7TH- STD -இயல்-4

1.     கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் - கலங்கரை விளக்கம்.

2.     வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடலின் ஆசிரியர்- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

3.     வேயா மாடம் என்பது - சாந்து பூசப்பட்ட மாடம்.

4.     கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்உருத்திரங்கண்ணனார்.

5.     கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டில் இயற்றியுள்ள நூள்- பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை.

6.     பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவர் - தொண்டைமான் இளந்திரையன்.

7.     வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அர வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது - ஆற்றுப்படை இலக்கியம்.

8.     கடலில் துறை அறியாமல் கலங்குவனமரக்கலங்கள்.

9.     உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்க புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ" என்ற பாடல் வரியை இயற்றியவர் - மருதன் இளநாகனார்.

10.   கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்ளரி மருங்கு அறிந்து ஒய்ய" என்ற பாடல் வரியை இயற்றியவர் - மருதன் இளநாகனார்.

11.   உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையதுநாவாய்.

12.   மருதன் இளநாகனார் கலித்தொகையில் உள்ள மருதத்திணையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்- 35.

13.   மருதத்திணை பாடுவதில் வல்லவர் - மருதன் இளநாகனார்.

14.   அகநானூறில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை400.

15.   அகநானூறின் வேறு பெயர்நெடுந்தொகை.

16.   வங்கூழ் சொல்லின் பொருள்காற்று.

17.   மக்கள் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றதுவங்கத்தில்.

18.   புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவதுகடல்.

19.   'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பெருமை + கடல்.

20.   இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்இன்றாகி.

21.   பயணம் எத்தனை வகைப்படும்- 3.

22.   நீர்வழிப்பயணம் எத்தனை வகைப்படும்இரண்டு.

23.   நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் பழமையானதுதொல்காப்பியம்.

24.   கடற்பயணத்தை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிடும் நூல்தொல்காப்பியம்.

25.   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - என்ற வரி இடம்பெற்ற நூல்- திருக்குறள்.

26.   பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டதை விரிவாக விளக்கும் நூல்பட்டினப்பாலை.

27.   'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்' என்ற வரி இடம்பெற்ற நூல்அகநானூறு.

28.   'அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்பதிற்றுப்பத்து.

29.   பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு -சேந்தன் திவாகர நிகண்டு.

30.   தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை -படகு,புணை,தோணி,ஓடம்,மிதவை, தெப்பம்.

31.   தமிழர்கள் கடல் பயணம் மேற்கொள்ள உதவியவைகலம்,வங்கம்,நாவாய்.

32.   பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது -நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகம்.

33.   தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்கம்மியர்.

34.    கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மணிமேகலை.

35.   தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்- வேம்பு,இலுப்பை,புன்னை,நாவல்.

36.   தமிழர்கள் கப்பலின் பக்கங்களுக்கு பொருத்த எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்-தேக்கு, வெண்தேக்கு.

37.   மரத்தின் வெட்டப்பட்ட பகுதி- வெட்டு வாய்.

38.   இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்கண்ணடை.

39.   கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை என்னும் நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்-தச்சுமுழம்.

40.  பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு- யானை, குதிரை, அன்னம்.

41.   தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதனைக் கலந்து பூசினர் - சுண்ணாம்பு ,சணல்,எண்ணெய்.

42.   தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டியுள்ள இத்தாலி நாட்டைச் சேர்ந்த கடற்பயணி- மார்க்கோபோலோ.

43.   மரத்தினாலான ஆணிகள் - தொகுதி .

44.   ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்-12.

45.   தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர்வாக்கர்.

46.   பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது-காற்று.

47.   தமிழர் பயன்படுத்திய பாய்மரக்கப்பல் - பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம்,காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்.

48.   பாய்மரக்கப்பலில் பயன்படும் சில கயிறுகள் - ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு,பளிங்கைக் கயிறு, மூட்டாங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய் கயிறு

49.   பாய்மரக்கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர்என்று கூறும் நூல்பரிபாடல்.

50.   கப்பலின் உறுப்புகள் எவை - எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம்,சுக்கான், நங்கூரம்.

51.   கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம்எரா.

52.   கப்பலுக்கு பயன்படுத்தப்படும் குறுக்கு மரத்தைபருமல்.

53.   கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவிசுக்கான்.

54.   கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவுவதுநங்கூரம்.

55.   சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் - கப்பல் சாத்திரம்.

56.   காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவதுசமுக்கு.

57.   கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர் - மாலுமி , நீகான், மீகாமன்.

58.   'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக' என்னும் புறப்பாடல் அடியை பாடியவர்வெண்ணிக்குயத்தியார்.

59.   கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது- கலங்கரை விளக்கம்.

60.   உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்டதாக உள்ளது- கலங்கரை விளக்கம்.

61.   கலம் என்பதன் பொருள்- கப்பல்.

62.   கரைத்தல் என்பதன் பொருள்அழைத்தல்.

63.   "பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்" என்ற செய்தி இடம்பெற்ற நூல்புறநானூறு.

64.   கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்புறநானூறு.

65.   தமிழர்கள் பயன்படுத்தி திசை அறிந்து கப்பலைச் செலுத்தினர் - திசைக்காட்டு கருவி, விண்மீன்கள்

66.   தமிழர்கள் யை வைத்து புயல், மழை மற்றும் கடல்நீர் பொங்கும் காலநிலைகளை கண்டறிந்தனர்-கோள்களின் நிலை.

67.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு1886.

68.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது. அந்த விந்தை விலங்குகைக் கண்டுபிடித்து அழிப்பதற்கு எங்கிருந்து ஒரு போர்க்கப்பல் புறப்பட்டதுஅமெரிக்கா.

69.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் - 'ப்ராகட்

70.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் நிமிங்கலங்களை வேட்டையாடுவதில் வல்லவர்நெட்.

71.   அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என புகழப்படுபவர் - ஜீல்ஸ் வெர்ன்.

72.   ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்- பிரான்சு.

73.   "பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்" என்ற புதினத்தை எழுதியவர் - ஜீல்ஸ் வெர்ன்.

74.   "எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி என்ற புதினத்தை எழுதியவர் - ஜீல்ஸ் வெர்ன்.

75.   அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றி தமது புதினங்களில் எழுதியவர்- ஜீல்ஸ் வெர்ன்.

76.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர்- ஜீல்ஸ் வெர்ன்.

77.   ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது-சொல்.

78.   சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் -மொழி,பதம், கிளவி.

79.   இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்நான்கு.

80.   எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்இயற்சொற்கள்.

81.   இயற்சொல் எத்தனை வகைப்படும்நான்கு.

82.   கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்- திரிசொற்கள்.

83.   திரிசொல்  - 4 வகையில் வரும்

84.   வங்கம், அம்பி, நாவாய் என்பது எவ்வகைத் திரிச்சொல் - ஒரு பொருள் குறித்த பல திரிச்சொல்.

85.   "இதழ்" என்பது எவ்வகைத் திரிச்சொல்- பல பொருள் குறித்த ஒருதிரிச்சொல்.

86.   வடமொழி தவிர, பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்- திசைச்சொற்கள்.

87.   கேணி என்பதன் பொருளைக்கிணறு.

88.   பெற்றம் என்பதன் பொருளைக் காண்கபசு.

89.   வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்வடசொற்கள்.

90.   வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு - கமலம், விடம் , சக்கரம் , வருடம், மாதம்.

91.   வடச்சொல் எத்தனை வகைப்படும்- இரண்டு.

92.   வடசொல் வகைகள் - தற்சமம், தற்பவம்.

93.   வடச்சொல் வகையில் "தற்சமம்" என்பதற்கு எடுத்துக்காட்டு - கமலம், அலங்காரம்.

94.   வடச்சொல் வகையில்தற்பவம்என்பதற்கு எடுத்துக்காட்டு - இலக்குமி, விடம்.

95.   பல பொருள் தரும் ஒரு சொல் என்பதுதிரிசொல்.

96.   வடமொழி என்று அழைக்கப்படும் மொழிசமஸ்கிருதம்.

97.   நடந்த செயலைக் குறிப்பது குறிக்கும் - இறந்த காலம்.

98.   நடக்கும் செயலைக் குறிப்பது குறிக்கும் - நிகழ்காலம் .

99.   நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது குறிக்கும்எதிர்காலம்.

100.  இறந்த காலத்திற்கு எடுத்துக்காட்டு - பார்த்தான் , ஆடினான் , பறந்தது

101.  நிகழ்காலத்திற்கு எடுத்துக்காட்டு - பார்க்கிறான் , ஆடுகின்றான், பறக்கின்றது.

102.  எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டு - காண்பான், ஆடுவாள், பறக்கும்.

103.  பொருத்துக.

           1.     இயற்சொல் - சோறு

           2.     திரிசொல் - அழுவம்  

           3.     திசைச்சொல் - பெற்றம்

           4.     வடசொல்  - இரத்தம்

104.  பொருத்துக

           1.     கலங்கரை விளக்கம்- Light house

           2.     பெருங்கடல்- Ocean

           3.     கப்பல் தொழில்நுட்பம்- Marine technology

           4.     கடல்வாழ் உயிரினம்- Marine creature

           5.     நீர் மூழ்கிகப்பல்- Submarine

105.  பொருத்துக.

           1.     துறைமுகம் - Harbour

           2.     புயல் - Storm

           3.     மாலுமி - Sailor

           4.     நங்கூரம் - Anchor

           5.     கப்பல் தளம் - Shipyard

106.  பொருத்துக.

           1.     அழுவம், வங்கம்- பெயர்த்திரிசொல்

           2.     இயம்பினான், பயின்றாள் - வினைத்திரிசொல்

           3.     அன்ன, மான- இடைத்திரிசொல்

           4.     கூர், கழி- உரித்திரிசொல்

107.  பொருத்துக.

           1.     மண், பொன் - பெயர் இயற்சொல்

           2.     நடந்தான். வந்தான் - வினை இயற்சொல்

           3.     அவனை, அவனால் - இடை இயற்சொல்

           4.     மாநகர் - உரி இயற்சொல்

108.  பொருத்துக.

           1.     வங்கூழ் - காற்று

           2.     அழுவம் - கடல்

           3.     சாற்றினான் - சொன்னான்

           4.     உறுபயன் - மிகுந்த பயன்

109.  பொருத்துக

           1.     எரா- அடிமரம்

           2.     பருமல்- குறுக்கு மரம்

           3.     மீகாமன்- கப்பலைச் செலுத்துபவர்

           4.     காந்த ஊசி- திசைகாட்டும் கருவி

110.  பொருத்துக.

           1.     உரு- அழகு

           2.   போழ- பிளக்க

           3.     நீகான் - நாவாய் ஓட்டுபவன்

           4.     வங்கூழ்- காற்று

111.  பொருத்துக.

           1.     வங்கம்- கப்பல்

           2.     எல்- பகல்

           3.     கோடு உயர் - கரை உயர்ந்த

           4.     மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்.

112.  பொருத்துக.

           1.     மதலை - தூண்

           2.     ஞெகிழி - தீச்சுடர்

           3.     அழுவம் -கடல்

           4.     சென்னி -உச்சி

           5.     உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு

           6.     கரையும்அழைக்கும்

 

 

https://www.a2ztnpsc.in/