6TH- STD - இயல்-1
1.
இன்பத்தமிழ் - பாடல் ஆசிரியர் - பாரதிதாசன்.
2.
தமிழுக்கும் அமுதென்றுபேர் பாடல் ஆசிரியர்- பாரதிதாசன்.
3.
புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
4.
பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
5. பாரதிதாசன் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
6. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன். என்று மாற்றிக் கொண்டவர் - கனக சுப்புரத்தினம்
7. தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்- பாரதிதாசன்
8.
தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல் எழுதியவர் - காசி ஆனந்தன்.
9.
தமிழ் கும்மி என்னும் பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
10.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
11.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்.
12.
பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்- பாவலரேறு.
13.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு ,கொய்யாக்கனி ,நூறாசிரியம் , பாவியக்கொத்து.
14.
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் : தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
15. தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.
16. கனிச்சாறு நூலின் ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்.
17. மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் – பெருஞ்சித்திரனார்.
18. தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்.
19. திணை எத்தனை வகைப்படும் - இரண்டு
20. தமிழின் இலக்கண நூல் – தொல்காப்பியம் , நன்னூல்.
21. மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்க - மரம் , துகள் , விலங்கு, நண்டு.
22. வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து.
23. "தமிழ்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் எது – தொல்காப்பியம்.
24. பாகற்காய்- பிரித்து எழுதுக - பாகு+ அல் +காய்.
25. இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் - சிவன்.
26. கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு – மூன்றரை.
27. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கியஇதுநீ கருதினை ஆயின்" - என்ற வரி இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரத்தின் காண்டம் - வஞ்சிக் காண்டம்.
28. தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை – 216.
29. தேடுபொறி - என்பதற்கிணையான ஆங்கிலச் சொல் - Search engine.
30. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல் – நற்றிணை.
31. "சீரிளமை " என்னும் சொல்லை பிரித்து எழுதுக - சீர் + இளமை.
32. தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார் – தொல்காப்பியர்.
33. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று கூறும் நூல் எது – சிலப்பதிகாரம்.
34. அஃறிணை - பொருள் தருக - உயர்வு அல்லாத திணை.
35. தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – சிலப்பதிகாரம்.
36. " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார் – பாரதியார்.
37. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து – உயிர்மெய்.
38. செம்பயிர் - என்னும் சொல்லை பிரித்து எழுதுக - செம்மை + பயிர்.
39. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும் என்று பாடியவர் - காசி ஆனந்தன்.
40. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது - அ,எ, ஒ,ய.
41. "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" - என்று பாடியவர் – பாரதியார்.
42. பாரதிதாசனின் சிறப்புப் பெயர் – பாவேந்தர்,புரட்சிக்கவி.
43. தமிழ்+ எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் – தமிழெங்கள்.
44. பாரதிதாசன் யாருடைய கவிதைகளின் மீது கொண்ட பற்றால் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் – பாரதியார்.
45. "தமிழன்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – தேவாரம்.
46. பாரதிதாசனின் இயற்பெயர் –சுப்புரத்தினம்.
47. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளது- வலஞ்சுழி எழுத்துகளாகவே.
48. வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ , ண, ஞ.
49. இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ.
50. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - இரட்டைக் காப்பியம்.
51. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்.
52. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
53. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம்.
54. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - தொல்காப்பியம் .
55. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார் நாற்பது.
56. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – பதிற்றுப்பத்து.
57. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் – திருவள்ளுவமாலை.
58. கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் – நற்றிணை.
59. தமிழில் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5.
60. மெய் என்பது பொருள் - உடம்பு
61. தமிழில் உள்ள உயிர் குறில் எழுத்துகள் - ஐந்து
62. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் – ஏழு
63. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை - 216
64. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2
65. கால அளவை குறிப்பது - மாத்திரை
66. மெய் எழுத்துக்களை ஒலிக்க ஆகும் கால அளவு - 1/2 மாத்திரை
67. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
68. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
69. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு -2 மாத்திரை
70. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் – பாரதியார்.
71. "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - க
72. "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - உ
73. ''3' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ங
74. ''4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ச
75. ''5" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து- ரு
76. "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - சு
77. "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - எ
78. ''8' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - அ
79. "9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - கூ
80. "10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - க0
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
க |
உ |
ங |
ச |
ரு |
சு |
எ |
அ |
கூ |
க0 |
81.
பொருத்துக
1. ஆழிப்பெருக்கு - கடல் கோள்
2. மேதினி - உலகம்
3. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
4. உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை
82. பொருத்துக
1. வலஞ்சுழி - Clock wise
2. இடஞ்சுழி - Anti-Clockwise
3. இணையம் - Internet
4. தேடுபொறி - Search
engine
5. குரல்
தேடல்
- Voice search
83. பொருத்துக:
1. இலக்கண நூல் - தொல்காப்பியம், நன்னூல்
2. சங்க இலக்கியம் - எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு
3. அற நூல் - திருக்குறள், நாலடியார்
4. காப்பியம் - சிலப்பதிகாரம் ,மணிமேகலை
84. பொருத்துக:
1. நிருமித்த - உருவாக்கிய
2. சமூகம் - மக்கள் குழு
3. விளைவு - வளர்ச்சி
4. அசதி - சோர்வு
85. பொருத்துக:
1. கமுகு (பாக்கு) - கூந்தல்
2. சப்பாத்திக்கள்ளி - மடல்
3. பலா - இலை
4. நாணல் - தோகை
5. கோரை - புல்
86. பொருத்துக:
1. விளைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3. இளமைக்கு - பால்
4. புலவர்க்கு – வேல்
0 Comments
THANK FOR VISIT