6TH- STD -இயல்-9
1. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் - புத்தர்
2. ஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன- பிம்பிசாரர்
3. ஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர் - கவிமணி தேசிய விநாயகனார்
4. “நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிலாம்" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - ஆசியஜோதி
5. தேசிய விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்- 20
6. கவிமணி தேசிய விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்- 36
7. தேசிய விநாயகனார் பெற்ற பட்டம் - கவிமணி
8. ஆசிய ஜோதி ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது
9. ஆசியஜோதி என்னும் நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது - புத்தர்
10. நேர்மையான வாழ்வை வாழ்பவர் - எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
11. ஒருவர் செய்யக் கூடாது - தீவினை
12. எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - எளிது + ஆகும்
13. பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பாலை + எல்லாம்
14. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- இன்னுயிர்.
15. மலை - எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- மலையெலாம்
16. ஆசியஜோதி என்ற நூல் ஆங்கிலத்தில் யாரால் எழுதப்பட்டது - எட்வின் அர்னால்டு
17. “தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
18. வள்ளலார் சத்திய தருமச்சாலையை தொடங்கிய இடம் - வடலூர்
19. "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறியவர் – வள்ளலார்
20. அன்னை தெராசாவிற்கு க்கான நோபல் பரிசு' கிடைத்தது - அமைதி
21. அன்னை தெராசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - கைலாஷ் சத்யார்த்தி
22. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர் - அன்னை தெரசா
23. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் - குழந்தைகளைப் பாதுகாப்போம்
24. கைலாஷ் சத்யார்த்தி முப்பது ஆண்டுகளில் எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார் - 86,000
25. கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார் - 80,000
26. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது " என்று கூறியவர்-கைலாஷ் சத்யார்த்தி
27. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்- மனித நேயம்
28. தம்பொருளைக் கவர்ந்தவரிடம் காட்டியவர் வள்ளலார்- அன்பு
29. அணி என்பதற்கு பொருள் - அழகு
30. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது அணி - இயல்பு நவிற்சி அணி
31. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் - தன்மை நவிற்சி அணி
32. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது - உயர்வு நவிற்சி அணி
33. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலை இயற்றியவர் - கவிமணி
34. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - இயல்பு நவிற்சி அணி
35. "ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா" - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - உயர்வு நவிற்சி அணி
36. பொருத்துக.
1. அஞ்சினர்- பயந்தனர்
2. ஆகாது - முடியாது
3. கருணை - இரக்கம்
4. பார் - உலகம்
5. வீழும் - விழும்
37. பொருத்துக.
1. நீள்நிலம் - பரந்த உலகம்
2. முற்றும் - முழுவதும்
3. கும்பி - வயிறு
4. மாரி - மழை
5. பூதலம் - பூமி
38. பொருத்துக.
1. வள்ளலார்- பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி - குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா- நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
39. பொருத்துக. கலைச்சொல்:
1. மனிதநேயம்- Humanity
2. கருணை- Mercy
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - Transplantation
4. நோபல் பரிசு- Nobel prize
5. சரக்குந்து- Lorry
0 Comments
THANK FOR VISIT