திருமணபந்தம் முறிவைக் கொடுத்திடும் ஜாதக அமைப்பு. 7ம் இடத்தில் சனி?
நான் நானாகவோ,
நீ நீயாகவோ இருப்பதல்ல, திருமண உறவு. எனக்குள் நீயும், உனக்குள் நானுமாக இருப்பதே திருமண
உறவு.
1.
இலக்கினத்துக்கு
ஏழாமிடம் கணவனையோ, அல்லது மனைவியையோ குறிக்கும். இந்த ஏழாமிடத்தில் சனி எனும் இருள்கிரகம்
நிற்கும்போது, அந்த முப்பது பாகை கொண்ட ராசிபகுதியே இருள் சூழ்ந்து நிற்கும்.
2.
ஆணின்
ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ஏழாமிடத்தில் சனி நின்றால், அவர்களுக்குள் இணங்கி
நடக்கவேண்டும் என்கிற மனோபாவமே இருக்காது.
3.
சட்டமுறையானக்
கட்டுப்பாடு, கொடுக்கல், வாங்கல், வழக்கு, இருவர் சண்டை , அபராதம்.விவாகப்பிரிவினை,
எதிரிக்கு அபாயம் விளைவித்தல், ஆகியவைகளை, இந்த இடத்திலிருந்து அறியலாம்.
4.
எவருடைய
ஜாதகத்திலாவது இலக்கினத்துக்கோ, இராசிக்கோ அல்லது காலபுருசனுக்கு ஏழாமிடமான துலாமிலோ,
சனியிருக்கப்பிறந்தவர் திருமண வாழ்வு சிறப்பாக இருக்க வாய்ப்பு குறைவுதான்.
5.
முழுச்சுபக்கிரகமான
குருவின் பார்வை, சனிக்குக் கிடைக்கவில்லையென்றால் ,அந்த ஜாதகரின் திருமண வாழ்வு, சீக்கிரமே
நீதிமன்றங்களில் முறையிட்டு முறிக்கப்படுகிறது.
6.
தன்கொடிய
பார்வையால் ஏழாமிடத்தை சனி கண்டாலும், அப்போதும் திருமண உறவு, உள்ளூர் கிராமப் பஞ்சாயத்திலோ,
காவல் நிலையத்திலோ முறிக்கப்படுகிறது.
7.
இந்த
சனிக்கிரகம் ஆண் அலியாவான். ஆண் ஜாதகத்தில் ஏழாமிடமான பெண் ராசியில் அமர, அச் சாதகர்க்கு
பெண்தன்மைத் தந்துவிடுவான். இவனே பெண்ஜாதகத்தில் ஏழாமிடமான ஆண்ராசியில் அமர,ஆண் தன்மையைத்
தந்து விடுவான்.
8.
போக
உணர்வை மூளையிலிருந்து தூண்டும் நரம்புக்காரகனே
சனி தான். ஏழில் சனி அமர, போகசிந்தனையும் அற்றுப்போகும்.
7ம் இடத்தில் சனி? .
1. பொதுவாகவே
ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது.
2. எந்த லக்னத்திற்கு
7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
3. ரிஷப லக்னத்தை எடுத்துக்
கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய
நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத்
தரும்.ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி
ஆவார். இதன் காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி
7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச்
சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.
4. மிதுனம், கன்னி ஆகிய
லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும்.
5. கடகம், சிம்ம லக்னத்திற்கு
7ல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.
6. மேஷ லக்னத்திற்கு 7ல் சனி
இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள்,
சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
7. பொதுவாக 7ல் சனி இருப்பவர்களுக்கு
சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல
தசை நடந்தால் சிக்கல் குறையும்.
8. எந்த லக்னமாக
இருந்தாலும் 7ல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது.
குறிப்பாக மேஷத்திற்கு
அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
9. 7ல் சனி
இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு
பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய
கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.
10. பொதுவாக
7ல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில்
வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.
11. 7ல் சனி
- ஆண்மை குறைபாடு , காமத்தில் இயற்கைக்கு மாறான வேட்கை ஆகியவற்றை தரும்.
12. 7ல் சனி
புணர்பூ தோசம் என்பதால் திருமணம் தடைகள் தாமதங்கள் ஏற்படும். இல்வாழ்வில் திருப்தியற்ற
நிலை ஏற்படும்.
13. 7ல் சனி
- திருமண தடை, தாமத திருமணம், பொருந்தாத வாழ்க்கை துணை, மகிழ்ச்சியற்ற இல்வாழ்க்கை
இவற்றை தருவதே.
14. 7ல் சனி
அஸ்தமனம் – மிகவும் கொடுமை. ஆயுள் பலமில்லை. வீட்டைப்பற்றி நினைக்கவே அஞ்சுவார்கள்.
15. சனி –
சூரியனுக்கு 7ல் சனி – இருதயநோய்
16. 7ல் சனி
1ல் சூரியன் – களத்திரநாசம்
17. கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு
மகரத்தில் அமரும் சனிபகவான் சனி இங்கு ஆட்சி
பெற்று அமர்ந்தாலும் கூட சச யோகம் அமையப்பெற்று இருந்தாலும் களத்திர பாவகத்தை 100 சதவிகிதம்
கெடுத்து விடுவார்.
18. சிம்ம லக்கின அமைப்பை
சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில் களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் அமரும்
சனிபகவான் சனி இங்கு ஆட்சி பெற்று
அமர்ந்தாலும் கூட சச யோகம் அமையப்பெற்று இருந்தாலும் களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார்.
19. காலத்திரஸ்தானமான
7ம் இடத்தில சனி
வக்கிரம் அடைந்து காணப்பட்டால் - திருமண தாமதம் , தாழ்வு மனப்பான்மை
, இல்லற வாழ்வில் திருப்தி அற்ற நிலையை தரும்
20. ஜாதகரின்
குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
21. ரிஷப லக்னத்தை
எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். விருச்சிகத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன.
அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.ஏனென்றால் அனுஷம்
சனியின் நட்சத்திரமாகும்.
22. ரிஷப லகனத்திற்கு
யோகாதிபதியும் சனி ஆவார். ஆனால் ரிஷப லக்கினத்திற்கு 9ம் அதிபதியான சனி பகவான் பாதகாதிபதி
ஆவார் . அவர் 7 ம் இடத்தில அமர்ந்தாள் இல்லவாழ்வு சுரப்பதில்லை
23. மேஷ லக்னத்திற்கு
7இல் சனி உச்சம் பெற்று இருந்தால் சச யோகத்தை தந்தாலும் வாழ்க்கைத் துணை வழியில் கெடு
பலன்கள் ஏற்படும். மேஷ லக்கினத்திற்கு சனி பகவான் பாதகாதி ஆவர். அவர் களத்திர ஸ்தானத்தில்
உச்சம் பெற்று அமைந்தால் , இல்லறவாழ்வே போராட்டமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால்
அவமானங்கள், , அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
24. ஜாதகத்தில்
மேஷ லக்னத்திற்கு 7 ம் இடமான களத்திர ஸ்தானத்தில் பாவ கிரகமான சனி கிரகம் இருப்பவர்கள்
இந்த பாதாள சனீஸ்வரரை வழிபடுவது சனிகிரகத்தினால் ஏற்படும் கெடுதல்களுக்கு மிகச்சிறந்த
பரிகாரமாகும்.
25. பொதுவாக
களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவான் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் , குடும்ப வாழ்க்கையில்
அதிக இன்னல்களையும் தருவார் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, இது முற்றிலும்
தவறான கண்ணோட்டம் என்பதே கருத்து , உண்மையில்
கடகம் சிம்மம் எனும்
இரண்டு லக்கினத்திற்கு மேற்சொன்ன விதி பொருந்தும்.
26. கடக இலக்கின
ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 32 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால்
28 வயதுக்கு மேல்தான் அமையும் , அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம்
நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின்
திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும்.கடக லக்கினத்திற்கு மகரத்தில்
அமரும் சனிபகவான் களத்திர பாவகத்தை வெகுவாக பாதிக்க செய்வார் என்பது உறுதியாகிறது
.
27. சிம்மலக்கின
அமைப்பை சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில் அமரும் சனிபகவான் சனி இங்கு ஆட்சி பெற்று
அமர்ந்தாலும் கூட களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார், மேற்கண்ட அமைப்பை
பெற்ற சிம்ம இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால்
திருமண வாழ்க்கை 32 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான்
அமையும் .
28. அதுவும்
சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக
குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு
உரியதாக மாறி விடும் , மேற்சொன்ன அமைப்பின் படி கடக சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு
லக்கினத்திற்கு 7ம் பாவகத்தில் அமரும் சனி மட்டுமே திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை
தரும் என்பதே உண்மை .
29. இதிலும்
ஒரு விதி விளக்கு உண்டு கடக சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான
மகரம் மற்றும் கும்பத்தில் , சாய கிரகமான ராகுவோ கேதுவோ அமர்ந்தால் களத்திர பாவகம் 100 சதவிகித
வலிமை பெற்று சிறப்பான நன்மைகளை தந்துகொண்டு
இருக்கும் , இந்த நிலையை பெற்றவர்கள் சனி களத்திர பாவகத்தில் அமர்ந்ததை பற்றி எவ்வித
கவலையும் கொள்ள தேவையில்லை .
30. இங்கே
சாயா கிரகமான ராகு கேது கிரகங்களுக்கு மட்டுமே முழு வலிமை உண்டு களத்திர பாவகத்தில்
அமர்ந்த சனி பகவானால் எவ்வித நன்மை தீமை பலனையும் தர நிலைக்கு தள்ளி விடும் இந்த சாயா
கிரகங்கள் , மேலும் களத்திர பாவக வழியில் இருந்து
100 சதவிகித யோக பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்
என்பது சாயா கிரகங்களினால் உண்டாகும் கூடுதல் யோக பலன்கள் என்றால் அது மிகையாகாது
.
31. கடக இலக்கின
ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான கடகத்தில் அமர்ந்தால் ஜாதகருக்கு 19 வயதில் இருந்து
23 வயதிற்குள் திருமணம் நடந்துவிடும் என்பதும்
, அந்த திருமணத்தின் மூலம் ஜாதகர் வாழ்க்கையில்
மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகதாரியாகவும் , பொருளாதார ரீதியாக
மிகப்பெரிய முன்னேற்றத்தை தருபவராகும் இருப்பார் என்பது கூடுதல் சந்தோஷமான தகவல் .
32. சிம்ம
இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான சிம்மத்தில் அமர்ந்தால் மிகவும் இளம் வயதிலேயே திருமண
வாழ்க்கை மிகவும் சிறப்பாகவோ அல்லது தனது விருப்பபடியோ
நடந்துவிடும் என்பதும் , திருமண வாழ்க்கையின் மூலம் ஜாதகர் அதிக படிப்பினையும் , உலக
வாழ்க்கையின் புரிதல்களையும் , அறிவில் தெளிவையும் பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை
துணை மிகுந்த புத்திசாலியாகவும் , அறிவாற்றல் நிரம்பியவராகவும் , எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடாமல் காப்பற்றும் குணம்
கொண்டவராகவும் இருப்பார் என்பது சிம்மலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு ஒரு சிறந்த வர பிரசாதமாக கருதலாம் .
33. இந்த கடக
சிம்ம லக்கினத்தை தவிர்த்து வேறு எந்த லக்கினம் என்றாலும் லக்கினத்திற்கு 7ம் வீடான
களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவானால் எவ்வித தொந்தரவும் தடையும் இருக்காது என்பதே
உண்மை.அப்படி இருந்து ஜாதகருக்கு திருமணம்
தமத நிலையை தருமாயின் , அந்த ஜாதகரின் களத்திர ஸ்தான அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்க
வேண்டும் என்பதும் , களத்திர ஸ்தானத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்
என்பதே சம்பந்தபட்ட பாவகத்திர்க்கு உண்டான
சரியான பதில் சொல்ல உதவும் என்பதே உண்மை.
7ல் சனி அமர்ந்தாலே தீமை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறானது
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
உதாரண ஜாதகம்-
1.
பெண்ணின் ஜாதகம்.
இலக்கினம் துலாம். இராசி கும்பம். இராசிக்கு ஏழாமிடமான சிம்மத்தில் சனி. ஊதாரித்தனமான
கணவனால், குடும்பத்தில் குழப்பம். இந்த ஜாதகர் அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர். தன் ஊதியத்துடன்
நிம்மதியையும் தொலைத்தவர், குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி, திருமணமுறிவு ஆணையைப்பெற்றவர்.
தன் இரண்டாம் திருமணவாழ்வுக்கு பொருத்தமானவரை தேடி வருகிறார்.
உதாரண ஜாதகம்.
2.
ஆணின் ஜாதகம்.
இலக்கினம் மீனம். இராசி மேடம். இலக்கினத்துக்கு ஏழில் சனி. திருமணம் முடிந்து, தன்
தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர், மீண்டும் கணவனிடம் வரவேயில்லை. அங்கேயே
தங்கிவிட்டார்.
இந்த ஜாதகரால்,
தன் மனைவியை சந்திக்கவே இயலவில்லை. மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். எந்த காரண காரியமின்றி.
இவர் மனைவியும், அவர் மனைவியின் குடும்பத்தினரும் குடும்ப நல நீதிமன்றத்தில், அதிகம்
வரதட்சனை கேட்பதாக வழக்குத்தொடுத்து, ஜாதகரை நீதிமன்ற தண்டனைக்கு உட்படுத்தினார்கள்.
உதாரணம் ஜாதகம்.
3.
ஆணின் ஜாதகம். இலக்கினம் மகரம். இராசி துலாம். இலக்கினத்துக்கு
ஏழில் சனி. திருமணம் முடிந்து, ஓர் இரவு கூட, இருவரும் உறவுகொண்டதில்லை.
இந்த கருத்தை மையமாக
வைத்தே குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திருமணமுறிவுக்கு முன்பாக,
எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இந்த ஜாதகர் போகசுகத்தில் ஈடுபடமுடியாதவர் எனக்கண்டறியப்பட்டு,
நீதிமன்ற வளாகத்திலே அவமானப்படுத்தப்பட்டார்.
இவரோடு வாழ்ந்து
வந்த “எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல” எனப்பாடி வந்த இவர் மனைவி, இந்த ஜாதகரிடமிருந்து
திருமணமுறிவு கிடைத்தவுடன், உடனே மறுமணம் முடித்துக்கொண்டார். ஆனால், ஜாதகர்க்கு இன்னும்
திருமணம் நடக்கவில்லை.
உதாரண ஜாதகம்.
4.
பெண்ணின் ஜாதகம்.
இலக்கினம் துலாம். இராசி கும்பம். இராசிக்கு
ஏழாமிடமான சிம்மத்தில் சனி. தன் கணவனை விபத்தில் பறிகொடுத்துவிட்டு, பரிதவித்து வாழ்ந்து
வருகிறார்.
ஒவ்வொருவரின் ஜாதகத்திலும்
இன்னன்ன கிரகங்கள், இந்தந்த இராசிகளில், இப்படி இப்படித்தான் அமர்ந்திருக்கவேண்டுமென
எவரும் வரம் வாங்கிப்பிறப்பதில்லை. எல்லாருடைய ஜாதகங்களிலும் சாதக, பாதக நிலையில்தான்
கிரகங்கள் அமர்ந்திருக்கும்.
திருமணப்பொருத்தங்கள்
பார்க்கும் ஜோதிட அன்பர்கள் தயவுசெய்து நட்சத்திரப்பொருத்தங்கள் மட்டும் பார்க்காமல்,
கிரகப்பொருத்தங்களும் காணுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மூலநூல்களில்
ஏழில் சனி பற்றிய குறிப்புகள்.
1.
ஏழாம்
வீடு. காரகன் சனி. திருமணப்பிரச்சபைகள், மனைவி, திருமணம் இவைகளைக் கணித்துக் கூறலாம்.
ஜாதகபாரிஜாதம்.
2.
கணவனுக்கோ,
மனைவிக்கோ துன்பம் தருபவராக இருப்பார். சர்வார்த்த சிந்தாமணி.
3.
சட்டமாய்
சனி ஏழில் நிற்கில், தாரம் இரண்டு தப்பாமல் செய்குவான். வீமகவி.
4.
பெண்களால்
அவமானம் அடைவான். பிருகத் ஜாதகம்.
5.
மனைவியே
நட்டம். புலிப்பாணி.
6.
திருமணம்
இரண்டு. பெண்களின் விரோதி. தியாக இராஜ சேகரம்.
8) ஏழாமிடம் சனியினால் பார்க்கப்பட்டால் களத்திர நாசம்.
சாராவளி.
9) ஏழில் சனி. பிற பெண்களிடம் தொடர்பு கொள்வான். சாராவளி.
10) ஒரு பெண்ணின்
ஜாதகத்தில் ஏழில் சனியிருக்க விதவை. கணவனால் கைவிடப்பட்டவள். அதிக தோஷம் உடையவள். அதிக
வஞ்சனை உள்ளவள்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT