தோற்றுவிக்கப்பட்டது .
66. மாநில மறுசீரமைப்பு குழு 1956 சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன.
67. மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பை தோற்றவித்த ஆண்டு - 2015. தலைவர் – பிரதமர்.
68. காவிரி நதிநீர் நடுவர் மன்றம் எந்த ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது -1991. (2007 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது).
69. காவிரி நீர் பங்கீடு- 2007 உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
1. தமிழ்நாடு - 404.25 டி.எம்.சி (எல்லைப்பகுதியில் 177.25)
2. கர்நாடகம் - 284.25 டி.எம்.சி.
3. கேரளா - 30 டி.எம்.சி.
4. புதுச்சேரி -7 டி.எம்.சி.
70. சர்க்காரியா குழு- மத்திய அரசாங்கம்.
71. ராஜமன்னார் குழு - தமிழ்நாடு அரசாங்கம்.
72. அனந்தபூர் சாஹிப் தீர்மானம் - அகாளிதளம் .(பஞ்சாப்).
73. பொம்மை தீர்ப்பு - உச்சநீதிமன்றம்.
74. நாராயணராவ் வெங்கடா செல்லையா தலைமையில் ஒரு குழுவை எந்த அரசாங்கம் அமைத்தது - அடல் பிகாரி வாஜ்பாய்.
75.
பஞ்சாப் மாநிலத்தின் மாநில கட்சியான அகாலிதளம் எந்த இடத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை உருவாக்கியது - அனந்தபூர் சாஹிப்.
0 Comments
THANK FOR VISIT