7TH- STD -இயல்-6
1.
கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்கு" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்-தேனரசன்
2.
தேனரசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார் - வானம்பாடி , குயில் ,தென்றல்
3.
யாருடைய கவிதைகளில் சமுதாயச் சிக்கல் எள்ளல் சுவையோடு வெளிப்படும்- தேனரசன்
4.
மண்வாசல் என்ற நூலை எழுதியவர் - தேனரசன்
5.
வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் - தேனரசன்
6.
பெய்து பழகிய மேகம் என்ற நூலை எழுதியவர் - தேனரசன்
7.
மயிலும் மானும் வனத்திற்கு - வனப்பு தருகின்றன
8.
மிளகாய் வற்றலின் தும்மலை வரவழைக்கும்- நெடி
9.
அன்னை தான் பெற்ற- மழலையின் சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
10.
வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வனப்பு + இல்லை
11.
வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- வார்ப்பெனில்
12.
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது – இரட்டுறமொழிதல், சிலேடை
13.
இரட்டுறமொழிதலின் வேறு பெயர் - சிலேடை
14.
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்” என்ற பாடலை இயற்றியவர் - காளமேகப்புலவர்
15.
காளமேகப்புலவரின் இயற்பெயர் - வரதன்
16.
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடுவதால் - காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
17.
“திருவானைக்கா உலா" என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்
18.
"சரசுவதிமாலை” என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்
19.
“பரபிரம்ம விளக்கம்" என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்
20.
"சித்திர மடல்" என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்
21.
'பரி' என்பதன் பொருள் - குதிரை
22.
'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வண்மை + கீரை
23.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- கட்டியடித்தல்
24.
ஆயகலைகள் எத்தனை வகைப்படும் - 64
25.
காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு- ஓவியக்கலை
26.
பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் - குகை
27.
பழங்காலத்தில் ஓவியங்களுக்கு எத்துகள்களை கொண்டு வண்ணம் தீட்டப்பட்டது- மண், கல்
28.
தஞ்சை பெரிய கோவிலில் யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது - சுந்தரர்
29.
ஓவியம் வரையப் பயன்படும் துணியை என்ன பெயரில் அழைத்தனர் – எழினி,கிழி,படாம்
30.
சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது- குணமாலை
31.
துணி ஓவியங்களின் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது - கலம்காரி ஓவியம்.
32.
கலம்காரி ஓவியங்கள் தற்போது எமாநிலங்களில் வரையப்படுகிறது - ஆந்திரா, தமிழ்நாடு
33.
"புனையா ஓவியும் கடுப்பப்புனைவில்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் -நெடுநல்வாடை
34.
"புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்ற வரி இடம்பெற்ற நூல் - மணிமேகலை
35.
முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்- செப்பேடு
36.
ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல்- பரிபாடல்
37.
'இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - பரிபாடல்
38.
தந்த ஓவியங்கள் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது - கேரளா
39.
கண்ணாடியில் ஓவியம் வரைபவர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்- தஞ்சாவூர்
40.
தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் - தாள் ஓவியம்
41.
கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் எனப் பலவயைான வடிவங்களில் காணப்படும் ஓவியம் - தாள் ஓவியம்
42.
அரசியல் கருத்துகளை எளிமையாக விளக்குவதற்கு பயன்படும் ஓவியம் - கருத்துப்பட ஓவியம்
43.
இந்தியா என்ற இதழில் கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் வெளியிட்டு, கருத்துப்படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் – பாரதியார்
44.
கருத்துப்பட ஓவியத்தின் மற்றொரு வடிவம் - கேலிச்சித்திரம்
45.
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே - கேலிச்சித்திரம் என்பர்
46.
ஓவியத்தின் வேறுபெயர் - ஓவு, ஓவியம், ஓவம்,சித்திரம், படம்,படாம், வட்டிகைச்செய்தி
47.
ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் - கண்ணுள விளைஞர், ஓவியப்புலவர்,ஓவமாக்கள், கிளவி வல்லோன்,சித்திரக்காரர், வித்தகர்
48.
ஓவியக்கூடத்தின் வேறுபெயர்-எழுதொழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம்,சித்திர அம்பலம், சித்திரக்கூடம்,சித்திரமண்டபம், சித்திரசபை
49.
ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் - இராஜா இரவிவர்மா
50.
நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்- கொண்டைய ராஜீ
51.
நாட்காட்டி ஓவியங்களை என்றும் அழைப்பார் - பசார் பெயிண்டிங்
52.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்பயன்பட்ட பொருள்களில் ஒன்று- மண்துகள்
53.
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்- கேலிச்சித்திரம்
54.
'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கோடு + ஓவியம்
55.
'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- செப்பு + ஏடு
56.
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- எழுத்தாணி
57.
துணி ஓவியங்கள் தற்போது கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுகிறது
58.
கலம்காரி ஓவியங்கள் தற்போது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரையப்படுகிறது
59.
இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று - தஞ்சை சரஸ்வதி மஹால்
60.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது- கி.பி. 1122
61.
செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
62.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1981
63.
வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு' எனத் தெரியும் வகையில் கட்டட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
64.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலங்களின் எண்ணிக்கை-5
65.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் எத்தனை துறைகள் உள்ளன- 25
66.
இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்கும் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
67.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
68.
உவே.சா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட வருடம் - 1942
69.
உ.வே.சாமிநாதர் நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடி மற்றும் எத்தனை தமிழ் நூல்கள் உள்ளது-2128, 2941
70.
கீழ்த்திசைச் சுவடி நூலகம் தொடங்கப்பட்ட வருடம்-1869
71.
கீழ்த்திசைச் சுவடி நாலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் இயங்கி வருகிறது-7
72.
கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு-1896
73.
தமிழ்நாட்டின் மைய நூலகம் - கன்னிமாரா நூலகம்
74.
கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது-6 இலட்சம்
75.
இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது- கன்னிமாரா நூலகம்
76.
கன்னிமாரா நூலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது- 3
77.
திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - சென்னை
78.
வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது -1976
79.
வள்ளுவர் கோட்டம் எந்த வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது- திருவாரூர்த் தேர்
80.
வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் உடையது- 25. 25
81.
வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை அடி ஆகும்-128
82.
தேரின் மையத்தில் உள்ள எண் கோண வடிவக் கருவறையில் யாருடைய சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது- திருவள்ளுவர்
83.
வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது- கருநிறம்
84.
வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது -வெண்ணிறம்
85.
இன்பத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது - செந்நிறம்
86.
திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளது - வள்ளுவர் கோட்டம்
87.
இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரி-ல் திருவள்ளுவர் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது
88.
விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது - 30
89.
திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது தொடங்கியது -1990
90.
கன்னியாகுமரியில் பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்ட ஆண்டு-2002
91.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையின் உயரம் மொத்தம் எத்தனை அடி - 133
92.
அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவதுபோல் திருவள்ளுவர் சிலையின் படம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது - 38
93.
பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை 95 அடி உயரம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது
94.
மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது - தமிழ், ஆங்கிலம்
95.
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் டேன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது - 3681
96.
திருவள்ளுவர் சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது?
97.
உலகத்தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது - மதுரை
98.
காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது- தல்லாகுளம்
99.
மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் எத்தனை சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது - 87000
100.
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1981
101.
உலகத்தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது - 2016
102.
உலகத்தமிழ்ச் சங்கம் -ன் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளது
103.
சங்கத்தமிழ்க் காட்சிக்கூடத்தில் யாருடைய முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது- தொல்காப்பியர், ஒளவையார், கபிலர்
104.
மூன்றாம் தமிழ்ச்சங்கம் எங்கு நடைபெற்றது - மதுரை
105.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம் - பூம்புகார்
106.
பூம்புகார் நகரைப்பற்றிய செய்திகள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது - சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
107.
பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நால் – சிலப்பதிகாரம்
108.
பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட வருடம் - 1973
109.
பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைகூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது- 7
110.
பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது - கண்ணகி
111.
பூம்புகார் சிற்பக்கலைக்கூடத்தில் யாருக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது- மாதவி
112.
ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது - தொழிற்பெயர்
113.
தொழிற்பெயர் எதைக் காட்டாது - எண், இடம் ,காலம், பால்.
114.
தொழிற்பெயர் எந்த இடத்தில் மட்டும் வரும் - படர்க்கை
115.
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும் - மூன்று
116.
விகுதி பெற்ற தொழிற்பெயர் - படித்தல்
117.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் -
ஊறு
118.
பொருத்துக.
1. வண்கிரை - வளமான கீரை
2. முட்டப்போய் - முழுதாகச் சென்று
3. பரி- குதி
4. கால்- வாய்க்கால்
5. மறித்தல் என்ற சொல்லின் பொருளைக் காண்க - தடுத்தல்
119.
பொருத்துக.
1. பிரும்மாக்கள்- படைப்பாளர்கள்
2. நெடி- நாற்றம்
3. மழலை- குழந்தை
4. வனப்பு- அழகு
5. பூரிப்பு- மகிழ்ச்சி
6. மேனி- உடல்
120.
பொருத்துக.
1. ஒட்டம்- விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி- முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
121.
பொருத்துக.
1. படைப்பாளர்- Creator
2. சிற்பம்- Sculpture
3. கலைஞர்- Artist
4. கல்வெட்டு- Inscriptions
5. கையெழுத்துப்படி - Manuscripts
122.
பொருத்துக
1. அழகியல் - Aesthetics
2. தூரிகை - Brush
3. கருத்துப்படம்- Cartoon
4. குகை ஓவியங்கள்-Cave Paintings
5. நவீன ஓவியம்- Modem Art
0 Comments
THANK FOR VISIT