6TH- STD – இயல் - 3
1.
அகரவரிசையில் அறிவுரைகளை கூறும் இலக்கியம் – ஆத்திச்சூடி
2.
ஆத்திசூடியை இயற்றியவர் - ஒளவையார்
3.
"புதிய ஆத்திச்சூடியை" இயற்றியவர் - பாரதியார்
4.
அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர் - நெல்லை சு. முத்து.
5.
"அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர் - நெல்லை சு. முத்து.
6.
ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர் - நெல்லை சு. முத்து.
7.
நெல்லை சு.முத்து எங்கு பணியாற்றினார் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்,சதீஷ் தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம்.
8.
“இயன்றவரை” என்ற சொல்லின் பொருள் - முடிந்தவரை
9.
“ஒருமித்த” என்ற சொல்லின் பொருள் - ஒன்று பட்டு
10.
“ஔடதம்” என்ற சொல்லின் பொருள் - மருந்து
11.
உடல் நோய்க்கு தேவை - ஒளடதம்
12.
'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கண்டு + அறி
13.
'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஓய்வு + அற
14.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- ஏனென்று
15.
ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் –
ஒளடதமாம்
16.
"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்" என்ற பாடலின் ஆசிரியர் - பாரதியார்
17.
அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
18.
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஆழம் + கடல்
19.
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - விண் + வெளி
20.
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- நீலவான்
21.
இல்லாது +இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- இல்லாதியங்கும்
22.
தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை சு. முத்துவை பாரட்டியவர்-அப்துல் கலாம்.
23.
அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் - திருக்குறள்
24.
'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவர்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்' என்ற குறள் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது - அப்துல் கலாம்
25.
அப்துல் கலாம் அவர்களுக்கு லிலியன் வாட்சன் எழுதிய Lights from many lamps நூல் மிகவும் பிடிக்கும்
26.
அப்துல்கலாம் கார்பன் இலையை கொண்டு எத்தனை கிராம் எடையுள்ள செயற்கை கால்களை உருவாக்கினார் - 300 கிராம்.
27.
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!-என்று கூறியவர்- அறிவுமதி.
28.
உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் - டீப் புளூ.
29.
சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் எந்த மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டார் - டீப் புளூ.
30.
காரெல் கபெக் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர் – செக்.
31.
'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கண்டு + அறி
32.
'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- ஓய்வு + அற
33.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- ஏனென்று
34.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- ஒளடதமாம்
35.
மொழி என்பதன் பொருள் - சொல்.
36.
தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு - செயற்கை நுண்ணறிவு
37.
நின்றிருந்த ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நின்று + இருந்த
38.
'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- அ + உருவம்.
39.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- மருத்துவத்துறை
40.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- செயலிழக்க
41.
"விளக்குகள் பல தந்த ஒளி" என்ற நூலை எழுதியவர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
42.
காரெல் கபெக் என்பவர்- நாடக ஆசிரியர்.
43.
ரோபோ என்ற சொல்லின் பொருளுக்கு எதிர்ச்சொல் - சுதந்திரம்.
44.
1920 ல் காரல் கபெக் ஒரு நாடகம் எழுதினார் அதில் ரோபோ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்
45.
உடல் நோய்க்கு தேவை – ஔடதம்.
46.
நொ - ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் – துன்பம்.
47.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் - ஆய்த எழுத்து,மெய்யெழுத்து.
48.
"ரோபோ" என்னும் சொல்லின் பொருள் –அடிமை.
49.
"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்'' என்ற பாடலின் ஆசிரியர் - பாரதியார்.
50.
அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
51.
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- ஆழம் + கடல்
52.
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- விண் + வெளி
53.
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- நீலவான்
54.
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இல்லாதியங்கும்
55.
"சோபியா"வுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய பட்டம் - புதுமைகளின் வெற்றியாளர்.
56.
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் - தானியங்கி .
57.
தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும் என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
58.
உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு - சவுதி அரேபியா.
59.
'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியுள்ளது- ஐக்கிய நாடுகள் சபை
60.
எந்த ஆண்டு நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ் புரோவ் மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் - 1997 மே மாதம்.
61.
ஒருமித்து என்ற சொல்லின் பொருள் – ஒன்றுபட்டு.
62.
'ஓய்வற' என்பதை பிரித்தெழுதுக - ஓய்வு+அற.
63.
மனிதன் எப்போதும் உண்மையையே – உரைக்கின்றான்.
64.
ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் - காரல் கபேக்.
65.
முதன் முதலாக எந்திர மனிதனுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு - சவுதி அரேபியா.
66.
தானே இயங்கும் இயந்திரம் – தானியங்கி.
67.
நுண்ணறிவு என்பதற்கு இணையான கலைச்சொல் – Intelligent.
68.
டீப் புளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் - ஐ. பி. எம்.
69.
சர்சிவி ராமனுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி - கடல்நீர் ஏன் நீல நிறமாக. காட்சியளிக்கிறது?
70.
1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்- சர்.சி.வி. இராமன்
71.
இராமன் விளைவை கண்டறிந்தவர் - சர்சிவி ராமன்.
72.
தேசிய அறிவியல் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது - பிப்ரவரி 28.
73.
மெய் எழுத்துக்கள் சொல்லின் - முதலில் வராது.
74.
மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் - இடையில் வரும்.
75.
ஆயுத எழுத்து சொல்லின் - இடையில் மட்டுமே வரும்.
76.
உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் - இடையில் வரும்.
77.
உயிர் மெய் எழுத்துகளில் 'ங' எழுத்து சொல்லின் இறுதியில் வராது
78.
அளபெடை எழுத்துக்களில் உயிர் எழுத்து சொல்லின் - இறுதியில் வரும்.
79.
அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின்-இடையில் வரும்.
80.
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இருக்கின்றது -முதல் எழுத்துகள்.
81.
வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர் – வாணிதாசன்.
82.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார்.
83.
சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
84.
அஃறிணை (அல் + திணை) = உயர்வு அல்லாத திணை
85.
இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்.
86.
பொருத்துக :
1. எண்ணத்தை வெளிப்படுத்துவது - இயல் தமிழ்
2. உள்ளத்தை மகிழ்விப்பது - இசைத்தமிழ்
3. உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுவது- நாடகத்தமிழ்
87.
பொருத்துக :
1. செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence
2. செயற்கைக் கோள் - Satellite
3. மீத்திறன் கணினி - Super Computer
4. நுண்ணறிவு - Intelligence
88.
எதிர் சொற்களை பொருத்துக.
1. அணுகி - விலகு
2. ஐயம் - தெளிவு
3. ஊக்கம் - சோர்வு
4. உண்மை - பொய்மை
0 Comments
THANK FOR VISIT