7TH- STD -இயல்-7

1.     மாரியொன்ற இன்றி வந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு நிஉலையுள்" என்ற பாடல் வரியின் ஆசிரியர் - மூன்றுரை அரையனார்

2.     பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் - மூன்றுரை அரையனார்

3.     பாரியின் மகள் - அங்கவை, சங்கவை

4.     மூன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- கி.பி. 4

5.     மூன்றுரை அரையனார் எச்சமயத்தை சேர்ந்தவர் - சமண

6.     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று - பழமொழி நானூறு

7.     பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது - 400

8.     ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் - பழமொழி நானூறு

9.     மரம் வளர்த்தால் பெறலாம் - மாரி

10.   'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நீர் + உலையில்

11.   மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- மாரியொன்று

12.   "ஓடை எல்லாம் தாண்டிப்போயி - ஏலேலங்கிடி ஏலேலோ" என்ற பாடலின் தொகுப்பாசிரியர் - கி.வா.ஜகந்நாதன்

13.   கழலுதல் என்ற சொல்லின் பொருள் - உதிர்தல்

14.   பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்- சும்மாடு

15.   நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல் மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வதற்கு பெயர் - போரடித்தல்

16.   நாட்டுப்புறப்பாடலின் வேறு பெயர் - வாய்மொழி இலக்கியம்

17.   நாட்டுப்புறப்பாடல்களை -- என்னும் நூலாக ஜகந்நாதன் தொகுத்துள்ளார் - மலை அருவி

18.   'தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- தேர்ந்து + எடுத்து

19.   'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- ஓடையெல்லாம்

20.   பாண்டியர்களின் தலைநகரம் -மதுரை

21.   பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி

22.   'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என்று கூறியவர் - திருஞானசம்பந்தர்

23.   தண்பொருநைப் புனல் நாடு' என்று கூறியவர் - சேக்கிழார்

24.   திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது- பொதிகை

25.   'பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி' என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் - இளங்கோவடிகள்

26.   இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் மலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது- குற்றால மலை

27.   வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" என்று குற்றால மலைவளத்தைக் குற்றாலக் குறவஞ்சியில் பாடியவர்- திரிகூட இராசப்பக் கவிராயர்

28.   திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி

29.   தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்தண்பொருநை

30.   தாமிரபரணியின் கிளை ஆறுகள் - பச்சையாறு, மணிமுத்தாறு,சிற்றாறு, காரையாறு,சேர்வலாறு, கடனாநதி

31.   தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் - நெல்லை

32.   கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது - நெல்லை

33.   தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் துறைமுகம் அமைந்திருந்தது – கொற்கை

34.   தமிழ் இலக்கியங்களில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படும் துறைமுகம் - கொற்கை

35.   'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- நற்றிணை

36.    கொற்கையில் பெருந்துறை முத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு

37.   எந்த நாடுகளை சேர்ந்த யவனர்கள் முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்-கிரேக்க, உரோமாபுரி

38.   பொருநை எனப்படும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது- தாமிரபரணி

39.   நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர்-திருஞானசம்பந்தர்

40.   திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் - திருஞானசம்பந்தர்

41.   காவற்புரைத் தெரு என்றால் - சிறைச்சாலை

42.   கூலம் என்பது எதை குறிக்கும்- தானியம்

43.   கூலக்கடைத்தெரு என்பதே மருவி வழங்கப்படுகிறது- கூழைக்கடைத்தெரு

44.   அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம் - அக்கசாலை

45.   பொன் நாணயங்கள் உருவாகும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலை என்னும் பெயரில் அமைந்துள்ளது

46.   தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ஆதிச்சநல்லூர்

47.   தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

48.   தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகரம் - பாளையங்கோட்டை

49.   இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டவை - திருநெல்வேலி, பாளையங்கோட்டை

50.   தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம் - பாளையங்கோட்டை

51.   வணிகம் நடைபெறும் பகுதியை வழங்குதல் பண்டைய மரபு - பேட்டை

52.   பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள் வரவேற்ற இடம் - பாண்டியபுரம்

53.   பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் - திருமங்கை நகர்

54.   நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித்தோன்றல் - வீரராகவர்

55.   வீரராகவரின் துணைவியார் பெயர் - மீனாட்சி அம்மையார்

56.   பொதிகை மலையில் வாழ்ந்தவர்- அகத்தியர்

57.   திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்கு செழுமை சேர்த்தவர்கள் - மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார்,பெரியாழ்வார், குமரகுருபரர்,திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்

58.   திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் - ஜி.யு.போப் , கால்டுவெல் , வீரமாமுனிவர்

59.   இளங்கோவடிகள் மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்- பொதிகை மலை

60.   அணி என்னும் சொல்லுக்கு என்று பொருள் - அழகு

61.   ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்வது - அணி

62.   "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

63.   உவம உருபுகள் எவை - போல, புரைய, அன்ன, இன்ன, அற்ற, இற்ற, மான, கடுப்ப, ஒப்ப, உறழ

64.    தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - எடுத்துக்காட்டு உவமை அணி

65.   "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியது" என்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி - இல்பொருள் உவமை அணி

66.   "காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது" என்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி - இல்பொருள் உவமை அணி

67.   உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை அணி - இல்பொருள் உவமை அணி

68.   பொருத்துக.

           1.     வறந்திருந்த - வறண்டிருந்த

           2.     புகவா- உணவாக

           3.     மடமகள் - இளமகள்

           4.     நல்கினாள்கொடுத்தாள்

           5.     மாரி-மழை

69.   பொருத்துக.

           1.     குழி - நில அளவைப் பெயர்

           2.     சாண் - நீட்டல் அளவைப் பெயர்

           3.     மணி - முற்றிய நெல்

           4.     சீலை - புடவை

           5.     மடை - வயலுக்கு நீர் வரும் வழி

70.   பொருத்துக.

           1.     நாற்று - நடுதல்

           2.     களை - பறித்தல்

           3.     நீர் - பாய்ச்சுதல்

           4.     கதிர்- அறுத்தல்

71.   பொருத்துக.

           1.     தண்பொருநை - தாமிரபரணி

           2.     அக்கசாலை - பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்

           3.     கொற்கை - முத்துக்குளித்தல்

           4.     திரிகூடமலை - குற்றாலம்

72.   பொருத்துக

           1.     நாகரிகம் - Civilization

           2.     நாட்டுப்புறவியல் - Folklore

           3.     அறுவடை - Harvest

           4.     நீர்ப்பாசனம் - Irrigation

           5.     அயல்நாட்டினர் - Foreigner

73.   பொருத்துக.

           1.     வேளாண்மை - Agriculture

           2.     கவிஞர் - Poet

           3.     நெற்பயிர் - Paddy

           4.     பயிரிடுதல்- Cultivation

           5.     உழவியல்Agronomy

 

https://www.a2ztnpsc.in/