7TH- STD -இயல்-8
1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - பொய்கை ஆழ்வார்
2. சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடர் ஆழி நீங்குகவே என்று" - எனத் தொடங்கும்
பாடலின் ஆசிரியா - பொய்கை ஆழ்வார்
3. சுடர் ஆழியான் என்ற சொல்லின் பொருள் - ஒலிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
4. பூமியை அகல்விளக்காவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் - திருமால்
5. பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகில் பிறந்த ஊர்- திருவெஃகா
6. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் - பொய்கை ஆழ்வார்
7. ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் என்ற பாடலை இயற்றியவர் - பூதத்தாழ்வார்
8. இரண்டாம் திருவந்தாதி பாடிய ஆழ்வார் - பூதத்தாழ்வார்
9. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் – மாமல்லபுரம்
10. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது- அந்தாதி
11. அந்தம் என்ற சொல்லின் பொருள் - முடிவு
12. ஆதி என்ற சொல்லின் பொருள் - முதல்
13. திருமாலைப் போற்றிப் பாடிய ஆழ்வார் எத்தனை பேர் - 12
14. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் பாடியவர்கள் - ஆழ்வார்கள்
15. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் - நாதமுனி
16. முதலாழ்வார்கள் - பொய்கை ஆழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்
17. இடர் சொல்லின் பொருள்- துன்பம்
18. "ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஞானம் + சுடர்
19. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் - இன்புருகு
20. இன்சொல் விளை நிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி என்ற பாடல் வரியை இயற்றியவர் - முனைப்பாடியார்
21. அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவர் பைங்கூழ் சிறுகாலைச் செய்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அறநெறிச்சாரம்
22. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்- திருமுனைப்பாடி
23. முனைப்பாடியார் எச்சமயத்தைச் சார்ந்தவர் - சமணம்
24. முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 13ம் நூற்றாண்டு
25. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது - 225
26. காந்தியடிகள் எப்போதும் பேசினார்- வாய்மையை
27. 'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - இனிமை + சொல்
28. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - அறக்கதிர்
29. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் - முதுமை
30. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் - திருக்குறள்
31. வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இம்முறையை எடுத்துக் கூறியவர் - அப்பரடிகள்
32. வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என்பதை வழி மொழிந்தவர் - காந்தியடிகள்
33. உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்- பாரதிதாசன்
34. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை என்றும் கூறுவது தமிழ் மரபு- மருந்து
35. செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
36. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது - உழைப்பு
37. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் - குன்றக்குடி அடிகளார்
38. திருமடத்தின் தலைவராக விளங்கியவர் - குன்றக்குடி அடிகளார்
39. திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் - குன்றக்குடி அடிகளார்
40. "நாயன்மார் அடிச்சுவட்டில்" என்ற நூலை எழுதியவர் - குன்றக்குடி அடிகளார்
41. "குறட்செல்வம்” என்ற நூலை எழுதியவர் - குன்றக்குடி அடிகளார்
42. ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலை எழுதியவர் - குன்றக்குடி அடிகளார்
43. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் - அருளோசை, அறிக அறிவியல்
44. ஒருவர் எல்லாருக்கவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது - பொதுவுடைமை
45. செல்வத்தின் பயன் - ஒப்புரவு வாழ்வு
46. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு பொருள்- தியானம் செய்
47. ஜென் சிந்தனையாளர் எந்த மதத்தை சார்ந்த துறவியர் - புத்த
48. ஜென் சிந்தனையாளர் பெரும்பாலும் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்து வந்தனர் - சீனா, ஜப்பான்
49. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று தோன்றும்படிக் கூறுவது - உருவக அணி
50. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய" என்ற பாடலில் பயின்றுவந்துள்ள அணி - உருவக அணி
51. இருபொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றைஉருவகப்படுத்தாமல் விடுவது- ஏகதேச உருவக அணி
52. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி - ஏகதேச உருவக அணி
53. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி
54. ஒரு நாட்டின் அரண் - காடு , மலை , தெளிந்த நீர்
55. மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள்
56. நாடென்ப" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நாடு + என்ப
57. கண் + இல்லது என்பதனைச் சோத்தெழுதக் கிடைக்கும் சொல் - கண்ணில்லது
58. பொருத்துக
1. அன்பு- தகளி
2. ஆர்வம்- நெய்
3. சிந்தை- இடுதிரி
4. ஞானம்- விளக்கு
59. பொருத்துக
1. வித்து - விதை
2. ஈன - பெற
3. நிலன்- நிலம்
4. பைங்கூழ் - பசுமையான பயிர்
5. கடுஞ்சொல் - வன்சொல்
60. பொருத்துக
1. வையம் - உலகம்
2. இடர் ஆழி - துன்பக்கடல்
3. சொல் மாலை - பாமாலை
4. வெய்ய- வெப்பக்கதிர் வீசும்
61. பொருத்துக.
1. தகளி- அகல் விளக்கு
2. ஞானம்- அறிவு
3. நாரணன்- திருமால்
4. அரம்பையர்கள்- தேவமாதர்கள்
62. இலக்கணக் குறிப்பு தருக
1. தேன்தமிழ் – உவமை
2. வெள்ள இன்பம் - உவமை
3. மலர்முகம் - உவமை
63. இலக்கணக் குறிப்பு தருக
1. தமிழ்த்தேன் - உருவகம்
2. இன்பவெள்ளம் - உருவகம்
3. முகமலர்- உருவகம்
64. பொருத்துக.
1. அயலவர்- Neighbour
2. வறுமை - Poverty
3. ஒப்புரவு நெறி - Reciprocity
4. நற்பண்பு - Courtesy
65. பொருத்துக.
1. குறிக்கோள்- Objective
2. செல்வம்- Wealth
3. லட்சியம்- Ambition
4. பொதுவுடைமை - Communism
5. கடமை- Responsibility
66. பொருத்துக.
1. எளிது - அரிது
2. ஈதல்- ஏற்றல்
3. அந்நியர்- உறவினர்
4. இரவலர் - புரவலர்
67. பொருத்துக.
1. விளைநிலம் - இன்சொல்
2. விதை - ஈகை
3. உரம் - உண்மை
4. களை- வன்சொல்
0 Comments
THANK FOR VISIT